Tuesday, September 22, 2026
Home Blog Page 3

எழும்பூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு…

0

எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்த முதலமைச்சர் விஜய், எழும்பூர் குழந்தைகள் நல அரசு பொது மருத்துவமனையில் இன்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளை பார்வையிட்ட அவர், அங்கு சிகிச்சை பெற்று வரும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது, அங்கிருந்த தாய்மார்களிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் விஜய், அவர்களின் பச்சிளம் குழந்தைகளை கையில் தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார். தொடர்ந்து, மகப்பேறு மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தி, தாய் மற்றும் குழந்தைகள் நல சேவைகள், மகப்பேறு சிகிச்சை வசதிகள், மருத்துவ உபகரணங்கள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையின் தரம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கேட்டறிந்தார்.மேலும், பொதுமக்களுக்கு தரமான மற்றும் விரைவான மருத்துவ சேவைகளை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதேபோல, மருத்துவமனையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், நேற்று வந்தது போல எந்த ஒரு புகாரும் இனிமேல் வரக்கூடாது என மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார். தான் பிறந்த எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு முன்னறிவிப்பின்றி விஜய் சென்றதால், அங்கிருந்த அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். இந்த ஆய்வின்போது, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜிடம் சமூக வலைதளங்களில் அரசு மருத்துவமனை குறித்த புகார்கள் வந்த நிலையில், முதல்வர் இங்கு வந்துள்ளாரா? என்ற கேள்வி கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த அவர், “புகார் வந்தவுடன் அது எங்கள் கவனத்திற்கும் வந்தது. உடனடியாக இங்குள்ள மருத்துவ அதிகாரியிடம் தெரிவித்து, மருத்துவமனையில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை நேரில் ஆய்வு செய்தோம். முதலமைச்சர் நீண்ட நாட்களாகவே மருத்துவமனையை பார்வையிட வேண்டும் என்று கூறி வந்தார். இதற்கிடையே, இந்த புகாரைத் தொடர்ந்து நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். நோயாளிகளிடம் பணம் கேட்கிறார்கள் என்பது போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. அதை மறுக்க முடியாது, ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். முடிந்தவரை இதுபோன்ற செயல்கள் நடைபெறக் கூடாது என்று அனைத்து மருத்துவமனைகளுக்கும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். யார் நோயாளிகளிடம் பணம் கேட்டாலும், அவர்கள் பணியிலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் உத்தரவு. முதலமைச்சர் மிகவும் தெளிவாக கூறியிருக்கிறார். நேர்மையான அரசாங்கத்தையும், வெளிப்படையான நிர்வாகத்தையும் வழங்க வேண்டும் என்பதே தவெக அரசின் நோக்கம். அரசு மருத்துவமனைகளுக்கு பெரும்பாலும் ஏழை, எளிய மக்கள்தான் சிகிச்சைக்காக வருகிறார்கள். அவர்களிடம் எந்த சூழலிலும் பணம் வாங்கக் கூடாது. பொதுமக்களிடம் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் எந்த அரசு மருத்துவமனையாக இருந்தாலும், அங்கு எந்த ஊழியர் பணம் கேட்டாலோ அல்லது வற்புறுத்தினாலோ, தயவுசெய்து 104 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கவும். உடனடியாக அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். பணம் வாங்கிய ஊழியர்கள் ஒப்பந்த ஊழியர்களாக இருந்தால், குற்றச்சாட்டு உறுதியானவுடன் உடனடியாக பணியிலிருந்து நீக்கப்படுவார்கள். அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், மருத்துவமனைகளில் சுத்தமான கழிவறைகள், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் மக்களின் உரிமை. அவற்றை மேம்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். படிப்படியாக மேம்படுத்தும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம் காப்பீட்டு அட்டை தொடர்பாகவும் சில சந்தேகங்கள் எழுகின்றன. இங்கு மருத்துவ சேவையைப் பெறுவதற்கு காப்பீட்டு அட்டை கட்டாயமல்ல. காப்பீட்டு அட்டை இல்லையென்றாலும், மருத்துவச் சேவை பெறுவது மக்களின் உரிமை. காப்பீட்டு அட்டை இல்லை என்ற காரணத்தால் யாருக்கும் சிகிச்சை மறுக்கப்பட முடியாது.” என்று அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.

கேரளாவில்  ஓராண்டாகத் தனிமையில் வாடிய குடும்பம்  – உடற்கூறு ஆய்வு முடிந்து சூலூர் போலீஸார்  விசாரணை


கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காங்கேயம்பாளையம் அருகே, நீலாம்பூர் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் (SSI) மன அழுத்தம் மற்றும் உடல்நலப் பாதிப்பு காரணமாக தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல் துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கண்ணடி கிராம பஞ்சாயத்தைச் சேர்ந்தவர் மனோஜ் (54). இவர் கடந்த 1997-ஆம் ஆண்டு காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராகப் பணியில் சேர்ந்தார். பின்னர், 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நீலாம்பூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். குடும்பப் பிரச்சனை காரணமாக இவரது மனைவியும் இரண்டு மகன்களும் கேரளாவில் உள்ள தங்களது சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.

இதனால், கடந்த ஓராண்டாக மனோஜ் மட்டும் காங்கேயம்பாளையம் அருகே உள்ள ராயல் அவென்யூ பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்து உள்ளார். தனிமையின் காரணமாக அவர் நீண்ட நாட்களாக மன அழுத்தம் மற்றும் உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்ததாகத் தெரியவருகிறது. இந்நிலையில், ஜூலை 5-ஆம் தேதி அதிகாலை சுமார் 5.00 மணி அளவில், தனது மூத்த மகனுக்கு மனோஜ் வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், தனக்கு கடுமையான உடல் வலி, மன அழுத்தம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருப்பதாகவும், இதனால் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளப் போவதாகவும், குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எனவும் அவர் உருக்கமாகத் தெரிவித்து இருந்தார். இதை அடுத்து, வழக்கம் போல் காலை மனோஜ் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர், காலை 9.30 மணி அளவில் அவரது வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது அவர் படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் நைலான் கயிற்றால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டு இருப்பது தெரியவந்தது. உடனே அவர்கள் இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூலூர் காவல் நிலையப் போலீசார், நிகழ்விடத்தைப் பாதுகாத்து அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த அவரது மூத்த மகன், தனது தந்தையின் செல்போனைப் பரிசோதித்ததில் தற்கொலைக்கு முன்பு அவர் அனுப்பிய வாட்ஸ்அப் செய்தி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சட்டப்படியான விசாரணைகள் மற்றும் பிற நடைமுறைகள் முடிவடைந்த பிறகு, உடற்கூறு ஆய்வுக்காக அவரது உடல் கோவை இ.எஸ்.ஐ (ESI) மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு உடற்கூறு ஆய்வும் நிறைவடைந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து உள்ள போலீசார், தற்கொலைக்கான முழுமையான காரணங்களை அறிய தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0

2 கோடி ரூபாய் கேட்டு தொழிலதிபர் கடத்தல்,ஆள் மாறிப்போனதால் எஸ்கேப்..!



கோவையில் 2 கோடி ரூபாய் பணம் கேட்டு காங்கிரஸ் கட்சியின் ஓ பி சி அணி மாவட்ட தலைவரும்  தொழிலதிபருமான காட்டூர் தனசேகரன் என்பவர் காரில் கடத்தப்பட்டு கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கி காட்டுப் பகுதியில் இறக்கி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…….

கோவை, சிங்காநல்லூர்  அடுத்த எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் தனசேகரன். காந்திபுரம் அடுத்த காட்டூர் பகுதியில் பழைய கார் விற்பனை மையம் ஒன்றை நடத்தி வரும் இவர் காங்கிரஸ் கட்சியின் ஓ.பி.சி பிரிவு மாவட்ட தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் எஸ.ஐ.எச்.எஸ் காலனி பகுதியில் புதிதாக வீடு ஒன்றை அவர் கட்டி வரும் நிலையில் இன்று காலை வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டு இருந்த தனது ஃபார்ச்சூனர் காரை கழுவிக் கொண்டு இருந்த போது அங்கு எர்டிகா காரில் வந்த டிப் டாப் உடை அணிந்த ஐந்து பேர் காரைக்கழுவி கொண்டு இருந்த தனசேகரனிடம் உனது பெயர் தனசேகரனா என கேட்டு உள்ளனர். அதற்கு தனசேகரன் ஆமாம் என்று கூறவே உடனடியாக தாங்கள்  வைத்து இருந்த கை விலங்கு ஒன்றை வைத்து தனசேகரனின் கையை பூட்ட முயற்சித்து உள்ளனர். அதற்கு தனசேகரன் நான் என்ன அக்யூஸ்டா என கேட்டு கையை உதறி அங்கு இருந்து நகர முற்பட்ட பொழுது ஐந்து பேரும் சேர்த்து தனசேகரனை மடக்கி பிடித்து தாங்கள் வந்த காரில் கீழே தள்ளி கடுமையாக தாக்கி உடனடியாக காரை அங்கு இருந்து கிளப்பி தனசேகரனை கடத்தி உள்ளனர். அப்போது தனசேகரன் கூக்குறலிடவே அவரது வாயில் துணியை வைத்து அடைத்து முகம் வயிறு இடுப்பு பகுதி என சரமாரியாக தாக்கியப்படியே கோவை பாலக்காடு புறவழிச் சாலையில் காரை இயக்கி உள்ளனர். இதற்கு இடையே காரில் வந்த ஒருவர் 2 கோடி ரூபாய் கொடுத்தால் உன்னை விட்டு விடுவோம் என கூறவே தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று தனசேகரன் கூறியுள்ளார். மீண்டும் தனசேகரனை தாக்கிய அவர்கள் அவரது முகத்தை தங்கள் செல்போனில் படம் பிடித்து யாரோ ஒருவருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. அதனைக் கண்ட எதிர்முனையில் இருந்த நபர் இவர் இல்லை ஆள் மாறிவிட்டது என்று கூறவே தனசேகரனை ஆட்கள் இல்லாத ஒரு காட்டுப் பகுதியில் கீழே தள்ளிவிட்டு காரில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பி உள்ளனர். இதைத் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளான தனசேகரன் அங்கு இருந்து நடந்து வந்து பாலக்காடு சாலை வழியே வந்த ஒருவரிடம் நடந்த சம்பவங்களை கூறி உதவி கேட்டு உள்ளார். அந்த நபர் கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் கொண்டு வந்து தனசேகரனை இறக்கி விட்ட நிலையில் சிங்காநல்லூர் காவல் நிலைய போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தனசேகரனின் வீடு மற்றும் திருச்சி சாலை பாலக்காடு சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தாக்குதலுக்கு உள்ளான தனசேகரன் முதுலுதவி சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் காந்திபுரம் அடுத்த காட்டூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பேசிய தனசேகரன் தன்னை கடத்தி அவர்கள் யார் என்ற விபரம் தற்போது வரை தெரியவில்லை என்றும் தொழில் போட்டி காரணமாக கடத்தினார்களா என்பது குறித்து கூட தனக்கு அறியவில்லை என்றும் காரில் வந்த நபர்கள் ரௌடிகள் போல காணப்பட்டதாகவும் காரின் பின் பகுதியில் நம்பர் பிளேட் கூட இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் தன்னை கடத்தியவர்கள் தன்னிடம் இருந்த சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான எஸ் 23 அல்ட்ரா செல்போன், ஃபார்ச்சூனர் கார் சாவி மற்றும் புதிய வீட்டின் சாவி ஆகியவற்றை பறித்து சென்றதாகவும் தனது செல்போனில் இருந்தே தனது வங்கி கணக்கில் இருந்து பணத்தை தங்கள் கணக்கிற்கு பரிமாற முயற்சித்ததாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

0

0

தவெக-வுக்கு தாவிய மூத்த தலைவர்கள் – உடைகிறதா அதிமுகவின்  கோட்டை..?


2026 சட்டப் பேரவை தேர்தலில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால், அக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்தனர்.
மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தினர். மே 13-ந் தேதி சட்டப் பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், இந்த அணியைச் சேர்ந்த 25 பேர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவையும் மீறி, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். மேலும் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்) மற்றும் இசக்கி சுப்பையை (அம்பாசமுத்திரம்) ஆகிய 4 பேரும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து விட்டு, தவெகவில் இணைந்தனர். தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்களான உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, எம்.சி. சம்பத் ஆகிய மூவரும் தவெகவில் இணைந்தனர்.சட்டப் பேரவையில் கட்சி தாவல் தடைச் சட்டத்தை எடப்பாடி பழனிசாமி கையிலெடுக்க, எதிர்ப்பு அணியினர் அவருடன் சமாதானமாகினர். ஆனால், சி.வி.சண்முகம் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மட்டும் எடப்பாடி பழனிசாமியுடன் சமாதானமாக செல்லவில்லை. இந்த நிலையில், சி.விஜயபாஸ்கர் ஜூன் 16-ந் தேதி தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். மேலும், எடப்பாடி அணிக்கு சென்றாலும், மீண்டும் கட்சிப் பதவி கிடைக்காததால் சிலர் கடும் அதிருப்தியில் இருந்தனர். இதன் வெளிப்பாடாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் தொகுதி எம்எல்ஏ பதவியை ஜூன் 29- ந்தேதி ராஜிநாமா செய்தார்.



சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், நேற்று அவர்களே அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.அந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே திருப்பூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், திருச்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதி ஆகியோரும் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.இந்நிலையில், சென்னை மாமல்லபுரத்தை அடுத்து பூஞ்சேரியில் உள்ள தனியார் விடுதியில் அதிமுகவினர் தவெகவில் இணையும் விழா இன்று (ஜூலை 2) பிரமாண்டமாக நடைபெற்றது.

களம் மாறிய முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்

தவெக பொதுச் செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம். ஆனந்தன், எஸ். வளர்மதி ஆகிய 4 பேரும், தங்களது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுடன் தவெகவில் இணைந்தனர்.

மேலும், முன்னாள் எம்எல்ஏக்களான ஈ.எம். மான்ராஜ் (ஸ்ரீவில்லிபுத்தூர்), எம். ராம்குமார் (கும்பகோணம்), எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் (திருச்சுழி), சதன் பிரபாகர் (பரமக்குடி), திருஞானசம்பந்தம் (பேராவூரணி), சுந்தரராஜன் (சங்ககிரி), ராமச்சந்திரன் (சிவகங்கை) ஆகியோரும் தங்களது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தனர்.இதே போல் வைரமுத்து (புதுக்கோட்டை மாவட்ட செயலாளர்), இளமை தமிழ்செல்வன் (பெரம்பலூர் மாவட்ட செயலாளர்), சேகர் (ஒரத்தநாடு செயலாளர்) மற்றும் சீனிவாசன் (திருச்சி முன்னாள் துணை மேயர்) உள்ளிட்டோரும் தங்களது ஆதரவாளர்களோடு தவெகவில் இணைந்தனர்.
மேலும், கடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட, கட்சியின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் 35 பேரும், புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவின் பல்வேறு ஒன்றிய செயலாளர்கள் 11 பேரும் தங்களது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தனர்.தவெகவில் இணைந்தவர்கள் கொள்கைத் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தி, பின்னர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்வின் போது, அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

துரோகம் செய்தது யார்?

அதிமுக தொண்டர்களை அதிர செய்துள்ள இந்த நிகழ்வில் தவெக செயற்குழுத் தலைவரும் அமைச்சருமான செங்கோட்டையன் பேசியபோது, “தவெக தலைவரும், நமது நீண்டகால முதலமைச்சராக இருக்கப் போகும் விஜய்யுடன் கைகோர்க்க அனைவரும் இன்று இங்கு வந்துள்ளனர். பலர் துரோகம் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால், மக்களின் தீர்ப்புக்குத் துரோகம் இழைத்துவிட்டு திமுகவுடன் கைகோர்க்கத் திட்டமிட்டது அதிமுகதான். அதனால்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எங்களுடன் இணைகிறார்கள். உண்மையில் யார் துரோகம் இழைக்கிறார்கள் என்று நீங்களே சொல்லுங்கள்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்தியத் துணைக்கண்டமே நமது முதலமைச்சரின் செயல்பாடுகளை உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்குப் பிறகு, இப்போது நான் புரட்சித் தளபதி முதலமைச்சர் விஜய்யுடன் பயணிக்கிறேன். அதிமுகவின் துரோகத்தை முறியடிக்கவே அதிமுக தலைவர்கள் இன்று எங்களுடன் இணைந்துள்ளனர். தவெக தலைமை அனைவரையும் வரவேற்கிறது,” என்றார்.

மேலும், “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மூத்த பெண்களை வைத்து மகளிர் அணி கூட்டத்தை நடத்தினார். ஆனால் தவெகவில் நாங்கள் ஏராளமான இளைஞர்களைக் காண்கிறோம். எடப்பாடி பழனிசாமி ஒரு நிறுவனத்தை நடத்த முயற்சிக்கிறார்; அவர் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தை நடத்திக்கொண்டிருக்கிறார,” என்று செங்கோட்டையன் விமர்சித்தார்.

அதிமுக என்ற கட்சியே இல்லை

அதிமுக முன்னாள் நிர்வாகி உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியபோது, ” அதிமுகவை திமுகவுடன் இணைந்து செயல்பட பொதுச் செயலாளர் முயற்சி செய்தார். அதன் விளைவு தான் இது. அதிமுக என்கிற கட்சியே கிடையாது. எல்லோரும் தமிழக வெற்றிக் கழகத்தில் வந்து சேர்ந்துவிட்டார்கள். இன்னும் கொஞ்சம் பேர் இருக்கிறார்கள். அவர்களும் வந்துவிடார்கள் அம்மாவுடன் (ஜெயலலிதா) அதிமுக என்பது முடிந்துவிட்டது” என்றார்.

இன்று முதல் நான் தவெக

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியபோது,”தமிழ்நாடு ஒரு போதை மாநிலமாக மாறிக் கொண்டிருந்த வேளையில், தமிழ்நாட்டைக் காப்பாற்ற ஒரு நல்ல தலைவன் கிடைத்திட மாட்டாரா? என்ற ஏக்கத்தில் மக்கள் இருந்தனர்.

அந்தக் காலகட்டத்தில் தான் தமிழ்நாட்டை மீட்டெடுக்கவும், போதைப்பொருள் மற்றும் லஞ்ச லாவண்யத்தை ஒழிக்கவும் மக்களின் பெரும் ஆதரவோடு விஜய் அவர்கள் வெற்றி பெற்றார். அவரது வழியில் நல்லாட்சி நடத்திட இன்று முதல் நான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து செயல்படத் தொடங்கியுள்ளே” என்றார்.

எங்கள் கோரிக்கைக்கு இபிஎஸ் செவிசாய்க்கவில்லை

தவெகவில் இணைந்தது குறித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் எம்எல்ஏவுமான டாக்டர் சி. விஜயபாஸ்கர் கூறுகையில், “தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று தேர்தலுக்கு முன் நாங்கள் வற்புறுத்தினோம். ஆனால், அதற்கு எங்கள் தலைவர் (இபிஎஸ்) செவிசாய்க்கவில்லை. தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்த பின்பு அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று, 30-க்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வலியுறுத்தினோம். அதற்கு இபிஎஸ் செவிசாய்க்கவில்லை.

ஆனால் திரைக்குப் பின்னால் அவர்கள் திமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முயன்றனர். இது அதிமுக நிறுவனரான எம்ஜிஆரின் கொள்கைகளுக்கு எதிரானது. எனவே, நாங்கள் எங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியிலிருந்தும் வெளியேறிவிட்டோம். இப்போது நாங்கள் தவெகவில் இணைகிறோம். இதில் எந்த குதிரை பேரமும் இல்லை” என்றார்.

பொதுக்குழு உறுப்பினர்களின் பலம்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் தவிர அக்கட்சியின் நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய பொதுக்குழு உறுப்பினர்களும் தங்களது பதவிகளைத் துறந்துவிட்டு இன்று தவெகவில் இணைந்துள்ளனர். பிரம்மாண்டமான இந்த அரசியல் நகர்வு, தமிழக அரசியலில் தவெகவை ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றும் என்பதற்கான அறிகுறியாகவே பார்க்க வேண்டியுள்ளது என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

மீண்டும் போர்க்கொடி… எஸ்பி வேலுமணி தரப்பு 9 சீனியர்கள் அறிக்கை..!

0

எடப்பாடி பழனிசாமி அளித்த பதவி தங்களுக்கு வேண்டாம் என்று அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் 9 பேர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதிமுகவின் அடிப்படை தொண்டர்களாக நாங்கள் தொடர்கிறோம் என்று கூறியிருக்கும் நிலையில், உங்கள் விருப்பப்படி நியமித்துள்ள பொறுப்புகள் எங்களுக்கு வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர். சட்டசபையில் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்ட 22 எம்எல்ஏ-க்கள் ஆதரவாக வாக்களித்தனர். இதன் காரணமாக எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட 27 மாவட்டச் செயலாளர்களின் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்தார். இதையடுத்து 4 அதிமுக எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.இதன்பின் எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் மன்னிப்பு கடிதம் கொடுத்து எடப்பாடி பழனிசாமியுடன் சுமூக உடன்பாட்டை எட்டினர். ஆனால் விஜயபாஸ்கர் மற்றும் சிவி சண்முகம் மட்டும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை. இருப்பினும் இவர்களின் பதவியை எடப்பாடி பழனிசாமி மீண்டும் வழங்கவில்லை. இதனால் அனைவரும் அதிருப்தி அடைந்தனர்.சில நாட்களுக்கு முன்பாக எஸ்பி வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதனுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தலைமை நிலைய செயலாளராக அருணாசலம் நியமிக்கப்பட்டார். தங்கமணி, கே.சி.கருப்பணன், சண்முகநாதன், கே.பி.அன்பழகன், காமராஜ், கே.சி.வீரமணி, பி.பாலகிருஷ்ண ரெட்டி, மாஃபா பாண்டியராஜன், திருத்தணி கோ.அரி உள்ளிட்டோருக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்.மணிகண்டன், எம்எல்ஏக்கள் அருண்மொழித்தேவன், என்.எஸ்.என்.நடராஜ் உள்ளிட்டோருக்கு கட்சியின் கொள்கை பரப்பு இணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாளை தவெகவில் ஐக்கியமாகிறார். இந்த நிலையில் அதிமுகவின் 9 மூத்த நிர்வாகிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், அதிமுகவில் மீண்டும் இணையும் போது அவரவர் வகித்து வந்த பதவிகளையே மீண்டும் வழங்க வேண்டும் என்று உறுதிபடத் தெரிவித்திருந்தோம். ஆனால் தற்போது தாங்கள் அறிவித்துள்ள பொறுப்பு பட்டியலை பார்க்கும் போது கட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டடது போல் தெரியவில்லை. ஏற்கனவே நாங்கள் வகித்த பதவிகளை நீங்கள் திரும்ப தரவில்லை. கால தாமதம் செய்கிறீர்கள். அதிமுக வரலாற்றில் இதுபோன்ற சம்பவங்களின் போது, பல முறை அவர்கள் வகித்த பதவிகளே வழங்கப்பட்ட போதிலும், நீங்கள் அவ்வாறு பதவிகளை மீண்டும் வழங்கவில்லை. இதனால் ஏராளமான அதிமுகவினர் தவெகவில் இணைந்து வருகின்றனர். பொதுச்செயலாளராக நீங்கள் எடுத்த தவறான முடிவால் தான் 2021, 2024 மற்றும் 2026 ஆகிய தேர்தல்களில் அதிமுக தொடர் தோல்வி அடைந்து கட்சி கரைந்து கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாமல், தற்போது நீங்கள் அறிவித்த பொறுப்புகள் இதுபோல் உள்ளது. நீங்கள் அளித்த பதவிகள் வேண்டாம்.. கட்சித் தொண்டர்களாகவே செயல்படுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தில் எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, கேபி அன்பழகன், கேசி வீரமணி, அருண்மொழி தேவன், பாலகிருஷ்ணரெட்டி, கோ. அரி உள்ளிட்ட 9 பேரின் கையெழுத்து போடப்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் அதிமுகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளதாக பார்க்கப்படுகிறது.

அதிமுகவுக்கு பின்னடைவு- எம்.ஆர்.விஜயபாஸ்கர் பகிரங்க குற்றச்சாட்டு

0

கரூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்த பின், தன் மீதான விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், பதவிக்காகவோ, சுயநலத்திற்காகவோ இந்த இயக்கத்திற்குள் வந்தவன் அல்ல; இரத்தமும் சதையுமாய் இந்த இயக்கத்தை என் மூச்சாகக் கருதி வாழ்ந்தவன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக சோதனைக சந்தித்த அத்தனை நெருக்கடி நேரங்களிலும், ஒற்றைத் தலைமையாக எடப்பாடி கே.பழனிசாமியின் பின்னால் உறுதியாக நின்றவன் நான்.

கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியின் அடக்குமுறையால் என் மீது 43 பொய் வழக்குகள் சுமத்தப்பட்டன. அதிமுகவினர் மற்றும் என் குடும்பத்தினர்கள் மீதும் 100-க்கும் மேற்பட்ட கொடூரமான வழக்குகள் பாய்ந்தன. என் குடும்பத்தின் நிம்மதி குலைக்கப்பட்டது.
அத்தனை அராஜகங்களையும் தூள்தூளாக்கி, செந்தில் பாலாஜியின் அதிகார மமதையை வீழ்த்தி, அதிகார பலத்தோடும் பண பலத்தோடும். கீழ்மட்ட அரசியலின் உச்சகட்டமாக விளங்கிய செந்தில் பாலாஜியை எதிர்த்து பல்வேறு சட்டப்போராட்டம் நடத்தி, எத்தனையோ துரோகங்களைத் தாங்கி, நெஞ்சுயர்த்தி கரூரில் மீண்டும் அதிமுக கொடியை ஏற்றியவன் நானும் என்னுடன் துணைநின்ற அதிமுக உடன்பிறப்புகளும் என்பது நாடறியும். இத்தனை ஆண்டுகள் நாம் யாரை எதிர்த்து, யாருடைய மக்கள் விரோத, அராஜக ஆட்சியை வீழ்த்த இத்தனை வழக்குகளையும் ரணங்களையும் நம் உடம்பில் ஏந்தினோமோ, இன்று அதே தீய சக்திகளுடன் கைகோர்த்து, அவர்கள் தயவோடு ஆட்சிக் கட்டிலில் அமர தலைமை முற்பட்டதைக் கண்டு என் மனம் ரத்தக் கண்ணீர் வடிக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் அரசியல் வாரிசுகளான நமக்குப் போய் இப்படியொரு எண்ணம் வரலாமா? ஜெயலலிதாவால் தீய சக்தி என்று அடையாளம் காட்டப்பட்ட திமுகவுடன் எப்படி அண்ணா திமுக கைகோர்க்க முடியும்?
எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த சமரச முடிவுக்குத்தான் எங்களைப் போன்ற நிர்வாகிகளும் தொண்டர்களும் எதிராக நின்றோமே தவிர, அவருடைய தலைமைக்கு ஒருபோதும் நாங்கள் எதிராக நின்றதில்லை. ஆனால், எங்களின் அத்தனை எதிர்ப்புகளையும், தொண்டர்களின் தார்மீக உணர்வுகளையும் துச்சமாக மதித்து, அவர் எடுத்த அந்தத் தன்னிச்சையான முடிவுதான் இன்று ஒட்டுமொத்த இயக்கத்தையும் அழிவிலும் வேதனையிலும் நிறுத்தியுள்ளது. அவருடைய இந்த சந்தர்ப்பவாத நிலைப்பாட்டிற்குப் பலியாவதற்கு எத்தனையோ ரணங்களைச் சுமந்த இந்த விஜயபாஸ்கரும் என்னுடன் பயணித்த கழக தோழர்களும் தயாராக இல்லை. அதிமுகவுக்காக என் உழைப்பையும், என் வாழ்நாளின் பெரும் பகுதியையும் கொடுத்துவிட்டேன். இன்று, இந்த இயக்கத்திலிருந்து மீளா கண்ணீருடனும் மிகுந்த மன வேதனையுடனும் விடைபெறுகிறேன். கரூர் தொகுதி மக்களின் சேவகனாக என் மக்கள் பயணம் என்றும் தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 25 சட்டமன்ற உறுப்பினர்கள், சமாதானப் படுத்தப்பட்டு அவர்களுக்கு கட்சியில் மீண்டும் பொறுப்புகள் வழங்கப்பட்ட நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்வதும், கட்சியில் இருந்து விலகுவதும் தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அடுத்தகட்டமாக, மேலும் சில அதிருப்தி எம்எல்ஏக்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவில் இருந்து வெளியேறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

கோவையில் விடிய, விடிய டாஸ்மாக்… வேலைக்கு போகாத ஆண்கள்  கடையை மூடக்கோரி பெண்கள் சாலை மறியல்…

0

கோவை தொண்டாமுத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே அரசு டாஸ்மாக் கடை (கடை எண்: 2240) இயங்கி வருகிறது. இந்த மதுபான கடையால் தங்களுக்கு நிம்மதியே இல்லை என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாகக் காவல்துறையிடம் குற்றம் சாட்டி வருகின்றனர். இங்கு விடியற்காலை முதலே இரவு நேரம் முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனை ஜோராக நடப்பதால், ஆண்கள் இரவு பகல் பாராமல் மது குடித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். மேலும், இந்த டாஸ்மாக் கடையைக் கடந்து தான் பெண்கள் வேலைக்கும், பள்ளி குழந்தைகள் கல்வி நிறுவனங்களுக்கும் செல்ல வேண்டி உள்ளது. ஆனால், அங்கு எப்போதும் கூட்டமாக நிற்கும் குடிமகன்களின் அநாகரிகத் தொல்லையால் நிம்மதியாகச் சாலையைக் கடக்க முடியாத அவல நிலை நீடித்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

​கடந்த சில தினங்களாக இந்த கடையில் இருந்து மதுபானங்களை ஊருக்குள் கடத்தி வந்து சட்டவிரோதமாக விற்பனை செய்வதும் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆட்சியின் போதே இந்த கடையை அகற்றுவதாக உறுதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில். தற்போதைய ஆட்சியிலாவது, அகற்றப்படும் கடைகளின் பட்டியலில் இந்த புத்தூர் டாஸ்மாக் கடை இடம்பெறும் எனப் பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியதால் ஆத்திரம் அடைந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள், இன்று காலை தொண்டாமுத்தூர் – போளுவாம்பட்டி செல்லும் முக்கியச் சாலையில் திடீரெனத் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். ​தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பொதுமக்களைக் கலைந்து போகச் சொன்னதால் இருதரப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது. இதனால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. வாக்குவாதம் முற்றி ஒருகட்டத்தில், அந்த வழியாகச் சாலையைக் கடக்க முயன்ற போதை ஆசாமி ஒருவருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் இடையே திடீரெனக் கைகலப்பு ஏற்பட்டது. இருதரப்பும் மோதிக் கொண்டதால் அந்த இடமே ரணகளமாக மாறியது.
​இதனைத் தொடர்ந்து போலீஸார் அதிரடியாகச் செயல்பட்டு, கைகலப்பில் ஈடுபட்டவர்களைப் பலவந்தமாக விலக்கி விட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். போராட்டம் தொடங்கி சுமார் 2 மணி நேரம் கடந்தும், இது குறித்து போலீஸார் மற்றும் பொதுமக்கள் தகவல் கொடுத்தும் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் அல்லது வட்டாட்சியர் என எந்தவொரு வருவாய்த்துறை அதிகாரியும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

“டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் ஓயாது!” எனப் பெண்கள் உறுதியாகச் சாலையில் அமர்ந்து இருப்பதால், புத்தூர் பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும், தினந்தோறும் இவ்வாறு 24 மணி நேரமும் விற்பனை நடைபெறுவதை அறிந்த காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அரியலூர் – புதுக்கோட்டையில் லஞ்ச ஒழிப்பு சோதனை, கட்டுக்கட்டாக சிக்கிய கணக்கில் வராத பணம், விசாரணை வளையத்தில் சார்-பதிவாளர்..!

0

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் பகுதியில் சார்- பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் பத்திரப்பதிவு, பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக வந்து செல்கின்றனர். இவ்வாறு வருகை தரும் பொது மக்களிடம் சார் பதிவாளர் அலுவலக ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத சிலர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக தெரிகிறது. அந்த புகாரின் பேரில், போலீசார் கீழப்பழுவூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்த முடிவு செய்தனர். அதன்படி, சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீரென ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது, அலுவலகத்தில் உள்ளே இருந்த பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அலுவலகத்தின் கதவு மற்றும் ஜன்னல் ஆகியவற்றை அதிகாரிகள் பூட்டியதுடன், அலுவலக ஊழியர்களின் செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள், பதிவு செய்வதற்கு நிலுவையில் உள்ள ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும், அலுவலகத்தின் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், கணக்கில் வராத ரூ.41 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து, கீழப்பழுவூர் சார்- பதிவாளர் சிவராமகிருஷ்ணன் மற்றும் சில அலுவலர்கள், 3 இடைத்தரகர்கள் ஆகியோரிடம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீரென நடைபெற்ற இந்த அதிரடி சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சார் பதிவாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது. இங்கும், கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கோவை மாவட்ட கூட்டுறவுத் துறை நியாய விலை கடையில் கெட்டுப்போன ஆயில் விநியோகம்!

0

கோவை, பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் கூட்டுறவுத் துறை நியாய விலைக்கடையில் கெட்டுப்போன பாமாயில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ரேஷன் அட்டைகள் மூலம் மானிய விலையில் பாமாயில் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே பொள்ளாச்சியை அடுத்த மகாலிங்கபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் 31GL006PN என்ற இலக்கமிட்ட நியாய விலைக்கடையில் பாமாயில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

அப்போது, பொதுமக்கள் அனைவரும் பாமாயிலின் காலவதி தேதியைப் பார்க்காமல் அதனை வாங்கிச் சென்றுள்ளனர். வீட்டிற்குச் சென்ற அந்த எண்ணெய் பாக்கெட்டை பிரித்தபோது, எண்ணெயில் துர்நாற்றம் வீசுவதுடன், அதன் நிறமும் மாறியிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடனிதனர். இதனைத் தொடர்ந்து எண்ணெய் பாக்கெட்டை பார்த்தபோது அது காலவதியானது தெரியவந்தது. தொடர்ந்து பொதுமக்கள் நியாய விலைக்கடைக்குச் சென்று பார்த்தபோது அங்கிருந்த எண்ணெய் பாக்கெட்டுகள் அனைத்தும் காலவதியாகியிருந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்ற மக்கள் இதுகுறித்து கடை ஊழியர்களிடம் கேள்வி எழுப்பியபோது, “தற்போது ஸ்டாக்கில் உள்ள எண்ணெய் இதுதான். புதிய பாமாயில் வந்ததும் தற்போது வழங்கப்பட்ட பாக்கெட்டுகளை கொண்டு வந்து மாற்றிக்கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார். விழிப்புணர்வு இல்லாத பலர், வழங்கப்படும் பாமாயிலின் தரத்தை கவனிக்காமல் வாங்கிச் செல்வதால், அது உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, அனைத்து நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, கெட்டுப்போன பாமாயில் விற்பனையை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய பாமாயிலை உடனடியாக மாற்றி வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், உயர் அதிகாரிகளின் அலட்சியமே இது போன்ற காலாவதியான பொருட்கள் நியாய விலை கடைகளில் விற்பனை செய்வதற்கான காரணம் என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றன.

அடுத்து எஸ்.பி.வேலுமணி..? திடீர் பரபரப்பு..!

0

அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளரான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய சென்னை புறப்படுவதாக கோவையில் திடீரென பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக எம்.எல்.ஏக்கள் மரகதம் குமாரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை, சத்யபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் அடுத்தடுத்து பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இவர்களைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் விராலிமலை சி.விஜயபாஸ்கர், தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த கையோடு அதிமுகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துவிட்டார். மற்றொரு அதிமுக முன்னாள் அமைச்சர் கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நேற்று தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

இதனிடையே கோவையில் நேற்று முன்தினம் தமது ஆதரவாளர்களுடன் முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட எஸ்.பி.வேலுமணி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று ஜூன் 30-ந் தேதி காலை முதல் கோவையில் எஸ்.பி.வேலுமணி தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய போகிறார், தவெகவில் இணையப் போகிறார் என்கிற தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. இது தொடர்பாக எஸ்.பி.வேலுமணி தரப்பில் நாம் விசாரித்த போது, இன்று சென்னைக்கு செல்வது உறுதி. எடப்பாடி பழனிசாமியிடம் திரும்ப வந்த போது பறிக்கப்பட்ட மா.செ. பதவியை கொடுக்க வேண்டும் என கேட்டார் எஸ்பி வேலுமணி. அதை தராமல் துணைப் பொதுச்செயலாளர் பதவியை கொடுத்தார் எடப்பாடி. இதை எஸ்பி வேலுமணியால் ஏற்க முடியவில்லை என்கின்றனர்.
மேலும், ”எஸ்பி வேலுமணி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தால் தவெகவில்தான் இணைவார், விராலிமலை விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர், சென்னை புறநகர் மா.செ. கேபி கந்தன் ஆகியோருடன் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் தவெகவில் இணைய வாய்ப்புகள் அதிகம்” என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

அதிமுக தரப்பில் நாம் கேட்ட போது, “எஸ்.பி.வேலுமணி எந்த முடிவையும் அறிவிக்கவும் இல்லை; எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவும் இல்லை.. அதனால் நாங்கள் எந்த கருத்தும் சொல்ல முடியாது” என்கின்றனர்.