Tuesday, September 22, 2026
Home Blog Page 4

விரைவில் பத்திரப்பதிவு துறையில் வெள்ளை அறிக்கை..!

0

தமிழ்நாட்டில் கடந்த மே 10-ம் தேதி முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பதவி ஏற்றது. ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை மாதமாகும் நிலையில், இப்போது வரை நிதித் துறை மற்றும் மின்சார துறையில் வெள்ளை அறிக்கைகளை அமைச்சர்கள் வெளியிட்டுள்ளனர்.

இதுதவிர விரைவில் வேளாண் துறைக்கும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தேவைப்பட்டால் பத்திரப்பதிவுத் துறையிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஜூன் 25-ம் தேதி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் சுங்குவார்சத்திரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட சார் பதிவாளர் அலுவலகங்களில் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் திடீர் ஆய்வை மேற்கொண்டார். அப்போது, பத்திரப்பதிவு அலுவலகங்களில் பொதுமக்கள் யாரும் கூடுதல் கட்டணத்தை யாரிடமும் கொடுக்க வேண்டாம் என்று அமைச்சர் உறுதியாக தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது வெள்ளை அறிக்கை வெளியாகவும் வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சில தினங்களுக்கு முன்பு நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின் படி, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் மீதும் ரூ.1 லட்சத்திற்கும் மேல் கடன் இருக்கிறது என்று தெரிவித்திருந்தார். அதேபோல் மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் மின்சார துறைக்கு ரூ.2 லட்சம் கோடிக்கும் மேலாக கடன் இருக்கிறது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் பத்திரப்பதிவுத் துறையிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டால், அது தமிழ்நாட்டில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூறுகையில், “முகூர்த்த நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில் சர்வர் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புண்டு. இந்நிலையில் முகூர்த்த நாட்களில் பத்திரப் பதிவின் போது சர்வர் கௌளாறு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சந்தை மதிப்புக்கும், வழிகாட்டி மதிப்புக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை சரிசெய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவுத் துறையில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் பத்திரப்பதிவு துறையிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” என அமைச்சர் தெரிவித்துள்ளார். பத்திரப்பதிவுத் துறையில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன்படி பத்திரப்பதிவு செயல்முறையை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில் தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறை இறங்கியுள்ளதுஒரு குறிப்பிட்ட வகையான சொத்து ஆவணங்களுக்கு எங்கிருந்து வேண்டாமானாலும் பதிவு செய்யும் வசதியை கட்டாயமாக்க உள்ளது. ஒரு சில வாரங்களில் செயல்பாட்டுக்கு வரவுள்ள இந்த டிஜிட்டல் ஆவணப்பதிவு முறையின் மூலம், இனி பொது மக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமே ஏற்படாது. எங்கிருந்தாலும் 24 மணி நேரமும் இணையதளத்தின் வழியாக இணையவழியிலேயே தங்களது ஆவணங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும்

என் குழந்தைக்கு அவர் தான் தந்தை, நிரூபித்தே தீருவேன் ;

0

கோவையில் 28 வயது பெண் 50 வயது ரியல் எஸ்டேட் அதிபருடன் தொடர்பு – டி.என்.ஏ டெஸ்ட்டுக்கு வர மறுக்கிறார்” என வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் 28 வயது பெண். இவருக்கும், கணவருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது சமாதானப்படுத்துவதற்காக அந்த குடும்பத்தில் புகுந்த 50 வயதான ரியல் எஸ்டேட் தொழில் செய்பவருக்கும், அந்த பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில் அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன் பின் சில மாதங்கள் தனியாக வீடு பிடித்து வசித்து வந்து உள்ளனர். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி, குழந்தைகள் உள்ளனர். இதனால் பெண்ணை விட்டு பிரிந்து வந்து விட்டார்.
தன்னை ஏமாற்றியதாகவும், குழந்தைக்கு இவர் தான் காரணம் என்றும் ஏற்கனவே அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின் பேரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தநிலையில் நேற்று மாலை , அந்த பெண், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் வசிக்கும் ஆவாரம்பாளையம், மாரியம்மன் கோவில் அருகில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு முன்பு ரோட்டில் உட்கார்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் தன்னை கொலை செய்யப் போகிறார்கள் என்றும் கூறி கோஷமிட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும், பீளமேடு போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அந்த பெண் கூறும்போது,
இந்த குழந்தைக்கு தந்தை அவர் தான் என்பதை அறிய டி.என்.ஏ. பரிசோதனை செய்ய உத்தரவிட்டும்,, அந்த பரிசோதனைக்கு வர மறுக்கிறார். எனவே டி.என்.ஏ. பரிசோதனைக்கு அவரை உள்படுத்தி என்னுடைய குழந்தைக்கு அவர் தான் தந்தை என்று நிரூபிக்க வேண்டும். அதுவரை தொடர்ந்து போராடுவேன் என்று கூறினார். மாவட்ட கலெக்டர் அலுவலகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதை தொடர்ந்து அந்த பெண் கலைந்து சென்றார்.

கோவையில் கிராவல் மண் கடத்திய 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்…

0

கோவை மாவட்டத்தின் பல்வேறு புறநகர் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கோவை மாவட்ட போலீசார் நேற்று இரவு முழுவதும் விடிய, விடிய நடத்திய வாகன சோதனையில், சட்ட விரோதமாக மண் அள்ளிச் சென்ற 30-க்கும் மேற்பட்ட கனரக லாரிகளை பிடித்து அதிரடியாகப் பறிமுதல் செய்து உள்ளனர்.

கோவையின் புறநகர்ப் பகுதிகளான சூலூர், கருமத்தம்பட்டி, மதுக்கரை மற்றும் தடாகம் உள்ளிட்ட பல்வேறு நீர் நிலைகள் மற்றும் தரிசு நிலப் பகுதிகளில் இருந்து, நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளில் நூற்றுக் கணக்கான லாரிகளில் கிராவல் மண் பதுக்கி கடத்தப்பட்டு வருவதாக மாநகர் மற்றும் மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. ​இதை அடுத்து, மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் குழுக்கள் அமைக்கப்பட்டு, கோவையின் பிரதான நெடுஞ்சாலைகள் மற்றும் கிராமப்புற இணைப்புச் சாலைகளில் நேற்று இரவு முழுவதும் தீவிரப் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது, போலீசாருக்கு மணல் கடத்தி வந்த லாரிகளை மடக்கி, சோதனை சோதனை நடத்தினர். ​அப்போது உரிய அரசு அனுமதியோ, கனிமத் துறையின் முறையான ஆவணங்களோ இன்றி, விதிகளுக்குப் புறம்பாக நள்ளிரவை பயன்படுத்தி டன் கணக்கில் கிராவல் மண்ணை அள்ளி கடத்திச் சென்ற 30-க்கும் மேற்பட்ட கடத்தல் லாரிகளைப் போலீசார் மடக்கிப் பிடித்து பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 30-க்கும் மேற்பட்ட லாரிகளும் உடனடியாக அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களுக்குக் கொண்டு சொல்லப்பட்டன.”கைப்பற்றப்பட்ட கடத்தல் லாரிகளின் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் மீது கனிம வளக் கொள்ளைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சட்டவிரோத மண் கடத்தலில் ஈடுபட்ட லாரி உரிமையாளர்களுக்கும் அபராதம் (Fine) விதிக்க வருவாய்த்துறை மற்றும் கனிம வளத்துறைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மூன்று மாத வாடகை பாக்கிக்காக இரக்கமின்றி அரங்கேறிய அவலம் – கோவையில் குழந்தைகளுடன் தவிக்கும் வரும் பெண்..!

0

கோவையில் அட்வான்ஸ் பணத்தைப் பறித்துக் கொண்டு குடும்பத்தை நடுத்தெருவில் வீசிய வீட்டு உரிமையாளர் – மேம்பால அடியில் பள்ளி குழந்தைகளுடன் தவிக்கும் வரும் பெண்.

கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் வறுமையின் பிடியில் சிக்கிய ஒரு ஏழைக் குடும்பத்தை, வீட்டின் உரிமையாளர் இரக்கமின்றி நடுத்தெருவில் தூக்கி வீசியுள்ள நெஞ்சை உலுக்கும் சம்பவம் ஒட்டுமொத்த கோவையையும் உறைந்துபோகச் செய்து உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரூபாய் 30,000 முன் தொகை கொடுத்து ஒரு குடும்பத்தினர் குடியேறி வசித்து வந்து உள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக அந்தக் குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருந்த வேலை முடங்கிப் போனதால், அவர்களால் வீட்டு வாடகையைச் சரியாகச் செலுத்த முடியாமல் போயுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த வீட்டின் உரிமையாளர், மனிதாபிமானமே இல்லாமல் அவர்கள் ஏற்கனவே கொடுத்து இருந்த முன்தொகை 30,000 ரூபாயையும் மொத்தமாகப் பறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.அதோடு நிறுத்தாமல், ‘இனி ஒரு நிமிஷம் கூட இந்த வீட்டில் இருக்கக் கூடாது’ என மிரட்டி, அவர்களை உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளார். வேறு வழியின்றி, நேற்று நள்ளிரவு முதல் பள்ளிக்குச் செல்லும் தங்களது பிஞ்சு குழந்தைகளுடன், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை ஆவாரம்பாளையம் மேம்பாலத்தின் அடியில் உள்ள குளிர்ந்த சாலையில் பரப்பி வைத்து விட்டு, அந்தப் பெண் தனித்து தவித்து வருகிறார். விடிந்தால் பள்ளிக்குச் செல்ல வேண்டிய குழந்தைகள், புத்தகப் பைகளுடன் சாலையோரப் புழுதியில் படுத்துறங்கும் இந்தக் கொடூரக் காட்சி பொதுமக்களைக் கண்ணீர் சிந்த வைத்து உள்ளது. ஏழைக் குடும்பத்தின் இயலாமையைப் பயன்படுத்தி அட்வான்ஸ் பணத்தையும் அள்ளிக் கொண்டு, குழந்தைகளைப் பனியில் தவிக்கவிட்ட அந்த வீட்டு உரிமையாளருக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. இந்த அவல நிலை குறித்துத் தகவல் அறிந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர், நடுத்தெருவில் தவிக்கும் அந்தப் பெண்ணிற்கும் அவரது குழந்தைகளுக்கும் உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் தற்காலிக மறுவாழ்வு மற்றும் சட்ட ரீதியான உதவிகளை வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

முதல்வர் மீது ஒருமையில் விமர்சனம்.. அனிதா ராதாகிருஷ்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு…

0

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆத்தூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 108-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த விழாவில் திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் குறித்து விமர்சித்து பேசினார்.குறிப்பாக முதல்வரை ஒருமையிலும், அவதூறாகவும் பேசினார். சட்டசபையில் விஜய் நடந்துகொண்டதை வைத்தும் கடுமையாக விமர்சித்து பேசினார். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக ஆத்தூர் பகுதி நிர்வாகிகள் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். திமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும், மரியாதைக் குறைவாகவும் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து பேசி வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் மனு அளிக்கப்பட்டது இதையடுத்து போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். குறிப்பாக விஜய் குறித்து மரியாதை குறைவாக அவதூறு பரப்பும் வகையில் பேசியது, மோதலை தூண்டும் வகையில் பேசுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் என 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்…

0

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது ச்செயலாளர் பிரிசில்லா பாண்டியன் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (ஜூன் 22) திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் நிறுவனரும், தலைவருமான பெ. ஜான் பாண்டியன் கலந்துக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அலர், “தேசிய ஜனநாயக கூட்டணி (National Democratic Alliance)-யில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இன்று முதல் வெளியேறுகிறது. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நட்பு தொடரும். ஆனால், அந்த கூட்டணியில் நாங்கள் இல்லை.

உள்ளாட்சித் தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேவைகளும், சேவைகளும் அதிகமாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் வெளியேறுகிறது. தேர்தல் காலத்தில் யாரோடு பயணிக்க வேண்டும்? யாரோடு இணைய வேண்டும்? என்பதை பொதுக்குழு கூட்டி முடிவு எடுப்போம். நாங்கள் என்டிஏ-வில் இருந்து வெளியேறியதற்கு வேறு எந்த காரணமும் கிடையாது. ஆகாஷ் டெலிசன், மரண வழக்கில் தவறு செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் சிபிசிஐடி இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அவரின் உடலை காவலர்களே அடக்கம் செய்துள்ளார்கள். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் ஆகாஷ் டெலிசன் என்பதால் காவல்துறை இதுபோன்று செயல்படுகிறதா என அச்சம் எழுந்துள்ளது. ஆகாஷ் டெலிசன் விவகாரத்தில் போராடியவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. ஆனால், அரசு மௌனமாக இருக்கிறது. குறிப்பாக, முதலமைச்சர் விஜய் இந்த விவகாரத்தில் மௌனமாக இருப்பது வருத்தமளிக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்று கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தொடர்ச்சியாக இணைந்து வருகிறார்கள். ஆனால், எங்களது கட்சியைச் சார்ந்த நிர்வாகிகளோ, பொறுப்பாளர்களோ யாரும் இணையவில்லை. ஒரு சொம்பு பாலில் ஒரு சொட்டு விஷம் கலந்தாலும் விஷம் தான். விஷத்தை உங்களோடு சேர்த்து, நீங்களும் அழிந்து போக வேண்டாம். முதலமைச்சர் விஜய் மௌன விரதம் இருப்பதாக கேள்விப்பட்டேன். அவர் மௌன விரதத்தை கலைக்கும் போது தான் தமிழக மக்கள் அவரை புரிந்து கொள்வார்கள். அரசியல் மாற்றம் வேண்டும் என மக்கள் அவரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். மக்களுக்கு அவர் கொடுக்கும் பரிசு மௌனம் தான்.அதிமுக எம்எல்ஏ-க்கள் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்திற்கு சென்றது, பேரம் பேசியதனாலேயே நடந்துள்ளது. துரோகம் செய்தவர்களை இனியும் மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். ராஜினாமா செய்தவர்களை மீண்டும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது” என தெரிவித்தார்..

மேகதாது விவகாரத்தில் முதல்வர் விஜய் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் – திருமாவளவன்

0

வி.சி.க காட்பாடி செய்தி தொடர்பாளர் அஜித் செல்வராஜ் – மரிய ஜோன் சிந்து ஆகியோரது திருமணம் வேலூரில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆகியோர் வருகை புரிந்திருந்தனர். விழாவில் , கலந்துகொள்வதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழா அடுத்த மாதம் ஜூலை 5-ஆம் தேதி எனது தலைமையில் சென்னையில் நடைபெறுகிறது. 2026ஆம் ஆண்டுக்கான விருதுபெறும் சான்றோர் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த விழாவில் இயக்கத் தோழர்கள் பெருவாரியாக பங்கேற்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ளார்.
மேகதாது விவகாரம் – அனைத்துக் கட்சிக் கூட்டம்
தொடர்ந்து, மேகதாது விவகாரத்தில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினாலொழிய தீர்வு எட்டமுடியாது என துரைமுருகன் கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “சட்டமன்றத்தில் முதலமைச்சர் முன்மொழ்ந்த தீர்மானத்திற்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு அளித்துள்ளனர். இதன்மூலம், புதிய முதலமைச்சரும் மேகதாது அணைக்கு ஒன்றிய அரசு அனுமதிக்கக்கூடாது என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார். இருப்பினும், நாம் என்ன செய்ய வேண்டும்? அனைத்து கட்சியினரும் ஒருங்கிணைந்து எவ்வாறு செயல்பட வேண்டும்? மேகதாது பகுதியில் அணை கட்டினால், தமிழ்நாடு எந்த வகையில் பாதிக்கப்படும்? விவசாயிகள் மட்டுமின்றி குடிநீருக்காக மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள்? கால்நடைகள் எவ்வாறு பாதிக்கப்படும்? குறித்தெல்லாம் ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது அவசியமானது. விசிகவும் அதற்கு கோரிக்கை விடுக்கிறது” என்று தெரிவித்தார்.

மேலும், “காங்கிரஸ் கட்சி எப்போதுமே தமிழ்நாட்டு நலன்களை முன்னிறுத்தி முடிவுகளை எடுத்திருக்கிறது. தமிழ்நாடு எடுக்கிற முடிவுகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒத்துழைப்பு அளித்திருக்கிறது. இதுதான் கடந்த கால வரலாறு. எனவே கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில மக்களுக்கு ஒத்துழைப்பார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கை தேடும் கரூர் போலீஸ்?

0

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கை கரூர் மாவட்ட காவல்துறையினர் தீவிரமாக தேடி வரும் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த திமுக ஆட்சியின்போது மின்சாரத்துறை அமைச்சராக செயல்பட்ட செந்தில் பாலாஜி, டிரான்ஸ்பார்மர் கொள்முதல் செய்ததில் ரூ.400 கோடி வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்த சிபிஐ, விசாரணையையும் துரிதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், சென்னை எம்.ஆர்.சி நகரில் கஸ்தூரி நகர் பகுதியில் அமைந்துள்ள செந்தில் பாலாஜியின் இல்லத்துக்கு மஃப்டி உடைகளில் சென்ற கரூர் ஏடிஎஸ்பி தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அங்கு செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் இல்லாததால் காவல்துறையினர் திரும்பிச் சென்றனர். செந்தில் பாலாஜி மீது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவரது சகோதரர் அசோக்கின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை அசோக்கை பலமுறை கைது செய்ய முயன்றது. எனினும், நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மற்றும் கைது நடவடிக்கைக்கு எதிரான சட்டப் பாதுகாப்பை அவர் பெற்று வந்தார்.இதுபோன்ற சூழலில், அசோக்கின் செல்போன் சிக்னல் சென்னை எம்.ஆர்.சி. நகர் பகுதியில் காட்டியதாக கூறப்படும் நிலையில், செந்தில் பாலாஜி இல்லத்தில் சுமார் ஒரு மணி நேரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், வீட்டின் பாதுகாவலரிடம் இருந்து செல்போனை பெற்று, சமீபத்திய அழைப்புகள் மற்றும் தொடர்புகள் குறித்தும் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.நேற்று இரவு முதல் அசோக்கை தேடும் நடவடிக்கையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும், அசோக் மீது பண மோசடி தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதால், தற்போது எந்த வழக்கில் அவரை தேடி வருகின்றனர் என்பது குறித்து காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், கரூரில் அசோக் மீது புதிதாக ஏதேனும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்ற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. இருப்பினும், காவல்துறையினர் மேற்கொண்டு வரும் தேடுதல் நடவடிக்கைக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேகதாது அணை கர்நாடக அரசுக்கு எதிராக முதல்வர் விஜய் கொண்டுவந்த தனித்தீர்மானம் – நிறைவேற்றம்

0

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று (ஜூன் 19) மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் விஜய், “அரசியலே மக்களுக்கானது தான். அதே மாதிரி அரசியல் கட்சினாலே அது மக்களுக்காகதான். அது எல்லாம் அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும். கொள்கையில், நிலைப்பாடுகளில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மக்களுக்கான பிரச்சனைன்னா, எல்லாம் அரசியல் கட்சிகளுமே மக்கள் பக்கம் தான் நிற்கும்; நாங்களும் அப்படி தான்; மனசாட்சியுள்ள மக்களாட்சியாகவே இருக்கவே எங்கள் ஒரே விருப்பம். நமது விவசாயிகளுக்காகவும், நமது மக்களுக்காகவும் நின்றே ஆக வேண்டியது நமது கடமை; நமது உரிமை. எல்லாவற்றையும் தாண்டி அதுதான் நமது உயிரான உணர்வு. நீராதாரம் தான் நமது மிக முக்கியமான அடிப்படையான வாழ்வாதாரத்தில் ஒன்று. நதிநீர் உரிமையும் நமது மிக முக்கிய உரிமைகளில் ஒன்று. அதைப் பாதுகாத்தே ஆக வேண்டிய பொறுப்பு, நம் அனைவருக்கும் உள்ளது. அந்த உணர்வோடு அடிப்படையில் ஒரு தீர்மானத்தை நமது மாமன்ற உறுப்பினர்கள் அனைவரின் ஒப்புதலுக்காகவும் கொண்டு வரவிருக்கிறோம் கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, யாரும் யாரையும் குறைச் சொல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்காக நாம் அனைவரும் ஓரணியில் நிற்பவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டுமாறு அனைத்து சட்டமன்றக் கட்சிகளின் அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக் கொள்கிறோம். நம்முடைய சொந்தங்களான விவசாயிகளுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் கொண்டு வரப்படும் இந்த தீர்மானத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறோம். ஒருமித்த கருத்தோடு இதை நீங்கள் அனைவரும் நிறைவேற்றித் தர வேண்டும் என அன்போடு கேட்டுக்கொண்டு இந்த தீர்மானத்தைப் படிக்கிறேன். காவிரி நடுவர் மன்றம் 05/02/2007 அன்று அளித்த இறுதி தீர்ப்பையும், உச்சநீதிமன்றம் 16/02/2018 அன்று அளித்த தீர்ப்பையும் மதிக்காமலும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவைப் பெறாமலும், மத்திய அரசின் எந்தவித அனுமதியைப் பெறாமலும், கர்நாடக அரசு தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி மேற்கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் கர்நாடகா அரசின் இச்செயலுக்கு தனது கடும் எதிர்ப்பை பேரவைத் தெரிவித்துக் கொள்கிறது.
கர்நாடகா அரசின் மேகதாது அணை திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என ஒன்றிய அரசை பேரவை வலியுறுத்துகிறது. காவிரி நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் காவிரி படுகை, ஒரு பற்றாக்குறை படுகை எனக்குறிப்பிட்டு படுகையின் மொத்த நீரிணையும, படுகை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளித்துவிட்டதால் காவிரி படுகையில் புதிய திட்டங்களை மேற்கொள்ளவோ, கூடுதலாக நீரைப் பயன்படுத்தவோ இயலாது. காவிரி பிரச்சனை இரு மாநிலங்களின் உணர்வுப் பூர்வமான பிரச்சனையாகும். ஆதலால், கர்நாடகா அரசு மேகதாதுவிலோ அல்லது காவிரி படுகையின் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எவ்வித புதிய நீர்த்தேக்கத் திட்டத்தை பிற படுகை மாநிலங்களின் இசைவு இன்றியும், ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடகா அரசினை அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசை பேரவை வலியுறுத்துகிறது.கர்நாடகா அரசின் விரிவான திட்ட அறிக்கையைப் பரிசீலிக்கவோ, அதற்கு அனுமதி அளிக்கவோ கூடாது என்று மத்திய நீர்வளத்துறை குழுமத்தையும் இப்பேரவை வலியுறுத்துகிறது. கர்நாடகா அரசின் இந்த முயற்சியை முறியடித்து தமிழக விவசாயிகளின் நலனைப் பாதுகாத்திட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது ஆதரவை ஒருமனதாகத் தெரிவித்துக் கொள்கிறது என்னும் இத்தீர்மானத்தை முன்மொழிகிறேன். இதனை மாண்புமிகு உறுப்பினர்கள் முழு மனதோடு ஆதரிக்க வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்றார். இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மதிமுக, தேமுதிக, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சி உள்பட பல்வேறு கட்சிகளின் சட்டமன்றக் குழுத் தலைவர்களும் ஆதரவுத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய், தீர்மானத்திற்கு ஆதரவளித்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

மகன் மிதுனுக்கு அதிமுகவில் எந்த பதவியும் கொடுக்க மாட்டோம்- எடப்பாடி பழனிசாமி

0

2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் தவெகவுக்கு ஆதரவாகவும் முன்னாள் அமைச்சர்கள் சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தனி அணியாக செயல்பட்டிருந்தனர்.இந்த நிலையில் தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் மீண்டும் பழனிசாமியை சந்தித்து ஓரணியாகினர். ஆனால் சி.வி.சண்முகம், சி. விஜயபாஸ்கர் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை. இவர்களில் விஜயபாஸ்கர் அதிமுகவில் இருந்து விலகிவிட்டார். அவர் தவெக அல்லது திமுகவில் இணைவார் என சொல்லப்படுகிறது. ஆனால் சி.வி.சண்முகத்தின் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை. இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பழனிசாமியின் மகன் மிதுனை நேரடி அரசியலுக்கு கொண்டு வருமாறு எடப்பாடி பழனிசாமியிடம் நிர்வாகிகள் வலியுறுத்தினராம்.மிதுனுக்கு இளைஞரணி அல்லது ஐடி விங்கில் பதவி கொடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக ஐடி விங் செயலாளராக இருக்கும் ராஜசத்யன் தனது பதவில், அரசியலில் அல்லாதவர்களை ,
கழக பொதுசெயலாளரின் குடும்பத்தினரை, தொடர்ந்து கழகத்தின் அரசியல் விவாதத்திற்குள் இழுக்கும் முயற்சி செய்து, கழகத்திற்கு எதிரான பல கதைகள் உருவாக்கப்படுகிறது. அது சமூக வலைதளம் தொடங்கி, பத்திரிகை, ஊடக விவாதம் வரை தற்போது வளர்ந்து நிற்பது வேதனைக்குரியது. தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு, அதன் பின் நடந்த உட்கட்சி நிகழ்வுகள், எங்களுடைய உழைப்பை குறைத்து சொல்லி கொச்சைப்படுத்துவது என கழகத் தொண்டர்கள்-அடுத்த தலைமுறையினர் பல வலிகளை சுமந்து வருகிறோம்…இந்த நேரத்திலும் கூட, இதுபோன்ற தேவையற்ற விஷயங்கள் எங்கே பேசப்பட்டிருந்தாலும் தவறு தான்! என தெரிவித்திருந்தார். அது போல் மகனை அரசியலுக்கு கொண்டு வர எடப்பாடி பழனிசாமி நாடகம் போடுகிறார் என சி.வி.சண்முகம் விமர்சித்திருந்தார். இந்த நிலையில் இபிஎஸ் அணியை சேர்ந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி போட்ட பிச்சையில் வெற்றி பெற்ற சண்முகத்திற்கு பழனிசாமி குறித்து பேச எந்த தகுதியும் இல்லை. இந்த தேர்தலில் தமிழகத்திலேயே மிக அதிகமான 96 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் இபிஎஸ். அரசியல் நிகழ்வுகளில் ஒரு போதும் தன் மகனை பழனிசாமி முன் நிறுத்தியது கிடையாது என தெரிவித்திருந்தார்.

இதை எடப்பாடி பழனிசாமியும் தெளிவுப்படுத்தினார். இன்றைய தினம் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நடந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், ஊடகங்கள், செய்தித்தாள்களில் என் மகன் மிதுனுக்கு பதவி கொடுக்கப்படும் என தகவல் பரவுகிறது. அதில் உண்மையில்லை. என் மகன் மிதுன் அதிமுகவில் எந்த பொறுப்புக்கும் வரமாட்டார். அவர் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகவே இருக்கிறார் என தெளிவுப்படுத்தியுள்ளார்.