Monday, September 21, 2026
Home Blog Page 2

பேருந்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை – கோவை போலீஸ் கைது!

0

​கோவை, பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றத்திற்காகப் போத்தனூர் காவல் ஆய்வாளரின் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த காவலர் மணிவேந்தன் கைது செய்யப்பட்டு உள்ளார்.

​கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், வழக்கம் போல் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த பேருந்தில் ஏறி உள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அந்த மாணவி பேருந்தின் படியில் நின்றபடி பயணித்து உள்ளார். அப்போது, அதே பேருந்தில் பயணித்த நபர் ஒருவர், மாணவிக்கு உதவுவது போல நடித்து, அவருக்குப் பாலியல் சீண்டல் கொடுத்துத் தொல்லை அளித்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, ஈச்சனாரி அருகே உள்ள தனது கல்லூரி நிறுத்தத்தில் இறங்கி, இச்சம்பவம் குறித்துப் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தார்.

​மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், பாலியல் தொல்லையில் ஈடுபட்டது போத்தனூர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளரின் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த காவலர் மணிவேந்தன் என்பது தெரியவந்தது.​இதனைத் தொடர்ந்து, காவலர் மணிவேந்தன் மீது வழக்குப் பதிவு செய்த பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலிசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதுகாப்பளிக்க வேண்டிய காவலரே பேருந்தில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கைதான சம்பவம் கோவையில் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

0

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை சிபிசிஐடி போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி மலை அடிவாரத்தில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்பனை செய்தவர், வாங்கியவர்கள் என 4 பேர் மீது பழநி அடிவாரம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். பத்திரப்பதிவையும் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையிலான குழுவினர் விசாரணையைத் தொடங்கி, தேவஸ்தானம் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் விசாரித்தனர். நேற்று திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் பழநி தேவஸ்தான நிலப்பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம், வழக்குப் பிரிவு கண்காணிப்பாளர்கள் சிவனேசன், கணபதி, வட்டாட்சியர் (ஓய்வு) மாரியப்பன், கிராம நிர்வாக அலுவலர் (ஓய்வு) சின்னசாமி ஆகிய 5 பேரிடம் எஸ்பி சாஜிதா விசாரணை நடத்தினார்.

இதேபோல, பத்திரப்பதிவு அலுவலகத்தில் மற்றொரு குழுவினர் ஆய்வு செய்து சிசிடிவி வீடியோ பதிவுகளைப் பெற்றுக்கொண்டனர். கிடுக்கிப்பிடி விசாரணையால் தேவஸ்தானம் மற்றும் பதிவுத் துறை அதிகாரிகள், பணியாளர்கள் பலர் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக மனுதாரர்கள், எதிர்மனுதாரர்களுக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் நிலத்தை விற்ற திருப்புகழ் சுவாமிகள், முருகதாஸ் சுவாமிகள் மற்றும் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளையைச் சேரந்த முருகதாஸ், நிலத்தை வாங்கிய உடுமலைப்பேட்டை பாப்பான்குளத்தைச் சேர்ந்த வெள்ளைதுரை மற்றும் பழநி டி.கே.என்.புதூரைச் சேர்ந்த சேதுபதி ஆகியோர் தலைமறைவானதும், செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் பத்திரப்பதிவு நாளில் சாட்சிக் கையெழுத்திட்டோரும் தலைமறைவாகி உள்ளனர். இவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது. முறைகேடாக கோயில் நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என அரசியல் கட்சியினர் உள்பட பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், நிலத்தை விற்ற முருகதாஸ், வாங்கிய சேதுபதி ஆகியோரது புகைப்படமும், நிலம் தொடர்பான வில்லங்கச் சான்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் 2 பேருக்கு தொடர்பு? – கடந்த மார்ச் மாதம் ரூ.100 கோடி நிலத்தை பத்திரப்பதிவு செய்ய முயற்சி நடந்தபோது, பணியில் இருந்த சார்பதிவாளர் பழனிச்சாமி வழக்கு நிலுவையில் இருப்பதால் பதிவு செய்ய இயலாது எனக்கூறி நிராகரித்தார். அவர் பணியிட மாறுதலில் சென்றார். பின்னர் சார்பதிவாளர் பாலசந்தர் பொறுப்பேற்ற நிலையில் ஜூலை 3-ம் தேதி சர்ச்சைக்குள்ளான நிலத்தை பதிவு செய்வதற்கான சில முன்னேற்பாடுகள் நடந்துள்ளன.

ஜூலை 6-ம் பாலசந்தர்விடுமுறையில் சென்றதால், சிறப்பு பணிக்கு வந்த ஜஸ்டின் மணிகண்டன் நிலத்தை பதிவு செய்துள்ளார். இந்த விஷயத்தில் மேற்கண்ட 3 பேரிடமும் சிபிசிஐடி விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோசடியில் பல முக்கிய அரசியல் புள்ளிகள், அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், வீடியோ ஆதாரங்களை வைத்து சிபிசிஐடி போலீஸார் 3 குழுவாக பிரிந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

டிஜிட்டல் லஞ்சம்,கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ 

0

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!!

தமிழ்நாடு முழுவதும் தாலுகா அலுவலகங்கள், வருவாய்த்துறை அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினார்கள். கோவை, பாலசுந்தரம் சாலையில் வடக்கு தாலுகா அலுவலகம் உள்ளது. இங்கு தாசில்தாராக ஜெயக்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இங்கு வரும் பொது மக்களிடம் இடைத்தரகர்கள் மூலம் பணம் பெறப்படுவதாக புகார் எழுதன. இதை அடுத்து லஞ்ச ஒழிப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் தலைமையில், கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை 5 மணிக்கு திடீரென சோதனை நடத்தினார்கள். அப்பொழுது தாசில்தார் உட்பட பலரும் அலுவலகத்தில் இருந்தனர். இதைத்தொடர்ந்து அலுவலகத்தில் இருந்தவர்கள் யாரும் ? வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை, வெளியில் இருந்தவர்கள் யாரும் ? உள்ளே வர அனுமதிக்கப்படவில்லை, இதை அடுத்து அந்த அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையிலும் மேஜை டிாயர்கள், கோப்புகள் உள்ளிட்ட இடங்களில் கணக்கில் வராத பணம் ஏதாவது பதுக்கி வைக்கப்பட்டு உள்ள்ளதா ? என்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

மேலும் google pay மூலமாக லஞ்சப் பணம் பெறப்பட்டு உள்ளதா ? என ஒவ்வொரு அலுவலர்களிடம் செல்போன்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சுமார் மூன்று ஊழியர்களின் செல்போன்களில் கூகுள் பே மூலம் சந்தேகத்துக்குரிய தொகை பரிமாற்றம் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதனால் அந்த பணம் எதற்காக பெறப்பட்டது ? அனுப்பியவர்கள் யார் ? என்று போலீசார் விசாரித்தனர். இதை அடுத்து துணை தாசில்தார், தாலுகா இன்ஜினியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி, அலுவலக உதவியாளர் உட்பட ஆறு பேரின் கூகிள் pay கணக்குகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் ரூபாய் 7 1/2 லட்சம் பணம் பெற்றது தெரிய வந்தது. இதில் தாலுகா என்ஜினியர் அதிக அளவில் பணம் பெற்றது தெரியவந்தது. இது தவிர ரூபாய் 5,000 ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து ஐந்து அதிகாரிகளிடம் விடிய, விடிய விசாரணை நடைபெற்றது.

கோவையில் பல இடங்களில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெறுவது அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் அடகு கார் விவகாரத்தில் ₹70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது.

0

திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கரையை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவருடைய கணவர் புதிய கார் வாங்கியுள்ளார். பண பிரச்சினைக்காக அந்த காரை ரவிக்குமார் என்பவரிடம் அடமானம் வைத்தாக தெரிகிறது. அந்த காரை ரவிக்குமார் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்துவது ருஜைனா பாத்திமாவுக்கு தெரியவந்தது.

இதனால், ஒரு இடத்தில் ரவிக்குமார் நிறுத்தி இருந்த காரை மாற்று சாவி மூலம் எடுத்து பொள்ளாச்சி பகுதியில் ருஜைனா பாத்திமா நிறுத்தி உள்ளார். இதுகுறித்து ரவிக்குமார், சிறப்பு படையை சேர்ந்த கோவை காட்டூர் சிறப்பு-சப் இன்ஸ்பெக்டர் பூபதியிடம் புகார் கொடுத்து உள்ளார். விசாரணை நடத்திய பூபதி, ருஜைனா பாத்திமா மற்றும் அவருடைய கணவர் ஆகியோரின் 2 செல்போன்களை பிடுங்கி வைத்துக்கொண்டதாக தெரிகிறது. கார் அடமான விவகாரத்தையும், 2 செல்போன்களை திரும்ப கொடுக்கவும் ரூ.70 ஆயிரம் பூபதி ருஜைனா பாத்திமா மற்றும் அவருடைய கணவரிடம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து ருஜைனா பாத்திமா கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு கூடுதல் துணை சூப்பிரண்டு ராஜேஷ் ,இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினார்கள். ருஜைனா பாத்திமா உக்கடம் பஸ் நிலையத்தில் இருப்பதாகவும், லஞ்ச பணத்தை பெற்று கொள்ளுமாறும் சிறப்பு-சப் இன்ஸ்பெக்டர் பூபதியிடம் தெரிவித்துள்ளார். அவரும் உக்கடம் பஸ் நிலையத்துக்கு வந்து ரூ.70 ஆயிரத்தை பெற்றபோது, மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கிப்பிடித்து பூபதியை கைது செய்தனர். அவரிடம் இருந்த லஞ்சப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

லஞ்சம் வாங்கி சிறப்பு -சப் இன்ஸ்பெக்டர் பூபதி கைதான விவகாரம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2 வருஷ படிப்பை இழுத்தடிக்கும் நிர்வாகம்; புத்தகம் இல்லை, வகுப்பும் இல்லை, ஆனால் அபராதம் மட்டும் ₹300 வசூலிப்பதா ? என மாணவர்கள் கடும் கொதிப்பு !!!

0

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு முதுகலை படிப்புகளில் படித்து வருகின்றனர் . ஏற்கனவே இரண்டு வருடங்களில் முடிக்க வேண்டிய படிப்பை, முறையாக பாடம் நடத்தாமலும் தேர்வு நடத்தாமலும், தற்போது வரை இரண்டு ஆண்டுகளில் இரண்டு பருவத் தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன. தற்போது மூன்றாம் பருவத்தேர்வு இந்தாண்டு தொடங்கும் நிலையில், மாணவர்களை ஜூன் 25ஆம் தேதிக்குள் மூன்றாம் பருவத்தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என பாரதியார் பல்கலைக்கழகம் தெரிவித்த நிலையில் மாணவர்கள் கடந்த ஜூன் 25ஆம் தேதிக்குள் பல்கலைக் கழக இணையதளத்தில் கட்டணத்தை செலுத்தி உள்ளனர். ஆனால் கட்டணம் மூன்றாம் பருவத் தேர்வுக்கு பதிலாக நான்காம் பருவத் தேர்வில் கட்டணம் இணையதளத்தில் பதிவாகியுள்ளதால், மூன்றாம் பருவத்திற்கு கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி ஒவ்வொரு மாணவருக்கும் தலா 300 ரூபாய் பாரதியார் பல்கலைக்கழகம் அபராதம் விதித்துள்ளது மாணவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது. மேலும் வகுப்புகள் எப்போது தொடங்கப்படும், புத்தகங்கள் எப்போது வழங்கப்படும் என்று பாரதியார் பல்கலைக் கழகம் அறிவிக்காத நிலையில், மூன்றாவது பருவம் மற்றும் நான்காவது பருவம் இந்தாண்டுக்குள் நிறைவடைமா என்று எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் மாணவர்களின் கல்வியில் பல்கலைக்கழக நிர்வாகம் இப்படி விளையாட கூடாது என அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். உயர்கல்வித்துறை அமைச்சர் உடனடியாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

கரூரில் 3,084 ஏக்கர் இனாம் நிலங்கள் யாருடைய பெயரில் உள்ளன?

0


கரூர் மாவட்ட 3,084.95 ஏக்கர் இனாம் நிலங்கள் குறித்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிலம் யாருடைய பெயரில் உள்ளன என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. இனாம் நிலங்களுக்கு பதிவுத்துறை விதித்திருந்த தடையை நீக்கி கரூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இந்த கேள்வியை எழுப்பி உள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு முக்கிய கோவில்களுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் 3,084.95 ஏக்கர் நிலங்கள் (471 சர்வே எண்கள்) மீதான பத்திரப்பதிவு தடையை நீக்கி, மாவட்ட நிர்வாகமும் இந்து சமய அறநிலையத்துறையும் உத்தரவிட்டன. கடந்த 1963 ஆம் ஆண்டு சட்டத்தின் படி ரயத்துவாரி பட்டா பெற்று, பல ஆண்டுகளாக அப்பகுதிகளில் வசித்து வரும் மற்றும் விவசாயம் செய்துவரும் சுமார் 3,390 பேருக்கு இந்த உத்தரவு மூலம் பத்திரப்பதிவு செய்யும் உரிமை மீண்டும் கிடைத்தது.
இந்த நிலங்களின் மதிப்பு சுமார் 25 ஆயிரம் கோடி இருக்கும் என்று கூறப்படுவதால், இந்த உத்தரவு கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் ஒப்படைக்கும் செயல் என பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இருப்பினும் திமுக மற்றும் தவெக அரசுகள், இது புதிய நில ஒப்படைப்பு அல்ல என்றும், நீண்ட காலமாக பட்டா வைத்திருக்கும் மக்களுக்கு ஏற்பட்ட நிர்வாக சிக்கலைத் தீர்க்கும் நடவடிக்கை என்றும் விளக்கம் அளித்தன. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தொடரப்பட்டன. சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கரூர் மாவட்டம் அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோவில், அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கான 15 கிராமங்களில் உள்ள 3,084.95 ஏக்கர் நிலங்களுக்கு பதிவுத்துறை தரப்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலங்களை ஆக்கிரமித்த சுமார் 3,390 நபர்கள் அளித்திருந்த மனுக்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கரூர் மாவட்ட ஆட்சியர் பதிவுத்துறை விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.இது முன் அனுமதி பெறாமல் கோயில் நிலங்களை பத்திரப்பதிவு செய்ய வழிவகை செய்கிறது. இது செல்லத்தக்கது அல்ல. எனவே பதிவுத்துறை விதித்திருந்த தடையை நீக்கி கரூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, கரூரில் இனாம் நிலங்களை பத்திரப்பதிவு செய்யலாம் என்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. அதே சமயம் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிலங்கள் யாருடைய பெயரில் உள்ளன என்பது தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசு தரப்பில் ஜூலை 29ஆம் தேதி விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

“நிழல் (Nizhal)”
QR குறியீடு அடிப்படையிலான நவீன பொதுப் பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

0

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், கியூஆர் கோடு மூலம் போதைப்பொருள் கடத்தல், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் புகாராகத் தெரிவிக்க ஏதுவாக “நிழல் (Nizhal)” என்ற அதிநவீனத் தொழில்நுட்பப் பொதுப் பாதுகாப்புத் திட்டம் நேற்று அதிகாரப் பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.



கோவை மாவட்டத்தின் பாதுகாப்புக்கான புதிய உத்தி:

தமிழகத்தின் மிக வேகமாக வளர்ந்து வரும் மாவட்டங்களில் ஒன்றான கோவையில் சுமார் 40.11 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 2,272-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளதால், சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கப் புதிய தொழில்நுட்ப அணுகுமுறை அவசியமாகி உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும், அவசர காலங்களில் காவல் துறையின் சேவையை விரைவாகக் கொண்டு சேர்க்கவும் “நிழல் (Nizhal) – பாதுகாப்பான சமூகத்திற்காக ஒன்றிணைவோம்” என்ற QR குறியீடு அடிப்படையிலான நவீனப் பாதுகாப்புத் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பவனார் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கூடுதல் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், கல்லூரி மாணவர்கள், மாவட்ட கலால் அலுவலர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஸ்கேன் செய்தால் போதும்… அடையாளம் 100% ரகசியம்!

இந்த “நிழல்” திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்களது கைப்பேசியின் (Mobile Phone) கேமரா வழியாக ஆங்காங்கே ஒட்டப்பட்டு இருக்கும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து, காவல் துறையுடன் உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியும்.

இத்திட்டத்தின் மிக முக்கியச் சிறப்பம்சம் என்னவெனில், தகவல் அளிப்பவர்களின் அடையாளம் (Identity) முழுமையாக ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.

பொதுமக்கள் எந்தெந்த குற்றங்கள் குறித்துத் தகவல் தெரிவிக்கலாம் ?

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்.

கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல், விற்பனை.

சந்தேகத்திற்கு இடமான நபர்கள் அல்லது சட்டவிரோதச் செயல்பாடுகள்.

பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்.

24 மணி நேரமும் கண்காணிக்கும் ‘மாஸ்டர் கட்டுப்பாட்டு மையம்’:

இந்தத் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் அனைத்தும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாஸ்டர் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (Master Command and Control Centre – MCCC) மூலம் 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும்.

அங்குப் பணியாற்றும் சிறப்புப் பயிற்சி பெற்ற காவல் அதிகாரிகள், கியூஆர் கோடு மூலம் வரும் தகவல்களை உடனுக்குடன் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பித் துரித நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

மாவட்டம் முழுவதும் கியூஆர் கோடுகள்:

பொதுமக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தளங்கள் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் இந்த QR குறியீடுகள் படிப்படியாக நிறுவப்பட உள்ளன.

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணி: யார் – யாருக்கு

0

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற விஜய்யின் பரப்புரையின் போது திடீரென பயங்கர கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு விஜய் தனது சொந்த நிதியில் இருந்து தலா ரூ.20 லட்சம் வழங்கினார். இது ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைந்தது. இந்த சம்பவம் நடந்து 9 மாதங்கள் கடந்த நிலையில், முதலமைச்சர் விஜய் இன்று கரூர் சென்று பொதுக்கூட்டத்தில் பேசினார். இதையடுத்து, கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 31 பேருக்கு அரசு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. க. சாந்தி என்பவருக்கு ரூ.10 லட்சம் ரொக்கம் மட்டும் வழங்கப்பட்டுள்ளது

மக்களே இடைத்தேர்தலில் தீய சக்தி திமுகவை நல்லா வெச்சு வெளுத்து விடுங்க- கரூரில் முதலமைச்சர் விஜய் பேச்சு

0

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்கு பிறகு முதன்முறையாக முதலமைச்சர் விஜய் இன்று கரூருக்கு வருகை தந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூர் வந்தடைந்தார்.

கரூர் – சேலம் புறவழிச்சாலையில் உள்ள வெண்ணெய்மலை அட்லஸ் கலையரங்க மைதானத்தின் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுமார் 5,000 பேர் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பிற்பகல் 12 மணியளவில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய், கரூர் சம்பவத்தில் காவல்துறையினர் முன்கூட்டியே எச்சரிக்கைவில்லை என குற்றம்சாட்டினார். அன்று கூட்டத்திற்கு வரும் போது, காவல்துறையினரே வழியை ஏற்படுத்தி கொடுத்து எங்களை வரவேற்றனர் என்றும், அவர்களின் நாடகத்தையும் நம்பி நானும் அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன் என்றும் குறிப்பிட்டார். மேலும், பேசிய முதலமைச்சர் விஜய், “ஒரு மனிதனுக்கும் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய உயர்த்திற்கும் சென்றாலும், மனதளவில் வலிகள், காயங்கள் இருப்பதை மறுக்க முடியாது. ஆனால், எல்லாவற்றை விட அதிக வலியையும், காயத்தையும் கரூர் சம்பவம் எனக்கு அளித்தது. மக்களை சந்தித்து, மக்கள் பிரச்சனையை பேசவே மக்கள் சந்திப்புகளை நடத்தினோம். நாமக்கல் முடிசிட்டு கரூர் வரும் போது கரூர் காவல்துறையினர் எங்களை எச்சரித்திருக்கலாம். அதற்கு முந்தைய கூட்டத்தில் காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் கரூரில் கூட்டம் அதிகம் இருப்பது தெரிந்தும் காவல் துறையினர் எச்சரிக்கை கொடுக்கவில்லை. ஏதாவது தவறாக இருந்திருந்தால் காவல் துறையினர் தடுத்து நிறுத்திருக்கலாம். அதற்கு பதிலாக அவர்களே எங்களை அழைத்து வந்து நாடகம் நடத்தினார்கள். இவர்கள் செய்வது நாடகம் என்று தெரியாமல் அவர்களுக்கு நன்றி கூட அன்று சொல்லினேன். அப்போது காவல் துறையினர் யார் சொல்லி இப்படி செய்தார்கள்?” என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “அக்கா, தம்பி, சிறு பிள்ளைகளை இழந்த வலியில் இருக்கும் என்னை ஏளனமாக பேசினார்கள். என் மீது பழியை தூக்கிப் போட்டார்கள். இந்த சம்பவத்திற்கு என்ன காரணம் என்ன என்று யோசித்து பார்த்துக் கொண்டு இருந்த போது, ஓடி ஒளிந்து கொண்டேன் என்று சொன்னார்கள். வாய் உள்ளதென்று என்ன வேணாலும் பேசுவீங்களா?” என சாடினார். மேலும், கரூர் சம்பவத்தை என் மீது திருப்பி விட்டு சட்டப் பேரவையில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்தார் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

பணமா? ஜனமா?

திமுகவை கடுமையாக சாடிய அவர், “இப்படியெல்லாம் செய்தால் நான் மக்களை விட்டு ஒடி விடுவேன் என நினைத்தார்கள். பணமா, ஜனமா என்று கேட்டால், எனக்கு மக்கள் மட்டும் தான் முக்கியம். மக்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்தவன் விஜய். என்னை போல் வெளிப்படையாக அவர்களுக்கு சொல்ல தில்லு இருக்கிறதா? திராணி இருக்கிறதா?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து கட்சி நிதி குறித்து விமர்சித்து பேசிய அவர், கட்சி நிதி என்ற பெயரில் திமுக கொள்ளை அடுத்ததாக குற்றம்சாட்டினார். இது குறித்து, “ பார்ட்டி பண்ட் என்ற பெயரில் அவர்கள் அடித்த கொள்ளைகளை வெளியே சொல்ல முடியவில்லை. சட்டப் பேரவையில் பார்ட்டி பண்ட் என்ற ஒரு வார்த்தை மட்டுமே சொன்னேன். அதற்கே அவர்கள் எழுந்து வெளியே சென்று விட்டனர். குற்றமுள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும்” என்றும் அவர் விமர்சித்தார்.

மேலும், சென்னையில் டெண்டர் விட்டதில் ஊழல் செய்யப்பட்டதாகவும், அதனை தவெக அரசு ரத்து செய்தாகவும் தெரிவித்தார்.

தவெக அரசியல் ஊழல் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், “மின்சாரத்துறையில் இப்போது தான் லஞ்சம் வாங்காமல் பதவி உயர்வு கொடுத்துள்ளோம். அப்போது ஒரு அக்கா கண்ணீருடன் நன்றி சொன்னார். அந்த வீடியோலாம் அவர்கள் கண்களுக்கு தெரியாது. இன்று எந்த அரசு அலுவலகத்திலும் ஊழல் கிடையாது. மக்களுக்கு அரசு அலுவலகத்தில் மரியாதை வழங்கப்படுகிறது. இதனை மக்கள் வரவேற்றுள்ளனர். இதனை பார்த்து மகிழ்ச்சி அடைக்கிறேன்” என்றார்.8,200 பேருக்கு வேலைவாய்ப்பு

எல் & டி நிறுவனத்துடன் ரூ.8,600 கோடி மதிப்பில் மூன்று திட்டங்களுக்கு ஒப்பந்த போடப்பட்டுள்ளதாக கூறிய அவர், அதன் முலம் 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார். மேலும், குறுவை சாகுபடிக்காக சிறப்பு திட்டம் அறிவித்துள்ளதாகவும், இதன் மூலம் தவெக அரசு எப்போதும் விவசாயிகளுடன் துணை நிற்கும் எனவும் உறுதியளித்தார்.

குதிரை பேரம் குறித்து பேசிய முதலமைச்சர் விஜய், “இந்த தேர்தலில் காசுக்கு வாக்கு என்ற கலாச்சாரத்தையே உடைத்தது தவெக. அப்படி இருக்கும்போது, எங்களுக்கு எதுக்கு குதிரை, கழுதை, ஒட்டக பேரம் எல்லாம்? மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள்.

திருட்டு திமுக ஆட்சியில் ஊரை அடித்து உலையில் போட்டு, கொள்ளையடித்ததால்தான் ஒருவர் எங்கே இருக்கார் என்று தெரியாமல் ஓடு ஓடு என்று ஓடிக்கொண்டிருக்கிறார்.

இன்னொருத்தர் வெளிநாட்டில் போய் ஒழிந்துகொண்டிருக்கிறார். வெளிநாடு என்றதும் ஸ்டாலின் சார் என்று நினைத்துவிடாதீர்கள். அவர் இல்லை. ஸ்டாலின் சார் மீது எனக்கு எப்போதும் தனிப்பட்ட பாசம் உண்டு. அவர் கிடையாது. சிங்கப்பூருக்கு மருத்துவ பரிசோதனைக்கு ஒருவர் சென்றிருக்கிறார். அவர் தான்” என சூசகமாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் எ.வ.வேலு ஆகியோரை விமர்சித்தார்.

அண்ணா பிறந்தநாளில் தங்க மோதிரம் திட்டம்

இக்கூட்டத்தில் தவெகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை வரும் அண்ணாவின் பிறந்த நாளில் தொடங்கவுள்ளதாகவும் அறிவித்தார். இது குறித்து பேசிய அவர், “வரும் அண்ணா பிறந்தநாளில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்கப்படும். இத்திட்டலாம் எப்படி செய்ய முடியும் என்று கேட்டார்கள். நான் ரீல் தாய் மாமன் கிடையாது, ரியல் தாய் மாமன்” என கூறினார்.

வெள்ளை அறிக்கை வெளியிட்டது குறித்து பேசிய முதலமைச்சர் விஜய், “தீய சக்தி திமுக பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட்டோம். ஒரு ஓட்ட பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொண்டே இருந்திருக்கிறார்கள். அது எங்க சென்றது என்று தெரியவில்லை. அது அவர்களுக்கு தான் வெளிச்சம்” என நகைசுவையாக விமர்சித்தார்.

மேகதாது அணை விவகாரம் குறித்து, “மேகதாது அணை வழக்கில் தமிழ்நாடு அரசு மனுவை எந்த ஆட்சியில் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. அப்போது ஏன் அதற்கான வாதடவில்லை. இப்படியெல்லாம் ஸ்டாலின் சார் கிட்ட கேட்கலாமா? இப்போது நான் ஏன் பேசவில்லை என்று கேட்கிறார்கள். மாநில உரிமையை எங்க நிலைநிறுத்த வேண்டுமோ அதை தான் செய்ய வேண்டும். நான் யார் தெரியுமா, தொட்டுபார் என்று பேசினால் வேலை நடக்காது. பேசி பேசி, யார் மேலேயாவது பழி போட்டு, மக்களை பிரச்சனையில் விட்டுவிடக் கூடாது. அந்த அரசியல் எங்களுக்கு தேவையில்லை. சட்டப்பேரவையில் இதற்காக தீர்மானம் கொண்டு வந்துள்ளோம். அது குறித்து அடுத்தப்படியாக நடவடிக்கை எடுப்போம்” என உறுதியளித்தார்.

மேலும், மத்திய அரசு தொகுதி மறுவரையறையை தமிழ்நாடு ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது என தெரிவித்த அவர், நமக்கான இடத்தை யாரும் பறிக்கவும் முடியாது, அதனை விடவும் மாட்டோம் என கூறினார்.

கரூரில் நினைவு சின்னம்

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக தவெக சார்பில் நினைவு சின்னம் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.

இடைத்தேர்தலில் திமுகவை வெச்சி வெளுத்து விடுங்கள்

சோஃபா, வாஷிங் மிஷன் என தவெகவை விமர்சிப்பதாக கூறிய அவர், திமுக தான் பணம் எண்ணும் மிஷின் போல செயல்படுகிறது என பதிலடி கொடுத்தார். மேலும், வரும் இடைதேர்தலில் திமுகவை அடியோடு அகற்றி, அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, வரும் இடைத்தேர்தலில் அவர்களை நல்லா வெச்சி வெளுத்து விடுங்கள்” என முதலமைச்சர் விஜய் பேசினார்.