Wednesday, September 23, 2026
Home Blog Page 8

திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு…

0

தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக் கொண்டுள்ள நிலையில், 9 பேர் கொண்ட புதிய அமைச்சரவையும் பதவியேற்றுள்ளது. தலைமைச் செயலகத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய், முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, சட்டம்- ஒழுங்கு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையையும் மேற்கொண்டார். இந்த நிலையில், சோழவந்தான் தவெக எம்எல்ஏ தற்காலிக சபாநாயகராக கருப்பையா பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து, நாளை (மே 11) காலை 09.30 மணிக்கு 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் கூடுகிறது. இதில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் எம்எல்ஏவாகப் பதவியேற்கவுள்ளதாக சட்டப்பேரவையின் செயலாளர் சீனிவாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திமுகவின் சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமைக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த மே 07- ஆம் தேதி மாலை 05.30 மணிக்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் திமுகவின் சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி ஸ்டாலின், சட்டமன்றக் குழுவின் துணைத் தலைவராக கே.என்.நேரு, கட்சியின் கொறடாவாக எ.வ.வேலு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் உதயநிதி ஸ்டாலின் செயல்படுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 59 இடங்களில் வெற்றி பெற்று திமுக பிரதான எதிர்க்கட்சியாக மாறியுள்ளது. அமைச்சருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உள்பட அனைத்து சலுகைகளும் எதிர்க்கட்சித் தலைவருக்கு கிடைக்கும்.108 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றிருந்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சியமைக்க, திமுகவின் கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்துள்ளனர். எனினும் வரும் மே 13- ஆம் தேதிக்குள் முதலமைச்சர் விஜய், சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று காலக்கெடு விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தவெகவுக்கு ஆதரவு அளித்த விசிக…

0

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்தவெக தலைவர் விஜய் ஆட்சியமைப்பாரா என தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த நிலையில், தலா 2 எம்.எல்.ஏக்களை கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதல் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு நிலவி வந்தது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், பெரும்பான்மை பலம் இல்லாததால் பிற கட்சிகளின் ஆதரவை தவெக நாடி வந்தது.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு பெற்ற போதிலும், இன்னும் 2 எம்.எல்.ஏ-களின் ஆதரவு தேவை என்ற நிலையில், நீண்ட இழுபறிக்கு பின்னர் ஆட்சியமைக்க தவெகவுக்கு விசிக ஆதரவளிப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான ஆதரவு கடிதத்தை விசிக தலைவர் திருமாவளவனிடம் இருந்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா நேரடியாக பெற்றுக் கொண்டார்.

அந்தக் கடித்ததில், “தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சியமைக்க விசிக நிபந்தனையற்ற ஆதரவை அளிக்கிறது. விசிகவின் தேர்தெடுக்கப்பட்ட 2 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் இதனை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டில் நிலையான மற்றும் ஜனநாயக அரசாங்கத்தை உறுதி செய்யும் நலன் கருதி, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசிகவின் ஆதரவின் மூலம் தவெகவின் பலம் 118 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை தவெக பெற்றுள்ளது. முன்னதாக, திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டி, தவெக நிர்பந்திக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், எந்த நிபந்தனையும் இன்றி தவெகவுக்கு விசிக ஆதரவு தெரிவித்துள்ளது.

இதனயடுத்து நேற்று ஆதரவில்லை என தெரிவித்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், இன்று ஆதரவளிப்பதாக கடிதத்தை தவெகவிடம் வழங்கியுள்ளது. இதன் மூலம் தவெகவுக்கு ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தவெக தலைவர் விஜய் விரைவில் முதலமைச்சராக பதிவேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறதுதமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவு மே 4-ம் தேதி வெளியானது. இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றன.

தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை பெறாததால், இதர கட்சிகளில் ஆதரவைப் பெற வேண்டிய சூழல் உருவானது. இதனையடுத்து, திமுகவின் கூட்டணிக் கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டது.முதல் கட்சியாக, திமுக கூட்டணியில் 20 ஆண்டுகள் அங்கம் வகித்த காங்கிரஸ், தவெகவுடன் கூட்டணி அமைத்தது. இதனால் தவெகவின் எம்எல்ஏக்கள் பலம் 113-ஆக உயர்ந்தது. இதில், தவெக தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட காரணத்தினால் ஒன்றில் ராஜிநாமா செய்ய வேண்டும். இதனால் ஆதரவு எம்.எல்.ஏ-களில் எண்ணிக்கை 112 என குறையும்.

இதனையடுத்து, தன்னை ஆட்சியமைக்க அழைக்குமாறு, தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து கோரிக்கை விடுத்தார். இருப்பினும், பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு

இன்னும் 6 இடங்கள் தேவை என்ற நிலையில், 2 கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிகவிடம் தவெக ஆதரவு கோரியது. தலா இரண்டு இடங்களில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சியமைக்க வெளியே இருந்து ஆதரவளிப்பதாக நேற்று (மே 8) அறிவித்தன. இதன் மூலம் தவெகவுக்கான ஆதரவு 116 என உயர்ந்தது.திருமா முடிவுக்காக காத்திருந்த தவெக

பெரும்பான்மைக்கு இன்னும் 2 இடங்கள் தேவை என்ற நிலையில், விசிகவின் முடிவுக்காக தவெக காத்துக் கொண்டிருந்தது. இதனிடையே, தவெகவுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் விசிக நிர்வாகிகள் தொடர்ந்து 2 நாட்களாக ஆலோசித்து வந்தனர்.

இதுதொடர்பாக விசிகவின் உயர்மட்டக் குழு கூட்டம் இணைய வழியில் நடத்தப்பட்டு, அதில் இதுகுறித்து முடிவெடுக்க திருமாவளவனுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.

அந்த வகையில், இன்று காலை 10 மணிக்கு தவெகவுக்கு ஆதரவா, இல்லையா என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. காலை முதல் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், மாலை 4 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பை நடத்துவதற்கு முன்பாகவே, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவை நேரில் அழைத்து விசிக தலைவர் திருமாவளவன் ஆதரவு கடிதத்தை வழங்கியுள்ளார். அதன் பின்னர் சில நிமிடங்களிலேயே இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், தங்களின் ஆதரவு கடித்ததை தவெக நிர்வாகிகளான செங்கோட்டையன் மற்றும் அருண்ராஜ் ஆகியவர்களிடம் வழங்கியது. இதன் மூலம் விஜய், தமிழக முதலமைச்சர் ஆவதற்கான முட்டுக்கட்டை நீங்கியுள்ளது.

ஒரேயொரு காங்கிரஸ் மேயருக்கும் சிக்கல்.. திமுகவினர் திட்டம்?

0

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளை கைப்பற்றி தவெக தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆட்சியமைக்க மேலும் 11 தொகுதிகள் தேவைப்படுகின்றன. இந்நிலையில் தவெக சார்பில் காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்திருக்கிறது. மேலும், இனிவரும் காலங்களில் உள்ளாட்சி, மாநிலங்களவை, மக்களவை என அனைத்திலும் தவெகவுடன் கூட்டணி தொடரும் என பகிரங்கமாகவும், வெளிப்படையாகவும் அறிவித்துள்ளது. காங்கிரஸின் இந்த நிலைப்பாட்டுக்கு திமுகவினர் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அதன் விளைவாக, கும்பகோணத்தில் மேயராக பதவி வகித்து வருகிற காங்கிரஸைச் சேர்ந்த கே. சரவணன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, துணை மேயரான திமுகவை சேர்ந்த சு ப தமிழழகனை மேயராக்க திமுகவினர் திட்டமிட்டு வருகின்றனர். இதற்காக திமுக தலைமையின் முடிவிற்கு காத்திருப்பதாக தெரிகிறது.
கும்பகோணம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில், 39-ல் திமுகவும், 3-ல் அதிமுகவும், (மேயர் உள்ளிட்ட) 2 வார்டுகளில் காங்கிரஸ் கட்சியும், மதிமுக, ஐயூஎம்எல், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன.திமுக 39 இடங்களை பெற்றிருந்த போதிலும், கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவியை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்தது. காங்கிரஸின் இரு மாமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஆட்டோ ஓட்டுநர் கே. சரவணன் கும்பகோண மேயராகவும், துணை மேயராக திமுகவை சேர்ந்த சு ப தமிழழகனும் தேர்வு செய்யப்பட்டனர்தற்போது திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய நிலையில் கும்பகோணம் திமுக மாமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் மேயரை பதவியிலிருந்து நீக்க ஒருமனதாக திட்டமிட்டு வருவதாக தற்போது சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இது தொடர்பாக ஈடிவி பாரத் சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேயர் கே சரவணனிடம் கேட்டபோது, “இது வெறும் வதந்தி. ஆதாரப்பூர்வமான தகவல் இல்லை. திமுக அப்படியொரு முடிவை எடுத்தால், காங்கிரஸ் திமுகவிற்கு ஆதரவு அளித்துள்ள தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களிலும் எதிரொலிக்கும்.

எனவே இது போன்ற முடிவை திமுக தலைமை எடுக்காது என நம்புகிறேன். ஒருவேளை திமுக தலைமை என்னை மேயர் பதவியில் இருந்து நீக்க தீர்மானம் கொண்டு வந்தால், எங்கள் காங்கிரஸ் தலைமையின் முடிவை கேட்டு அதன்படி செயல்படுவேன்” என்றார்.

கோபிச்செட்டிபாளையத்தில் வெற்றியை நிலைநாட்டிய செங்கோட்டையன்..!

0

ஈரோடு மாவட்டத்தின் விஐபி தொகுதியான கோபிச்செட்டிபாளையத்தில் தவெக வேட்பாளரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் வெற்றிப் பெற்றுள்ளார்.

இவர் தம்மை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் நல்லசிவத்தை விட 16,620 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றிப் பெற்றுள்ளார். செங்கோட்டையன் மொத்தம் 82,612 வாக்குகளும், திமுக வேட்பாளர் என்.நல்லசிவம் 65,992 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

கோபிசெட்டிபாளையம் தொகுதியில் மொத்தம் 2,39.179 வாக்காளர்கள் உள்ள நிலையில், மொத்தம் 2,16,910 பேர் வாக்களித்துள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 1,14,070, பெண் வாக்காளர்கள் 1,25,096 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 13 பேர். 90.69 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளரான கே.ஏ.செங்கோட்டையன், திமுக வேட்பாளர் ஜி.வி.மணிமாறனை சுமார் 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

செங்கோட்டையனின் கோட்டையாக கருதப்படும் இத்தொகுதியில் இந்த முறையும் கே.ஏ.செங்கோட்டையன் களம் காண்கிறார். ஆனால் அவர் இந்த முறை அவர் தவெக சார்பில் போட்டியிடுகிறார் என்பதால் இத்தொகுதி கூடுதல் கவனம் பெற்றுள்ளது. அவரை எதிர்த்து திமுக சார்பில் என்.நல்லசிவம், அதிமுகவில் வி.பி.பிரபு, நாம் தமிழர் கட்சியில் மா.கி.சீதாலட்சுமி ஆகியோர் களத்தில் உள்ளனர்.

கோபிச்செட்டிப்பாளையம் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்க உள்ளது.

செங்கோட்டையனுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கள நிலவரங்கள் தெரிவித்துள்ள நிலையில், அவரது வெற்றியை திமுக அல்லது அதிமுக தட்டிப்பறிக்குமா? தவெக வெற்றிக்கொடி நாட்டுமா? என்பது இன்றைக்கு தெரிந்துவிடும்.

தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து

0

திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி, தமிழக வெற்றிக் கழகம் 106 தொகுதிகளில் முன்னிலை வகித்து வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று (மே 4) வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 234 தொகுதிகளில் 118 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில், தவெக 106 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் 1977இல் எம்.ஜி.ஆர் பெற்ற 33.5% வாக்குகளே அதிகபட்சமாக இருந்த நிலையில், போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 34% வாக்குகளுக்கும் அதிகமாக பெற்று வரலாற்று படைத்திருக்கிறது தவெக.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சிறப்பாக செயல்பட்டதற்கு வாழ்த்துகள் – மோடி

பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், “மிகச் சிறப்பாக செயல்பட்ட தவெக கட்சிக்கு எனது வாழ்த்துகள். தமிழக மக்களின் வளர்ச்சிக்கான அனைத்து செயல்பாடுகளையும் பாஜக அரசு செய்யும். என்.டி.ஏக்கு வாக்களித்த மக்களுக்கும் எனது வாழ்த்துகள் ” என்று தெரிவித்துள்ளார்இனிமேல் வாரிசு அரசியல் இல்லை – அண்ணாமலை

பாஜக மாநில முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, தமிழக மக்களின் தீர்ப்புக்கு தான் தலை வணங்குவதாக குறிப்பிட்டுள்ளார். அவரது எக்ஸ் பதிவில், “வாக்குகளை விலைக்கு வாங்க முடியாது, வாரிசு அரசியல் இனிமேல் இல்லை என்ற கருத்தை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வெளிப்படுத்தி இருப்பதை பார்ப்பதில் மகிழ்ச்சி.மக்கள் அனைவரும் அடுத்த தலைமுறை அரசியல் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர். தமிழக அரசியலில் மிக சிறப்பான அறிமுகத்தை பெற்றதற்காக தவெக மற்றும் விஜய்க்கு எனது வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் என்.டி.ஏ கூட்டணியைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஜயை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி.

மக்கள் நம்பிக்கையை காப்பாற்றுவார் – தமிழிசை சௌந்திரராஜன்

பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் அளித்த பேட்டியில், “மக்களின் நம்பிக்கையை விஜய் காப்பாற்றுவார் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. அதே நேரத்தில் தோல்வியடைந்த அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் யாரும் கவலையடைய வேண்டாம். அரசியலில் சிலர் வெற்றி பெறலாம், சிலர் தோற்கலாம்.

ஆனால், அவர்கள் என்ன பணிக்காக அரசியலில் இருக்கிறார்களோ அந்த பணியை தொடர்வது தான் இயற்கை. என் அரசியல் பணி இன்னும் தீவிரமாக தொடரும். மக்களுக்காக நல்லது செய்தால் புதிய ஆட்சி பாராட்டு பெறும்” என்றார்.தமிழகத்தில் அமைதி புரட்சி – கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், “உலக வரலாற்றில் மக்கள் எழுச்சியால் ஏற்பட்ட நிகழ்வுகளுடன் ஒப்பிடும் வகையில், தமிழக மக்கள் தேர்தல் வாயிலாக அமைதி புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் திராவிட கட்சிகளின் உரிமையை அசைத்து பார்க்கும் விதமாக தவெக ஆட்சி அமைக்கவுள்ளது. தவெக தலைவர் விஜய்க்கு எனது வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.முதல் தேர்தலிலேயே ஈர்க்கக்கூடிய சாதனை – ஜெகன் மோகன் ரெட்டி

தவெக தலைவர் விஜய்க்கு ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவரது பதிவில், “என் அன்பு சகோதரர் விஜய்க்கு வாழ்த்துகள். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பது ஈர்க்கக்கூடிய சாதனை. மக்கள் பணிக்காக புதிய அத்தியாயம் தொடங்கியுள்ள உங்களுக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

தவெக தொடர்ந்து முன்னிலை.. அரசியல் ஆலோசகருடன் விஜய் அவசர ஆலோசனை!

0

தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தொடர் முன்னிலை வகித்து வரும் நிலையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக அரசியல் ஆலோசகருடன் விஜய் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்துவதாக தெரிகிறது.தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில், தமிழக வெற்றிக் கழகம் 107 சட்டமன்ற தொகுதிகளுடன் முன்னிலை வகித்து வருகிறது. இதன் காரணமாக, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டை சுற்றி போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 தொகுதிகளை தமிழக வெற்றி கழகம் நெருங்கி வரும் நிலையில், அரசியல் ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமியுடன் தவெக தலைவர் விஜய் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில், ஆட்சி அமைப்பது தொடர்பாகவும், கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.தவெக தலைவர் வீட்டுக்கு வருகை தந்த ஐபிஎஸ் அதிகாரிகள்
மேலும், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வீட்டுக்கு ஐபிஎஸ் அதிகாரிகளான சேபாஸ், கார்த்திகேயன், விஜயகுமார் ஆகியோர் சென்றுள்ளனர். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கட்சி தொடங்கியது முதல் தற்போது வரை அவரது அரசியல் ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமி தொடர்ந்து அரசியல் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அதன் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஒவ்வொரு அரசியல் நகர்வுகளையும் முன்னெடுத்து வருகிறார்.

தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்த ஜான் ஆரோக்கிய சாமி
மேலும், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மேற்கொண்ட கட்சிக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் பரப்புரை மற்றும் பிரச்சாரம் ஆகியவற்றில் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி தயாரித்துக் கொடுத்த பேச்சுகளை மட்டுமே விஜய் பேசி உள்ளார். மேலும், ஜான் ஆரோக்கியசாமி வகுத்துக் கொடுத்த வியூகங்களை செயல்படுத்தியுள்ளார். தற்போது, பெரும்பான்மை தொகுதியை தமிழக வெற்றிக் கழகம் நெருங்கி வரும் நிலையில், ஆட்சி அமைப்பது தொடர்பாக அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கிய சாமியுடன், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

ஆட்சி அமைப்பது தொடர்பாக அறிவிப்பு
மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் முடிவுக்கு பின்னர் ஆட்சி அமைப்பது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு வெளியிடும் என கூறப்படுகிறது.

தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு 2 அடுக்கு பாதுகாப்பு….

0

தவெக தலைவர் விஜயை காண அவரது வீட்டின் முன்பு ரசிகர்களும், தொண்டர்களும் குவிந்துவரும் நிலையில் அவரது வீட்டிற்கு செல்லும் வழியிலும், வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 234 தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகுத்தது.
அதனைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கையானது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி, முதன்முறையாக தேர்தல் களம்கண்ட தவெக முன்னிலை வகித்து வருகிறது.தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலுமே காலை 10.50 நிலவரப்படி தவெக தான் முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக, மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 220 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தவெக முதலிடத்திலும், அதிமுக இரண்டாம் இடத்திலும் இருக்கிறது.இந்நிலையில், விஜய்யை முன்கூட்டியே வாழ்த்த, பலர் அதிகாலையே விஜய் வீட்டின் முன்பு திரண்டதால் விஜய்யின் நீலாங்கரை இல்லத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விஜய் வீட்டிற்கு வெளியே ஒரு துணை ஆணையர், ஒரு உதவி ஆணையர், ஒரு ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் CRPF வீரர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் விஜய் இல்லத்திற்கு வரக்கூடிய கபாலீஸ்வரர் நுழைவாயிலிலும் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். விஜயை காண்பதற்காக அங்கு ரசிகர்களும் தொண்டர்களும் அதிகளவில் கூடாமல் இருக்க 2 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே தவெக பனையூர் தலைமை அலுவலகத்தின் வெளியேயும் தொண்டர்களும், நிர்வாகிகளும் காத்திருக்கின்றனர்.

மே 4 வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்னென்ன?

0

தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு ஏப்ரல் 23-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 75,064 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் நாளை ( மே 4) எண்ணப்பட உள்ளன. தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசமே ஆவலோடும், ஆர்வத்துடனும் எதிர்பார்த்திருக்கும் மே 4-ம் தேதியில், வாக்கு எண்ணிக்கைக்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளதாக அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.

இதுகுறித்து, “தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா” என்ற பெருமித்ததுடன் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘ தமிழ்நாடு சட்ட மன்றப் பொதுத் தேர்தல் 2026 க்கான வாக்கு எண்ணிக்கை, மே 4, 2026 அன்று நடைபெறும். 75,064 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் பெறப்பட்ட தபால் வாக்குகள் ஆகியவற்றின் வாக்கு எண்ணிக்கை, இதற்காக அமைக்கப்பட்ட 62 வாக்கு எண்ணும் மையங்களில் நடத்தப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVMs) பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 234 வாக்கு எண்ணும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே வளாகங்களில், தபால் வாக்குகள் மற்றும் மின்னணு முறையில் அனுப்பப்பட்ட தபால் வாக்குகளை (ETPBs) எண்ணுவதற்காக கூடுதலாக 240 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பதிவான வாக்குகளை எண்ணும் பணிக்காக மொத்தம் 3,324 மேஜைகள் பயன்படுத்தப்படும்.
வாக்கு எண்ணும் பணிகள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படும். வாக்கு எண்ணும் பணிக்காக மொத்தம் 10,545 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்; மேலும் வாக்கு எண்ணும் செயல்முறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதிசெய்ய 4,624 நுண் பார்வையாளர்கள்(Micro Observers) அவர்களுக்கு துணையாக இருப்பார்கள்.
வாக்கு எண்ணும் நடவடிக்கைகளை மேற்பார்வையிடவும், ஆணையத்தின் அறிவுறுத்தல்கள் கண்டிப்பாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒருவர் என மொத்தம் 234 வாக்கு எண்ணும் பார்வையாளர்களை (Counting Observers) இந்தியத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தபால் வாக்குகளை எண்ணுவதற்கு, ஒவ்வொரு 500 வாக்குகளுக்கும் ஒரு வாக்கு எண்ணும் மேஜை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, 1,135 கூடுதல் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் செயல்முறையின் நேர்மை மற்றும் சுமூகமான நடத்தையை உறுதி செய்வதற்காக அனைத்து மையங்களிலும் விரிவான மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன:

முதல் அடுக்கு (வெளிப்புறச் சுற்றளவு): ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றியும் 100 மீட்டரில் இருந்து பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலத்திற்குள் நுழைவதற்கு அங்கீகரிக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. அடையாளச் சான்றுகளை சரிபார்க்கவும், முறையான உடல் பரிசோதனை செய்யவும் நுழைவு வாயில்களில் போதுமான காவல் துறையினர் நிறுத்தப்படுவார்கள்.

  • இரண்டாவது அடுக்கு (நடுப்பகுதி): வாக்கு எண்ணும் வளாகத்தின் நுழைவு வாயில்கள் மாநில ஆயுதப் படையினரால் பாதுகாக்கப்படும். அவர்கள் வளாகத்திற்குள் நுழைவதைக் கட்டுப்படுத்துவதோடு, அனுமதியற்ற நடமாட்டம் அல்லது நடமாடுவதைத் தடுப்பார்கள். கைபேசிகள் மற்றும் பிற தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்த நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படும். மூன்றாவது அடுக்கு (உட்புறப் பகுதி): வாக்கு எண்ணும் அறைகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர (EVM) பாதுகாப்பு அறைகளின் நுழைவாயிலில் அமைந்துள்ள இந்த மிக முக்கியமான பாதுகாப்பு அடுக்கு, மத்திய ஆயுதப் காவல் படையினரால் (CAPF) நிர்வகிக்கப்படும். கைபேசிகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்கள் வாக்கு எண்ணும் அறைகளுக்குள் கொண்டு செல்லப்படாமல் இருப்பதை உறுதி செய்ய கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்படும்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், உள்ளூர் காவல் துறை மற்றும் மாநில ஆயுதப் படையினருடன் கூடுதலாக, மத்திய ஆயுதக் காவல் படையின் (CAPF) 65 கம்பெனிகள் வாக்கு எண்ணும் மையங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், முதல்முறையாக, இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதியற்ற நபர்கள் நுழைவதைத் தடுக்கும் நோக்கில் ECINET மூலம் QR குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
மூன்றாவது மற்றும் மிக உட்புறப் பாதுகாப்புச் சாவடியில், QR குறியீட்டை ஸ்கேன் செய்து வெற்றிகரமாகச் சரிபார்த்த பிறகு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இந்த QR குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டைகள், வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் அறைகளுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்கு எண்ணும் பணியாளர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணும் முகவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் கட்டாயமாகும்.
வாக்கு எண்ணிக்கை காலை 8.00 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கையுடன் தொடங்கும், அதைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) மூலம் பதிவான
வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கும். அனைத்து சட்டமன்றத் தொகுதிகளின் சுற்றுவாரியான முடிவுகள், சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் அந்தந்த மையங்களில் உள்ள பொது ஒலிபெருக்கி அமைப்பு மூலம் அறிவிக்கப்படும். இந்த முடிவுகளை ECINET செயலியிலும், results.eci.gov.in என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்’ என்று அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தொகுதிவாரியாக வாக்குப்பதிவு விவரம்: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4 -ம் தேதி எண்ணப்பட உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் குறித்த புள்ளிவிவரத்தை தொகுதிவாரியாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் தொடங்கி கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வரை தொகுதிவாரியாக பதிவான வாக்குகள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

இதன்படி, ஆண் வாக்காளர்கள் 2,35,34,720, பெண் வாக்காளர்கள் 2,52,59,596 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 4.517 என மொத்தம் 4,87,98,833 பேர் இத்தேர்தலில் வாக்களித்துள்ளனர். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மொத்த வாக்குப்பதிவு 85.10 சதவீதமாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு தேர்தல் 2026;மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு முழு விவரம்

0

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் புதிய உச்சமாக இந்த முறை இரவு 10 மணி நிலவரப்படி 85.14 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. சுதந்திர இந்தியாவில், தமிழக சட்டமன்றத்துக்கு இதுவரை நடைபெற்ற தேர்தல்களிலேயே இதுதான் அதிகபட்ச வாக்குப்பதிவு எனும் பெருமையை பெற்றுள்ளது.

வரலாற்று சாதனையாக நடைபெற்று முடிந்துள்ள 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், இரவு 10 மணி நிலவரப்படி மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள் சதவீதத்தை இங்கு காண்போம்.மாநிலத்தில் மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் அதிகபட்சமாக கரூரில் 92.62 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக கன்னியகுமரி மாவட்டத்தில் 75.61 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன. தலைநகர் சென்னையில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு 83.73 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நிறைவு பெற்றது தமிழக சட்டப் பேரவை தேர்தல் – சாதனை படைத்த வாக்குப்பதிவு

0

தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு இரவு 11.15 மணி நிலவரப்படி 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழ்நாட்டில் 17-வது சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு, மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று (ஏப்.23) நடைபெற்றது. இதில், 2.80 கோடி ஆண் வாக்காளர்கள், 2.93 கோடி பெண் வாக்காளர்கள், 7,728 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

சென்னை கொளத்தூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சாத்தூர் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் சுமார் 4,023 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதில் 3,580 பேர் ஆண் வேட்பாளர்கள், 442 பேர் பெண் வேட்பாளர்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி மாவட்ட வாரியாக வாக்குப்பதிவை தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பார்வையிட்டுக் கண்காணித்தார்விறுவிறுப்பான வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்த போதிலும், இளைஞர்களும், இளம்பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்குப்பதிவு மையங்களுக்கு எளிதில் வந்து வாக்களிக்க ஏதுவாக பிரத்யேக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

தமிழகத்தில் சென்னை, வேலூர், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்திய போதிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 11 மணிக்கு 37.56 சதவீதம் வாக்குகளும், பிற்பகல் 1 மணிக்கு 56.81 சதவீதம் வாக்குகளும் பதிவாகின. பிற்பகல் 3 மணிக்கு 70 சதவீத வாக்குகளும், 5 மணிக்கு 82.24 சதவீத வாக்குகளும் பதிவாகின. மாலை 6 மணி அளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதனையடுத்து, வாக்குச்சாவடியில் காத்திருந்தவர்கள் டோக்கன் பெற்று வாக்களித்தனர். இரவு 11.15 மணி நிலவரப்படி 85.15% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்குப்பதிவு முடிந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு வேட்பாளர்களின் முகவர்களின் முன்னிலையில் தேர்தல் அலுவலர்கள் சீல் வைத்து, வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

வரலாற்று சாதனை படைத்த வாக்குப்பதிவு

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 78.12 வாக்குகள் பதிவானதே சாதனையாக இருந்தது. இந்த நிலையில், தற்போது நடைபெற்ற தேர்தலில் இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இரவு 11.15 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 85.15 சதவீதத்தை கடந்தது.

2011-ம் ஆண்டுக்கு முன் 1967 சட்டப் பேரவைத் தேர்தலில் 76.57 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 72.81 % வாக்குகள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.