Thursday, November 5, 2026

ஓடும் கார் மீது பாய்ந்த காவலர்…! கோவையில் சினிமாவை மிஞ்சிய 40 கிலோமீட்டர் சேசிங்..!

Must read

ஓடும் கார் மீது பாய்ந்த காவலர்…! கோவையில் சினிமாவை மிஞ்சிய 40 கிலோமீட்டர் சேசிங்..!

கோவை மாவட்டம், கோவில்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் வேல்முருகன் மற்றும் உதவி ஆய்வாளர் விக்னேஷ்...

முன்னாள்  அமைச்சர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு..

கடந்த தி.மு.க ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. திருவெறும்பூர் தொகுதியில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்கு, கடந்த ஆட்சியில் அமைச்சர் பொறுப்பு...

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவை மாவட்டம், கோவில்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் வேல்முருகன் மற்றும் உதவி ஆய்வாளர் விக்னேஷ் உள்ளிட்ட காவலர்கள், இன்று காலை வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த சொகுசு கார் ஒன்றை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டனர். காரின் பின்புறத்தில் மூட்டை மூட்டையாக பொருட்கள் இருப்பதைப் பார்த்த உதவி ஆய்வாளர் விக்னேஷ், அவற்றை சோதனையிட முயன்றார். அப்போது காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 3 நபர்கள் போலீஸாரைத் தள்ளிவிட்டு காரின் கதவுகளை மூடி, திடீரென காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட தலைமை காவலர் வேல்முருகன், உடனடியாக ஓடும் காரின் மேற்கூரையில் பாய்ந்து பிடித்துக் கொண்டார். ஆனால், போலீஸ் காரின் மீது இருப்பதையும் பொருட்படுத்தாமல் கடத்தல்காரர்கள் காரை தொடர்ந்து வேகமாக ஓட்டிச் சென்றனர். விளாங்குறிச்சி, காளப்பட்டி, சித்ரா வழியாக கணியூர் சுங்கச்சாவடியை நோக்கி கார் சென்றது. அங்கு ஃபாஸ்டேக் மூலம் சுங்கக் கட்டணம் செலுத்திவிட்டு, தடுப்புகளை கடந்து கார் மீண்டும் வேகமாகச் சென்றுள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த கணியூர் போலீஸார் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் காரைத் துரத்திச் சென்றனர். மேலும், அவிநாசி காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவிநாசி போலீஸாரும் காரை எதிர்நோக்கி விரைந்தனர். கடத்தல்காரர்கள் சுமார் 40 கி.மீ. தூரம் சென்ற நிலையில், அவிநாசி அருகே ஆம்புலன்ஸ்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் காரைச் மடக்கிப் பிடித்தனர். அதில் இருந்த இருவர் தப்பியோடிய நிலையில், ஒருவரை போலீஸார் பிடித்தனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் தப்பியோடிய மற்ற இருவரையும் அவிநாசி போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாபு தாரா, ராஜேஷ், சுரேஷ் என்பதும், பெங்களூருவில் இருந்து சுமார் 170 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதற்கிடையே, காரின் மேற்கூரையில் தலைமை காவலர் வேல்முருகன் ஆபத்தான நிலையில் தொங்கியபடி செல்வதைப் பார்த்த வாகன ஓட்டிகள், தங்களது செல்போன்களில் பதிவு செய்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், ஆபத்தான நிலையில் தொங்கியபடி சென்று கடத்தல் காரர்களை பிடிக்க உதவிய தலைமை காவலர் வேல்முருகனின் துணிச்சலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

ஓடும் கார் மீது பாய்ந்த காவலர்…! கோவையில் சினிமாவை மிஞ்சிய 40 கிலோமீட்டர் சேசிங்..!

கோவை மாவட்டம், கோவில்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் வேல்முருகன் மற்றும் உதவி ஆய்வாளர் விக்னேஷ்...

முன்னாள்  அமைச்சர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு..

கடந்த தி.மு.க ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. திருவெறும்பூர் தொகுதியில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்கு, கடந்த ஆட்சியில் அமைச்சர் பொறுப்பு...

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...