Wednesday, September 23, 2026
Home Blog Page 6

டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்..!

0

தமிழகத்தில் டாஸ்மாக் (TASMAC) மதுக்கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதாகப் பொதுமக்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதுத்தொடர்பாக ரிப்போர்ட் கொடுக்க முதல்வர் விஜய் ஏற்கனவே உளவுத்துறைக்கு உத்தரவிட்டு இருந்தார்.இந்த நிலையில், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் இணைந்து மாநிலம் முழுவதும் கடந்த மே 28ஆம் தேதி அதிரடியான கூட்டுச் சோதனையை நடத்தின.இந்தத் திடீர் சோதனையின் போது, டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட MRP விலையை விட கூடுதலாக ரூ.10 முதல் ரூ.50 வரையிலும், சில இடங்களில் அதற்கு மேலும் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது கச்சிதமாகக் கண்டறியப்பட்டது.இந்த மிகப்பெரிய முறைகேட்டின் அடிப்படையில், முதற்கட்டமாக 277 கடைப்பணியாளர்களை டாஸ்மாக் நிர்வாகம் அதிரடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (TASMAC) தற்பொழுது அதிகாரப்பூர்வமான மிக முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கடந்த மே 28ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய 277 பணியாளர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறு முறைகேடுகளில் ஈடுபட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதற்குத் டாஸ்மாக் நிர்வாகம் தற்பொழுது முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையான புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது ஒட்டுமொத்த டாஸ்மாக் வட்டாரத்திலும் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள ஊழியர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றால், அவர்கள் பின்வரும் நிபந்தனைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் கறாராகக் கூறியுள்ளது.அபராதம் மற்றும் ஜிஎஸ்டி வட்டி: கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்து பிடிபட்ட பணியாளர்கள் தங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை, அதற்கான சரக்கு மற்றும் சேவை வரி (GST) மற்றும் அதற்குரிய வட்டித்தொகை ஆகியவற்றை முழுமையாக வங்கியில் செலுத்தி, அது செலுத்தப்பட்டதை டாஸ்மாக் நிர்வாகத்திடம் உறுதி செய்ய வேண்டும்.

சம்பள உரிமை ரத்து:
சஸ்பெண்ட் செய்யப்பட்டு வேலை செய்யாமல் இருந்த நாட்களுக்குத் டாஸ்மாக் நிர்வாகத்திடம் எந்தவிதமான சம்பளமும் கேட்க மாட்டேன் எனப் பணியாளர்கள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க வேண்டும்.

காப்புத்தொகை சரிபார்ப்பு:
ஊழியர்கள் பணியில் சேரும்போது செலுத்திய காப்புத்தொகை (Caution Deposit) தற்பொழுது முழுமையாக அரசிடம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பொது கலந்தாய்வு கட்டாயம்:
இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டாலும், அவர்கள் தங்களுக்குப் பிடித்த இடங்களுக்கு நேரடியாகச் சென்று பணியை செய்ய முடியாது, பொது கலந்தாய்வு (General Counselling) வாயிலாக மட்டுமே அவர்களுக்கு மீண்டும் பணி நியமனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நிரந்தர பணிநீக்க எச்சரிக்கை:
மீண்டும் இதேபோன்று கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யும் தவறுகளில் ஈடுபட்டால், எவ்வித விசாரணையும் இன்றி அவர்கள் நிரந்தரமாகப் பணிநீக்கம் (Dismiss) செய்யப் பரிந்துரைக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளதுதமிழ்நாட்டில் மதுக்குடிப்போர் தங்களது உழைப்பில் ஒரு பகுதியை இந்த மதுபான கொள்முதலுக்குச் செலவிட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில், அரசு நிர்ணயித்த விலையைத் தாண்டி அவர்களின் பாக்கெட்டில் கூடுதலாக பணம் பறிக்கப்படுவதை ஒடுக்கவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இனிவரும் நாட்களிலும் இதுபோன்ற கூடுதல் விலை விற்பனை தொடர்பான வேட்டை தொடரும் என்றும், மீறும் ஊழியர்கள் மீது இரக்கமின்றி நடவடிக்கை பாயும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவை நாளை கூடுகிறது

0

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும் ஆட்சியமைக்கப் போதிய எண்ணிக்கை கிடைக்காததால் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தமிழ்நாட்டின் 13- வது முதலமைச்சராக விஜய், கடந்த மே 10- ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. முதலமைச்சர் விஜய் உள்பட 35 அமைச்சர்கள் தமிழ்நாடு அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். ஆட்சியமைக்க ஆதரவு அளித்த கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்திற்கான பொறுப்பு அமைச்சர்கள் நேற்று (ஜூன் 03) நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் நாளை (ஜூன் 05) காலை 11.00 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தவெக அரசு பதவியேற்று நடக்கும் முதல் கூட்டம் என்பதால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்க உள்ள நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க ஒப்புதல் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், தேர்தலில் அறிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளில் சிலவற்றிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.அத்துடன், தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரை எப்போது கூட்டுவது? பட்ஜெட் தாக்கல் செய்வது, பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய சிறப்பம்சங்கள், புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையில் இடம் பெற வேண்டிய சிறப்பம்சங்கள் உள்ளிட்டவைக் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது. அதேபோல், மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்தும், டாஸ்மாக் கடைகள், விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாத நிலையில் அது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கூட்டத்திற்கு பிறகு பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருணாநிதியின் 103-வது பிறந்த நாள் – மு.க.ஸ்டாலின் மரியாதை

0

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை அங்கு சென்ற திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

அவருடன் திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேரு, திமுக துணை பொதுச் செயலாளர்கள் பொன்முடி, ஆ ராசா எம்பி, கனிமொழி எம்பி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். கருணாநிதியின் நினைவிடத்தில் “புத்தெழுச்சி நாள் அகவை 103” என்ற வாசகம் மலர்களால் எழுதப்பட்டுள்ளது.

தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்திற்கு எதிரே உள்ள கருணாநிதியின் திருவுருவ சிலைக்கும் மு.க ஸ்டாலின் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கும் அவர் மரியாதை செலுத்தினார். பின்னர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், 75 அடி உயர கொடிக் கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்து, அங்குள்ள கருணாநிதியின் திருவுருவச்சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு கூடியிருந்த தொண்டர்களுக்கு அவர் இனிப்பு வழங்கினார். கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தலைவரின் பிறந்தநாள்! தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சு வரை, தமிழினத்திற்காக – தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்.வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது. நீங்கள் நிறைந்த போது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.

உறுதியாய்ச் சொல்கிறோம்… மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம். உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்” என்று பதிவிட்டுள்ளார்

‘ஜாக்பாட்’ – ராஜ்யசபா சீட் வழங்கினார் முதல்வர் விஜய்

0

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சி.வி. சண்முகம் கடந்த சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் அவர் தனது மாநிலங்களவை உறுப்பனர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து காலியான அந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வரும் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.இந்த நிலையில், மாநிலங்களவை இடைத் தேர்தலில் தவெக போட்டியிட்டால் மிக எளிதாக வெற்றி பெறும் என்ற சூழ்நிலையில், அக்கட்சியை சேர்ந்த ஒருவரை வேட்பாளராக முதல்வர் விஜய் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தங்களுக்கு ஒதுக்க வேண்டி முதல்வர் விஜய்யை இன்று சந்தித்து காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழுவினர் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து, மாநிலங்களவை இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை தொடர்ந்து, காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவி காங்கிரஸுக்கு ஒதுக்கப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு தமிழக சட்டப் பேரவையில் 5 உறுப்பினர்கள் உள்ளனர். மேலும், அமைச்சரவையில் அந்த கட்சியின் சார்பில் ராஜேஷ்குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸுக்கு தற்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் திமுகவிடம் ஒரு மாநிலங்களவை இடத்தை காங்கிரஸ் கட்சி பெற்றது. அப்போது அக் கட்சியின் சார்பில் கிறிஸ்டோர் திலக் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஆனால், தேர்தல் முடிவு வெளியான இரண்டு நாட்களில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ், தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. மேலும் அமைச்சரவையிலும் பங்கேற்றது.

கடந்த மூன்று மாதங்களில் இரு கட்சிகளிடம் இருந்து இரண்டு எம்பிகள் பதவிகளை காங்கிரஸ் கட்சி பெற்றதன் மூலம், மாநிலங்களவையில் அதன் பலம் 30 ஆக அதிகரிக்க உள்ளது.

இதற்கிடையே இந்தியா கூட்டணியில் தவெகவை இணைப்பது தொடர்பாக காங்கிரஸ் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், முதல்வர் விஜய் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு முதலமைச்சர் விஜய் வழங்கியுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்…

0

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விரைவில் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுபற்றி அண்ணாமலை இன்னும் எதுவும் கூறவில்லை. இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அண்ணாமலை முதலில் புதிய இயக்கம் ஒன்றை தொடங்க உள்ளதாகவும், அந்த இயக்கத்தின் பெயர், விவரம் அதன் செயல்பாடு குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை கடந்த 2020 ஆம் ஆண்டில் பாஜகவில் சேர்ந்தார். உடனடியாக அவர் பாஜக மாநில தலைவர் பதவியை எட்டிப்பிடித்தார். ஆனால் கடந்த ஆண்டு அவரது மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்டது.தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. இந்த கூட்டணி சுமூகமாக இருக்க வேண்டும் என்பதற்காக அண்ணாமலையிடம் மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்டு நயினார் நாகேந்திரனிடம் வழங்கப்பட்டது.இந்த அதிமுக – பாஜக கூட்டணி சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவியது. அதிமுக 47 தொகுதிகளிலும், பாஜக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லை. இந்நிலையில் தான் பாஜகவின் தோல்வியை தொடர்ந்து அண்ணாமலை விரைவில் தமிழகத்தில் புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் தான் அண்ணாமலை உடனடியாக அரசியல் கட்சி தொடங்கும் முயற்சியை கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதலில் தனி இயக்கம் ஒன்றை கட்டமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது அண்ணாமலை தற்போது “We the Leaders” என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இது தமிழ்நாட்டில் கோவையை மையப்படுத்தி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அதனை இயக்கமாக மாற்றும் திட்டத்தில் அல்லது வேறு பெயரில் புதிய இயக்கத்தை அண்ணாமலை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இந்த இயக்கத்தின் கீழ் அண்ணாமலையை போன்ற ஒத்த எண்ணம் கொண்டவர்களை அணியாக ஒருங்கிணைக்கவும், இளைஞர்கள், இளம்பெண்களை இயக்கத்தின் கீழ் கொண்டு வந்து அவர்களுக்கு அரசியல் சார்ந்த பயிற்சி அளிப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்த 6 மாதங்களுக்கு புதிய கட்சி தொடங்கும் எண்ணத்தில் அண்ணாமலை இல்லை என்று கூறப்படுகிறது. முதலில் இந்த இயக்கத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்தக்கட்ட நகர்வை அண்ணாமலை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

துப்பட்டாவை பிடித்து இழுத்த குடிபோதை நபருக்கு அடி உதை பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல்துறையினரிடம் வாக்குவாதம்.

0

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட காந்திமா நகர் பகுதியில் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது இங்கு பொதுமக்கள் காலை மாலை வேலைகளில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம் இந்நிலையில் வாரத்தில் வியாழன் சந்தை நடைபெறும் என்பதால் இங்கு பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது இந்நிலையில், விளையாட்டு மைதானத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நடை பயிற்சி மேற்கொண்டுள்ளார் அப்பொழுது மைதானத்தில் குடிபோதையில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் இளம் பெண்ணின் துப்பட்டாவை பிடித்து இழுத்து வம்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது இதனால் கோபமடைந்த இளம்பெண் குடிபோதையில் வம்பு செய்தவரை தனது கைகளால் தாக்கியுள்ளார் இதனால் கீழே விழுந்த அவர் மயக்கம் அடைந்த நிலையில் அங்கு நடை பயிற்சி மேற்கொண்டவர்கள் உடனடியாக தலையிட்டு இளம்பெணை தடுத்து நிறுத்தி காவல்துறைக்கும் மற்றும் 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவித்தனர் இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மயக்கமுற்ற குடிபோதை நபரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் ஏற்றி வைத்தனர் அப்பொழுது அந்த இளம் பெண் காவல்துறையினர் வராமல் ஆம்புலன்ஸ் எடுக்க கூடாது என்று தகராறில் ஈடுபட்டார் இதனைத் தொடர்ந்து சரவணம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காவல்துறையிடம் அந்த இளம் பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் சரியான நேரத்துக்கு வரவில்லை.

மேலும் என் துப்பட்டாவை பிடித்து இழுத்தவனை இறக்கி விடுங்கள் நான் அவனை கொன்று விடுகிறேன் என்று காவல்துறையினரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.பின்பு காவல்துறையினர் இளம்பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து ஆம்புலன்சை எடுத்துச் சென்றனர் இதனால் காந்திமா நகர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அறநிலையத்துறை அமைச்சரிடம் லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் …!

0

திருச்செந்தூர் முருகன் கோயிலில் விஐபி மற்றும் விரைவு தரிசனத்திற்கு பக்தர்களிடம் அங்குள்ள அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் முறைகேடாக பணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் வெகு நாட்களாக எழுந்த நிலையில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் முறைகேடாக பணம் வசூலிப்பது தொடர்பாக வந்த புகார்களின் உண்மைத்தன்மையை கண்டறிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் இன்று அதிகாலை 5 மணி அளவில் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றார். அப்போது அவர் தனது காரை கோயிலுக்கு வெளியே நிறுத்தி விட்டு, முகக்கவசம் மற்றும் டி சர்ட் அணிந்து சாதாரண பக்தர் போல் கோயிலுக்குள் சென்றார்.

திருச்செந்தூர் கோயிலில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான வைகாசி விசாக திருவிழா நேற்று தொடங்கிய நிலையில், பக்தர்கள் அனைவரும் சமமாக தரிசனம் செய்வதற்காக அனைத்து விதமான கட்டண தரிசன முறைகளையும் கோயில் நிர்வாகம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.கோயிலுக்குள் அமைச்சர் ரமேஷ் வந்த நிலையில் உடன் வந்திருந்த அவரது உதவியாளர்களில் ஒருவர், விரைவாக சாமி தரிசனம் செய்ய என்ன செய்ய வேண்டும்? என்று அங்கிருந்த அர்ச்சகர்களிடம் கேட்டுள்ளார். வந்திருப்பவர் அமைச்சர் என்று தெரியாத அர்ச்சகர்கள், தலைக்கு ரூ. 1,000 வீதம் மொத்தம் 4 பேருக்கு ரூ. 4,000 லஞ்சமாக கேட்டுள்ளனர். அப்போது கையில் ரொக்கமாக பணம் இல்லை என்று கூறிய அமைச்சர் ரமேஷ், அர்ச்சகர்களில் ஒருவரின் ஜிபே கணக்கிற்கு 4,000 ரூபாயை அனுப்பி வைத்துள்ளார். பின்னர், டிஜிட்டல் ஆதாரத்துடன் லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்களை அமைச்சர் ரமேஷ் கையும் களவுமாகப் பிடித்தார். இதனால், திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், அமைச்சர் ரமேஷ் முறைகேட்டில் சிக்கிய அர்ச்சகர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அறநிலையத் துறை ஊழியர்களை கோயில் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, அவர்களை கடுமையாக எச்சரித்தார். பின்னர் அவர்களிடம் விளக்கக் கடிதம் எழுதி வாங்கிக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது விரைவில் மிகக் கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.மேலும் இந்த விவகாரம் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தொடர்ந்து பக்தர்கள் தரிசனம், அன்னதானம், அடிப்படை வசதிகள், சொத்துப் பதிவேடு விவரங்கள், திருப்பணிகள் மற்றும் நிலுவையில் உள்ள கோயிலுக்கு வர வேண்டிய வருவாய் போன்ற பல்வேறு கோணங்களில் ஆய்வு நடத்தி வருகிறோம். முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாகுபாடு இன்றி விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது- முதல்வர் விஜய் வலியுறுத்தல்…

0

தமிழக முதல்வர் விஜய் கடந்த 10ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்ற நிலையில், இன்று முதல் முறையாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அதில், கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்த சந்திப்பின் போது பிரமரிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், புதுதில்லியிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்று (27.05.2026) மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது, [மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் தனது நெதர்லாந்து நாட்டுப் பயணத்தின்போது, ஆனைமங்கலச் செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வந்தமைக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், மாநில வாழ்த்துப்பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலேயே எப்போதும் பாடப்பட்டு வருகிறது. ஆனால் உள்துறை அமைச்சகத்தால் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட குறிப்பாணையைத் தொடர்ந்து, சில குறிப்பிட்ட அரசு நிகழ்ச்சிகளில், தேசியப் பாடல் முதலாவதாகப் பாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்துப்பாடலைப் பாடுவதற்கு உள்துறை அமைச்சகத்தால் உரிய தெளிவுரையினை வழங்க வேண்டும்.
மேம்பட்ட நடுத்தர போர் விமான (AMCA) வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையம் மற்றும் வான்வழி அமைப்பு மையம் (CABS) ஆகியவற்றை தமிழ்நாட்டில் அமைப்பது குறித்து கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் (DRDO) ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், வான்வழி அமைப்பு மையத்தினை (CABS) தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைத் திட்டத்திற்கான பூமி பூஜையை நடத்தவுள்ளதாக கர்நாடக மாநில துணை முதலமைச்சர் அறிவித்திருப்பது காவிரி நடுவர் மன்றத்தின் (CWDT) இறுதித் தீர்ப்பிற்கும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கும் முற்றிலும் முரணானது. இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு விவசாயிகளிடையே பெருங்கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேற்காணும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் மிகக் கவலைக்கிடமான அளவிற்கு அதிகரித்துள்ளது. 2026 ஆம் ஆண்டில் மட்டும் 12 கைது சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. தற்போது 58 மீனவர்கள் இலங்கையில் காவலில் உள்ளனர். 266 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனவே மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை, இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்’ என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்- எடப்பாடி பழனிசாமி

0

தமிழக சட்டசபையில் தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. அதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக அரசுக்கு எதிராகவும், எஸ்.பி.வேலுமணி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.இதன் காரணமாக, எஸ்.பி.வேலுமணி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பும், எடப்பாடி பழனிசாமி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யுமாறு எஸ்.பி.வேலுமணி தரப்பும் மாறி மாறி சபாநாயகரிடம் மனுக்களை அளித்தனர். இதற்கிடையே, அதிமுகவை சேர்ந்த மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்தியபாமா, பெருந்துறை ஜெயக்குமார் ஆகிய நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பும், எஸ்.பி.வேலுமணி தரப்பும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சுமுக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இருதரப்பு ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களும் தலைமைச் செயலகத்திற்கு வந்து, சபாநாயகரிடம் தாங்கள் கொடுத்திருந்த மனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனர். அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி, “தேர்தல் முடிந்த பிறகு சில கருத்து வேறுபாடுகளால் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக சில முடிவுகளை எடுத்தோம்.எங்கள் தரப்பை சேர்ந்த 25 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சபாநாயகரிடம் மனு கொடுத்தார்கள். நாங்களும் அவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி மனு கொடுத்திருந்தோம். இருவரும் நாங்கள் கொடுத்த மனுக்களை வாபஸ் பெற்று விட்டோம். அந்த கடிதத்தை பேரவை தலைவரிடம் கொடுத்துள்ளோம். எங்களுக்குள் இருந்தது கருத்து வேறுபாடு தான். எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி தான். தோல்விக்கு பிறகு நாங்கள் சில கருத்துக்களை முன்வைத்திருந்தோம். அதிமுக நூறாண்டுகளுக்குப் பிறகும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் சில கருத்துக்களை சொல்லி இருந்தோம். கட்சியில் வெற்றி, தோல்வி சகஜம். அதில் மாற்றுக் கருத்து இல்லை. பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்ற கருத்தை வைத்திருந்தோம். எங்கள் கோரிக்கைகளை பரிசீலித்து ஒன்றன் பின் ஒன்றாக செய்வதாக எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். எங்களுக்கு இடையே பிளவு இல்லை; கருத்து வேறுபாடு தான்.

பதவிக்காக சென்றதாக சிலர் விமர்சனம் செய்கின்றனர். நாங்கள் பதவிக்காக செல்லவில்லை என்பதை நாங்கள் தெளிவாக சொல்லிவிட்டோம். ஆளும் தரப்பும் சொல்லிவிட்டார்கள். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகத்தின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதில் அளித்த வேலுமணி, “நாங்கள் அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்” என்றார். அதைத் தொடர்ந்து பேட்டி அளித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், “தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்கெனவே பேரவைத் தலைவர் என்ற முறையில் என்னிடம் சில மனுக்களை அளித்திருந்தார்கள். அந்த மனுக்கள் என்னிடம் ஆய்வில் உள்ளன.

இதற்கிடையே இரு வேறு குழுக்களாக இருந்த அதிமுக உறுப்பினர்கள் தனித்தனியாக என்னை சந்தித்து மனுக்களை அளித்துள்ளார்கள். அந்த மனுக்கள் ஆய்வில் இருக்கின்றன. நாளை காலை எனது முடிவை அறிவிக்கிறேன்” என்றார்.

தென்காசி சோதனைச்சாவடியில் அமைச்சர் அதிகாலையில் அதிரடி ஆய்வு..!

0

தென்காசி மாவட்டம், புளியரை சோதனைச்சாவடி வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில், நெல்லை மாவட்டம் ராதாபுரம், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போன்ற பகுதிகளில் இருந்து கனிம வளங்கள் அண்டை மாநிலமான கேரளாவுக்கு எடுத்து செல்லப்படுகிறது.

இங்கு அரசின் விதியை மீறி அளவிற்கு அதிகமாக கனிம வளங்கள் கடத்திச் செல்லப்படுவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, அதிக பாரத்துடன் கனிமவளத்தை ஏற்றிக் கொண்டு கனரக வாகனங்கள் செல்வதால் கிராமப்புறச் சாலைகள் சேதம் அடைவதாகவும், கட்டுப்பாடு இல்லாமல் கனரக வாகனங்கள் இயங்குவதால் சாலை விபத்துகள் அதிகம் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தொடர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். திமுக மற்றும் அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு மனுக்கள் மற்றும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டும் இதுவரை எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை என்பதும் அப்பகுதி மக்களின் முக்கியக் குற்றச்சாட்டாக உள்ளது. ஆகையால், கனிமவளங்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் செல்வதற்கு நேர கட்டுப்பாடு விதிக்க தேவையில்லை, அவற்றை நிரந்தரமாக தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது புளியரை பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. தற்போது இந்த கோரிக்கை வலுத்துள்ளது. இதையடுத்து, கனிமவளத் துறை அமைச்சர் டி.கே.பிரபு நேரடியாக இங்கு வந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.இந்த நிலையில், இன்று (மே 25) அதிகாலை கனிமவளத் துறை அமைச்சர் டி.கே.பிரபு, புளியரை சோதனை சாவடியில் திடீர் ஆய்வை மேற்கொண்டார். அப்போது, புளியரை சோதனைச்சாவடி வழியாக சென்ற கனிமவள வாகனங்களின் பதிவேடுகளை அவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஆய்வின் ஒரு பகுதியாக சோதனைச் சாவடியில் பணியில் இருந்த காவலர்களிடமும் கனிமவள வாகனங்களின் வருகை போன்ற பல்வேறு முக்கிய விபரங்களைக் கேட்டறிந்தார்.குறிப்பாக, அனுமதி சீட்டுடன் கனிம வளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறதா? அனுமதிக்கப்பட்ட அளவில் தான் கனிம வளங்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா? முறைப்படிதான் கொண்டு செல்லப்படுகிறதா? என்பது குறித்தும் அவர் ஆய்வு செய்துள்ளார். கனிமவளத் துறை அமைச்சர் பிரபுவின் இந்த திடீர் ஆய்வு அதிரடியாக இருந்த நிலையில், இதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.