Thursday, June 25, 2026
Home Blog Page 22

ஜெர்மனியில் மு.க.ஸ்டாலின்… தமிழர்கள் உற்சாக வரவேற்பு..!

0

ஜெர்மனி சென்றடைந்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். ஜெர்மனியின் டியோட்ஸ்லாந்த் நகரில் தமிழர்களுடன் முதல்வர் ஸ்டாலின் சந்த்துள்ளார். ஜெர்மனியில் தமிழர்களின் பாசத்தைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்ததாக ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை 9 மணிக்கு விமானத்தில் ஜெர்மனிக்கு புறப்பட்டுச் சென்றார். முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலினின் செயலர்கள், அமைச்சர் டிஆர்பி ராஜா, பாதுகாப்பு அதிகாரிகளும் உடன் சென்றனர். நேற்று இரவு 9 மணியளவில் ஜெர்மனி சென்றடைந்தார் ஸ்டாலின். அங்கு அவருக்கு ஜெர்மனி வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழர்களின் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், தமிழக முதல்வர் ஸ்டாலினை உற்சாகத்துடன் வரவேற்றனர். ஜெர்மனியில் தமிழர்களின் பாசத்தைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்ததாக ஸ்டாலின் X தளத்தில் பதிவு செய்துள்ளார். தமிழர்களின் சாதகமான அம்சங்களை எடுத்துக் கூறி முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதை உறுதி செய்வோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று (ஆகஸ்ட் 31) முதலீட்டாளர்களைச் சந்திக்கிறார். ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு, செப்டம்பர் 1 ஆம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு புறப்படுகிறார். 2 ஆம் தேதி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்று, தொழில்முனைவோரை சந்திக்கிறார். 3 ஆம் தேதி லண்டனில் நடைபெறும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் பங்கேற்று, தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கிறார்.
லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அயலக தமிழர் நலவாரியம் சார்பில் 4 ஆம் தேதி நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்று, பெரியார் படத்தை திறந்து வைக்கிறார். 6 ஆம் தேதியும் அயலக தமிழர் நலவாரிய நிகழ்வுகளில் பங்கேற்கிறார். இங்கிலாந்தில் இருந்து 7 ஆம் தேதி புறப்பட்டு, செப்டம்பர் 8 ஆம் தேதி காலை சென்னை திரும்புகிறார்

இதற்கிடையே, பல்வேறு தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், நிறுவனர்களை முதல்வர் ஸ்டாலின் சந்திக்க உள்ளார். அப்போது, பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களை தமிழ்நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார்.

கோவை மாவட்டத்தில் கஞ்சா குற்றவாளிகள் அதிரடி கைது

0

கோவை மாவட்டத்தில் கஞ்சா குற்றவாளிகள் அதிரடி கைது

பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு கஞ்சா விற்பனை சம்பந்தமாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் மலுமிச்சம்பட்டி பிரிவு அருகில் சென்று சோதனை மேற்கொண்டபோது கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த சாரதி பெஹ்ரா மகன் சந்திப் குமார் பெஹ்ரா(22) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 6 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர் மற்றும் பேரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகில் உள்ள இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் சென்று சோதனை மேற்கொண்டபோது கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த லத்தீப் மொல்லா மகன் மதியார் ரஹ்மான் மொல்லா (26) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 5 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இவ்வாறாக கோவை மாவட்டத்தில் 11.30 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள், வைகை ஆற்றில் வீச்சு

0

சிவகங்கை: திருப்புவனம் அருகே வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள் மிதந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்’ நடைபெற்று வருகிறது. இதில் பட்டா மாறுதல், ரேஷன் கார்டு, மகளிர் உரிமை தொகை உள்ளிட்டவைக்கு பொதுமக்கள் மனு கொடுத்து வருகின்றனர். இந்த மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி, சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்தில் பூவந்தி, கீழடி, கொந்தகை, நெல்முடிக்கரை, மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உங்களுடன் ‘ஸ்டாலின் திட்ட முகாம்கள்’ நடைபெற்றன. இதில் பல ஆயிரம் பேர் மனுக்கள் கொடுத்தனர்.

இந்நிலையில் நேற்று திருப்புவனம் வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள் மிதந்தன. இதை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். மேலும் அந்த மனுக்களில் பெரும்பாலும் பட்டா மாற்றத்துக்காக வழங்கப்பட்டவை. அங்கு வந்த போலீஸார் மனுக்களை சேகரித்து விசாரிக்கின்றனர். மனுக்களை ஆற்றில் தூக்கி எறிந்த சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ஆற்றில் மிதந்த மனுக்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டவை. மனுக்கள் எப்படி ஆற்றில் மிதந்தன என்பது குறித்து விசாரிக்கிறோம் என்றனர்.

திமுக மேயரே நேருக்கு நேர் விவாதிக்க தயாரா ? கோவை அதிமுக கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பியதால் மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு …

0

கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அ.தி.மு.க கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோர்  திமுக மேயரே தொழில் நகரமான  கோவையை குப்பைமேடு ஆக்காதே என்ற வாசகங்கள் அடங்கிய பேனருடன் வந்தனர்

இதுகுறித்து கவுன்சிகர் பிரபாகரன் கூறுகையில், கோவை மாநகராட்சி பகுதியில் அ.தி.மு.க ஆட்சியில் சாலை விரிவாக்கம், மேம்பாலங்கள், நீர் நிலைகள் மேம்படுத்தி அழகு படுத்துதல் போன்ற எண்ணற்ற பணிகள் செய்யப்பட்டன. ஆனால் கடந்த 4 ஆண்டு தி.மு.க ஆட்சியில் மாநகராட்சி பகுதியை குப்பையை மேடாக்கும் வேலையைத் தான் செய்கிறார்கள். இதனால் கோவைக்கு தொழில் நிறுவனங்கள் வருவதில்லை. ஏற்கனவே , கிணத்துக்கடவு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் பகுதிகளில் குப்பை கிடங்கு அமைக்க அ.தி.மு.க .எம்.எல்.ஏ க்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளலூர் குப்பை கிடங்கில் திருப்பூரில் இருந்து குப்பைகளை கொண்டு வந்து கொட்டி பயோ கேஸ் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்த போவதாக கூறி உள்ளார்கள். சமீபத்தில் சென்னையில் இந்தத் திட்டத்தால் வாய்வு கசிவு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.

கோவை மாநகரை குப்பை மேடாக்க கூடாது. வெள்ளலூர் குப்பை கிடங்கு விஷயத்தில் மாநகராட்சியில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இதுகுறித்து விசாரணை நடத்த நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்.
கோவை மாநகரில் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து மேயர் நேருக்கு நேர் விவாதிக்க தயாராக இருக்கிறாரா ? என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்து பெண்ணிற்கும் ..முஸ்லீம் பையனுக்கு பாஜக ஆபிசில் மணமுடித்து வைப்பார்களா? சீமான் கேள்வி..

0

கம்யூனிஸ்ட், பாஜக கட்சி அலுவலகத்தில் வைத்து காதல் திருமணம் செய்வதாக அறிவித்திருக்கும் நிலையில், கட்சி ஆபீசை கல்யாண மண்டபமாக மாற்றி வருகிறார்கள்‌ எனவும், பிஜேபி ஆபீஸில் இஸ்லாமிய ஆணுக்கும், இந்து பெண்ணுக்கும் திருமணம் முடித்து வைப்பார்களா? எனவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் உயர்ந்த வகுப்பினருக்கும் தாழ்ந்த வகுப்பினருக்கும் திருமணம் நடக்க வைப்பார்களா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை : ஆணையூர் பகுதியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். திருமணத்தை நடத்து வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் புதிய மசோதா அனைவருக்கும் பொருந்தும் என்று கூறுகிறார்கள். குஜராத் கலவரத்திற்கும் பாஜகவிற்கும் தொடர்பில்லை என்று கூறுகிறார். அதை நீங்கள் ஏற்க்கிறீர்களா? ED ரைடு செய்வது எந்த கட்சியில்? எலக்ட்ரோல் பாண்டு அதிகம் பெற்றது எந்த கட்சி? முதல்வர் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்கிறார். முதலீடுகள் ஈர்க்க சென்றால் ஏற்கனவே ஈர்க்க சென்றது என்ன ஆனது? 2026 சட்டமன்ற தேர்தலில் தனியாகத் தான் நிற்பேன். கூட்டணி வைத்து ஏதாவது பிரச்சனையை இதுவரை சரி செய்து உள்ளார்களா? என்ன சாதித்துள்ளார்கள். முதல்வராக வந்தால் முதல் கையெழுத்து அரசு பள்ளி கல்லூரிகளில் படித்து வருபவர்களுக்கு அரசு வேலை என்பது தான். இது போல 100 கையெழுத்து போட்டு நாட்டின் தலை எழுத்தை மாற்ற வேண்டும் . கம்யூனிஸ்ட், பாஜக கட்சி அலுவலகத்தில் வைத்து காதல் திருமணம் செய்வதாக அறிவித்திருக்கிறார்கள். கட்சி ஆபீசை கல்யாண மண்டபமாக மாற்றி வருகிறார்கள்‌. பிஜேபி ஆபீஸில் இஸ்லாமிய ஆணையும் இந்து பெண்ணையும் திருமணம் முடித்து வைப்பார்களா ? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் உயர்ந்த வகுப்பினருக்கும் தாழ்ந்த வகுப்பினருக்கும் கல்யாணம் நடக்க வைப்பார்களா?” என்றார்.

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

0

பொது மறுவாழ்வுத் துறை அரசு செயலர் சஜ்ஜன்சிங் ரா சவான், திட்டம், வளர்ச்சித் துறை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலர் கி.பாலசுப்பிமணியம், பொது, மறுவாழ்வுத் துறை கூடுதல் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக வெங்கட பிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சமூக நலத் துறை இயக்குநராக ஷரண்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக எஸ்.பிரியங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சமூக நல இயக்குநரக கூடுதல் இயக்குநராக ஷரண்யா அறி, டிட்கோ செயல் அலுவலராக ஸ்வேதா சுமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கூட்டுறவு, உணவு மற்றும் பாதுகாப்பு துறை அரசு துணைச் செயலராக பானோத் ம்ருகேந்தர் லால் மாற்றப்பட்டுள்ளார்.

பேட்ச் வொர்க் மாடல் அரசு திமுக- அண்ணாமலை கருத்து

0

பேட்ச் வொர்க் செய்து தொழிற்துறை வேலைவாய்ப்பில் தமிழகம் முதலிடம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமைப்படுகிறார் என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X தளத்தில், “திராவிடத்தால் வாழ்கிறோம்! திராவிடமே நம்மை உயர்த்தும்! எல்லோரையும் வாழ வைக்கும்! திரு. அமித்ஷா முதல் திரு. பழனிசாமி வரை தி.மு.க. ஆட்சியைப் பழித்துரைக்கும் அனைவருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசே தந்துள்ள ‘நெத்தியடி பதில்’ இதோ! சட்டம் ஒழுங்கைப் பேணிக்காத்து, தொழில் செய்வதற்கான சூழலை மேம்படுத்தி, தடையற்ற மின்சாரம் – போக்குவரத்து வசதிகள் என அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கி, வேலைக்குத்தேவையான திறன்களை இளம் தலைமுறையினருக்கு அளித்து நாம் நாளும் தீட்டிய திட்டங்களால் இந்தச் சாதனை சாத்தியமாகி இருக்கிறது! திராவிட மாடல் ஆட்சியின் சாதனைச் சரித்திரம் தொடரும்! அரசியல் காழ்ப்புணர்வில் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக அள்ளிவீசப்படும் அவதூறுகளில் சத்தும் இல்லை, சாரமும் இல்லை என மக்கள் புரிந்து கொள்வார்கள்!” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து கருத்து கூறியுள்ள அண்ணாமலை தனது X தளத்தில், “கடந்த கால சாதனைகளுக்கு பேட்ச் வொர்க் செய்து தொழிற்துறை வேலைவாய்ப்பில் தமிழகம் முதலிடம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமை பேசுகிறார். கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. கடந்த நிதி ஆண்டில் உத்தரப்பிரதேசத்தின் வேலைவாய்ப்பு 1.2% உயர்ந்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் வேலைவாய்ப்பு விகிதம் 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது. 2020-21 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழ்நாட்டின் வேலவாய்ப்பு விகிதம் ஒரே அளவாக உள்ளது. 2020-21 ஆம் ஆண்டைப் போலவே 2023-24 ஆம் ஆண்டிலும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அப்படியே உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் தொழில்துறை தொழில்முனைவோர் குறிப்பாணை மூலம் பெறப்பட்ட முதலீடுகளில் தமிழ்நாட்டின் நிலை என்னவென்று முதல்வருக்குத் தெரியுமா? தமிழ்நாடு எதிர்காலம் குறித்த தொலைநோக்கை இழந்துவிட்டது” என குறிப்பிட்டுள்ளார்.

கோவையில் விரிவாக்கம் செய்யப்பட்டது முதலமைச்சரின் காலை உணவு திட்டம்…

0

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ மூலம் கிடைக்கும் பலன்கள் சென்று சேரும் வகையில் இன்று அத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

இந்த விரிவாக்கத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்ததை அடுத்து, கோவையிலும் இது துவக்கி வைக்கப்பட்டது. கோயம்புத்தூர் மாநகராட்சியில் உள்ள 46 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 6026 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில்இத்திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி, சிங்காநல்லூர், காமராஜர் சாலை, காந்தி நூற்றாண்டு நடுநிலைப் பள்ளியில் விரிவாக்கம் நடைபெற்றது. கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி பராஜ்குமார், மேயர் ரங்கநாயகி , மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில்,கோவை கலெக்டர் பவன்குமார் க.கிரியப்பனவர் காலை உணவுத் திட்டத்தை துவக்கி வைத்து, மாணவ மாணவியர்களுடன் காலை உணவினை உட்கொண்டார்.

பள்ளிகளில் பெண் மாணவிகளின் பாதுகாப்பிற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- பாஜக தமிழகத் தலைவர்

0

கோவையில் உள்ள ஒரு பள்ளியில் மாணவிகள் அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளை அடுத்து, அரசுப் பள்ளிகளில் மாணவிகளைப்பாதுகாக்கத் தவறியதாகக் கூறப்படும் மாநில அரசைக் கண்டித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

கோவையில் உள்ள கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெளியிட்ட காணொளியில், ஆசிரியர்கள் மது போதையில் பள்ளிக்கு வந்ததாகவும், மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
புகார் அளிக்கும் போதெல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், மாறாக, தொடர்ந்து பேசினால், நடைமுறைத் தேர்வுகளில் மதிப்பெண்கள் குறைக்கப்படும் என்று மிரட்டப்பட்டதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டினர். மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்ற தொந்தரவான யதார்த்தத்தை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுவதாக நாகேந்திரன் கூறினார்.

குழந்தைகளுக்குக் கற்பித்தல் மற்றும் பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர்கள் மீது இதுபோன்ற கடுமையான தவறான நடத்தைக்கு குற்றம் சாட்டப்படுவது அதிர்ச்சியளிக்கிறது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது திராவிட ஆட்சி மாதிரி என்று அழைக்கப்படுவதன் கீழ் பொறுப்பு முற்றிலும் சரிந்திருப்பதைக் காட்டுகிறது என்று அவர் குற்றம் சாட்டினார். இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்த பாஜக தலைவர் இந்த அரசாங்கத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களால் பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் ஏன் அதிகரித்து வருகின்றன, மாணவர்கள் அச்சமின்றி புகார் அளிக்க இடம் வழங்கப்படவில்லையா? என்று கேட்டார். அரசுப் பள்ளிகள் தரமான கல்வி இல்லாதவை என்று பொதுமக்கள் ஏற்கனவே கருதுவதாகவும், இப்போது அவை பெண் மாணவர்களுக்கும் பாதுகாப்பற்றதாகக் கருதப்படும் அபாயம் இருப்பதாகவும் நாகேந்திரன் மேலும் கூறினார்.
“இது இந்த அமைப்பின் மீதான நம்பிக்கையை மேலும் சிதைத்து, பெரும்பாலும் அரசுப் பள்ளிகளைச் சார்ந்திருக்கும் ஏழை மற்றும் நலிந்த குழந்தைகளை அதிக ஆபத்தில் ஆழ்த்தும்” என்று அவர் கூறினார். முதல்வர் எம்.கே. ஸ்டாலினையும் விமர்சித்த அவர், அனைத்து குழந்தைகளுக்கும் அவரை “அப்பா” (தந்தை) என்று அழைப்பதில் பெருமை கொள்ளும் அரசாங்கம், பெண் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கைகளை எடுக்குமா என்று கேள்வி எழுப்பினார்.

முதல்வர் தாமதமின்றி செயல்பட்டு முழுமையான விசாரணையை உறுதிசெய்து, கிணத்துக்கடவு பள்ளி மாணவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கோரினார்.

பெண் மாணவர்களைப் பாதுகாக்க வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில பள்ளிக் கல்வித் துறையை வலியுறுத்தி, அவர்களின் பாதுகாப்பை முதன்மையான முன்னுரிமையாகக்கருத வேண்டும் என்று நாகேந்திரன் தனது உரையின் முடிவில் வலியுறுத்தினார்.

பாலியல் புகார்; கிணத்துக்கடவு அரசு பள்ளி ஆசிரியர்கள் பணியிட மாற்றம்

0

கோவை: கிணத்துக்கடவு அரசு பள்ளியில் பாலியல் புகார் எதிரொலியாக 5 ஆசிரியர்கள் மறு உத்தரவு வரும் வரை பணியிட மாற்றம் செய்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள இரு ஆசிரியர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக கூறி மாணவிகள் அண்மையில் விடியோ பதிவு வெளியிட்டிருந்தனர். இந்த விடியோவின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு பேரூர் மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர்கள் இரண்டு பேர் மீது போக் ஷோ வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் விடியோ தொடர்பாக, கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி, கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
இந்த புகார் தொடர்பாகவும், பள்ளி நிர்வாக காரணங்களுக்காகவும் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் பணி புரியும் 4 ஆசிரியர்கள், ஒரு பெண் ஆசிரியை என 5 பேரை வேட்டைக்காரன்புதூர், தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, ஒத்தக்கால்மண்டபம், குளத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மறுஉத்தரவு வரும்வரை அயல்பணிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.