Saturday, April 18, 2026
Home Blog Page 35

127 காவலர்களுக்கு அண்ணா பதக்கம் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

0

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் செப்டம்பர் 15-ம் தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது.

அண்ணா பிறந்தநாளையொட்டி 127 காவல்துறை, சீருடை அலுவலர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, தலைமைக் காவலர் முதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வரை 100 பேருக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையில் 8 பேர், சிறைத்துறையில் 10 பேர், ஊர்க்காவல் படை அலுவலர்கள் 4 பேர், விரல்ரேகைப் பிரிவு, தடய அறிவியல் துறையில் தலா இருவருக்கு பதக்கம் வழங்கப்படுகிறது.

கோவை வழக்கறிஞர்கள் தொடர் ஆர்ப்பாட்டம்…

0

புதிய சட்ட முன் வரைவு மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தண்டபாணி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், ” இந்தி, சமஸ்கிருத பெயர்கள் கொண்ட 3 புதிய சட்ட முன் வரைவு மசோதாவை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும். கீழமை நீதிமன்றங்களில் இ-பில்லிங் நடைமுறையை கட்டாயப்படுத்தக் கூடாது”. என்றனர்.

இந்தியா கூட்டணி உருவான பிறகு பாஜகவுக்கு நடுக்கம் வந்துவிட்டது -மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

0

இந்தியா கூட்டணி உருவான பிறகு பாஜகவுக்கு நடுக்கம் வந்துவிட்டது. பாஜக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன;

அவர்களுக்கு முடிவுரை எழுதி இந்தியா கூட்டணியை அரியணையில் அமர்த்த மக்கள் தயாராகி விட்டார்கள் என்பதை உணர்ந்த பாஜக ஆட்சியாளர்கள், இப்போது நாட்டின் பெயரையே மாற்றத் துணிந்து விட்டார்கள் என்று மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர் கூறியுள்ளார்

நடிகை விஜயலட்சுமி புகார்.. விசாரணைக்கு நேரில் ஆஜராகாத சீமான்…

0

நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பான விசாரணைக்கு சீமான் நேரில் ஆஜராகவில்லை…

சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாகவும், 7 முறை கருக்கலைப்பு செய்ய தூண்டியதாகவும் அவர் மீது, காவல்நிலையத்தில் விஜயலட்சுமி புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் விஜயலட்சுமியிடம் 8 மணிநேரம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர், திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார்.மேலும், கருக்கலைப்பு குற்றச்சாட்டு தொடர்பாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து சீமான் விசாரணைக்காக கடந்த 9 ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை வளசரவாக்கம் காவல்துறையினர் சம்மன் அனுப்பினர். ஆனால், அன்றைய தினம் ஈரோடு சென்றதால் இன்று ஆஜராவதாக சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆஜராவார் என கூறப்பட்டது.இந்நிலையில் சீமானுக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சங்கர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சங்கர் , “விஜயலட்சுமி என்ற பெண் அளித்த புகாரில் 1007/2011 வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு சம்மன் அளித்திருந்தனர்.

சில பல காரணங்களால் அவர் இன்று ஆஜராகவில்லை. அவருக்கு பதில் நாங்கள் ஆஜராகியுள்ளோம். இரண்டு கடிதங்கள் கொடுத்து அனுப்பியுள்ளார்.

பொங்கலுக்கு சொந்த ஊர் போறீங்களா.. நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்குகிறது…

0

பொங்கல் பண்டிகைக்கு முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி ,பொங்கல் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே விரைவு ரயில் டிக்கெட்டுக்கான முன்பதிவு தொடங்கும்.

அந்த வகையில், அடுத்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி பொங்கல், 16ஆம் தேதி மாட்டுப்பொங்கல் 17ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விரைவு ரயில்களில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது.

ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் முன்பதிவு மையங்கள் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 13இல் முன்பதிவு செய்வோர் ஜனவரி 11ஆம் தேதியும், செப்டம்பர் 14இல் முன்பதிவு செய்வோர் ஜனவரி 12ஆம் தேதியும் பயணம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடுக’ – ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு.

0

மதுரை: எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி டிக்டோ ஜாக் அமைப்பு சார்பில் ஆர்பாட்டம்.

நடைபெற்றது.மதுரையில் இன்று தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சார்பில் தொடக்கக் கல்வி மாணவர்களின் கல்வித் தரத்தைப் பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தல்லாகுளம் முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நிர்வாகி செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். நிர்வாகி பாரதி சிங்கம் வரவேற்றார். நிர்வாகி ஜோயல் ராஜ் முன்னிலை வகித்தார்.

மேலும், எண்ணும் எழுத்தும் திட்டத்தில் பி.எட் மாணவர்களைக் கொண்டு ஆசிரியர்களின் கற்பித்தலை மதிப்பிடும் இயக்குநரின் உத்தரவை திரும்பப்பெற வேண்டும். தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு இணைய வழி ஆன்லைன் தேர்வுகளைக் கைவிட வேண்டும். எமிஸ் இணையதளத்தில் தேவையற்ற பதிவுகளை மேற்கொள்ள ஆசிரியர்களை நிர்பந்திப்பதை தவிர்க்க வேண்டும். விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதை கைவிட வேண்டும். பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களை 3 மாதத்திற்கொருமுறை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

‘நான் பலி ஆடு ஆகிறேன்…’ – இசை நிகழ்ச்சி விமர்சனங்களால் ஏ.ஆர்.ரகுமான் வேதனை…

0

arr4chennai@btos.in என்ற மின் அஞ்சலில் குறைகளை தெரிவிக்குமாறும் அதற்கு அவரது அணியினர் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் எக்ஸ் தளத்தில் ஏ.ஆர்.ரகுமான் கூறியிருந்தார்…

‘சிலர் என்னை எல்லா நேரத்திலும் சிறந்தவர் (Greatest of All Time GOAT) என்று அழைக்கிறார்கள். ஆனால் இப்போது நான் பலி ஆடு (Goat)’ ஆகிறேன் என்று ஏ.ஆர்.ரகுமான் வேதனை தெரிவித்துள்ளார்.மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி சென்னை அருகே பனையூர் ஆதித்யாராம் பேலஸ் சிட்டியில் நேற்றிரவு நடந்தது.

இதனை கண்டு ரசிப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் டிக்கெட் பெற்று நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் பயணித்து சென்னைக்கு வந்தனர். நிகழ்ச்சி நடக்கும் இடம் அருகே ஓ.எம்.ஆர். சாலையில், பார்வையாளர்களின் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பார்வையாளர்கள் நிரம்பி விட்டதாகவும், இதனால் டிக்கெட் பெற்றிருந்தும் ஏராளமானோர் வெளியேற்றப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.பாதிக்கப்பட்டவர்கள் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் நேற்று மாலையில் இருந்து ரகுமானின் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி பரபரப்பாக பேசப்பட்டது.

மேலும் ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். பார்வையாளர்கள் அமர்வதற்கான இருக்கை முதல் பார்க்கிங் வரையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குளறுபடி செய்து விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன…

‘புஸ்பா 2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

0

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா-1 திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் 2ஆம் பாகம் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டது.

புஷ்பா-2 (புஷ்பா தி ரூல்) அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

‘மூன்றாம் கண்’ திரைப்படத்தின் First Look போஸ்டர் வெளியானது…!

0

அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில் விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் நடிப்பில், ஹைப்பர்லிங்க் க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘மூன்றாம் கண்’ திரைப்படத்தின் First Look போஸ்டர் வெளியானது…!

வசூல் சாதனை படைக்கும் ஜவான்

0

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘ஜவான்’ திரைப்படம் ₹520 கோடி வசூலை கடந்ததாக படக்குழு அறிவிப்பு.