Monday, September 21, 2026
Home Blog Page 30

சென்னையில் வெளுத்து வாங்கப்போகும் மழை… தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கொடுத்த அப்டேட்ஸ்..

0

அடர்ந்த மேகங்கள் சென்னைக்கு மிக அருகில் உள்ளன. அடுத்த சில நிமிடங்களில் அவை சென்னை மீது விழுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.

இதனால், அடுத்த சில மணி நேரங்களுக்கு சென்னையில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை விட்டு விட்டு பெய்து வந்த மழை, இனி தொடர்ந்து 1 மணி நேரம் அல்லது அதற்கு மேலாக கூட பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.

சென்னை மீது 150 கி.மீட்டர் அகலத்துக்கு விரிந்துள்ள அடர்ந்த மேகங்கள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் விழுவதற்கும் ரொம்ப ரொம்ப வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

நாளை ஒரு நாள் மட்டும் இந்த புயலின் தாக்கம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருக்கும். நாளை இரவு அல்லது 5ம் தேதி காலையில் இருந்தே புயலின் தாக்கம் குறைந்துவிடும்

பா.ஜ.ஆளும் மாநில எண்ணிக்கை 12 ஆக உயர்வு..

0

இந்தியாவில் பாஜக முதல்வர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை 9ல் இருந்து 12 ஆக உயர்ந்தது.

காங்கிரஸ் முதல்வர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை 4லிருந்து 3ஆக குறைந்தது.

4 மாநில தேர்தல் – முதல்வர் வாழ்த்து.

0

தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.

அனைத்து தரப்பு மக்களும் வளமுடன் திகழ, வளர்ச்சியை முன்னெடுக்கும் நல்லதொரு மாற்றமாக செயல்பட வாழ்த்துக்கள்.

ராஜினாமா செய்தார் அஷோக் கெலாட்

0

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தொடர்ந்து முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அஷோக் கெலாட்

ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

குடும்பத்துடன் வந்து மாநாட்டை வெற்றி பெற வைக்க வேண்டும்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

0

கோவை கொடிசியா மைதானத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆ.ராசா,முன்னாள் அமைச்சர் பொங்களூர் பழனிசாமி,முன்னாள்  சட்டமன்ற உறுப்பினரும் திமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளருமான நா.கார்த்திக்,கோவை மாநகராட்சி மேயர் கல்பனா உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். முன்னதாக கூட்ட அரங்கிற்குள் வந்த உதயநிதி ஸ்டாலின் மேடைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதியின் உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர் மேடையேறிய அவருக்கு கோவை மாநகர் மாவட்டம் சார்பில் செங்கோல் வழங்கப்பட்டது.மேலும் சேலத்த நடைபெற உள்ள இளைஞரணி மாநாட்டிற்கான நிதியின் முன்பணமாக கோவை மாநகர்,வடக்கு மற்றும் தெற்கு என மூன்று மாவட்டங்கள் சார்பில் ஒன்றரை கோடி ரூபாய் வழங்கப்பட்டது.இதேபோல் நீட் தேர்வுக்கு எதிராக பெறபட்ட 2 லட்சத்து ஐந்தாயிரம் கடிதங்களை மூன்று மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர்.


தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,சேலத்தில் நடைபெற உள்ள இரண்டாவது மாநில மாநாட்டிற்கு உங்களை அழைப்பதற்காக வந்துள்ளேன் என்றார்.கோவைக்கும் கழகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்றும் கோவையில் கலைஞர் கால் படாத இடமே இல்லை எனவும் நினைவு படுத்தினார்.மேலும் கோவையில் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை சுட்டிக்காட்டிய அவர்,இன்று மாநாட்டு நிதியாக 3 கோடியே 37  லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளதாகவும் தமிழகத்திலேயே அதிக நிதி வழங்கியது கோவை மாவட்டம் தான் எனவும் பாராட்டு தெரிவித்தார். இந்தியாவில் எத்தனையோ இயக்கங்கள் இருந்தாலும் 1980 ல் இளைஞர்களுக்காக அணி துவங்கப்பட்டது திமுக வில் தான் என்றும் தேர்தலுக்கு முன்பாக இயக்கங்கள் நடத்தும் அது தேர்தலுக்காக தான் ஆனால் இளைஞர்களுக்காக தற்போது ஒரு வாய்ப்பை முதல்வர் கொடுத்திருக்கிறார் என்றால் அது உங்கள் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில் தான் எனவும் கூறியதுடன் அனைவரும் குடும்பத்துடன் வந்து மாநாட்டை வெற்றி பெற வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு மதுரையில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது. அது எதற்காக நடத்தப்பட்டது என நடத்தியவர்களுக்கும் தெரியாது கலந்து கொண்டவர்களுக்கும் தெரியாது எனவும் மாநாட்டில் சாப்பாடு எப்படி இருந்தது எனதான்  கேட்டார்கள் என கூறியதுடன் மாநாடு எப்படி நடத்தக்கூடாதோ அதற்கு எடுத்துக்காட்டாக அந்த மாநாடு நடத்தப்பட்டது எனவும் விமர்சித்தார்.தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் மகளிர் பேருந்து திட்டம்,காலை உணவு திட்டம் போன்ற திட்டங்களையும் மகளிர் உரிமை தொகை திட்டம் போன்றவற்றையும் சிறப்பாக செயல்படுத்தி காட்டியவர் முதல்வர் என்றார்.ஜெயலலிதா இருந்தவரை நீர் தேர்வு தமிழகத்திற்குள் வரவில்லை ஆனால் அடிமைகள் ஆட்சியில் நீட் தேர்வு பாஜக நிர்பந்தத்தால் வந்தது என்றும் கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 22 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் 60 லட்சம் பேர் கையெழுத்திட்ட  கடிதங்கள் இதுவரை பெற்றுள்ளதாகவும் மாநாட்டிற்கு இன்னும் பதினைந்து நாட்கள் உள்ள நிலையில் மேலும் கடிதங்கள் பெறப்பட்டு அவை அனைத்தும் மாநாட்டு மேடையில் வைத்து முதலமைச்சரிடம் கொடுக்க உள்ளோம் என்றும் கூறினார்.மேலும் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் 5 ம் வகுப்பு மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொது தேர்வு என கூறப்பட்டுள்ள நிலையில் இது தேவையா என கேள்வி எழுப்பிய அவர் அதன் காரணமாகத்தான் புதிய கல்வி கொள்கையை திமுக எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.தமிழகத்திலிருந்து மத்திய அரசுக்கு வரித்தொகையாக   கடந்த ஒன்பது ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கொடுத்து அதில் 2 லட்சம் மட்டுமே தமிழகத்திற்கு பெற்றுள்ளோம் எனவும் ஆனால் உத்தரப் பிரதேசத்திற்கு ஒன்பது லட்சம் கோடி கொடுத்துள்ளனர் எனவும் குற்றம் சாட்டினார். பிரதமர் மோடி ராஜஸ்தான் மத்திய பிரதேசத்தில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் என்னை பற்றி பேசுகிறார்.அவருக்கு எங்கு சென்றாலும் என்னை பற்றிய நினைப்பு தான் எனவும் தமிழகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது கலைஞர் குடும்பம் தான் என மோடி சொல்லுகிறார்.ஆமாம் இங்கு உள்ளவர் அனைவருமே கலைஞர் குடும்பம் தான் எனவும்  மோடியால் வாழ்ந்துள்ளது  அவரது  நெருங்கிய நண்பரான அதானி தான் என்றும் கடந்த 8 ஆண்டுகளில் ஒரு நிறுவனம் இப்படிப்பட்ட வளர்ச்சியை பெற்றது எப்படி என ஒரு அமெரிக்க ஆய்வு நிறுவனம் கேட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார். இதேபோல் 9 ஆண்டுகளில் நடைபெற்ற ஊழல் பட்டியலை சி ஏ ஜி வெளியிட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழரை லட்சம் கோடி எங்கு சென்றது என தெரியவில்லை என்றும் ஒரு கிலோ மீட்டர் சாலை அமைக்க 250 கோடி செலவு செய்தது பாஜக அரசு எனவும் ரமணா திரைப்பட பானியில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ்  இறந்த 88 ஆயிரம் பேருக்கு மருத்யுவ காப்பீடு திட்டம் கொடுத்துள்ளது பாஜக அரசு என்றும் குற்றம் சாட்டினார்.கடந்த சட்டமன்ற தேர்தலில் அடிமைகளான அதிமுக விரட்டிய நிலையில் பாராளுமன்ற தேர்தலில் அடிமைகளான அதிமுக வின் ஓனர்சை அடித்து விரட்ட வேண்டிய நேரம் எனவும் கூறிய உதயநிதி,பூட்டு, சாவி,சுத்தியல் என தமிழ்க மக்களை பூட்டாகவும் சாவியாக திமுக வையும் சுத்தியலாக பாஜக தலைமை தலைமையிலான மத்திய அரசையும் சுட்டிக்காட்டி குட்டிக்கதை கூறி பாஜக வை கடுமையாக விமர்சித்தார்.

மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம் – ராகுல்காந்தி

0

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி பொறுப்பை கொடுத்த மக்களுக்கு நன்றி.

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்

தெலுங்கானா மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என்று ராகுல்காந்தி தெரிவி்த்துள்ளார் ..

டில்லி செல்லும் முதலமைச்சர்…

0


I.N.D.I.A. கூட்டணியின் அடுத்தக்கூட்டத்தை டிசம்பர் 6 ஆம் தேதி டில்லியில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் டில்லி செல்வதற்கான பயணத்திட்டம் தயாராகியுள்ளதாக தகவல்.?

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகாகவும், அகிலேஷ் யாதவ் – காங்கிரஸ் இடையேயான கருத்து மோதலுக்குப் பிறகாகவும் நடைபெறும் கூட்டம்…

வைஷாலி ரமேஷ்பாபு இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் ஆனார்..

0

வைஷாலி இப்போது இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட்மாஸ்டர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது!!

வைஷாலி ரமேஷ்பாபு, பிரபல செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவின் மூத்த சகோதரி ஆவார்!!

கிராண்ட்மாஸ்டர்களாக இருக்கும் முதல் உடன்பிறந்த சகோதர, சகோதரிகளாக மாறியுள்ளார்கள்!!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி …

0

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, இன்று வருகை தந்த போது கோவை – மேட்டுப்பாளையம் – குன்னூர் – உதகமண்டலம் என பல்வேறு இடங்களில் திரளான வரவேற்பைத் தந்த கழகத்தினர் – பொதுமக்கள் – இளைஞரணி நிர்வாகிகள் அனைவருக்கும் எனது அன்பையும் – நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது X தளத்தில் தெரிவித்துள்ளார்…

புகையிலை பொருள்கள் பறிமுதல் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

0

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (01.12.2023) சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சூலூர் காவல் நிலைய காவல்துறையினர் தென்னம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வாகன தணிக்கை செய்த போது நான்கு சக்கர வாகனத்தில் புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் பாபு(37) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.46,987/- மதிப்புள்ள 50 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.