Monday, September 21, 2026
Home Blog Page 31

கஞ்சா சாக்லேட் பறிமுதல் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது..

0

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பத்ரிநாராயணன், அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (01.12.2023) பொள்ளாச்சி பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பேரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் மரபேட்டை வீதி அருகே சென்று சோதனை மேற்கொண்டு போது கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்கு வைத்திருந்த கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மகுனி ஷூ மகன் சர்பேஸ்வர் ஷூ (39)-யை கைது செய்து அவரிடமிருந்து 5.250 கிலோ கிராம் கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

தெலங்கானா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது...

0

தெலங்கானா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

119 தொகுதிகளில் 2,290 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

13 தொகுதிகளில் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு . மற்ற பகுதிகளில் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்

கோவை மாவட்டத்தில் மாபெரும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்…

0

மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை (Re-enquiry) இன்று (29.11.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.

மேலும் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான விசரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் அதிகாரிகள் மேற்கொண்டு, அம்மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் குடும்பப் பிரச்சனை, பணப்பரிமாற்ற பிரச்சனை மற்றும் இடப்பிரச்சினை தொடர்பான 69 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டதில், 1 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்யப்பட்டும்,3 மனுக்கள் மீது மனு ரசீது பதிவு செய்யப்பட்டும் (CSR), 55 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும், 10 மனுக்கள் மீது மே‌ல்விசாரணை செய்ய பரிந்துரை செய்தும் தீர்வு காணப்பட்டது.

இந்த மக்கள் குறை தீர்ப்பு மனு நாளில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நீட்டிப்பு

0

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நீட்டிப்பு பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் டிராவிட்டின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் நீட்டிப்பு மற்ற உதவி பயிற்சியாளர்களின் பதவிக்காலமும் நீட்டிப்பு, பயிற்சியாளராக தொடர டிராவிட் ஒப்புதல்..

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் புகையிலை பொருட்களை ஒழிப்பதற்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது..

0

தமிழக மாண்புமிகு முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின் படி கோவை மாவட்டத்தில் புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், அவர்கள் தலைமையில் இன்று (28.11.2023) மாவட்ட காவல் அலுவலகத்தில் கோவை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆகியோர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், உணவு பாதுகாப்பு பிரிவு மற்றும் மருந்து நிர்வாக துறையின் மாவட்ட நியமன அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆகியோர்களுடன் புகையிலைப் பொருள்கள் விற்பனையை முற்றிலும் தடை செய்வதற்கும் மற்றும் விற்பவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், இக்கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள கடைகளில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதல்முறை இக்குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு ரூபாய் 5000/- அபராதமும், மூன்று மாத காலத்திற்கு கடையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் புகையிலை பொருட்களை விற்பதில் முதல் முறை ஈடுபட்ட குற்றத்திற்கு 150 கடைகளுக்கு தலா ரூபாய் 5000 அபராதமும், இரண்டாம் முறை குற்றத்தில் ஈடுபட்ட 3 கடைகளுக்கு தலா ரூபாய் 10,000/- அபராதமும் மற்றும் மூன்றாம் முறை குற்றத்தில் ஈடுபட்ட 2 கடைகளுக்கு உரிமம் ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 , வாட்சப் எண் 77081-00100 மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலக காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9361638703 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட் பறிமுதல்… விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது…

0

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (28.11.2023) கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான கோவில்பாளையம் கருவலூர் சாலை அருகே சென்று சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சரத் சேதி மகன் ராஜ்கிஷோர்சேதி(33) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 2 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் 250 கிராம் கஞ்சா சாக்லேட் ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2023 முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 560 நபர்கள் மீது 426 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 710.411 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வழங்கினார்…

0


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 352 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.


பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். முன்னதாக, ஆட்சியர் மாற்றுத் திறனாளிகளை நேரில் சந்தித்து, தொழிற்கடனுதவி, இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலருக்கு அறிவுறுத்தினார். மேலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 8 பயனாளிகளுக்கு ரூ.43,832 மதிப்பிலான இலவச தேய்ப்பு பெட்டிகளையும், இன்று மனு அளித்த மாற்றுத் திறனாளி மீரான்கனி என்பவருக்கு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் ரூ.2,960/- மதிப்பிலான காதொலிக் கருவியினையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்கள்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய்சீனிவாசன் உட்பட அனைத்துத் துறை அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார் அமைச்சர் கீதாஜீவன்…

0

தூத்துக்குடியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரங்களை அணிவித்தார்

திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரங்களை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன் அனுபவித்தார் இவ்விழாவில் மருத்துவ கல்லூரி முதல்வர் சிவகுமார், ஆர். எம் .ஓ .சைலஸ் ஜெபமணி, ஜீவன் ஜேக்கப், கட்சி முக்கிய பிரமுகர்கள் திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

புதிய படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் லோகேஷ் கனகாரஜ்…

0

பிரபல திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் G Squad எனும் பெயரில் புதிய படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குவதாக தனது x தளத்தில் பதிவுட்டுள்ளார் ..

கோவை மாவட்டத்தில் கஞ்சா பறிமுதல்… விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது…

0

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் (26.11.2023) அன்று பொள்ளாச்சி பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடமான CTC மேடு அருகே சென்று சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ராஜ ஜெமிஷா மகன் முகமது ஃபெரோஸ்(25) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1.100 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் இரண்டு சக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2023 முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 554 நபர்கள் மீது 422 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 707.486 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.