Monday, July 13, 2026

பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை கண்டித்து கோவையில் பா.ஜ.க மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Must read

“நிழல் (Nizhal)”QR குறியீடு அடிப்படையிலான நவீன பொதுப் பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், கியூஆர் கோடு மூலம் போதைப்பொருள் கடத்தல், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் புகாராகத் தெரிவிக்க ஏதுவாக “நிழல் (Nizhal)” என்ற அதிநவீனத்...

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணி: யார் – யாருக்கு

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற விஜய்யின் பரப்புரையின் போது திடீரென பயங்கர கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி 41...

மக்களே இடைத்தேர்தலில் தீய சக்தி திமுகவை நல்லா வெச்சு வெளுத்து விடுங்க- கரூரில் முதலமைச்சர் விஜய் பேச்சு

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்கு பிறகு முதன்முறையாக முதலமைச்சர் விஜய் இன்று கரூருக்கு வருகை தந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து சாலை...

எழும்பூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு…

எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்த முதலமைச்சர் விஜய்,...

சட்ட சபையில் பீகார் முதலமைச்சர் நித்திஷ் குமார் பேசும் போது மக்கள் தொகை கட்டுப்படுத்துவது குறித்து அவர் பேசி இருந்தது தற்பொழுது சர்ச்சை கூறியதாகி இருக்கும் நிலையில், அவர் தனது பேச்சை திரும்பி பெற்றுக் கொள்வதாக தெரிவித்து உள்ளார். எனினும் அவர் பேசியதற்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, பா.ஜ.க மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நிதிஷ் குமாருக்கும் அவரின் பேச்சிற்கும் கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ

‘பீகார் முதல்வர் நிதீஷ்குமார் பெண்கள் குறித்தும், மக்கள் தொகை கட்டுப்படுத்துவது குறித்தும் அறுவருக்க தகவல் வகையில் பேசி உள்ளார். அவரது பேச்சைக் கண்டித்து பா.ஜ.க வினர் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து நாடு முழுவதும் பா.ஜ.க மகளிர் அணி சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து, தனது வார்த்தைகளை திரும்ப பெறுவதாக நிதீஷ்குமார் கூறி உள்ளார்.

ஒருபுறம் இந்த நாட்டில் உள்ள பெண்களின் கல்வி, உடல் நிலை, பாதுகாப்பு, பெருமை மற்றும் கண்ணியத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மேடையிலும் பெண்களை உயர்வுபடுத்தும் வேலையை செய்து வருகிறார்.

ஆனால், இந்தியா கூட்டணியில் இருக்கக் கூடிய காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திராவிடர் முன்னேற்றக் கழகம் கட்சியினர் யாரும் நிதீஷ் குமார் பேச்சுக்கு கருத்து தெரிவிக்காமல் மௌனமாக பார்த்து வருகின்றனர். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தி.மு.க நித்தீஷ்குமார் பேச்சுக்கு சற்றும் குறையாத வகையில் பேசி உள்ளது.

இந்தியா கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சி தலைவர்களுடைய பெண்கள் குறித்த பார்வையை இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் பார்க்க முடிகிறது. இவர்கள் சேர்ந்து இந்த நாட்டின் பெண்களின் முன்னேற்றத்திற்காக என்ன செய்ய முடியும் என்பதை இவர்களது பேச்சு காட்டுகிறது. இதை மகளிர் மத்தியில் பா.ஜ.க மகளிர் அணியினர் பிரச்சாரமாக எடுத்துச் செல்லும்.

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் பேசிய பிரதமர், பெண்களை அவ மரியாதை செய்கின்ற வார்த்தையை கூட பயன்படுத்தக் கூடாது என பேசினார். உச்சநீதிமன்றம் இரண்டு மாதங்களுக்கு முன்பு பெண்களை அவமானப்படுத்தும் வார்த்தைகளை மாற்ற வேண்டும் என கூறி உள்ளது.

ஆனால் நாட்டின் மூத்த அரசியல்வாதி என பார்க்கக் கூடிய, ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவர், பலமுறை முதலமைச்சராக இருந்து அனுபவம் பெற்ற ஒருவர் இது போன்ற கேவலமான கருத்துக்களை வெளியிடுவது கண்டிக்கத்தக்கது. ஆணாதிக்க மனநிலையை இந்த பேச்சுக்கள் காட்டுகிறது.

இந்தியா கூட்டணி என்பது பெண்களின் கண்ணியத்திற்கும் கௌரவத்திற்கும் எதிரான கூட்டணி என்பதை பா.ஜ.க மகளிர் அணி பிரச்சாரத்தில் முன்னிறுத்தும்.

ராகிங் குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர்,

ஒரு சில கல்லூரியில் ராகிங் நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது கோவையில் நடந்து உள்ள இந்த சம்பவத்தை பொறுத்த வரை அவர்கள் நடந்த பின்பு நடவடிக்கை எடுப்பதை தாண்டி, தவறுகள் நடப்பதற்கு முன்பு கல்லூரி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த விதத்திலும் புதிதாக வரும் கல்லூரி மாணவர்களின் உடலுக்கும் மனதுக்கும் தீங்கு விளைவிக்கும் ராகிங் போன்ற செயல்களை பா.ஜ.க ஆதரிக்காது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் சுகாதாரத் துறை சார்பாக கூடுதலாக காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட வேண்டும். தற்போது தேவைக்கு ஏற்ப அளவில் முகாம்கள் நடத்தப்படவில்லை. மருத்துவமனையில் நாள்பட்ட காய்ச்சல் சிகிச்சைக்காக பொதுமக்கள் பலர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பலருக்கும் கொரோனா ஏற்பட்டு வருகிறது. எனவே மீண்டும் கொரோனா பரிசோதனைகளை தொடங்க வேண்டும்.

வருமான வரித் துறையினர் சோதனையை பொறுத்த வரை நாடு முழுவதும் எங்கெல்லாம் ஆதாரங்கள் கிடைக்கிறதோ அதன் அடிப்படையில் சோதனைகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article