Monday, September 21, 2026
Home Blog Page 29

தென் மாவட்டங்களில் அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது- முதல்வர் மு.க. ஸ்டாலின்…

0

தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு குறித்து அமைச்சர்களுடன் பேசி வருகிறேன்.

அரசின் திட்டங்கள் கடை கோடி மக்களுக்கும் சென்று சேர்கிறதா என்பதை நானே நேரில் ஆய்வு செய்து வருகிறேன்.

13 அரசு துறைகள் வாயிலாக மக்களுக்கு சேவைகள் செய்யப்பட்டு வருகின்றன.

அனைத்து திட்டங்களும் அனைத்து மக்களையும் சென்று சேர வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது 30 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும்- கோவையில் மக்களுடன் முதல்வர் திட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.

பொதுமக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

0

துணை மின் நிலையங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொது மக்களின் நலன் கருதி எச்சரிக்கையுடன் மின் விநியோகம் வழங்கும் பணி படிப்படியாக நடைபெற்று வருகிறது.

பொது மக்கள் இந்த அசாதாரணமான சூழலை புரிந்து கொண்டு மின் விநியோக நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்..

வெள்ளத்தில் சிக்கி இருந்த ஆமிர் கான், விஷ்ணு விஷால் மீட்பு.

0

தன்னுடைய வீட்டில் வெள்ளம் புகுந்துள்ளதாகவும் காரப்பாக்கம் பகுதியில் நீரின் அளவு மோசமாக அதிகரித்து வருவதாகவும் நடிகர் விஷ்ணு விஷால் இன்று காலை X தளத்தில் பதிவிட்டிருந்த நிலையில் தற்போது அவரை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் மீட்டுள்ளனர்.

இதில் ஆச்சிரியம் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானும் சேர்த்து மீட்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட வேலைகளுக்காக சென்னை வந்துள்ள அமீர் கான் வெள்ளத்தில் சிக்கியுள்ளார். தீயணைப்புத் துறையினர் மற்றும் தமிழக அரசுக்கு விஷ்ணு விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.

மழைநீர் வடிவதற்கான பணிகளை ஆய்வு செய்தார்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

0

சென்னை ராயப்பேட்டை ஜிபி சாலை அருகே முட்டளவு மழைநீர் தேங்கியுள்ள சாலையில் நடந்து சென்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். அப்போது அங்கு மழை நீர் வடிவதற்கான பணிகளை கேட்டறிந்த உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து மழைநீர் வடிவதற்கான பணிகளை விரைவுபடுத்த மாநகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். தொடர்ந்து அங்கிருந்த மக்களுக்கு சிற்றுண்டி வழங்கினார்.

புயல் நிவாரணப் பணிகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்காணிப்பு

0

அமைச்சர்கள், கண்காணிப்பு அலுவலர்களிடம் மழை பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கவும், முகாமில் உள்ளவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கவும் முதலமைச்சர் உத்தரவு..

மிக்ஜாம் புயல் இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெறும்…

0

மிக்ஜாம் புயல் இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. மழை மற்றும் காற்று இன்று இரவு வரை தொடர வாய்ப்புள்ளது.

பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாகவும் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

  • வானிலை ஆய்வு மையம்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை...

0

மிக கனமழை காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை. சென்னை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களுக்கும் விடுமுறை.

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களை பொறுத்தவரை அந்தந்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிகள் விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

தொடர் திருட்டில் ஈடுபட்டவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது….

0

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் திருட்டு வழக்கில் ஈடுபட்டு வந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் அர்ஜுன் @ சின்ன கருப்புசாமி (25) என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் பரிந்துரை செய்தார்.
அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் திரு. கிராந்தி குமார் பாடி, இ.ஆ.ப., அவர்கள் மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். மேற்படி உத்தரவின்படி திருட்டு வழக்கு குற்றவாளியான அர்ஜுன் @ சின்ன கருப்புசாமி (25)- யை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

இந்நாள் மற்றும் வருங்கால முதல்வர்களை தோற்கடித்த பாஜக வேட்பாளர்..

0

காமாரெட்டி தொகுதியில் பாஜக வேட்பாளர் வெங்கட ரமணா ரெட்டி 6692 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.

காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டி 3ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இரு தொகுதிகளில் போட்டியிட்ட ரேவந்த் ரெட்டி மற்றும் சந்திரசேகர ராவ், காமாரெட்டி தொகுதியில் நேருக்கு நேர் மோதி தோல்வியை தழுவியுள்ளனர்.

இந்நிலையில் கொடங்கல் தொகுதியில் ரேவந்த் ரெட்டியும், காஜ்வெல் தொகுதியில் சந்திரசேகர ராவ்வும் வெற்றிப் பெற்றுள்ளனர்.

அண்ணன் விஜயகாந்த் நலம் பெறப் பிரார்த்திக்கும் நடிகர் சூர்யா…

0

அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன்.

கோடானகோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும் அவரை பூரண குணமாக்கி, நலம் பெற வைக்கும் என்று தனது X தளத்தில் பதிவு செய்து உள்ளார்..