Thursday, June 25, 2026
Home Blog Page 20

நடிகர் மோகன்லாலுக்கு “தாதாசாகேப் பால்கே விருது”

0

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு, தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.

மலையாளத் திரையுலகின் தவிர்க்கமுடியாத நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகர் மோகன்லால். லாலேட்டா என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் மோகன்லால் தன் அசாத்திய நடிப்பால் ரசிகர்களைக் கட்டிப்போடுபவர். 1978-ம் ஆண்டு திறநோட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அடியெடுத்து வைத்தாலும், 1980-ம் ஆண்டு வெளியான மஞ்சில் விரிஞ்ச பூக்கம் படம் இவருக்கும் பெரும் திருப்புமுனையாக அமைந்ததுசிறந்த நடிகருக்கான 2 விருதுகள் உட்பட 6 தேசிய திரைப்பட விருதுகள், 9 கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், 2001-ம் ஆண்டு மத்திய அரசின் பத்ம ஶ்ரீ, 2019-ல் பதம் பூஷண் விருது என திரையுலகினராலும், மத்திய மாநில அரசுகளாலும் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.
நடிகர், தயாரிப்பாளர், பிண்ணனிப் பாடகர் எனப் பலத் துறையில் தொடர்ந்து இயங்கிவருகிறார். இந்த நிலையில்தான் மோகன்லாலுக்கு, தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறதுஇது தொடர்பாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தாதாசாகேப் பால்கே விருது தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில், இந்திய அரசு மோகன்லாலுக்கு 2023-ம் ஆண்டுக்கான மதிப்புமிக்க தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.

மோகன்லாலின் குறிப்பிடத்தக்க சினிமா பயணம் பல தலைமுறைகளை ஊக்குவிக்கிறது!
புகழ்பெற்ற நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக கௌரவிக்கப்படுகிறார்.
அவரது ஒப்பிடமுடியாத திறமை, பல்துறை திறன் மற்றும் இடைவிடாத கடின உழைப்பு இந்திய திரைப்பட வரலாற்றில் உயரிய தரத்தை அமைத்துள்ளன. இந்த விருது செப்டம்பர் 23, 2025 அன்று நடைபெறும் 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டிருக்கிறது.

இபிஎஸ் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரி வழக்கு: மீண்டும் மனு அளிக்க உத்தரவு..!

0

கரூர் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட எஸ்பியிடம் மீண்டும் மனு அளிக்க அதிமுகவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்ட அதிமுக அவைத்தலைவர் திருவிக, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு:
கரூர் பேருந்து நிலையம் அருகே கரூர் – கோவை சாலையில் செப். 25-ம் தேதி மாலை 06.30 மணியளவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதி வாதிடுகையில், மனுதாரர் கோரும் இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க இயலாது. இதனால் மாற்று இடத்தை பரிந்துரைக்குமாறு மனுதாரருக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு விட்டது என்றார். மனுதாரர் தரப்பில், அனுமதி கோரும் இடத்தில் 2022 முதல் பல அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, மனுதாரர் தரப்பில் பொதுக்கூட்டதுக்கு அனுமதி கோரும் இடத்தில், ஏற்கெனவே பல்வேறு கட்சிகளுக்கு பொதுக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது தொடர்பான ஆவணங்களுடன், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அணுகி மனு அளிக்க வேண்டும். அந்த மனு அடிப்படையில் செப். 22ம் தேதி மாலைக்குள் காவல் கண்காணிப்பாளர் உரிய முடிவெடுக்க வேண்டும். மனு முடிக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.

திருவாரூரில் இன்று விஜய் சுற்றுப்பயணம்..!

0

தவெக தலைவர் விஜய் தனது தமிழக சுற்றுப்பயணத்தை கடந்த வாரம் சனிக்கிழமை (செப்.13) அன்று திருச்சியில் தொடங்கினார்.
அந்த சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து இன்று  (செப்.20) நாகப்பட்டினம் மாவட்டத்திலும், திருவாரூர் மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறார்.
இந்நிலையில் இது தொடர்பாக தவெக தலைமை நிலையக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, இன்று நாகப்பட்டினம் மாவட்டத்திலும், திருவாரூர் மாவட்டத்திலும் நடைபெற உள்ளது. இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்காகத் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டப் பொறுப்பாளர்களை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் குழுக்கள், சுற்றுப் பயணம் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு ஐகோட்டில் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில், ‘‘தவெக  தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்துக்கு தமிழகம் முழுவதும் அனுமதி கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்களை எந்தவொரு பாரபட் சமும் பார்க்காமல் உடனுக்குடன் அனுமதி வழங்க டிஜிபிக்கு அறிவுறுத்த வேண்டும்’’ என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், “ஆளுங்கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் நடத்தும் மாநாடுகள், பொதுக்கூட்டங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொண்டர்கள் வரவேண்டும் என்றும், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக் கக்கூடாது என்றும் நிபந்தனை களை விதித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு உருவாக்க வேண்டும். அதேபோல அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும்போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் வகையிலான விதிமுறைகளை வகுக்க வேண்டும். அரசியல் கட்சியினருக் கிடையே பாரபட்சம் காட்டக்கூடாது.
பொது சொத்துகள் அல்லது பொதுமக்களின் தனிப்பட்ட உடமைகள் சேதப்படுத்தப்பட்டால் அதற்கான இழப்பீட்டுத் தொகையை சம்பந்தப்பட்ட கட்சிகளிடமிருந்து வசூலிக்க வேண்டும்’’ எனக்கூறி, இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தவெக தரப்பில்  சுற்றுப்பயணம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், புத்தூர் அண்ணா சிலை சந்திப்பு அருகே காலை 11.00 மணிக்கும், திருவாரூர் மாவட்டம், நகராட்சி அலுவலகம் அருகில், தெற்கு வீதியில் மாலை 3.00 மணிக்கும் நிகழ்ச்சி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் – அரசாணை வெளியீடு

0

பனை மரங்கள் வெட்டப்படுத்தவதை தடுக்க ஆட்சியர் தலைமையிலான மாவட்டம் மற்றும் வட்டார அளவிலான குழுக்களை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையில், பனை மரங்களை வேரோடு வெட்டி விற்கவும் செங்கல் சூழல்களுக்கு பயன்படுத்தப்படுவதை தடுக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பிக்கும் என்று அறிவித்திருந்தது. அதன்படி, பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க மாவட்டம் மற்றும் வட்டார அளவில் குழுக்களை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட மாவட்ட குழுவில் வருவாய், வேளாண்மை, தோட்டக்கலை, கதர் கிராம தொழில் துறைகளை சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இதே போல தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் தலைமையேற்ற வட்டார குழுவில் வேளாண் துறை உதவி இயக்குநர், தோட்டக்கலை அலுவலர், வட்டாட்சியர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
வட்டார அளவிலான குழு வயல் ஆய்வு மேற்கொண்டு பனை மரங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு பயிர் சாகுபடி பதிவேட்டில் பதிவேற்றம் செய்யும். இதன் பின்னர், தவிர்க்க முடியாத காரணங்களால், பனை மரங்களை வெட்ட வேண்டி வந்தால், மாவட்ட அளவிலான குழுவிடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
பனை மரத்தை வெட்டும் போது, அதனை ஆய்வு செய்ய குழுவில் உள்ள ஒரு அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்படும் என்றும் வெட்டப்பட்ட மரத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல மாவட்ட அளவிலான குழுவின் அனுமதி கட்டாயம் அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கு இணையாக 10 மரங்களை நட்டு வளர்ப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவையில் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம்

0

அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழ்நாடு முழுவதும் தனது சுற்றுப்பயணத்தை தொடர்ந்து தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள், கருத்து வேறுபாடுகள் குறித்து கவலைப்படாமல், மக்களிடம் நேரடியாகச் சென்று அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிவதையே தனது முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு அவர் செயல்படுகிறார். இதன் ஒருபகுதியாக, இன்று கோவை மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர், சூலூர், அவிநாசி உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளில் அவர் பிரசாரப் பயணம் மேற்கொண்டார். பரப்புரைக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி , “அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கோவை நகரம் உலகத்தரத்துக்கு ஏற்ப மேம்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

மேலும், ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அவர், “இந்த பிரச்சினைகள் அனைத்தும் அதிமுக ஆட்சியில்தான் தீர்க்கப்படும். தற்போது திமுக அரசு மக்களுக்காக எதுவும் செய்யவில்லை” என குற்றம்சாட்டினார். திமுக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். “அதிமுக ஆட்சியில் பொதுமக்கள் நலனுக்காக தொடங்கப்பட்ட பல திட்டங்கள், திமுக ஆட்சி அமைந்ததும் நிறுத்தப்பட்டன. அதில் அவிநாசி திட்டமும், கோவை மெட்ரோ ரயில் திட்டமும் அடங்கும். திமுக அரசின் அலட்சியத்தால் வளர்ச்சித் திட்டங்கள் தடைபட்டுள்ளன. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், மெட்ரோ ரயில் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் உடனடியாக செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும், அதிமுக ஆட்சியின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட நலத்திட்டங்களைப் பற்றி விரிவாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, “மக்களுக்காக நாங்கள் செய்த பணிகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். பெண்களுக்கு தாலிக்கு தங்கம், இலவச லேப்டாப், விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு – இவை அனைத்தும் அதிமுக ஆட்சியில்தான் சாத்தியமானது. கோவை நகரம் உலகளவில் முன்னேற்றம் அடைய வேண்டிய அனைத்து சாத்தியங்களும் உள்ளதாகக் கூறிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சியில் இருந்தால் கோவைக்கு தொழிற்துறை வளர்ச்சி, அடிப்படை வசதி மேம்பாடு, போக்குவரத்து வசதிகள், மருத்துவம், கல்வி உள்ளிட்ட அனைத்திலும் முன்னேற்றம் உண்டாகும். ஆனால், தற்போதைய திமுக அரசு எந்தக் கண்ணோட்டமும் இன்றி செயல்பட்டு வருகிறது” என்று கூறினார்.
உங்கள் பிரச்சினைகள் எங்களின் பிரச்சினைகளே. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், உங்களுக்கு தேவையான அனைத்து தீர்வுகளும் உடனடியாக வழங்கப்படும்” என்று உறுதியளித்து பேசினார்.

இந்த பிரசாரப் பயணத்தின் போது, எடப்பாடி பழனிசாமி மீது பொதுமக்களிடமிருந்து அதிக வரவேற்பு காணப்படுகிறது. பெண்கள், இளைஞர்கள், மூத்த குடிமக்கள் என பல தரப்பினரும் கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை முன்வைத்தனர். ஒவ்வொரு கோரிக்கையையும் கவனமாகக் கேட்ட அவர், “அதிமுக ஆட்சியே உங்களுக்கான உண்மையான தீர்வு” என கூறினார். இதன் மூலம், வரும் தேர்தலை முன்னிட்டு அதிமுக வலுவான அடித்தளத்தை கோவையில் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்பது தெரிய வருகிறது. கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் ஒரு பக்கம் இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சித்து வருவது அதிமுக தொண்டர்களிடையே தைரியத்தை ஏற்படுத்துகிறது.

கம்பம் நகராட்சியில் பரபரப்பு : தலைவர், துணைத்தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

0

கம்பம் நகராட்சியில் நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் மனு அளித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டு வருகின்றது.

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது. இந்நிலையில் 18 திமுக நகர மன்ற உறுப்பினர்கள், 6 அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து நகராட்சி ஆணையாளரிடம் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன், துணைத் தலைவர் சுனோதா செல்வகுமார் ஆகியோர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து தீர்மானம் மனுவை கம்பம் நகராட்சி ஆணையரிடம் கொடுத்தனர். கடந்த சில மாதங்களாகவே நகர்மன்ற தலைவருக்கும், நகர் மன்ற உறுப்பினர்களுக்கும் தீர்மானம் நிறைவேற்றுவதிலும், கூட்டங்கள் நடத்துவதிலும் ஒற்றுமை இல்லாததால் பிரச்சனைகள் அடிக்கடி வந்து கொண்டு இருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நகர்மன்ற கூட்டம் நடைபெறும் பொழுது எதிர்ப்பில் உள்ள 18 திராவிட முன்னேற்றக் கழக நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டங்கள் நடத்தினார்கள். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் 24 நகரமன்ற உறுப்பினர்கள் ஆணையாளரிடம் நகர் மன்ற தலைவர் மற்றும் நகர்மன்ற துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அதற்குரிய மனுவை நகரமன்ற ஆணையாளரிடம் அளித்தனர். மனு அளிக்கும் பொழுது 18 திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் நகர்மன்ற உறுப்பினர்களும், 6 அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நகர் மன்ற உறுப்பினர்களும் தனித்தனியாக மனு அளித்தனர். அனைவரும் ஒன்றாக இணைந்து தேனி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இது குறித்த மனு அளிக்க சென்றனர்.

அந்த மனுவில் நகர்மன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று வார்டு பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை நடத்துவதற்கு நகர் மன்ற தலைவர் ஏற்க மறுப்பதாகவும் மேலும் நகர் மன்ற தலைவரின் கணவர் தன்னிச்சையாக செயல்பட்டு நகராட்சி பணியாளர்களை கையில் வைத்துக் கொண்டு நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துவதாகவும் குற்றம் சாட்டி அந்த மனுவில் கூறியுள்ளனர். நகராட்சியின் முன்பு நகர்மன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நகர மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இயற்கை விவசாயம் செய்யத்தான் நிலம் வாங்கினேன் -அண்ணாமலை அறிக்கை

0

கோவை மாவட்டம், காளப்பட்டியில் நிலம் வாங்கியது தொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அவர் தாமாக முன்வந்து விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை தனது “X” தள பக்கத்தில் அளித்துள்ள விளக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது: எனது அரசியல் வேலைகளுக்கு சமுதாய நலனுக்காகவும் இயற்கை விவசாய நலனிற்காகவும் நான் செய்து வரும் பணிகள் குறித்து சிலர் வதந்தி பரப்பி வருவதாக எனது கவனத்திற்கு வந்தது.

இயற்கை விவசாயத்தின் மீது நான் கொண்டுள்ள ஆர்வத்தினால் ‘We the Leaders’ அறக்கட்டளை, இயற்கை விவசாயம் தொடர்பாக பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதையும் உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள். எனவே இது தொடர்பான பின்வரும் குறிப்புகளை உங்கள் முன்வைப்பது எனது கடமை என நான் கருதுகிறேன். கடந்த ஜூலை 12, 2025 அன்று விவசாய நிலத்தை நான் வாங்கியிருப்பது உண்மைதான். இந்த நிலத்தை, நான் என்னுடைய மற்றும் என் மனைவியுடைய சேமிப்பு மற்றும் கடன் ஆகியவற்றைப் பயன்படுத்தி வாங்கியுள்ளேன். கடந்த இரு மாதங்களாக எனது வங்கிக் கணக்கு மூலம் அந்தக் கடனுக்கான மாதாந்திர வட்டியையும் செலுத்தி வருகிறேன். நிலத்தைப் பதிவு செய்யும் நாளில் நான் செல்லவில்லை என கூறுபவர்கள், ஒரு அசையாச் சொத்தை பவர் ஆஃப் அட்டார்னி மூலம் வாங்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஜூலை 10, 2025 காளப்பட்டி பதிவு அலுவலகத்தில் எனது மனைவி அகிலாவுக்கு எனது பவர் ஆஃப் அட்டர்னி வழங்கப்பட்டது. இந்த நிலத்தை பதிவு செய்வது தொடர்பாக தமிழக அரசுக்கான பத்திரப்பதிவு முத்திரைத் தாள் மற்றும் இதர கட்டணம் என ரூ 40,59,220 செலுத்தியுள்ளோம். மேலும் நான் மத்திய அரசின் PMEGP திட்டத்தின் கீழ் ஒரு பால் பண்ணை அமைப்பதற்கான கடனுக்கும் விண்ணப்பித்துள்ளேன். அந்த விண்ணப்பம் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. எனது அடுத்த ஆண்டு வருமான வரி அறிக்கைகள், நிச்சயமாக இவை அனைத்தையும் பிரதிபலிக்கும். சுருக்கமாகச் சொன்னால், நான் இதுவரை வாங்கிய முதல் மற்றும் ஒரே அசையாச் சொத்து இதுதான். நமது இளைஞர்களின் தொழில் ஆர்வத்தை ஊக்குவித்து உதவுவதன் மூலமாகவும், சமூக நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிலை மற்றும் சிறு குறு நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலமாகவும் தங்கள் முதலீட்டுக் கனவுகளை நனவாக்கும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு உதவ, விரைவில் மற்றொரு முதலீட்டு நிறுவனத்தை தொடங்கும் ஆரம்பக் கட்ட பணியில் தற்போது ஈடுபட்டுள்ளேன். தமிழகத்தில் பாஜக மாநிலத் தலைவரானதிலிருந்து கடந்த ஏப்ரல் 2025 வரை, என் குடும்பத்துடன் செலவிட எனக்கு மிகக் குறைந்த நேரமே கிடைத்தது. நானும் என் மனைவியும் நமது நாட்டின் மிகவும் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்றிலிருந்து வணிக மேலாண்மைப் பட்டம் பெற்றுள்ளோம். தற்போது எனது குடும்பத்திற்காகவும் எனது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் சட்டத்திற்கு உள்பட்டு நாங்கள் இப்போது சில வணிக முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். இதில் சில ஆர்வக் கோளாறுகளுக்கு வருத்தம் ஏற்பட்டால் அவர்களை கடவுள் காப்பாற்றட்டும்.
இத்தனை ஆண்டுகளாக எனது எல்லா செயல்களிலும் நான் நேர்மையையும் உண்மையையும் கடைப்பிடித்து வருகிறேன். சிலர் என் மீது வைத்திருக்கும் சந்தேகத்திற்கும் காழ்ப்புணர்ச்சிக்கும் என மரியாதை கலந்து நன்றிகள். குறை சொல்வதற்காகவே வெட்டியாக நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பதை விட்டு, இனியாவது பயனுள்ளதாக நேரத்தைச் செலவிடுவீர்கள் என்பதற்காகவே இந்த விளக்கத்தை வெளியிடுகிறேன் என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது அறிக்கையில் பாஜக என குறிப்பிடாமல் கே.அண்ணாமலை Ex IPS என குறிப்பிட்டுள்ளார்.

சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கட்டு கட்டாக சிக்கிய பணம்..!

0

கோவை, சிங்காநல்லூர் சார்பதிவாளர் அலுவலகம் வெள்ளலூர் பகுதியில் அமைந்து உள்ளது. இந்த அலுவலகத்தில் பத்திரப் பதிவு உட்பட பல்வேறு பணிகளுக்கு அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு கடந்த சில மாதங்களாக ஏராளமான புகார்கள் சென்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து இன்று மாலை சுமார் 4.30 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர், லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் தலைமையில் வந்த காவல் துறையினர் இந்த தீடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அலுவலக வளாகத்தில் இருந்த இடைதரகர்கள் தெறித்து ஓடி உள்ளனர்.

சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், சார் பதிவாளர் அறையில் இருந்த கணக்கில் வராத 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த பணம் எப்படி வந்தது ? யாருடைய பணம்? என்பது குறித்தும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதே அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டு ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட, நிலையில் தற்போது மீண்டும் சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சியில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்கும் விஜய்…!

0

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கவுள்ளார். அதன்படி வரும் 13ம் தேதி திருச்சியில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

இதனிடையே திருச்சியில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்க காவல்துறையிடம் அனுமதி கேட்டு தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் எந்தெந்த மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி,

13-09-2025 : சனிக்கிழமை – திருச்சி, பெரம்பலூர், அரியலூர்

20-09-2025 : சனிக்கிழமை – நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை

04-10-2025 : சனிக்கிழமை – கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு

05-10-2025 : ஞாயிற்றுக்கிழமை – கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு

11-10-2025 : சனிக்கிழமை – குமரி, நெல்லை, தூத்துக்குடி

11-10-2025 : சனிக்கிழமை – காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை

25-10-2025 : சனிக்கிழமை – தென் சென்னை, செங்கல்பட்டு

01-11-2025 : சனிக்கிழமை – கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்

08-11-2025 : சனிக்கிழமை – திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்

15-11-2025 : சனிக்கிழமை – தென்காசி, விருதுநகர்

22-11-2025 : சனிக்கிழமை – கடலுர்

29-11-2025 : சனிக்கிழமை – சிவகங்கை, ராமநாதபுரம்

06-12-2025 : சனிக்கிழமை – தஞ்சாவூர், புதுக்கோட்டை

13-12-2025 : சனிக்கிழமை – சேலம், நாமக்கல், கரூர்

20-12-2025 : சனிக்கிழமை – திண்டுக்கல், தேனி, மதுரை

காவல்நிலையமா? கட்டப்பஞ்சாயத்து மன்றமா? – நீதிமன்றம் கேள்வி

0

மதுரையை சேர்ந்த சசிகுமார், ரம்யா தம்பதியினர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில் மருத்துவ பொருட்களை வாங்கி, அதற்கான தொகையை செலுத்தாதது தொடர்பாக விஜயகுமார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தங்கள் மீது பதியப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் வழங்க கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, மனுதாரர்கள் மருந்து பொருட்களை வாங்கியதற்காக 15 லட்சம் ரூபாய் செலுத்தியிருக்க வேண்டும், ஆனால் மதுரை திலகர் திடல் காவல் நிலைய போலீசார் சட்டவிரோதமாக கட்டப்பஞ்சாயத்து செய்ததில், சுமார் 8 லட்சம் ரூபாயை மனுதாரர்கள் காவல் நிலையத்தில் செலுத்தி ரசீது பெற்றுள்ளனர். இது அரசு வழக்கறிஞராலும் உறுதி செய்யப்பட்டுள்ளது
இது காவல் நிலையங்கள் வணிக ரீதியான பணப்பரிமாற்ற விவகாரங்களில் எவ்வாறு கட்டப்பஞ்சாயத்து செய்கின்றன என்பதற்கு உதாரணமாக திகழ்வதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், கைது நடவடிக்கைக்கு பயந்து காவல் நிலையத்தில் மனுதாரர்கள் பணத்தை செலுத்தியிருக்கிறார்கள் என்று தெரிவித்தனர்.
மேலும் திலகர் திடல் காவல் நிலையம் சட்டவிரோத கட்டப்பஞ்சாயத்து நீதிமன்றமாக செயல்பட்டுள்ளது என்பது தெரியவந்திருப்பதாகவும், இந்த வழக்கில் மதுரை மாநகர துணை காவல் ஆணையரை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்ப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதோடு திலகர் திடல் காவல் ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாநகர துணை காவல் ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.