Thursday, June 25, 2026
Home Blog Page 19

கரூர் சம்பவம்… நிதியுதவி செய்த கமல்..!

0

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த செப்.27 ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினார். அப்போது விஜய் பேசிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தேசிய அளவில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இத் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுடைய குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ.10 லட்சம் நிதி வழங்கியது.

அதே போல, தவெக சார்பில் உயிரிழந்தவர்களுடைய குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பிலும் தலா ரூ.2 லட்சம் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்திற்கு மொத்தமாக 1 கோடி நிவாரண நிதி நேரடியாக பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை சந்தித்து வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் எம்பி, பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க இன்று கரூர் வருகை தந்தார். அதன் பின்னர் ஏமூர் புதூர், வேலுச்சாமிபுரம், தான்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது, உயிரிழந்த 41 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் மொத்தம் 41 லட்சம் ரூபாய் நிதி உதவியை நேரடியாக வழங்கினார்.இது சம்பந்தமாக விசாரணை நடைபெற்று வருகிறது. சதி திட்டம் குறித்து நாம் பேச வேண்டியது இல்லை. சட்டமும், நீதியும் அதை பார்த்துக் கொள்ளும். விரைவாக மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து உயிர் பலி குறைவுக்கு காரணமான செந்தில் பாலாஜியை பாராட்ட வேண்டும். கட்சி பேதமை பார்க்காமல், சட்டத்தை மட்டுமே நடைமுறைப்படுத்தும் ஒரு முதலமைச்சராக செயல்பட்ட திமுக தலைவரை இந்த நேரத்தில் எண்ணி பெருமை கொள்கிறேன், நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழக முதல்வருக்கு ஒரே ஒரு வேண்டுகோள். அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கூட்டம் நடத்த, பொதுமக்களுக்கு பாதிப்பில்லாமல் ஒதுக்குப்புறமாக தனி இடம் ஒன்றை ஒதுக்கி தர வேண்டும் என வேண்டுகோள் வைக்கின்றேன். தமிழ்நாடு எப்படி முன்னுதாரணமாக மற்ற மாநிலங்களுக்கு உள்ளதோ? அது போல, அரசியல் கட்சி கூட்டங்கள் நடத்த தனியிடம் மேற்கொண்டால் அனைத்திலும் தமிழகம் முன்னுதாரணமாக திகழும்.தமிழக வெற்றிக் கழகம் கூட்டம் நடத்த கோரிய லைட் ஹவுஸ் கார்னர் அமராவதி ஆற்றுப்பாலம் அருகே உள்ளது. அந்த இடத்தில் வழங்கியிருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என கூற முடியாது. இனிவரும் காலங்களில் இது போன்று எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறக்கூடாது.” என்றார்.

கரூர் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரிழப்புகளை தடுத்திருக்க முடியுமே என்று எடப்பாடி பழனிசாமி கூறியதை குறித்து கேட்டதற்கு, ” இது அரசியல் பேசும் நேரம் அல்ல, மனிதாபிமானம் குறித்து பேசும் நேரம். அதிமுக பேசுவது அரசியல். அனைத்து கட்சிகளும் அமர்ந்து இதில் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.” என தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியது குறித்து கேட்டதற்கு,  எவ்வளவு நிதி உதவி கொடுத்தாலும் இழந்த உயிரை மீட்டு தர முடியாது. அவர்களுக்கு நாம் பெற்று தர வேண்டியது நீதி மட்டும் தான்” என்றார்.

தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரின் முன் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன..!

0

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்த போது நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், முன் ஜாமின் கோரி தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தன. நீதிபதி ஜோதிராமன் முன்பு நடைபெற்ற விசாரணையில் மனுதாரர் தரப்பிலும், தமிழக அரசு தரப்பிலும் மாறி மாறி காரசார விவாதங்கள் முன் வைக்கப்பட்டன.

தவெக தரப்பு வாதம்

அப்போது, தவெக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அறிவழகன், “காவல் துறையின் செயல்பாடு ஏற்கக்கூடியதல்ல. பிரச்சாரம் நிகழ்ந்த இடத்தில் ரவுடிகள் உள்ளே புகுந்தனர். நாங்கள் அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றினோம். இருப்பினும் காவல் துறை ஏன் தொண்டர்கள் மீது தடியடி நடத்தியது? இது குறித்து FIR -யில் தவறான தகவல்கள் தரப்பட்டுள்ளன” என்றார்.
தொடர்ந்து அவர், “ஒரு நாளைக்கு முன்பாகவே வேறு இடத்தில் நடத்த அனுமதி கோரி முறையிட வந்தோம். அன்று நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அன்று முறையிட இயலவில்லை. அதனால் வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரத்தை நடத்தும் நிலை வந்தது. அந்த இடத்தில் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கும் போதே காலி ஆம்புலன்ஸ்கள் கூட்டத்திற்கு நடுவே கொண்டு வரப்பட்டன. இதனால் விபத்து ஏற்பட்ட நிலையில், விபத்துகளை விபத்துகளாக பார்க்காமல், பொதுச் செயலாளர் மீது எப்படி வழக்கு பதிவு செய்ய முடியும்” என கேள்வி எழுப்பினார். மேலும், கூட்டத்தை கட்டுப்படுத்துவது அரசின் கடமை என்றும், திமுக நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்கும் போது இது போன்று நடந்தால் முதல்வர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்வீர்களா? எங்கள் கட்சிக்கு ஒரு நியாயம், திமுகவிற்கு ஒரு நியாயமா? எனவும் தவெக சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
மேலும், அப்படியே வழக்குப்பதிவு செய்தாலும் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கேட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது தான் வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டுமே தவிர, மாநில நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்தது ஏன்? எனவும் மனுதாரர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு போலீசார் தரப்பில், வழக்கு விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதால் இவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிடப்பட்டது. தவெகவினர் தங்கள் கடமையை சரியாக செய்யவில்லை எனவும், தங்கள் கட்சித் தலைவர் 12 மணிக்கு வருவார் என இவர்கள் அறிவித்ததே, 41 பேரின் மரணத்தில் இவர்களுக்கு இருக்கும் தொடர்பு என குற்றம்சாட்டப்பட்டது.
அதற்கு நீதிபதி ஜோதிராமன், “மதியம் 3 – 10 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், 41 பேரின் உயிரிழப்புக்கு இதுவரை பொறுப்பான தகவல்கள் வழங்கப்படவில்லை. காவல் துறை இதற்கு என்ன நடவடிக்கை எடுத்தது?” என கேள்வி எழுப்பினார். அதற்கு, ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கப்படாத போதிலும், நடத்தியதாக அரசு தரப்பில் கூறப்பட்டதற்கு, நிகழ்ச்சியை ஏன் ரத்து செய்யவில்லை என நீதிபதி பதில் கேள்வி எழுப்பினார். பிரச்சினை எழக் கூடாது என்று தான் அவ்வாறு செய்யவில்லை என அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, “தங்களது கட்சித் தலைவர் பேசும் போது பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கூடியிருக்க வேண்டும் என எண்ணி கூட்டத்தை அதிகளவில் அக்கட்சியினர் கூட்டி உள்ளனர். விஜய் வருவதற்காக அக்கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் 8 மணி நேரமாக அந்த பகுதியில் காத்திருந்தனர். எனவே இந்த உயிரிழப்புகளுக்கு தவெக தான் காரணம். ஆனால் சம்பவம் நடைபெற்றவுடன் அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். உயிரிழப்புகள் நிகழ்ந்த நிலையில் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அந்த பகுதியில் வந்து பார்க்கவில்லை” என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் கூடியிருந்த தொண்டர்களுக்கு குடிநீர் கூட வழங்கவில்லை எனவும், அதனால் சோர்வு ஏற்பட்டதாகவும் கூறியதோடு, இதுகுறித்து ஆணையம் விசாரணை நடத்தி வருவதால் முன் ஜாமின் வழங்கக் கூடாது எனவும் காவல்துறை சார்பில் வாதிடப்பட்டது. அதற்கு மனுதாரர்கள் தரப்பில், கூட்டத்தில் ஸ்ப்ரே அடிக்கப்பட்டதும், தடியடி நடத்தியதுமே நெரிசலுக்கு காரணம் என்று கூறப்பட்ட நிலையில், இன்று மாலை முன் ஜாமின் குறித்து அறிவிப்பதாக கூறி நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.

இந்நிலையில் இன்று மாலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வாதத்தை ஏற்று புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகிய இருவரின் மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து இருவரும் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தவர்கள் கைது… 936 மது பாட்டில்கள் பறிமுதல்…  கோவை மாவட்ட காவல்துறையினரின் அதிரடி….

0

கோவை மாவட்டத்தில் அனைத்து உட்கோட்ட காவல்துறையினர்களும் மேற்கொண்ட அதிரடி சோதனையில் பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 3 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 32 மது பாட்டில்களை பறிமுதல் செய்தும் , இதேபோன்று
பேரூர் உட்கோட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 4 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 118 மது பாட்டில்கள் மற்றும் 7 லிட்டர் கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தும், இதேபோன்று கருமத்தம்பட்டி உட்கோட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 6 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 110 மது பாட்டில்கள் மற்றும் 11 லிட்டர் கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தும் , இதேபோன்று பொள்ளாச்சி உட்கோட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 3 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 27 மது பாட்டில்கள் மற்றும் சுமார் 2 லிட்டர் கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தும், இதேபோன்று வால்பாறை உட்கோட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 6 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 408 மது பாட்டில்கள் மற்றும் 15 லிட்டர் கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தும் , மேட்டுப்பாளையம் உட்கோட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 8 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 157 மது பாட்டில்கள் மற்றும் 12 லிட்டர் கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தும் , இதேபோன்று மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு பகுதிகளில் சட்டத்திற்கு விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 7 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 84 மது பாட்டில்கள் மற்றும் 30 லிட்டர் கள் என கோவை மாவட்டம் முழுவதும் சட்டத்திற்கு விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 37 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 936 மது பாட்டில்கள் மற்றும் சுமார் 77 லிட்டர் கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, மேற்படி நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 காவலர்கள் கைது

0

திருவண்ணாமலையில் கோயிலுக்கு வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து வாழைத் தார் லோடு ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று நேற்று இரவு (செப்.29) திருவண்ணாமலைக்கு வந்துள்ளது. அப்போது வாகனத்தின் ஓட்டுநர் திருவண்ணாமலைக்கு செல்வதால் தனது அக்கா மற்றும் (அக்கா மகள்) 19 வயதுடைய இளம்பெண் ஆகிய இருவரையும் கோயிலுக்கு செல்ல உடன் அழைத்துக்கொண்டு வந்துள்ளார்.திருவண்ணாமலைக்கு வந்ததும், வாழை மண்டிக்கு செல்வதற்காக புறவழிச்சாலை வழியாக வந்து, வேட்டவலம் ரோடு வழியாக நகருக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். ஏந்தல் புறவழிச்சாலை அருகே இரவு சுமார் 2 மணி அளவில் வந்துள்ளனர். அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தை சேர்ந்த போலீஸார் சுரேஷ்ராஜ் மற்றும் சுந்தர் ஆகிய இருவரும் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்அப்போது வாகனத்தில் டிரைவர் உடன் இரண்டு பெண்கள் இருந்தால் உங்கள் மீது சந்தேகம் உள்ளது என கூறி அவர்களை கீழே இறங்கக்கூறி விசாரித்துள்ளனர். அப்போது, ஓட்டுநர் வாழைத் தார் ஏற்றி வந்ததாகவும், தன்னுடன் எனது உறவினர் கோயிலுக்கு செல்ல வந்துள்ளார்கள் எனக் கூறியுள்ளார். பின்னர், போலீஸார் வாகனத்தை நீங்கள் எடுத்துச் சென்று வாழைத் தார்களை இறக்கிவிட்டு வாருங்கள், நாங்கள் பெண்கள் இருவரையும் கோயிலுக்கு அழைத்துச் சென்று விடுகிறோம் என்று கூறியதாக தெரிகிறது.அதனை ஏற்க மறுத்த ஓட்டுநர் இருவரையும் வண்டியில் ஏற்றிச் செல்வதாகக் கூறியுள்ளார். பின்னர் போலீஸார் ஓட்டுநரை மிரட்டி இளம் பெண் மற்றும் அவரது தாயை தங்களது இரண்டு பைக்கில் அழைத்துச் சென்று ஏந்தல் கிராமம் அருகே ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து இளம் பெண்ணை தாய் கண்முன்னே பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.பின்னர் போலீஸார் இருவரும் இரண்டு பெண்களையும் அழைத்து வந்து புறவழிச்சாலை அருகே இறக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். அதிகாலை சுமார் 4 மணி அளவில் அவ்வழியாகச் சென்றவர்கள் 2 பெண்கள் அழுது கொண்டிருப்பதை கண்டு விசாரித்துள்னனர். பின்னர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்த தகவலறிந்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் சதீஷ் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவம் நடந்த ஏந்தல் பகுதிக்கு சென்று ஆய்வு செய்துள்ளார்.

இதனிடையே, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட போலீஸார் சுரேஷ்ராஜ், சுந்தர் ஆகிய இருவர் மீதும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இருவருமே காவல்துறையைச் சார்ந்தவர்கள் என்பதால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு எடுத்த சீரிய நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு விளக்கம் அளித்துள்ளார்.

0

கரூரில் நேற்று இரவு தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் பலியான சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று நடந்த தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டம், கூட்ட நெரிசல் காரணமாக சோகமாக மாறியது. தவெக பரப்புரையில் விஜய்யை பார்ப்பதற்காக கூடிய கூட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு, கூட்ட நெரிசலால் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.விஜய் பிரச்சார நிகழ்வில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியல், சமூக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில், சம்பவம் எவ்வாறு நடந்தது என்பதை தெளிவுபடுத்தும் வகையில் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு மற்றும் ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தனர்.கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு கூறுகையில், “கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு நடந்தது. கூட்ட நெரிசல் காரணமாக நிகழ்ச்சியில் கூடிய 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 40 பேர் இந்த சம்பவத்தால் இறந்ததும் அனைவருக்கும் துயரத்தை அளித்துள்ள செய்தி.
கூட்ட நெரிசல் குறித்த தகவலறிந்ததும் முதலமைச்சர் உத்தரவுப்படி துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது. 39 பேர் உயிரற்ற சடலங்களாவே மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டனர். இன்று சிகிச்சையில் இருந்த ஒருவரும் உயிரிழந்தார். கரூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தீவிரமாக செயல்பட்டு சிகிச்சை அளித்தனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டு மீட்பு பணி நடந்தது.இறந்தவர்கள் அனைவரின் உடல்களும் கூராய்வு செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டுவிட்டது. கரூரை சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து 114 மருத்துவர்கள், 23 செவிலியர்கள், தடயவியல் நிபுணர்கள் அடங்கிய குழுவினர் விரைந்தனர்.கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் உயிர்காக்கும் சிகிச்சை அளித்தனர். தமிழ்நாடு அரசு எடுத்த சீரிய நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கரூர் வருகை தந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும், அவர்கள் உடன் இருப்பவர்களுக்கும் ஆறுதல் அளித்தனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு யாருக்கேனும் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் அந்த அறையை தொடர்பு கொள்ள இங்கும் கட்டுப்பாட்டு அறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் உடனடியாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தவெகவினர் குறுகலான பகுதிகளில் அனுமதியை கோரினர். 23 ஆம் தேதி அளித்த முதல் மனுவில் தவெகவினர் பெட்ரோல் பங்க் உள்ள ரவுண்டானா பகுதிக்கு அனுமதி கேட்டனர். அனுமதி மறுக்கப்பட்டது தவெகவினரிடம் கலந்து ஆலோசித்த பின்னர்தான் குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்பட்டது. வேலுசாமிபுரத்தில் முன்னதாக வேறு கட்சியினர் கூட்டம் நடந்ததால் அதனை சுட்டிக்காட்டி அப்பகுதியில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.” எனத் தெரிவித்துள்ளார்.

திமுக – பாஜக இடையே கள்ளக் கூட்டணி… விஜய் ஆவேசம்

0

2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, ‘உங்க விஜய் நா வரேன்’ எனும் பெயரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 13 ஆம் தேதி தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அவர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து கடந்த வாரம் சனிக்கிழமை (செப்.20) நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அங்கு பேசிய விஜய், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். குடும்பத்தை வைத்து தமிழ்நாட்டை கொள்ளையடித்து வருகிறார் என்று கூறினார்.

இந்நிலையில், இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தனது பரப்புரையை விஜய் மேற்கொண்டார். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த அவர், அங்கிருந்து கார் மூலம் நாமக்கல் வந்தடைந்தார். இந்நிலையில், நாமக்கல் கே.எஸ்.திரையரங்கம் அருகில் தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழக மக்களுக்கு உணர்ச்சியூட்டும் மண்ணாக நாமக்கல் இருந்து வருகிறது. அந்த மண்ணில் இருந்து பேசுவதை பெருமையாக கருதுகிறேன். நாமக்கல் மாவட்டத்தில் உற்பத்தியாகும் முட்டைகளை சேமிக்க பாதுகாப்பான கிடங்கு ஏற்படுத்த வேண்டும் என்பது இந்த மாவட்ட மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இதை இப்போது ஆளுகின்ற அரசு செய்ததா? திமுக எம்எல்ஏவுக்கு சொந்தமான மருத்துவமனையில் ஏழை எளிய மக்களின் கிட்னி திருடப்படுகிறது. இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தவெக ஆட்சி அமைந்ததும் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.தொடர்ந்து பேசிய தவெக தலைவர் விஜய், “மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தவெக ஆட்சியில் செய்து கொடுப்போம் என்று கூறினால், புதிதாக ஏதாவது கூறுங்கள் என அரசியல் விஞ்ஞானிகள் கேட்கிறார்கள். புதிதாக என்றால் என்ன? வீட்டில் அனைவரும் விமானம் ஓட்ட வைப்போம் என்று கூறலாமா? அல்லது அமெரிக்காவுக்கு ஒத்தையடி பாதை அமைப்போம் என்று கூறலாமா? என்றும் கேள்வி எழுப்பினார். அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக பேசிய விஜய், “மூச்சுக்கு 300 முறை அம்மா, அம்மா என்று கூறுபவர்கள் ஜெயலலிதா மேடம் சொன்னதை எல்லாம் மறந்துவிட்டு, பொருந்தா கூட்டணியை அமைச்சுகிட்டு, தமிழ்நாட்டு நலனுக்காக கூட்டணி என்று மக்களை ஏமாற்றுகிறார்கள். அவர்களை போல தவெக எப்போதும் இருக்காது” என்றார்.
திமுக, பாஜக தொடர்பாக பேசிய அவர், “பாஜக – திமுக இடையே மறைமுக உறவு உள்ளது. திமுகவுக்கு வாக்களிப்பது பாஜகவுக்கு வாக்களிப்பது போன்றதுதான். மோசமான ஆட்சியை தமிழகத்தில் கொடுக்கும் இந்த திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா? இல்லை நம்முடைய தவெக ஆட்சி வேண்டுமா? மக்கள் நீங்கள் தான் அதை சொல்ல வேண்டும். என் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன். வரும் தேர்தலில் நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்” என்றார்.

பயிர் உற்பத்தியில் தமிழ்நாடு தான் முதலிடம்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!

0

பயிர் உற்பத்தித் திறனில் இந்திய அளவில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ‘வேளாண் வணிகத் திருவிழா -2025’-ஐ சென்னை வர்த்தக மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக செயல்பாடுகள் குறித்த கண்காட்சி அரங்குகள் மற்றும் கருத்தரங்கம் இடம்பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வேளாண் விளைபொருட்களை, நேரடியாக சந்தைப்படுத்த இந்த கண்காட்சியும், கருத்தரங்குகளும் விவசாயிகளுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இந்த முன்னெடுப்பு விவசாயிகளுக்கு புதிய சாகுபடி முறைகள் மற்றும் வேளாண் வணிக வாய்ப்புகளை பற்றி தெரிந்து கொள்வதற்கான முக்கிய தளமாக அமைந்திருக்கிறது. இதனால், உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சந்தை வாய்ப்புகள் உருவாகுவதோடு, ஏற்றுமதிக்கான வாய்ப்பு இன்னும் அதிகளவில் ஏற்படும். வேளாண் வணிகம் தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிகளால், விவசாயிகளின் வணிகத்திறன் மேம்படும்.
திமுக அரசு அமைந்த பிறகு, வேளாண்மைத் துறை என்று இருந்த பெயரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என மாற்றி, நம்முடைய அரசின் நோக்கம் என்னவென்று எல்லோருக்கும் அறிவித்தோம். அப்படித்தான், நம்முடைய அரசின் ஒவ்வொரு திட்டங்கள் மூலமாகவும், வேளாண்மையும் அதிகரிக்க வேண்டும்; உழவர்களின் வாழ்க்கைத்தரமும் மேம்படவேண்டும் என்று பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறோம். உழவர்களின் கருத்துக்களை விருப்பத்தை கேட்டு, செயல்படும் அரசாக இருந்து கொண்டிருக்கிறோம்.தமிழ்நாடு முழுவதும் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி, அதனடிப்படையில் திட்டங்களை, வேளாண் நிதிநிலை அறிக்கைகளில் அறிவித்தோம். அதன் பலனாக இப்போது வேளாண்மையில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்து வருகிறது. முன்பெல்லாம், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையை திறப்பதற்கு எப்படி லேட் ஆகும் என்று உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு, மேட்டூர் அணையை குறித்த நாளில் திறந்து கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டு, 5.66 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டைவிட ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 494 ஏக்கர் கூடுதல் நெல் சாகுபடி ஆகும். இதற்கு தேவையான உரங்களை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள். இப்படி, தமிழ்நாட்டில் உழவர்களுக்கோ, வேளாண்மைக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ற முனைப்புடன் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.தமிழ்நாடு முதலிடம், இந்த 4 ஆண்டு கால சாதனைகளையெல்லாம் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், பயிர் உற்பத்தித் திறனில், இந்திய அளவில் தமிழ்நாடு தான் முதலிடம்; மக்காச்சோளம், மொத்த எண்ணெய் வித்துக்கள் மற்றும் கரும்பில் இரண்டாம் இடம்; குறு தானியங்கள் மற்றும் நிலக்கடலையில் மூன்றாம் இடம். இதிலும், நாம் முதலிடம் நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.

திமுகவின் சில சாதனைகள்

கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 130 லட்சம் மெட்ரிக் டன் வேளாண் விளைபொருட்கள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பரிவர்த்தனை செய்யப்பட்டிருக்கிறது. விவசாயிகளின் பொருளீட்டுக் கடனை 3 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தியிருக்கிறோம்.
டெல்டா மாவட்டங்களில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் மெட்ரிக் டன் பருத்தி விற்பனை
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ரூ.5.17 கோடி மதிப்பில் புதிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்
ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் ஏற்றுமதி மையம்
ரூ.285 கோடியில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கட்டமைப்பு வசதிகள், 14 புதிய உழவர் சந்தைகள்
ஏற்கனவே இருந்த 125 உழவர் சந்தைகளில் புனரமைப்பு பணிகள், மாநகராட்சிப் பகுதிகளில் 30 நடமாடும் காய்கனி அங்காடிகள்
நீலகிரியில் சிறுதானியங்கள் பதப்படுத்தும் நிலையம்
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வணிகம் செய்வதற்கு ரூ.73 கோடி நிதியுதவி
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் புதிதாக தொழில் தொடங்குவதற்கு ரூ.53 கோடி மானியம்
விலை வீழ்ச்சி காலங்களில் விவசாயிகளை பாதுகாக்க குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல்
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் மெகா உணவுப் பூங்கா; கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, திண்டுக்கல், தேனி, மதுரையில் சிறிய உணவுப் பூங்கா
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 32 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,720 கோடி இழப்பீட்டு தொகை வேளாண் பணிகள் எவ்விதத் தொய்வுமில்லாமல் நடைபெற, வேளாண்மையில் இயந்திரமயமாக்கல் திட்டம்
வேளாண்மை கல்வியை மேம்படுத்தும் வகையில் நாகப்பட்டினம், சிவகங்கை, கரூர் ஆகிய மாவட்டங்களில் 3 புதிய அரசு வேளாண்மைக் கல்லூரிகள். இதன் தொடர்ச்சியாக, தற்போது வேளாண் வணிகத் திருவிழா சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

விவசாயிகளைத் தொழில் முனைவோர்களாக மாற்றி புதிய ஏற்றுமதியாளர்களாக அவர்களை உருவாக்குவோம். அதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி. இதை உழவர் பெருமக்கள் எல்லோரும் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த வேளாண் வணிகத் திருவிழா விவசாயிகள், கல்லூரி மாணவர்கள், உணவு பதப்படுத்துபவர்கள், வேளாண் ஏற்றுமதியாளர்கள் மற்றும் பொதுமக்கள் எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக நிச்சயமாக இருக்கும். உழவுத் தொழிலுக்கும், வேளாண் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஊக்கமளிக்க வேண்டும்” என உரையாற்றினார்.

டிஐஜி வருண்குமார் வழக்கில் சீமானுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தது சென்னை உயர் நீதிமன்றம்…

0

டிஐஜி வருண்குமாருக்கு எதிராக சீமான் அவதூறு கருத்து தெரிவிக்க இடைக்கால தடையை அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், டிஐஜி வருண்குமார் இடையே அண்மையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டன. இரு தரப்பும் மாறி மாறி கருத்துகளை தெரிவித்தனர். அதிலும் நாம் தமிழர் கட்சியினர், வருண்குமார் ஐபிஎஸ் குடும்பத்தினரையும் அவதூறாக பேசியிருந்தனர். இது தொடர்பாக திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தனக்கு எதிராக பொதுவெளியில் சீமான் ஆதாரம் இல்லாமல் அவதூறு கருத்துகளைத் தெரிவிக்க சீமானுக்கு தடை விதிக்கக் கோரி ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் இரண்டு கோடியே பத்து லட்சம் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், டிஐஜி வருண்குமாருக்கு எதிராக சீமான் பேச இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. மேலும் சீமான் தரப்பு பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படாததால் வழக்கை அடுத்த மாதம் 15-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி தண்டபாணி, அதுவரை வருண்குமாருக்கு எதிராக சீமான் பேச தடையையும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து – தேர்தல் ஆணையம் நடவடிக்கை

0

நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் (தேசிய/மாநில/பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள்(RUPP) மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் பிரிவு 29A இன் விதிகளின் கீழ் இந்திய தேர்தல் ஆணையத்தில் (ECI) பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்ட விதிகளின் கீழ்,அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்ட எந்தவொரு சங்கமும், சின்னம், வரி விலக்குகள் உள்ளிட்ட சில சலுகைகள் மற்றும் சலுகைகளைப் பெறுகிறது. அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களில், ஒரு கட்சி 6 ஆண்டுகள் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடவில்லை என்றால், அக்கட்சி பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலிலிருந்து நீக்கப்படும். 2019ம் ஆண்டு முதல், தொடர்ச்சியாக 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத அத்தியாவசிய நிபந்தனையை நிறைவேற்றத் தவறிய பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை (RUPP) அடையாளம் கண்டு பட்டியலில் இருந்து நீக்கும் நாடு தழுவிய நடவடிக்கையை தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நடவடிக்கையின் முதல் கட்டத்தில், ஆகஸ்ட் 9, 2025 அன்று 334 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் (RUPP) பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டத்தில், 6 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திய தேர்தல்களில் போட்டியிடாததன் அடிப்படையில், செப்டம்பர் 18, 2025ல் 474 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் (RUPP) பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இவ்வாறு, கடந்த 2 மாதங்களில் 808 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் (RUPP) பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகைய மேலும் முன்னெடுக்க, கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் (அதாவது 2021/-22, 2022/-23, 2023/-24) நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தங்கள் வருடாந்திர தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை சமர்ப்பிக்காததற்காகவும், தேர்தல்களில் போட்டியிட்ட போதிலும் தேர்தல் செலவு அறிக்கைகளை தாக்கல் செய்யாததற்காகவும் 359 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் (RUPP) அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை நாடு முழுவதும் உள்ள 23 வெவ்வேறு மாநிலங்கள்மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவை. எந்தவொரு கட்சியும் தேவையற்ற முறையில் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்காக, அந்தந்த மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்களின் முதன்மை செயல் அதிகாரிகள் இந்த பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு (RUPP) நோட்டீஸ் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, சம்பந்தப்பட்ட முதன்மை செயல் அதிகாரிகளால் விசாரணை மூலம் கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.
முதன்மை செயல் அதிகாரிகளின் அறிக்கைகளின் அடிப்படையில் எந்தவொரு பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியையும் (RUPP) பட்டியலில் இருந்து நீக்குவது குறித்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவை எடுக்கிறது என்று தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, எந்தெந்த மாநிலங்களின் எத்தனை கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற எண்ணிக்கையும் வெளியிட்டுள்ளது. அதில் உத்தரப்பிரதேசத்தில் அதிகபட்சமாக 121 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசத்தை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ள மஹாராஷ்டிராவில் 44 கட்சிகளின் அங்கீகாரமும், 3 ஆம் இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் 42 கட்சிகளின் அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நான்காம் இடத்தில் உள்ள டெல்லியில் 40 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல, 359 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை (RUPP) தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. இதுகுறித்த பட்டியல் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கட்சிகள்

தமிழகத்தில் ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சி, தமீமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், எழுச்சி தேசம் கட்சி, கோகுலம் மக்கள் கட்சி பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழர் தேசிய முன்னணி, தமிழ்நாடு மக்கள் உரிமைக் கட்சி, விடுதலை மக்கள் முன்னேற்றக் கழகம், திரிணாமுல் தமிழ்நாடு காங்கிரஸ் உள்ளிட்ட 42 கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

நடிகர் மோகன்லாலுக்கு “தாதாசாகேப் பால்கே விருது”

0

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு, தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.

மலையாளத் திரையுலகின் தவிர்க்கமுடியாத நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகர் மோகன்லால். லாலேட்டா என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் மோகன்லால் தன் அசாத்திய நடிப்பால் ரசிகர்களைக் கட்டிப்போடுபவர். 1978-ம் ஆண்டு திறநோட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அடியெடுத்து வைத்தாலும், 1980-ம் ஆண்டு வெளியான மஞ்சில் விரிஞ்ச பூக்கம் படம் இவருக்கும் பெரும் திருப்புமுனையாக அமைந்ததுசிறந்த நடிகருக்கான 2 விருதுகள் உட்பட 6 தேசிய திரைப்பட விருதுகள், 9 கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், 2001-ம் ஆண்டு மத்திய அரசின் பத்ம ஶ்ரீ, 2019-ல் பதம் பூஷண் விருது என திரையுலகினராலும், மத்திய மாநில அரசுகளாலும் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.
நடிகர், தயாரிப்பாளர், பிண்ணனிப் பாடகர் எனப் பலத் துறையில் தொடர்ந்து இயங்கிவருகிறார். இந்த நிலையில்தான் மோகன்லாலுக்கு, தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறதுஇது தொடர்பாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தாதாசாகேப் பால்கே விருது தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில், இந்திய அரசு மோகன்லாலுக்கு 2023-ம் ஆண்டுக்கான மதிப்புமிக்க தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.

மோகன்லாலின் குறிப்பிடத்தக்க சினிமா பயணம் பல தலைமுறைகளை ஊக்குவிக்கிறது!
புகழ்பெற்ற நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக கௌரவிக்கப்படுகிறார்.
அவரது ஒப்பிடமுடியாத திறமை, பல்துறை திறன் மற்றும் இடைவிடாத கடின உழைப்பு இந்திய திரைப்பட வரலாற்றில் உயரிய தரத்தை அமைத்துள்ளன. இந்த விருது செப்டம்பர் 23, 2025 அன்று நடைபெறும் 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டிருக்கிறது.