Monday, September 21, 2026
Home Blog Page 40

கர்நாடகாவிற்கு நாளை லாரிகளை இயக்க வேண்டாம்..

0

கர்நாடகாவிற்கு நாளை லாரிகளை இயக்க வேண்டாம் ,தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவுறுத்தல்

காவிரி பிரச்னை தொடர்பாக கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ள நிலையில் உத்தரவு.

வடமாநிலங்களுக்குச் சென்று திரும்பும் லாரிகளை பாதுகாப்பாக நிறுத்திவைக்க வேண்டும்

தமிழ்நாடு லாரி மற்றும் லாரி ஓட்டுநர்களுக்கு கர்நாடக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை..

கல்லூரி மாணவி கொடூர கொலை… காதல் கணவன் வெறிச்செயல்… வெளியான பகீர் தகவல்…

0

Murder | சேலத்தில் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் மனைவியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி அருகே உள்ள ஜோடுகுளி பகுதியை சேர்ந்த சிலர் ஆடு மேய்ப்பதற்காக வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு எரிந்த நிலையில் இளம் பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தின் அருகே கிடந்த உடைகள், செருப்பு, தாலிக்கொடி ஆகியவற்றை வைத்து விசாரணையை தொடங்கினர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்ட இளம் பெண் ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த கோகிலவாணி (வயது 20) என்பதும் அரியலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் பாராமெடிக்கல் நான்காவது ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூர் எலக்ட்ரானிக்ஸ் சிட்டியை சேர்ந்த பொறியாளர் முரளி கிருஷ்ணா (வயது 24) என்பவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் முரளி கிருஷ்ணாவின் தாயும் கோகிலவாணியின் சித்தியும் பெங்களூருவில் ஒரே இடத்தில் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது கோகிலவனிக்கும் முரளி கிருஷ்ணாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்துக்கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அவ்வப்போது முரளி கிருஷ்ணா பெங்களூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் சேலத்துக்கு வந்து கோகிலவாணியை பார்த்துச் சென்றுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் டிரோன்கள் கண்காட்சி… வித விதமான டிரோன்களை கண்டு வியந்த பொதுமக்கள்…

0

Drone Exhibition | உத்தரபிரதேச டிரோன்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட டிரோன்களை கண்டு பொதுமக்கள் வியப்படைந்தனர்.

இந்தியாவிலேயே தயாரான டிரோன்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பாரத் டிரோன் சக்தி 2023 என்ற பெயரில் உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்தில் டிரோன்கள் கண்காட்சியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை தொடங்கிவைத்தார். ஹிண்டன் விமானப்படை தளத்தில் நடைபெற்று வரும் இந்தக் கண்காட்சியில் வகை வகையான டிரோன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. குறிப்பாக, விவசாயத் துறை, மருத்துவப் பயன்பாடு, நில அளவை உள்ளிட்ட துறைகளுக்கான டிரோன்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என தீர்மானம்?…

0

கூட்டணியில் பாஜக இல்லை என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பு. புதிய கட்சிகளை இணைத்து கூட்டணி உருவாக்கவும் அதிமுக திட்டம்…

மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா குறித்த அண்ணாமலையின் கருத்து அதிமுகவில் புயலை கிளப்பியதால், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அறிவித்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். ஆனால், அதிமுகவுடன் எந்த பிரச்னையும் இல்லை என்ற அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க தாம் வரவில்லை எனவும் கருத்து தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக அதிமுக மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர், டெல்லியில் பாஜக தலைவர் நட்டாவை சந்தித்து அண்ணாமலை மீது புகாரளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கு அக்கட்சி அவசர அழைப்பு விடுத்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை சென்னையில் கூட்டம் நடைபெற உள்ளது.

வணங்கான் பர்ஸ்ட் லுக் வெளியானது..

0

நடிகர் அருண் விஜய் பாலா இயக்கத்தில் வணங்கான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இன்று அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது ..

நான் புலி, பூனை சண்டைக்கு கூப்பிட்டால் போகுமா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்..

0

கோவை சித்ரா பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு 65அடி உயர தீரன்சின்னமலை நினைவு கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய சீமான். நாம் தமிழர் கட்சியின் கொடிக்கு வரலாறு இருக்கின்றது. பிற கொடிகளுக்கு என்ன வரலாறு இருக்கிறது? மக்களவைத் தேர்தலுக்கு தயாராக இருப்பது நாங்கள் தான். மற்றவர்கள் தான் கூட்டணியை முடிவு செய்ய வேண்டும். யார் யாருக்கு எவ்வளவு சீட், யாருடன் கூட்டணி பிறர்தான் முடிவு செய்ய வேண்டும். நாங்கள் நான்கு மாதங்களுக்கு முன்பே தேர்தல் பயணத்தை துவங்கி விட்டோம். என்னுடைய கனவு இந்திய பாராளுமன்றத்தில் செல்ல வேண்டும் என்பது கிடையாது. என்னுடைய தம்பி தங்கைகள் அனுப்புவேன். தமிழ் தேசியத்தில் உரிமை என்ற கனவு தான் என்னுடைய கனவு. மக்களவை தேர்தலில்  நான் போட்டியிடவில்லை. மோடி இங்கு போட்டியிட்டால், ராகுல் காந்திக்கு போட்டியிட்டால்  அவர்களை எதிர்த்து போட்டியிடுவேன். ஏன் அவர்களை எதிர்க்கிறேன் என்பதை சொல்ல வேண்டும் அல்லவா. விஜயலட்சுமி, வீரலட்சுமி விவகாரம் குறித்த கேள்விக்கு, எனக்கு அனைவரும் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் வாயை மூடிக்கொண்டு இருக்க சொல்லி இருக்கின்றனர்.
நான் புலி, பூனை சண்டைக்கு கூப்பிட்டால் போகுமா? தேவையில்லாதது. என்னை எதிர்த்து பேசுவது அவர்களுக்கு ஒரு அடையாளம். என்னை எதிர்க்க வேண்டிய தேவை உங்களுக்கு இருக்கிறது. உங்களை எதிர்க்க, விமர்சிக்க வேண்டிய தேவை எனக்கு இருக்கிறதா? என்னை எதிர்ப்பவர்கள் எல்லாம் எதிரி கிடையாது. நான் யாரை எதிர்க்ககின்றேனோ  அவர்கள் தான் எதிரி.  என் எதிரியார் ? என் இலக்கு,  என் பயணம், எவ்வளவு தூரம் என்பது எனக்குத் தெரியும். என்னோடு   ஒப்பிட்டுப் பேசுவது எனக்கும் சிறுமை, உங்களுக்கும் சிறுமை, நான் செய்யும் வேலைக்கும் சிறுமை.இதை விட்டு விடுங்கள் இந்தியா கூட்டணியில் நாங்கள் இல்லை. தேச நலன் என வரும் பொழுது சில விஷயங்களை விட்டுக் கொடுக்க வேண்டும்.  மேற்கு வங்கத்தில் காங்கிரசும் கம்யூனிஸ்ட் மம்தாவை எதிர்பார்ப்பார்கள். கேரளாவில் கம்யூனிஸ்டும் காங்கிரஸும் மாறி மாறி  வாக்கு செலுத்துவார்களா? மாநிலத்திற்கு ஒரு கொள்கை முடிவு எடுப்பது எப்படி சரியாக இருக்கும். பேரறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசிய  விவகாரத்தில் அண்ணா துவங்கிய கட்சி எதிர்வினையாற்ற வில்லை.  அண்ணாவை கொடியில் மட்டும் வைத்திருக்கும்  அதிமுக, அது குறித்து எதிர்விணையாற்றி இருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி முறிந்தாலும்  பரவாயில்லை என குரல் கொடுத்து இருக்கின்றது. இதில் அதிமுகவின் செயல்பாடு பாராட்டுக்குரியது. திமுகவின் ஆர் எஸ் பாரதி எதிர்வினையாற்றி இருக்கிறார். இதில் முதல்வரின் கருத்து என்ன ? உதயநிதி , கருணாநிதி ஆகியோரை விமர்சித்து இருந்தால் பொங்கி எழுந்திருப்பார்கள். அண்ணா என்பதால் கண்டு கொல்லவில்லை. எடப்பாடி பழனிச்சாமி பேசவில்லை என்றாலும் அவரது கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், செய்தி தொடர்பாளர்கள் பேசியிருக்கின்றனர். இரண்டாம் கட்ட தலைவர் அனைவரும் பேசுகிறார்கள். மன்னன் எப்பொழுதுமே தளபதிகளை சண்டைக்கு அனுப்புவார். தோற்கும் பொழுது தான் அவர் களத்திற்கு வருவார். தளபதிகளை எடப்பாடியார் களத்திற்கு அனுப்பி இருக்கின்றார் என தெரிவித்தார்.

பெரம்பூர் மேற்கு பகுதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில்
43வது வாரமாக விலையில்லா ரொட்டி பால் முட்டை திட்டம்…

0

நடிகர் விஜய் அவர்களின் உத்தரவின்படி அகில இந்திய பொதுசெயலாளர் Bussy N.ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி சென்னை வடக்கு மாவட்டம் பெரம்பூர் மேற்கு பகுதி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 43வது வாரமாக விலையில்லா ரொட்டி பால் முட்டை வழங்கப்பட்டுள்ளது…

ரொட்டி பால் முட்டை திட்டம்…

*பெரம்பூர் மேற்கு பகுதி நிர்வாகிகள்
*36 வது வட்டநிர்வாகிகள் மற்றும்
*கிளை மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்…

கோப்பையை உறுதி செய்யுமா இந்தியா? – இன்று ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை!

0

One Day Cricket Match | ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா விளையாடுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா இன்று பலப்பரீட்சை நடத்த இருக்கிறது.

ஏற்கனவே கடந்த 22ஆம் தேதி பஞ்சாபில் நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பகல் 1.30மணிக்கு இரண்டாவது ஒருநாள் போட்டி தொடங்க இருக்கிறது.

ஆண்டுக்கு 4 முறை மின் கட்டண சலுகை… அதிரடி மாற்றத்தை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

0

ஆண்டுக்கு 4 முறை எவ்வித கட்டணமும் இன்றி தங்களது நிலைக் கட்டணத்தை மாற்றியமைத்துக் கொள்ளலாம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிறு, குறு தொழில்துறை மின்சார நிலைக் கட்டண முறைகளை மாற்றி அமைத்திட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், நூற்பாலைகளின் கோரிக்கைகளை ஏற்று, மின்சார நிலைக் கட்டணம் உள்ளிட்ட குறிப்பிட்ட கட்டண முறைகளை மாற்றி அமைத்திடுவது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பீக் ஹவர் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், மின்சார நிலை கட்டண உயர்வுகளை திரும்பப்பெற வேண்டும், ஆண்டுதோறும் 6 சதவீதம் மின் கட்டண உயர்வு நடைமுறையை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், முதலமைச்சர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (செப்.24) திருப்பூர் மாவட்டம் செல்ல உள்ள நிலையில், மின் கட்டணம் தொடர்பான இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

போலி ரேஷன் கார்டு தயாரித்த நபரை கைது.

0

கோவை மாவட்டம் அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் தேவராஜன் மகள் செல்வி (48) என்பவர் தமிழ் மக்கள் சேவை மையத்தில் அரசால் வழங்கக்கூடிய அசல் மின்னணு குடும்ப அட்டையினை போன்றே மின்னணு குடும்ப அட்டை தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்குவதாக அளித்த புகாரின் அடிப்படையில், அன்னூர் காவல் துறையினர் போலியாக குடும்ப அட்டைகளை தயார் செய்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அல்போன்ஸ் மகன் அமுல் ஆண்ட்ரூஸ்(28)என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து லேப்டாப்-1, பிரிண்டர்-1, அச்சிடப்பட்ட போலி ரேஷன் கார்டு-140 மற்றும் அச்சிடப்படாத போலி ரேஷன் கார்டு சுமார் 800-யை பறிமுதல் செய்து மேற்படி நபரை  நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.