Monday, September 21, 2026
Home Blog Page 39

காலாண்டு விடுமுறை… தனியார் பள்ளிகள் புதிய அறிவிப்பு…

0

அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் காலாண்டுத் தேர்வுகள் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது…

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின்கிழ் இயங்கும் அனைத்து தனியார் பள்ளிகளும் காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 3ஆம் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் காலாண்டு தேர்வு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. 2 வாரங்கள் நடந்த தேர்வு இன்றுடன் (27.09.2023) நிறைவடைந்தது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 8ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டது. பள்ளிக் கல்வி இயக்குநரின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன் அதிரடி…

0

பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த கவியரசு மற்றும் வடவள்ளி பகுதியை சேர்ந்த சிவராமகிருஷ்ணன் என்பவர்கள் பகுதி நேர வேலைக்காக ஆன்லைன் மூலம் பார்த்த போது அந்நிய நபரிடமிருந்து வாட்ஸ்-அப்-ல் (WhatsApp) வந்த குறுஞ்செய்தியை நம்பி அதன் மூலம் கிடைக்கப்பெற்ற Telegram ID link-னுள் சென்ற பொழுது சிறிய Task-கள் செய்து கொடுத்து அதன் மூலம் சிறுதொகை முதலீடாக பெற்றுள்ளனர். பின்னர் இதனை உண்மை என நம்பியவர்கள் மேலும் முதலீடு செய்து Task-யில் செல்வதற்காக பல பரிவர்த்தனைகள் மூலம் கவியரசு ரூ.3,74,400/- பணமும், சிவராம கிருஷ்ணன் ரூ.10,65,968/- பணமும், செலுத்தி அதிக வருமானம் பெறலாம் என்று நம்பி பணம் செலுத்தியுள்ளனர். பின்னர் தாங்கள் தவறான வழிகாட்டுதலில் சென்று மோசடி அடைந்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கவியரசு மற்றும் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, முறையான நடவடிக்கை மேற்கொண்டு, சம்பந்தபட்ட நபர்களது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டும், கவியரசு என்பவரது மொத்தத் தொகையான ரூ.3,74,400/- மீட்கப்பட்டது. அதேபோல் சிவராம கிருஷ்ணன் என்பவரது பணம் ரூ.5,63,118/- மீட்கப்பட்டது. மேலும் மீதமுள்ள பணத்திற்கு வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டும், நீதிமன்ற உத்தரவு பெற்று உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட உள்ளது.

மேற்படி மீட்கப்பட்ட ரூ.9,37,518/- பணத்திற்கான காசோலைகளை இன்று (27.09.2023) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இருவரிடமும் வழங்கினார். பணத்தை திரும்ப பெற்ற இருவரும் காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

மேலும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்கள் ஆன்லைனில் குறைந்த பணத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என செய்திகளில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், இணையதளத்தில் உங்களது பணத்தை இழந்து விட்டால் 1930 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளவும் என்றும் சைபர் கிரைம் புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்தால் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் உங்களை தொடர்பு கொண்டு நீங்கள் இழந்த பணத்தை மீட்டுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தியுள்ளார்.

கோவை மாவட்டத்தில் மாபெரும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்…

0

மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை (Re-enquiry) இன்று (27.09.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. மேற்படி மக்கள் குறை தீர்ப்பு முகாமினை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திருமதி. பவானீஸ்வரி, இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு மனுதாரர்களை விசாரித்தார்.

மேலும் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான விசரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் அதிகாரிகள் மேற்கொண்டு, அம்மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் குடும்பப் பிரச்சனை, பணப்பரிமாற்ற பிரச்சனை மற்றும் இடப்பிரச்சினை தொடர்பான 84 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டதில், 2 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்யப்பட்டும், 72 மனுக்கள் மீது சுமூகமான முறையிலும் தீர்வு காணப்பட்டது.

197.500 கிலோ எடையுள்ள புகையிலை பொருள்கள் பறிமுதல்…

0

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (26.09.2023) கே.ஜி.சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எட்டிமடை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை மளிகை கடைக்கு பின்புறம் உள்ள பகுதியில் விற்பனைக்கு வைத்திருந்த எட்டிமடை பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் அருள்ராஜ்(40) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.1,50,000/- மதிப்புள்ள 197.500 கிலோகிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2023 முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 404 நபர்கள் மீது 391 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 3151.818 கிலோகிராம் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

0

TN Rain Update | தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது…

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது…

மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது…

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.வரும் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது…

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பாக மனு..

0

கோயமுத்தூர் மாவட்டத்தில் 143 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம் விவசாய உள்கட்டமைப்பு நிதி (MSC / AIF) திட்டத்தின் கீழ் பொருட்கள் வாங்க விருப்பம் உள்ள சங்கங்களில் மட்டுமே அமுல்படுத்த வேண்டும் என கூட்டுறவுதுறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது ,ஆனால் தற்போது நலிவடைந்த மற்றும் தொடர்ந்து நட்டத்தில் இயங்கும் சங்கங்களுக்கு விவசாய உபகரணங்கள் மற்றும் லாரி, டெம்போ போன்ற வாகனங்கள் வாங்குமாறு நிர்பந்திக்கப்படுகிறது ,இதனால் சங்கங்கள் மேலும் நட்டத்திற்கு உள்ளாகி நிதி நிலை பெரிதும் பாதிக்கப்படும் என்பதால் பொருட்களை வாங்க கட்டாயப்படுத்துவதினை கைவிடக்கோரி மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்பியா சங்கத்தை சேர்ந்த கோவை மாவட்ட செயலாளர் பால்ராஜ் தலைமையில் ,கோவை மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் முன்னிலையிலும் கோவை மண்டல இணைபதிவாளர் அவர்களுக்கு மனு அளித்தனர் ,

மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட இணை பதிவாளர்களுக்கும் கோரிக்கை மனு டாக்பியா தொழிற்சங்கம் மூலம் தரப்பட்டுள்ளது ,இதில் டாக்பியா மாவட்ட பொருளாளர் துரைசாமி,மேற்கு மண்டல தலைவர் ரமணி,மற்றும் கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கடன் சங்கப் பணியாளர்கள் சுமார் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்,
மேற்கண்ட கோரிக்கை பரிசிலித்து நிறைவேற்றவில்லை என்றால் வருகின்ற 03/10/2023-ம் தேதியன்று ஏற்கனவே வாங்கியுள்ள உபகரணங்களை ஒப்படைத்துவிட்டு அனைத்துப் பணியாளர்களும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவித்தனர் .

I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெற வேண்டும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

0

I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார்கள்; அதிமுக-பாஜக கூட்டணி முறிவு அரசியல் நாடகம். வாக்குறுதி அளித்தபடி ரூ.1000 கொடுத்தோம். பிரதமர் வாக்குறுதி அளித்த ரூ.15 லட்சம் எங்கே? என்று தருமபுரியில் நடந்த திமுக இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டு உள்ளார்..

அண்ணாமலை கூறிய ஒற்றை வரியில் பதில்.

0

இன்று சென்னையில் நடைபெற்ற எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக இன்று முதல் பாரதிய ஜனதா கட்சியிலிருந்தும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கோவையில் இன்று நடைபெற்று வரும் என் மண் என் மக்கள் நடைபயணத்தில் அதிமுக பாஜக கூட்டணி முறிவு குறித்தான கேள்விக்கு பதில் அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,
இது குறித்து ஒற்றை வரிகள் பதில் அளிக்க வேண்டும் என்றால் நம்முடைய தேசிய தலைமை இது குறித்து பேசுவார்கள். ஏனென்றால் பாஜக ஒரு அகில இந்திய கட்சி தேசிய தலைவர்கள் உள்ளார்கள் அவர்களுடைய கவனத்திற்கு தற்பொழுது இது சென்றுள்ளது. எனவே அவர்கள் பேசுவார்கள் என தெரிவித்தார்.

தேசிய தலைமை கூறும் வரை எந்த கருத்தையும் வெளியிட மாட்டோம் – வானதி சீனிவாசன்…

0

இன்று சென்னையில் நடைபெற்ற எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக இன்று முதல் பாரதிய ஜனதா கட்சியிலிருந்தும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த விவகாரம் குறித்து கட்சியின் தேசிய தலைமை அறிவிக்கும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், இது குறித்து ஏற்கனவே பாஜக மாநில தலைவர் தெரிவித்திருக்கிறார். இது குறித்து தேசிய தலைமை அறிவிக்கின்ற வரை நாங்கள் கருத்தையும் வெளியிடுவதாக இல்லை. இது குறித்து தேசிய தலைமை தகுந்த நேரத்தில் எங்களுக்கு அறிவுறுத்தல் தருவார்கள் அப்போது எங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கிறோம். அதிமுக வினர் கூறிய கருத்துக்களும் அவர்களுடைய முடிவுகள் பற்றியும் கருத்து சொல்வதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்தார்.

விற்பனைக்காக குட்கா எடுத்து சென்ற மூவர் கைது

0

திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மனகுப்பம் அருகே உள்ள திருமண மண்டபத்திற்கு எதிரே ஆய்வாளர் திரு.செல்வராஜ் உதவியாளர் திரு.மணிகண்டன் மற்றும் காவலர்கள் தலைமையில் வாகனத் தணிக்கையில் இருந்தபோது

அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டறிந்து

காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் பொறக்கன்தாங்கள் பிள்ளையார் கோவில் தெரு, செல்வம் என்பவரின் மகன் கிரண் குமார் வயது 22 மற்றும் திருக்கோவிலூர் தாலுகா எம்.குன்னத்தூர் பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் செல்வம் வயது 47, கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் யுவராஜ் வயது 36 ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனம் மற்றும் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான 168 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், cool lip, vimal, tobbaco போன்றவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.