Monday, September 21, 2026
Home Blog Page 41

மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் என்பது பிரதமர் மோடி அரசின் வரலாற்று சாதனை – வானதி சீனிவாசன்

0

பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா, நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் மட்டும், அசாதுதின் ஓவைசி தலைமையிலான, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சிடயின் இரண்டு எம்.பி.க்கள் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை எதிர்த்து வாக்களித்தனர்.

இது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் மற்றுமொரு மகத்தான சாதனை. வரலாற்று சீர்திருத்தம் என்றே குறிப்பிட வேண்டும். ஏனெனில் இப்படி அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன், ஒருமனதாக மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்ற முடியும் என்பதை யாரும் கற்பனையில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.

அந்த அளவுக்கு மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற விடாமல் சில அரசியல் கட்சிகள் தடங்கல்களை ஏற்படுத்திக் கொண்டே இருந்தன. அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து, அரசியலில் மகளிருக்கு உரிமை என்ற அதி முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்த நடவடிக்கையை சாத்தியமாக்கியுள்ளார்.

இதனால், மக்கள் தொகையில் சரி பாதியாக உள்ள மகளிரின் மனங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார் பாரதப் பிரதமர் மோடி. இதை பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், 2029-ம் ஆண்டில்தான் மகளிர் இட ஒதுக்கீடு அமலாகும் என்பதை குறைகூறி பேசி வருகின்றனர்.

கொரோனா பேரிடர் காரணமாக 2021-ல் வழக்கமாக நடந்திருக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கவில்லை. நீண்ட காலமாக மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படவில்லை. எனவே, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, தொகுதி மறுவரையறை மேற்கொள்ளும் மகளிருக்கான தொகுதிகளை இறுதி செய்வதே பொருத்தமானதாக இருக்கும் என்பதால், 2029-ல் மகளிர் இட ஒதுக்கீடு அமலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு செயலையும் சரியான தருணத்தில் செய்தால் அது முழு பலனையும் கொடுக்கும். தேர்தல் ஆதாயத்திற்காக அவசர அவசரமாக செய்தால் மகளிருக்கு முழுமையான பலன்கள் கிடைக்காது என்பதால்தான், மகளிர் இட ஒதுக்கீட்டில் ஒவ்வொரு அடியையையும் பிரதமர் மோடி அரசு கவனமாக எடுத்து வைத்து வருகிறது.

ஏனெனில் 1996ல் தேவகவுடா பிரதமராக இருந்தபோதும், 1999, 2002, 2003ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டும் நிறைவேற்ற முடியவில்லை. 2010ல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, மாநிலங்களவையில் மட்டும் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற முடிந்தது. பாஜக ஆதரவளித்ததால் இது சாத்தியமானது. இப்போது இண்டி கூட்டணியில் உள்ள லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது இந்திய வரலாற்றில் சுதந்திர நாள், குடியரசு நாள் போல மிகமிக முக்கியமானது. ஏனெனில் மகளிருக்கு அரசியல் அதிகாரம் கிடைக்க, இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை, விடுதலைக்கு முன்பிருந்தே எழுந்தது. 1931-ல் சரோஜினி நாயுடு போன்ற பெண் தலைவர்கள், பெண்களுக்கு அரசியல் இட ஒதுக்கீடு வேண்டும் என்பதை வலியுறுத்தி அன்றைய இங்கிலாந்து பிரதமருக்கு கடிதம் எழுதினர்.

1950-ல் நமது அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. அப்போது அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதத்தில் மகளிருக்கான இடஒதுக்கீடு பிரச்சினையும் வந்தது. ஆனால், இது பற்றிய விவாதம் தேவையற்றது என்று தவிர்க்கப்பட்டது. விடுதலைக்கு பிந்தைய கடந்த 76 ஆண்டுகளில் மகளிர் இட ஒதுக்கீடு பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், பிரதமர் மோடி தான் அதனை சாத்தியமாக்கியிருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தின்படி. நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கான தொகுதிகள் சுழற்சி முறையில் முடிவு செய்யப்படும். மூன்று பொதுத் தேர்தல்களுக்கு ஒருமுறை பெண்களுக்கான தொகுதிகள் மாற்றியமைக்கப்படும்.

1952ல் அமைந்த முதல் மக்களவையில் 24 பெண் எம்பிக்கள் மட்டுமே இருந்தனர். தற்போது 17-வது மக்களவையில் 14 சதவீதம் அதாவது 78 பெண் எம்பிக்கள் உள்ளனர். மாநிலங்களவையில் 5 சதவீதம் அதாவது 11 பெண் எம்பிக்கள் உள்ளனர். மக்களவையில் பெண் எம்பிக்களின் எண்ணிக்கை 14 சதவீதத்திற்கு மேல் சென்றதில்லை.

மோடி அரசின் மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வந்தால், மக்களவையில் 179 பெண்களும், மாநிலங்களவையில் 81 பெண்களும் எம்பிக்களாக இருப்பார்கள். தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் அதற்கேற்ப பெண் எம்பிக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

இப்படி பெண் எம்பிக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, ஆண்களுக்கு நிகராக உள்ள பெண்களுக்கான திட்டங்களை அவர்களே கொண்டு வர முடியும். பெண்களுக்கான திட்டங்களை செயல்படுத்த அரசை வலியுறுத்த முடியும். அதாவது இதுவரை வாங்கும் இடத்தில் இருந்த பெண்கள், தங்களுக்கு தேவையான தாங்களே எடுத்துக் கொள்ளும் இடத்திற்கும், ஆண்களுக்கும் கொடுக்கும் இடத்திற்கு அதாவது அரசியல் அதிகாரத்தைப் பெறப் போகிறார்கள்.

பாஜகவைப் பொறுத்தவரை பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் எப்போதும் முன்னணியில் உள்ளது. ராஜமாதா விஜயராஜே சிந்தியா, சுஷ்மா ஸ்வராஜ், உமாபாரதி போன்ற முக்கிய தலைவர்கள் பாஜகவை வழிநடத்தியுள்ளனர். இப்போதும் 140 கோடி மக்களுக்கான நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் இருந்து வருகிறார். நாட்டின் குடியரசுத் தலைவராக பழங்குடியினத்தைச் சேர்ந்த திருமதி திரவுபதி முர்முவை பாஜக கொண்டு வந்துள்ளது.

இட ஒதுக்கீடு இல்லாதபோதும் மற்ற கட்சிகளை காட்டிலும் அதிக அளவு பெண்களுக்கு பாஜக வாய்ப்பளித்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு பாஜக கட்சி நிர்வாகிகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் பாஜகவில் முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்திற்கு பெண்கள் வர முடிந்தது. மக்கள் தொகையில் சரி பாதியாக உள்ள பெண்கள், ஆண்களுக்கு நிகராக முன்னேறினால்தான் அது முழுமையான வளர்ச்சி என்பதுதான் பாஜகவின் கொள்கை. அதுதான் இப்போது மகளிர் இட ஒதுக்கீடு சட்டமாக நிறைவேற்றியுள்ளது.

இதற்காக பிரதமர் மோடிக்கு பாஜக மகளிரணி தேசியத் தலைவர் என்ற முறையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

சென்னை கார் டிரைவர் வங்கி கணக்கில் திடீரென வந்த ரூ.9000 கோடி..! அரை மணிநேரத்தில் புஸ்……

0

Tamilnadu Mercantile bank – 9000 crore deposit | தவறுதலாக டாக்சி கார் டிரைவர் வங்கி கணக்கில் விழுந்த ரூ.9,000 கோடியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த டிரைவர் ராஜ்குமார் என்பவரது வங்கிக் கணக்கில் 9000 கோடி ரூபாய் டெபாசிட் ஆன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழனி நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சென்னை கோடம்பாக்கத்தில் நண்பர் அறையில் தங்கி வாடகை கார் ஓட்டி வருகிறார். கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி மாலை 3 மணி அளவில் காரில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் ராஜ்குமாரின் வங்கிக் கணக்கிற்கு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் இருந்து ரூ.9,000 கோடி டெபாசிட் ஆனதாக குறுஞ்செய்தியில் போடப்பட்டது. முதற்கட்டமாக ராஜ்குமார் அதில் எத்தனை பூஜ்ஜியங்கள் உள்ளது என்பதை எண்ணவே முடியாமல் எவ்வளவு பணம் வந்துள்ளது என குழம்பி இருந்தார்.

அதன் பின் தனது வங்கிக் கணக்கில் வெறும் 15 ரூபாய் இருக்கும் நிலையில் யாரோ தன்னை ஏமாற்ற முயல்கிறார்கள் என நினைத்துள்ளார். இதனை எடுத்து தனது வங்கிக் கணக்கில் இருந்து நண்பருக்கு 21,000 பணம் அனுப்பிய பிறகு 9 ஆயிரம் கோடி ரூபாய் பணம் தன் வங்கிக் கணக்கிற்கு வந்ததை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேருக்கு வயிற்றுப்போக்கு.. மருத்துவமனையில் சிகிச்சை..!

0

Chicken Rice | கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வட மாநில தொழிலாளர்கள் 26 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்…

கிருஷ்ணகிரியில் பாஸ்ட்புட் கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில் டெல்டா என்கின்ற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 2000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதனடையே நேற்று நிறுவனத்தில் வேலை செய்யும் வட மாநில இளைஞர்கள் சுமார் 200 பேர் கிருஷ்ணகிரி கே தியேட்டர் சாலையில் இயங்கி வரும் சக்தி ஃபாஸ்ட் ஃபுட் கடையில் சிக்கன் ரைஸ் வாங்கி வந்து சாப்பிட்டுள்ளனர்.

சாப்பிட்ட சிறிது நேரத்தில் திடீரென்று ஒருவர் பின் ஒருவராக 26 பேருக்கும் வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக இவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அட்லீ மீது செம அப்செட்டில் நயன்தாரா? பின்னணி காரணம் இதுதானாம்..!

0

நீண்ட இடைவேளைக்கு பின்னர் அதிரடியான படத்தை பார்த்த உற்சாகத்தில் இந்தி திரைப்பட ரசிகர்கள் ஜவானை கொண்டாடி வருகின்றனர்…

இயக்குனர் அட்லி மீது நடிகை நயன்தாரா கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஜவான் பட ஆடியோ வெளியீட்டு விழா, வெற்றி விழா எதிலுமே நயன்தாரா பங்கேற்கவில்லை. இதன் பின்னணி காரணம் குறித்து சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் நயன்தாரா இந்தி சினிமாவில் ஜவான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜவான் படத்தில் விஜய் கேமியோ ரோல் பண்ணியதாக முன்பு தகவல்கள் வெளிவந்தன. இருப்பினும் விஜய் இந்த படத்தில் இடம்பெறவில்லை.

தற்போது ஜவான் திரைப்படம் ரூ. 900 கோடி வசூலை தாண்டி ரூ. 1000 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நீண்ட இடைவேளைக்கு பின்னர் அதிரடியான படத்தை பார்த்த உற்சாகத்தில் இந்தி திரைப்பட ரசிகர்கள் ஜவானை கொண்டாடி வருகின்றனர். இன்னும் சில நாட்களில் ஜவான் திரைப்படம் ரூ. 1000 கோடி வசூலை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜவான் படத்தில் நயன்தாரா தொடர்பான பல காட்சிகளை இயக்குனர் அட்லி எடிட்டிங்கின்போது நீக்கிவிட்டதாக தகவல்கள் பரவியுள்ளன.

₹90,00,00,00,000 பணம் இப்படிதான் வந்தது… தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி விளக்கம்…

0

கார் டிரைவர் வங்கி கணக்கில் ரூ.9000 கோடி பற்று வைத்ததால் வங்கிக்கு இழப்பு ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது…

டிரைவர் வங்கி கணக்கில் விழுந்த ரூ.9000 கோடி பணம் இந்த செய்திதான் சோஷியல் மீடியாக்களில் தீயாய் பரவி வருகிறது. ராஜ்குமார் என்ற கார் டிரைவரின் அக்கவுண்டில் தான் இந்த 9000 கோடி விழுந்துள்ளது. பழனியை சேர்ந்த ராஜ்குமார் பிழைப்புக்காக சென்னைக்கு வந்து நண்பன் அறையில் தங்கி வாடகை கார் ஓட்டி வருகிறார். இவர் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் அக்கவுண்ட் வைத்துள்ளார். செப்டம்பர் 9-ம் தேதி மாலை 3 மணிக்கு இவரது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. ரூ.9000 கோடி உங்க வங்கி கணக்கில் டெபாசிட் ஆகியுள்ளது என வந்துள்ளது. அக்கவுண்டில் வந்திருப்பது 9,000 கோடியா என்பதை அறிவதே முதலில் அவருக்கு பெரும் சவாலாக இருந்துள்ளது.

நம்ம அக்கவுண்டில் ரூ.15 தான் இருக்கும் நமக்கு யார் இத்தனை கோடி போடப்போறாங்க. யாரோ நம்மை ஏமாற்ற இப்படி மெசேஜ் அனுப்பியிருக்காங்க. இது ஒரு மோசடி மெசேஜ் என்று தான் முதலில் நினைத்துள்ளார். அதன்பின் போன் ஆப்பில் செக் செய்தபோது அக்கவுண்டில் இவ்வளவு பெரிய தொகை இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது உண்மை தானா என சோதிக்க தனது நண்பன் வங்கி கணக்குக்கு ரூ. 21,000 அனுப்பியுள்ளார். இந்த பணப்பரிவர்த்தனை நடந்த சிறிது நேரத்தில் வங்கியானது மீதமுள்ள பணம் அனைத்தையும் திரும்ப பெற்றுள்ளது.

இதனையடுத்து தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் தலைமையை அலுவலத்தில் இருந்து ராஜ்குமாருக்கு போன் செய்துள்ளனர். தவறுதலாக ரூ.9000 கோடியை உங்க அக்கவுண்டில் டெபாசிட் செய்துவிட்டோம். நீங்க ஷேர் செய்த பணத்தை செலவு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சென்னையில் உள்ள கிளை அலுவலகத்துக்கு அவரை நேரில் வருமாறு அழைத்துள்ளனர். இவ்வளவு பெரிய தொகை என் அக்கவுண்டுக்கு வந்துள்ளது. இதனால் எனக்கு பிரச்னை எதாவது வந்துவிடும் நான் எதற்கும் காவல்நிலையத்தில் ஒரு புகாரை பதிவு செய்துவிடுகிறேன் என கூறியுள்ளார்.

பருவமழை – அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுரை.

0

வடகிழக்கு பருவமழையின் பலன்களை அதிகம் பெறுவதும், சேதங்களை தவிர்ப்பதும் அவசியம்.

பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க பாதுகாப்பான இடங்களை கண்டறிந்து வைத்திருக்க வேண்டும்.

நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றும் போது முன்னெச்சரிக்கை செய்ய வேண்டும்

தமிழகமெங்கும் அவசர கால கட்டுப்பாட்டு மையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு.

கன்னத்தில் திடீர் முத்தம்… சிறுமியின் செயலால் நெகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்!

0

13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் கட்டப்பட்டுள்ள 1,591 வீடுகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய வீடுகள் கட்டும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். வேலூர் உள்பட 13 மாவட்டங்களில் 19 முகாம்களில் 79 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பில் 1, 591 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன.

புதிதாக கட்டப்பட்ட வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வேலூரை அடுத்த மேல்மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இன்று நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, வேலூர் முகாமில் 11 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 220 வீடுகளை வீடுகளை திறந்து வைத்தார். 5 பயனாளிகளுக்கு வீட்டின் சாவியை அவர் வழங்கினார்.

ரூ.1000 கிடைப்பதில் இப்படி ஒரு சிக்கலா? பிடித்தம் செய்யும் வங்கிகள்.. தமிழக அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை..!

0

Magalir Urimai Thogai | மகளிர் உரிமைத் தொகையில் இருந்து வங்கிகள் பணம் பிடித்தம் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளிடமிருந்து வங்கிகள் பிடித்தம் செய்யக் கூடாது என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி தமிழக வரலாற்றிலேயே இல்லாத வகையில் 1.065 கோடி மகளிருக்கு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மகளிர் உரிமை தொகை வழங்கும் நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்தார்.

இந்த திட்டத் தொடக்கத்தின் முதல் நாளே ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிரின் வங்கிக் கணக்கில் உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டது ஒரு மகத்தான சாதனை நிகழ்வாகும். தமிழ்நாட்டின் இத்திட்டத்தைப் பற்றி மற்ற மாநிலங்களும் வியந்து பாராட்டி வருகின்றன. இந்நிலையில் ஆங்காங்கே சில குறைகள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. மகளிரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட உரிமை தொகையை வங்கிக்கான சேவை கட்டணம், ஏற்கனவே வாங்கிய கடன் ஆகியவற்றுக்கு சில வங்கிகள் நேர் செய்து கொள்வதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன. இது மிகவும் வருந்தத்தக்க நிகழ்வாகும் என்று தெரிவித்துள்ளார்.

2 முறை தலைகீழாக சுத்திய பைக்.. பயங்கர விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன் படுகாயம்! பதற வைக்கும் வீடியோ…

0

சென்னை: சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் யூடியூபர் டிடிஎஃப் வாசன் பைக் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

தமிழ்நாட்டில் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் யூடியூபர்களில் ஒருவர் டிடிஎஃப் வாசன். இவர் நடத்திய நிகழ்ச்சிக்கு யாருமே எதிர்பார்க்காத அளவுக்குப் பல ஆயிரம் பேர் திரண்டனர்.

இவர் இந்தளவுக்கு இளைஞர்கள் மத்தியில் டிரெண்டிங்கில் இருப்பவர். அதேநேரம் இவர் தொடர்ச்சியாகப் பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். இதற்காக இவர் நீதிமன்ற படிக்கட்டிற்கும் ஏற வேண்டி இருந்தது.

தொடர்ந்து சாலைகளில் அதிவேகமாக பைக் ஓட்டுவது, அபாயகரமான பைக் ஸ்டன்ட்களை செய்வதை இவர் வாடிக்கையாகவே வைத்துள்ளார். இதற்கிடையே இன்று அவர் சாலை விபத்தில் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் அருகே வழக்கம் போல பைக்கில் ஸ்டண்ட் செய்ய முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.



சுஸுகி ஹயபுசா வகை பைக்கில் பயணம் செய்த நிலையில், மாலை 4 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பைக் விபத்து குறித்த சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் வீலிங் செய்ய முயன்ற போது அவர் நிலைதடுமாறிய பள்ளத்தில் விழுகிறார்.

இந்த விபத்தில் டிடிஎஃப் வாசனுக்கு படுகாயங்கள் ஏற்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் இப்போது அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா : திமுக எம்.பிக்களுக்கு கட்சி தலைமை முக்கிய உத்தரவு…!

0

One nation one election | நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வரும் திங்கள்கிழமை தொடங்கவுள்ள நிலையில், சென்னையில் திமுக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை எதிர்த்து வாக்களிக்க திமுக எம்.பிக்களுக்கு கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வரும் திங்கள்கிழமை தொடங்கவுள்ள நிலையில், சென்னையில் திமுக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, நீட் விலக்கு மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும், காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு அறிவுறுத்துதல், விஸ்வகர்மா யோஜனா திட்ட கைவிடுதல் ஆகியவற்றை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவும் முடிவு செய்யப்பட்டது.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 விழுக்காடு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தவும், மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாட்டிற்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பிரச்னையை எழுப்பவும் திமுக எம்.பிக்கள் திட்டமிட்டுள்ளனர்.