Monday, September 21, 2026
Home Blog Page 32

பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே.பாண்டியன்

0

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே.பாண்டியன்

ஒடிசா முதலமைச்சரின் தனிச்செயலாளராக இருந்த வி.கே.பாண்டியன், கடந்த அக்டோபர் மாதம் விருப்ப ஓய்வு பெற்றார்.

அவர் ஓய்வு பெற்ற அடுத்த தினமே, 5T திட்டத்தின் தலைவர் எனும் அமைச்சர் அந்தஸ்துடைய அரசு பதவி வி.கே.பாண்டியனுக்கு வழங்கப்பட்டது

உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சேபனை மனு…

0

அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சேபனை மனுத் தாக்கல் அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சேபனை மனுத் தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை தள்ளிவைக்கக் கூடாது என கூறி எடப்பாடி பழனிசாமி ஆட்சேபனை மனுத் தாக்கல் செய்தார். அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரை…

0

வி.பி.சிங் முயற்சியால்தான் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஓரளவு முன்னேறி இருக்கிறார்கள்.

ஒன்றிய அரசின் துறை செயலாளர்கள் 89 பேரில் 85 பேரும், ஒன்றிய அரசின் கூடுதல் செயலாளர்கள் 93 பேரில் 88 பேரும் உயர்ஜாதியினர்.

மத்திய பல்கலைக் கழகங்களில் இதுவரை இடஒதுக்கீடே இல்லை.

நீதிமன்றங்களில் 2018 முதல் 2023 வரை நியமிக்கப்பட்ட 604 நீதிபதிகளில் 74 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்கள்.

அரசு துறைகளில் பதவி உயர்வின்போது இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதில்லை.

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின, பழங்குடியின மற்றும் சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு முழுமையாக, முறையாக வழங்கப்பட வேண்டும்.

வி.பி.சிங் மறையலாம். ஆனால் அவர் ஏற்றி வைத்த சமூகநீதி தீபம் என்றும் அணையாது. தமிழ்நாடு என்றும் அவரை மறக்காது, மறக்காது.

உடல்நிலை சரியில்லை நாளை ஆஜராகிறேன் -மன்சூர் அலிகான்….

0

நடிகை திரிஷா குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரம்

மன்சூர் அலிகான் இன்று ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், ஆஜராகவில்லை

ஆஜராக அவகாசம் கேட்டு ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசாருக்கு கடிதம்

தொடர் இருமலால் பேசுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் இன்று ஆஜராக இயலாது என கடிதம்

நாளை ஆஜராக அனுமதிக்குமாறு மன்சூர் அலிகான் கடிதம்…

சினிமா படப்பாணியில் மத்திய அரசு ஊழல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்….

0

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சினிமா படப்பாணியில் மத்திய அரசு ஊழல் செய்துள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

தமிழ்நாட்டிற்கான ஜிஎஸ்டி வரி பகிர்வை மத்திய அரசு முறையாக வழங்கவில்லை எனக் கூறிய அவர் இந்தியாவை காப்பாற்ற வேண்டுமெனில், இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்தியாவில் இருந்து பாசிசத்தை ஒழிக்க, சேலம் மண்ணிலிருந்து ஒரு மாபெரும் பயணத்தை துவக்க உள்ளோம் என சூளுரைத்தார்…

கோவையில் ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவல்- மாவட்ட ஆட்சியர் அறிக்கை…

0

கோவை மாவட்டத்தில் ஃப்ளு வைரஸ் காய்ச்சல் பரவலாக காணப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோவை மாவட்டத்தில் பருவ நிலை மாற்றம் காரணமாக ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவலாக காணப்படுகிறது. குழந்தைகள் மற்றும் முதியோருக்கு இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் எளிதாக ஏற்படக் கூடும்.

காய்ச்சல், உடல் வலி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, இருமல் ஆகியன இந்த வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாக காணப்படுகிறது. பொதுவாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எழு நாட்களில் குணமடைந்து விடுவர். நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், இருதய நோய், புற்றுநோய் போன்ற இணை நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகள் உட்கொள்ள வேண்டும்.

இக்காலகட்டத்தில் பொது மக்கள் அனைவரும் குடிநீரை நன்றாக கொதிக்க வைத்து பின் ஆறவைத்து குடிக்க வேண்டும். தொண்டையில் கரகரப்பு இருக்கும் பட்சத்தில் சமையல் கல் உப்பை வெந்நீரில் போட்டு, தொண்டையில் படுமாறு வாய் கொப்பளிக்க வேண்டும். இருமும் போதும் தும்மும் போதும் உங்கள் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை அல்லது துணியால் மூடிக் கொள்ள வேண்டும். அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். வெளியில் செல்லும் போது முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் இருந்து சுமார் 1 மீட்டர் இடைவெளி விட்டு விலகி இருக்க வேண்டும். வீட்டுக்கு வெளியே சென்று வந்தபிறகு கை, கால்களை சோப்பு போட்டு கழுவிய பிறகே, வீட்டுக்குள் நுழைய வேண்டும், வைட்டமின் சி. புரத சத்து மிகுந்த உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். மேற்கண்ட தொடர் செயல்கள் மூலம் வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்கலாம். மேலும், காய்ச்சல் கண்டவர்கள் பதிவுபெற்ற மருத்துவரை நாடி உரிய அறிவுரைக்கு பின் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் காய்ச்சல் பாதித்து உள்நோயாளியாக சிகிச்சை பெறுவோரின் விவரங்களை அரசு, தனியார் மருத்துவமனைகளில் பெற்று அவர்கள் வசிக்கும் பகுதியில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேல் சிகிச்சை தேவைப்பட்டால் மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

700 கிலோ எடையுள்ள புகையிலை பொருள்கள் பறிமுதல்…

0

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பத்ரிநாராயணன் அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (22.11.2023) சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சூலூர் காவ‌ல்துறை‌யின‌ர் செங்கோடகவுண்டன் புதூர் பிரிவு அருகே வாகன தணிக்கை செய்த போது நான்கு சக்கர வாகனத்தில் புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்த குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் முத்துக்குமார்(45) மற்றும் சத்தியமங்கலத்தை சேர்ந்த ரங்கசாமி மகன் ராஜன்(47) ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.5,97,973/- மதிப்புள்ள 700 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

கோவை மாவட்டத்தில் மாபெரும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்…

0

மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை (Re-enquiry) இன்று (22.11.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.

மேலும் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான விசரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் அதிகாரிகள் மேற்கொண்டு, அம்மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் குடும்பப் பிரச்சனை, பணப்பரிமாற்ற பிரச்சனை மற்றும் இடப்பிரச்சினை தொடர்பான 71 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டதில், 3 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்யப்பட்டும்,2 மனுக்கள் மீது மனு ரசீது பதிவு செய்யப்பட்டும் (CSR), 54 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும், 12 மனுக்கள் மீது மே‌ல்விசாரணை செய்ய பரிந்துரை செய்தும் தீர்வு காணப்பட்டது.

இந்த மக்கள் குறை தீர்ப்பு மனு நாளில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

பிற வேலை நாட்களில் அந்தந்த உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களுக்கு சென்று பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கு தீர்வு காணலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

பொது மக்களின் குறைகளை தீர்க்கும் பொருட்டு கோவை மாவட்டத்தில் நடைபெற்ற இந்த மக்கள் குறை தீர்க்கும் முகாம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

கோவை மாவட்டத்தில் கஞ்சா பறிமுதல்… விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது…

0

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (22.11.2023) அன்னூர் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான அன்னூர் கணேசபுரம் அருகே சென்று சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுகதேவ் தலாய் மஹாதேபஸ்தா மகன் சுபாஷ் தலாய்(33) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 2 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2023 முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 544 நபர்கள் மீது 414 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 704.026 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

சூலூர் பகுதியில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்… விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது….

0

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (17.11.2023) சூலூர் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சூலூர் ரோந்து காவலர் அரசூர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திரளி பேனா மகன் சுரேந்திர பேனா(21) மற்றும் ஜெகபந்து பாண்டே மகன் துலாரம் பாண்டே(26) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 3 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2023 முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 541 நபர்கள் மீது 411 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 699.926 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.