Saturday, April 18, 2026
Home Blog Page 27

இனிப்பு மற்றும் மருந்துகளை இலவசமாக வழங்கிய கோவை பாமகவினர்…

0


நாடாளுமன்ற உருப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவரது 55வது  பிறந்தநாளை  முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் உள்ள பாமகவினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் விழாவாக கொண்டாடினர். இந்நிலையில் கோவையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் சார்பில் இனிப்பு வழங்கி கோலாகலமாக கொண்டாடினர். பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் கோவை ராஜ் தலைமையிலான பாமகவினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,  செல்வபுரம் மற்றும் கவுண்டம்பாளையம்  உட்பட கோவை மாநகரில் மூன்று முக்கிய சந்திப்புகளில் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கி கொண்டாடினர்.

பொதுமக்களுக்கு மாரடைப்பு வந்தால் உடனடியாக உட்கொள்ள வேண்டிய உயிர் காக்கும் மாத்திரைகள்( Loading dose) வழங்கினர். இது குறித்து கோவை பாமக கிழக்கு மாவட்ட் செயலாளர் கோவை ராஜ் கூறுகையில் உயிர் காக்கும் மருந்துகள் தனிப்பட்ட முறையில் வாங்க வேண்டும் என்றால் சுமார் 75 ரூபாய் வருகிறது.இந்த மருந்துகளை டாக்டர் அன்புமணி ராமதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு கோவையிலே முக்கிய இடங்களிலே இலவசமாக மருந்துகள் வழங்கி வருகின்றோம் 300 பேருக்கு மருந்து இலவசமாக வழங்கப்படுகின்றது அடுத்த கட்டமாக ஒவ்வொரு பகுதிகளாக சென்று எல்லோருக்கும்  மருந்துகளை இலவசமாக வழங்கிட உள்ளோம் என்று தெரிவித்தனர்.  இதில் கோவை கிழக்கு மாவட்ட பாமக செயலாளர் கோவை ராஜ், மகளிர் அணி செயலாளர் கெளசல்யா, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மடத்தூர் ரமேஷ் மற்றும் கோபி உள்ளிட்ட பாமகவினர் பலர் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்ட காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை…

0

கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் ஈஸ்வரி (74) கடந்த 1.10.2023 அன்று அவரின் வீட்டின் முன்புறம் நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அவர் கழுத்திலிருந்த மூன்று சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட நபர் சூலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இப்புகாரில் விரைந்து நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் உத்தரவிட்ட தன்பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்ட புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் சேர்ந்த ரயாத்அலி மகன் யுனோஷ்உசேன்(22) மற்றும் ஆந்திர பிரதேஷ் மாநிலத்தைச் சேர்ந்த அப்பாஸ் அலி மகன் மொகல்ஜாபர்(21) ஆகியோர் இக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் மேற்படி நபர்கள் செட்டிபாளையம், பெருந்துறை போன்ற பகுதிகளில் இதுபோன்ற பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இந்நிலையில் தனிப்படையினர் மேற்படி நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 5 சவரன் தங்க நகைகள் மற்றும் வழிப்பறி குற்றத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி யுனோஷ்உசேன்(22) மற்றும் மொகல்ஜாபர்(21) ஆகியோரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

தங்க நகை திருடிய நபர் கைது..

0

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய பகுதியான சங்கம்பாளையம் காலனியில் வசித்து வரும் நாகராஜ் (70) என்பவர் சொந்த வேலை காரணமாக தற்போது பொள்ளாச்சி பணிக்கம்பட்டியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருவதாகவும், கடந்த 29.08.2023 அன்று அவரது வீட்டை சுத்தம் செய்ய வேண்டி வந்து பார்த்தபோது அடையாளம் தெரியாத நபர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் உள்ள 12½ சவரன் தங்க நகையை திருடிச் சென்றது தெரிந்து, இது சம்மந்தமாக மேற்படி நபர் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், அவர்கள் மேற்படி வீடு புகுந்து திருடிய வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில், தனிப்படையினர் விசாரணை மே‌ற்கொ‌ண்டு குற்றவாளியை தேடி வந்த நிலையில், இன்று (07.10.2023) காலை சுமார் 09.30 மணியளவில் மண்ணூர் அருகே வாகன சோதனை செய்து வந்த போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த முகமது மகன் சாலு(37) என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டதில் மேற்படி வீடு புகுந்து திருடிய வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. மேலும் இதேபோல் இவர் மகாலிங்கபுரம் காவல் நிலைய பகுதியிலும் வீடு புகுந்து 7 சவரன் தங்க நகையை திருடியுள்ளதும் தெரிய வந்தது. எனவே மேற்படி நபரிடம் இருந்து வீடு புகுந்து திருடிய வழக்குகளில் தொடர்புடைய 19½ சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து மேற்படி சாலு (37) என்பவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

105 கிலோ எடையுள்ள புகையிலை பொருள்கள் பறிமுதல்…

0

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (07.10.2023) கிணத்துக்கடவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள மளிகை கடையில் முன்புறம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த ஆதிலிங்கம் மகன் கிருஷ்ணன்(43) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.1,77,000/- மதிப்புள்ள 105 கிலோகிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2023 முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 472 நபர்கள் மீது 459 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 3588.76 கிலோகிராம் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்..

0

கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்…

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் (Crime Review Meeting) இன்று (06.10.2023) மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் சிறப்பு பிரிவு காவல் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

இவ்விவாதிப்பு கூட்டத்தில் கடந்த மாதத்தில் நடந்த கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை போன்ற குற்ற செயல்களில் தொடர்புடைய எதிரிகளை திறம்பட செயல்பட்டு கைது செய்த மற்றும் நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல் ஆய்வாளர்-4, உதவி ஆய்வாளர்கள்-15, சிறப்பு உதவி ஆய்வாளர்கள்- 2, தலைமை காவலர்-7, முதல் நிலைக் காவலர்-6, காவலர்கள்-20 என மொத்தம்-53 நபர்களை பாராட்டி, பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

மேலும் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருக்கு போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதும் மற்றும் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

சென்னையில் வருமான வரி சோதனை

0

முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான தி.நகரில் உள்ள ஓட்டலிலும்

குரோம்பேட்டையில் உள்ள எம்.பி.யின் உறவினர் வீடு உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை

சென்னை புறநகர்ப் பகுதிகளில் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது

0

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது

கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை பேருந்துகளில் ஏற்றி போலீசார் அழைத்துச் சென்றனர்

சம வேலைக்கு சம் ஊதியம் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஆண்டு விளையாட்டு போட்டியில் தலைமை வகித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்..

0

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சச்சிதானந்தா ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளியில் இன்று (04.10.2023) ஆண்டு விளையாட்டு போட்டி (Annual Sports Meet) கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் தலைமை வகித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கியும், பள்ளி மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.

225 கிலோ எடையுள்ள புகையிலை பொருள்கள் பறிமுதல்…

0

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அதன் அடிப்படையில் இன்று (04.10.2023) பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திப்பாளையம் to  இடிகரைரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் இசக்கிமுத்து(34)என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.1,80,000/- மதிப்புள்ள 225 கிலோகிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை  பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2023 முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 467 நபர்கள் மீது  454 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 3428.53 கிலோகிராம் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ,  சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் மாபெரும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்…

0

மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை (Re-enquiry) இன்று (04.10.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது

.

மேலும் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான விசரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் அதிகாரிகள் மேற்கொண்டு, அம்மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் குடும்பப் பிரச்சனை, பணப்பரிமாற்ற பிரச்சனை மற்றும் இடப்பிரச்சினை தொடர்பான 121 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டதில், 1 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்யப்பட்டும், 100 மனுக்கள் மீது சுமூகமான முறையிலும் தீர்வு காணப்பட்டது.

இந்த மக்கள் குறை தீர்ப்பு மனு நாளில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

பிற வேலை நாட்களில் அந்தந்த உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களுக்கு சென்று பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கு தீர்வு காணலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

பொது மக்களின் குறைகளை தீர்க்கும் பொருட்டு கோவை மாவட்டத்தில் நடைபெற்ற இந்த மக்கள் குறை தீர்க்கும் முகாம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.