Saturday, April 18, 2026
Home Blog Page 26

2 கிலோ கஞ்சா பறிமுதல் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது…

0

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (13.10.2023) மதுக்கரை காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை காவல்துறையினர் கற்பகம் கல்லூரி சாலை சந்திப்பு அருகே வாகன சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த
ஜெய் கராட் மகன் சசீந்திர கரட் (33) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2023 முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 500 நபர்கள் மீது 377 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 673.586 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

ஞ்சா வழக்கு குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது…

0

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் 06 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த துரைசாமி மகன் மாதேஸ்வரன் @மாதேஷ்(29) என்பவரை கடந்த ஆகஸ்ட் மாதம் பொள்ளாச்சி கிழக்கு காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக மாதேஸ்வரன் @ மாதேஷ்(29) என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், அவர்கள் பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் அவர்கள் மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின் அடிப்படையில் கஞ்சா வழக்கு குற்றவாளியான மாதேஸ்வரன் @மாதேஷ்(29) என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் இந்த வருடத்தில் இதுவரை 10 கஞ்சா வழக்கு குற்றவாளிகள் உட்பட 32 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 3 வருடம் சிறை…

0

கோவை மாவட்டம், பேரூர் காவல் நிலைய பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு 05 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த ஷனூஃப் (26) என்பவர் மீது பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கின் விசாரணை கோவை மாவட்டம், போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், விசாரணை முடிவுபெற்று வழக்கின் எதிரியான சூலூர் பகுதியில் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ஷனூஃப் (26)-க்கு 11.10.2023 அன்று 3 வருட சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5000/-அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

மேலும் இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த
முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற தலைமை காவலர் திருமதி. சுதாராணி(HC 1916) ஆகியோரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

கோவை மாவட்ட காவல் துறையின் அதிரடி…

0

கோவை மாவட்டம் வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் அவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு கொடுப்பதற்காக Magic Bricks-ல் விளம்பரம் கொடுத்துள்ளார். கடந்த 02.09.2022-ம் தேதி சுரேஷிடம் அடையாளம் தெரியாத நபர் செல்போனில் தொடர்பு கொண்டு தான் CISF -ல் பணிபுரிவதாகவும் தற்போது பணிமாறுதலில் கோயம்புத்தூர் வர இருப்பதாக கூறி வாடகைக்கு வீடு கேட்டுள்ளார். மேற்படி நபர் இதனை ஒப்புகொண்டு அட்வான்ஸ் தொகை செலுத்துமாறு கூறியதற்கு அந்த அடையாளம் தெரியாத CISF RULES-ன் படி நீங்கள் பணம் செலுத்தினால் செலுத்திய பணத்துடன் சேர்த்து அட்வான்ஸ் தொகையும் கிடைக்கும் என கூறியுள்ளார் இதனை நம்பி சுரேஷ் ரூபாய் 24,999/- பணத்தை அனுப்பியுள்ளார். பின்பு சிறு சிறு தொகையாக மொத்தம் ரூபாய்.7,24,735/- பணத்தை செலுத்தியுள்ளார். பின்னர் தான் தவறான வழிகாட்டுதலில் சென்று மோசடி அடைந்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சுரேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, முறையான நடவடிக்கை மேற்கொண்டு சம்மந்தப்பட்ட நபரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு சுரேஷ் என்பவரது மொத்த தொகையான ரூபாய்.3,66,172/- மீட்கப்பட்டது. இதேபோல் ஜெகதீஸ்வரி என்பவர் ஆன்லைனில் பகுதிநேர வேலைக்காக இழந்த பணம் ரூபாய் 8,60,310/- மீட்கப்பட்டது. மேலும் மீதமுள்ள பணத்திற்கு வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டும், நீதிமன்ற உத்தரவு பெற்று உரியவரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

மேற்படி மீட்கப்பட்ட ரூ.12,26,482/- பணத்திற்கான காசோலைகளை இன்று (11.10.2023) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் இருவரிடமும் வழங்கினார். பணத்தை திரும்ப பெற்ற இருவரும் காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

மேலும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்கள் ஆன்லைனில் குறைந்த பணத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என செய்திகளில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், இணையதளத்தில் உங்களது பணத்தை இழந்து விட்டால் 1930 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளவும் என்றும் சைபர் கிரைம் புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்தால் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் உங்களை தொடர்பு கொண்டு நீங்கள் இழந்த பணத்தை மீட்டுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தியுள்ளார்.

3 கிலோ கஞ்சா பறிமுதல்… விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

0

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (11.10.2023) கோமங்கலம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் செல்லப்பா பாளையம் சாலை சந்திப்பு அருகே வாகன சோதனை மேற்கொண்ட போது நான்கு சக்கர வாகனத்தில் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்த மோகன் மகன் சந்தனகுமார் (23) மற்றும் உத்திரபிரதேஷ் மாநிலத்தைச் பகவான் ஸ்வரூப் மகன் பிரஜேந்திர சிங் (26) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சா, ரூபாய் 1,30,000/-, நான்கு சக்கர வாகனம்-1 மற்றும் இருசக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2023 முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 497 நபர்கள் மீது 374 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 671.336 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் மாபெரும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்…

0

மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை (Re-enquiry) இன்று (11.10.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.

மேலும் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான விசரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் அதிகாரிகள் மேற்கொண்டு, அம்மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் குடும்பப் பிரச்சனை, பணப்பரிமாற்ற பிரச்சனை மற்றும் இடப்பிரச்சினை தொடர்பான 91 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டதில், 2 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்யப்பட்டும்,2 மனுக்கள் மீது மனு ரசீது பதிவு செய்யப்பட்டும் (CSR), 73 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும், 14 மனுக்கள் மீது மே‌ல்விசாரணை செய்ய பரிந்துரை செய்தும் தீர்வு காணப்பட்டது.

இந்த மக்கள் குறை தீர்ப்பு மனு நாளில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

பிற வேலை நாட்களில் அந்தந்த உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களுக்கு சென்று பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கு தீர்வு காணலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

பொது மக்களின் குறைகளை தீர்க்கும் பொருட்டு கோவை மாவட்டத்தில் நடைபெற்ற இந்த மக்கள் குறை தீர்க்கும் முகாம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

நெல்லையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தை அடுத்து ஞானவேல் இயக்கத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

ஜெயிலரை அடுத்து தலைவர் 170 படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கிறார்.

இந்நிலையில், நெல்லை மாவட்டம் பணகுடியில், ரஜினியின் 170வது பட சூட்டிங் நடைபெற்று வருகிறது.

பணகுடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் நடைபெறும் படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொண்டுள்ளார்.

இதனால் அப்பகுதியில் ரஜினியை காண பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

3 நாட்கள் பணகுடியில் சூட்டிங் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அக்.15 முதல் 23 வரை தங்கரத புறப்பாடு ரத்து:

0

பழனி முருகன் கோயிலில் அக்டோபர் 15 முதல் 23 வரை தங்கரத சுவாமி புறப்பாடு நடைபெறாது என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. நவராத்திரி பூஜைகள் நடைபெறுவதை முன்னிட்டு தங்கரத சுவாமி புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளதாக பழனி முருகன் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 24-ம் தேதி முதல் வழக்கம்போல் தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியானவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும்– மூதல்வர் மு.க. ஸ்டாலின்…

0

மகளிர் உரிமை தொகைக்காக மேல்முறையீடு செய்த 9 லட்சம் பேரில் தகுதியானவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார்.

மேலும், உரிமைத் தொகை திட்டத்தில் குறைகள் இருப்பின் ஆதாரங்களுடன் கூறலாம்.

நிதி நிலைமை மோசமாக இருந்ததால் மகளிர் உரிமைத் தொகை தாமதமாக வழங்கப்பட்டது என்றார்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானம் மீது முதலமைச்சர் ஸ்டாலின் இவ்வாறு பதில் அளித்தார்.

கஞ்சா பறிமுதல்… விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

0

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (09.10.2023) கருமத்தம்பட்டி காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சம்பவ இடமான செம்மாண்டம் பாளையம் அருகே சென்று சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முருகன் மகன் கார்த்திகேயன் (23) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1.400 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும் மேற்படி நபர் பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்தது.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2023 முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 494 நபர்கள் மீது 372 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 668.331 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.