Thursday, June 25, 2026
Home Blog Page 24

திமுகவின் 33 மாத ஆட்சியில்! இத்தனை கோடி முதலீடா?

0

கடந்த 33 மாதங்களில், தமிழக அரசு பல்வேறு வணிக ஒப்பந்தங்கள் மூலம், சுமார் 8.65 லட்சம் கோடி ரூபாயை ஈர்த்துள்ளது. இதன் காரணமாக, சுமார் 30 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை மக்களுக்கு உருவாக்கியுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக மேலும் கூறியிருப்பதாவது:-

2021க்கு பிறகு 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல், 27 தொழிற்சாலைகள் திறப்பு காரணமாகவும் 74,757 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு மாபெரும் தொழில் புரட்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. 2030க்குள் தமிழ்நாட்டை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய பொருளாதாரத்திற்கு மிக முக்கிய பங்களிக்கும் மாநிலமாக தமிழகத்தை உயர்த்த, திமுக அரசு முனைப்புடன் செயல்படுகிறது. முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்று மாநாடு மூலம், ரூ.1,90,803 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் போன்ற வெளிநாட்டு பயணங்கள் மூலம் ரூ.7,441 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

ஜனவரி 7,8-ம் தேதிகளில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.6,64,180 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. ஸ்பெயின் நாட்டு சுற்றுப்பயணம் மூலம் ரூ.3,440 கோடி முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு…

0

கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மாகாளி மகன் ஆறுமுகம்(48) கடந்த 2020-ம் ஆண்டு அவரது மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக சூலூர் காவல் நிலையத்தில் ஆறுமுகம் (48) மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்கின் விசாரணை கூடுதல் உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை இன்று (31.01.2024) முடிவு பெற்று குற்றவாளி ஆறுமுகத்திற்கு ஆயுள் சிறைதண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலர் திரு. பிரபு (Gr1 1950) ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் பாராட்டினார்.

கொலை குற்றவாளிக்கு 5½ வருட சிறை…

0

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மாணிக்கம் மகன் சக்திவேல்(32) கடந்த 2019-ம் ஆண்டு அவரது மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக பொள்ளாச்சி தாலுக்கா காவல் நிலையத்தில் சக்திவேல் (32) மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்கின் விசாரணை கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை இன்று (31.01.2024) முடிவு பெற்று குற்றவாளி சக்திவேலுக்கு 5½ வருட சிறைதண்டனை மற்றும் ரூபாய் 2,000/- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலர் திரு. ஹரி (PC 853) ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் பாராட்டினார்.

கோவை மாவட்டத்தில் மாபெரும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்…

0

மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை (Re-enquiry) இன்று (31.01.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.

மேலும் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான விசரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் அதிகாரிகள் மேற்கொண்டு, அம்மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் குடும்பப் பிரச்சனை, பணப்பரிமாற்ற பிரச்சனை மற்றும் இடப்பிரச்சினை தொடர்பான 78 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டதில், 6 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டும் (FIR), 63 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும், 15 மனுக்கள் மீது மே‌ல்விசாரணை செய்ய பரிந்துரை செய்தும் தீர்வு காணப்பட்டது.

கோவை மாவட்டத்தில் மாபெரும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்…

0

மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை (Re-enquiry) இன்று (27.12.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.

மேலும் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான விசரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் அதிகாரிகள் மேற்கொண்டு, அம்மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் குடும்பப் பிரச்சனை, பணப்பரிமாற்ற பிரச்சனை மற்றும் இடப்பிரச்சினை தொடர்பான 73 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டதில், 1 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்யப்பட்டும்,4 மனுக்கள் மீது மனு ரசீது பதிவு செய்யப்பட்டும் (CSR), 66 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும், 07 மனுக்கள் மீது மே‌ல்விசாரணை செய்ய பரிந்துரை செய்தும் தீர்வு காணப்பட்டது.

இந்த மக்கள் குறை தீர்ப்பு மனு நாளில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

பொது மக்களின் குறைகளை தீர்க்கும் பொருட்டு கோவை மாவட்டத்தில் நடைபெற்ற இந்த மக்கள் குறை தீர்க்கும் முகாம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

பாஜக விவசாயி அணி கோவையில் ஆர்ப்பாட்டம்…

0

கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் தென்னை விவசாயம் மற்றும் தென்னை சார்ந்த பொருட்கள் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேங்காய் எண்ணெய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை எனக் கூறி தென்னை விவசாயிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் தென்னை விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசிடம் தொடர்ந்து கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசு தேங்காய் எண்ணையை ரேஷன் கடைகளில் வழங்க வலியுறுத்தி கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக கோவை மாவட்ட விவசாயி அணி தலைவர் வசந்தசேனன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர் பலரும் கலந்து கொண்டு கைகளில் தேங்காய்களை ஏந்திய படி  மாநில அரசு ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை வழங்க வேண்டும், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசியிருக்கிறாரா?– முதல்வர் மு.க ஸ்டாலின்..

0



குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்புரிமை ரத்து, முத்தலாக் என்று எல்லா சட்டங்களையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தவர் பழனிசாமி.

கூட்டணி தர்மத்திற்காக ஆதரிக்க வேண்டியதாக இருந்தது என்று சப்பைக்கட்டு கட்டினார்.

இப்போதுதான் பாஜக-வுடன் கூட்டணி இல்லை என்று ஒரு கபட நாடகம் போட்டுக்கொண்டு இருக்கிறாரே! பாஜகவை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசியிருக்கிறாரா? இல்லையே!

இவரின் நாடகத்தை எல்லாம் பார்த்து மக்கள் யாரும் ஏமாற மாட்டார்கள்.

இந்தியா கூட்டணிதான் அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிய அளவில் ஆட்சியை அமைக்கும் இந்தியா கூட்டணியின் ஆட்சி அமைய நாம் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்

அவர்களுடைய அப்பா வீட்டு பணத்தை கேட்கவில்லை- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

0

யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் – கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார்கள்.

சிலரிடம் அண்ணாவைப் போல –  சிலரிடம் கலைஞரைப் போல – சிலரிடம் கழகத்தலைவரைப் போல பேசுகிறோம். எனினும், குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது.

வெள்ள பாதிப்புக்காக கழக அரசு நிவாரண நிதி கேட்டால், நாங்கள் என்ன ஏ.டி.எம்-ஆ என ஒன்றிய அமைச்சர் ஒருவர் கூறியதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம் என்று கூறினேன்.

என் பேச்சில் மரியாதை சற்று குறைவாக இருந்ததாக அப்போது சிலர் வருத்தப்பட்டார்கள். அடுத்த நாளே, மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களுடைய அப்பா வீட்டு பணத்தை கேட்கவில்லை என்று அவர்கள் கோரியபடியே மிகுந்த ‘மரியாதையுடன்’ கேட்டுக்கொண்டேன். ஆனாலும், மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் ‘பாஷை’ குறித்து இன்று பாடமெடுத்துள்ளார்கள்.

மீண்டும் சொல்கிறேன் மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாரமன் அவர்களின் ‘மரியாதைக்குரிய’ அப்பா வீட்டுப் பணத்தை நாம் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்து தமிழ்நாடு அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியைத்தான் கேட்கிறோம்.

வழக்கமாக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் மாநில பேரிடர் நிவாரண நிதியை தந்து விட்டு, ஏதோ ஒன்றிய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தந்தது போல அடித்துப் பேச வேண்டாம்.

நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும்  மரியாதை தருவதற்கு தயாராகவே இருக்கிறோம் – தமிழ்நாட்டு மக்கள் மீது கொஞ்சமாவது அக்கறை வைத்து நிதியைத் தாருங்கள் மரியாதைக்குரிய மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களே! என்று தனது X தளத்தில் பதிவு செய்து உள்ளார்…

3கிலோ கஞ்சா பறிமுதல்… விற்பனைக்கு வைத்திருந்த நபர்கள் கைது…

0

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (22.12.2023) தொண்டாமுத்தூர் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை காவல்துறையினர் கலிக்கநாயக்கன்பாளையம் அருகே வாகன சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த சீர நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் சர்வேஷ்(23), கணேசன் மகன் விஷ்ணு பிரசாத் (22) மற்றும் வீரகேரளம் பகுதியை சுப்பிரமணி மகன் சுகுமார் (32) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சா,செல்போன்-2 மற்றும் இருசக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2023 முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 636 நபர்கள் மீது 476 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 853.176 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

8 கிலோ கஞ்சா பறிமுதல்… விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது…

0

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (22.12.2023) கிணத்துக்கடவு காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை காவல்துறையினர் கிருஷ்ணசாமிபுரம் அருகே வாகன சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாரத்நாக் மகன் மகேந்திர நாக்(24) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2023 முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 636 நபர்கள் மீது 476 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 853.176 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.