Thursday, June 25, 2026
Home Blog Page 25

4 கிலோ கஞ்சா பறிமுதல்… விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது…

0

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (20.12.2023) பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை காவல்துறையினர் பூச்சியூர் அருகே வாகன சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பாபு மகன் பிரவீன் (39) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சாவை ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2023 முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 627 நபர்கள் மீது 472 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 841.706 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் மாபெரும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்…

0

மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை (Re-enquiry) இன்று (20.12.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.

மேலும் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான விசாரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் அதிகாரிகள் மேற்கொண்டு, அம்மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் குடும்பப் பிரச்சனை, பணப்பரிமாற்ற பிரச்சனை மற்றும் இடப்பிரச்சினை தொடர்பான 75 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டதில், 4 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்யப்பட்டும்,65 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும், 10 மனுக்கள் மீது மே‌ல் விசாரணை செய்ய பரிந்துரை செய்தும் தீர்வு காணப்பட்டது.

இந்த மக்கள் குறை தீர்ப்பு மனு நாளில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

பிற வேலை நாட்களில் அந்தந்த உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களுக்கு சென்று பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கு தீர்வு காணலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

பொது மக்களின் குறைகளை தீர்க்கும் பொருட்டு கோவை மாவட்டத்தில் நடைபெற்ற இந்த மக்கள் குறை தீர்க்கும் முகாம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்– முதல்வர் மு.க. ஸ்டாலின்..

0

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கடந்த 47 ஆண்டுகளாக இல்லாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பையும்,

தென் மாவட்டங்களில் தற்போது வரலாறு காணாத வகையில் 100 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்ததால் ஏற்பட்ட பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்

பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 2000 கோடி ரூபாயை அவசர நிவாரண நிதியாக வாழ்வாதார உதவிக்காகவும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களின் தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்காகவும் வழங்கிட வேண்டும்

தமிழ்நாடு மழை வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

துபாயில் ஐ.பி.எல் ஏலம்…

0

துபாயில் ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் மினி ஏலம் நாளை நடைபெற உள்ளது. நாளை பகல் 1 மணிக்கு ஏலம் துவங்க உள்ள நிலையில், 10 அணிகள் சார்பில், அணி நிர்வாகிகளும், பயிற்சியாளர்களும் பங்கேற்க உள்ளனர்.

டெல்லியில் இருந்து முதலமைச்சர் ஆலோசனை

0

தென் மாவட்டங்களின் மழை வெள்ள பாதிப்புகள் – நிவாரண உதவிகள் குறித்து மாண்புமிகு அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு, உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்…

வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி ஸாடாலின்…

0

திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள கனமழை – வெள்ளப் பாதிப்புகளை அடுத்து, அங்கு மீட்பு – நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக செல்லும் வழியில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து, அங்குள்ள மழை நிலவரம் குறித்து கேட்டறிந்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

விருதுநகர் மாவட்டத்திலும் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து வகையிலும் முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொண்டு மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

தென் மாவட்டங்களில் அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது- முதல்வர் மு.க. ஸ்டாலின்…

0

தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு குறித்து அமைச்சர்களுடன் பேசி வருகிறேன்.

அரசின் திட்டங்கள் கடை கோடி மக்களுக்கும் சென்று சேர்கிறதா என்பதை நானே நேரில் ஆய்வு செய்து வருகிறேன்.

13 அரசு துறைகள் வாயிலாக மக்களுக்கு சேவைகள் செய்யப்பட்டு வருகின்றன.

அனைத்து திட்டங்களும் அனைத்து மக்களையும் சென்று சேர வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது 30 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும்- கோவையில் மக்களுடன் முதல்வர் திட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.

தென் மாவட்டங்களில் அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது- முதல்வர் மு.க. ஸ்டாலின்…

0

தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு குறித்து அமைச்சர்களுடன் பேசி வருகிறேன்.

அரசின் திட்டங்கள் கடை கோடி மக்களுக்கும் சென்று சேர்கிறதா என்பதை நானே நேரில் ஆய்வு செய்து வருகிறேன்.

13 அரசு துறைகள் வாயிலாக மக்களுக்கு சேவைகள் செய்யப்பட்டு வருகின்றன.

அனைத்து திட்டங்களும் அனைத்து மக்களையும் சென்று சேர வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது 30 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும்- கோவையில் மக்களுடன் முதல்வர் திட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.

பொதுமக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

0

துணை மின் நிலையங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொது மக்களின் நலன் கருதி எச்சரிக்கையுடன் மின் விநியோகம் வழங்கும் பணி படிப்படியாக நடைபெற்று வருகிறது.

பொது மக்கள் இந்த அசாதாரணமான சூழலை புரிந்து கொண்டு மின் விநியோக நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்..

வெள்ளத்தில் சிக்கி இருந்த ஆமிர் கான், விஷ்ணு விஷால் மீட்பு.

0

தன்னுடைய வீட்டில் வெள்ளம் புகுந்துள்ளதாகவும் காரப்பாக்கம் பகுதியில் நீரின் அளவு மோசமாக அதிகரித்து வருவதாகவும் நடிகர் விஷ்ணு விஷால் இன்று காலை X தளத்தில் பதிவிட்டிருந்த நிலையில் தற்போது அவரை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் மீட்டுள்ளனர்.

இதில் ஆச்சிரியம் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானும் சேர்த்து மீட்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட வேலைகளுக்காக சென்னை வந்துள்ள அமீர் கான் வெள்ளத்தில் சிக்கியுள்ளார். தீயணைப்புத் துறையினர் மற்றும் தமிழக அரசுக்கு விஷ்ணு விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.