Thursday, June 25, 2026
Home Blog Page 17

கொள்ளையனிடமே கொள்ளை.. லஞ்ச வழக்கிலும் சிக்கிய இன்ஸ்பெக்டர்..!

0

கன்னியாகுமரி மாவட்டம், நேசமணி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் அன்பு பிரகாஷ். சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக குமரி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களிலும் இவர் பணி புரிந்துள்ளார். இந்நிலையில், இவர் களியக்காவிளை காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது ஒருவர் கொள்ளையடித்த 38 சவரன் நகைகளில் சுமார் 20 பவுன் நகைகளை இவர் கொள்ளையடித்ததாக வழக்கு நடந்து வருகிறது.

அது தவிர, ஏற்கனவே அன்பு பிரகாஷ் வீட்டில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது. அப்போது அவரது வீட்டில் மேற்படி திருட்டு நகைகள் இருந்ததும் அம்பலமானது. அது தொடர்பான வழக்கும் லஞ்ச ஒழிப்பு பிரிவில் நிலுவையில் உள்ளது. நேசமணி நகர் காவல் நிலைய ஆய்வாளராக தற்போது அவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், ‘சந்தை’ ராஜன் என்பவர் தன்னை ஒரு வழக்கில் ஆய்வாளர் அன்பு பிரகாஷ் பொய்யாக சேர்த்து உள்ளதாகவும், அதில் இருந்து விடுவிக்க லஞ்சம் கேட்டு மிரட்டியதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் ‘சந்தை’ ராஜனை விடுவித்து வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அன்பு பிரகாஷ்க்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் வழக்கில் இருந்து விடுவிக்க 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. அதில் ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை பெற்ற அவர், மீதி ரூ.1,15,000 தந்தால் மட்டுமே வழக்கில் இருந்து விடுவிக்க இயலும் என்றும், இல்லை என்றால் குற்றப்பத்திரிகையில் பெயரை சேர்த்து விடுவதாகவும் ‘சந்தை’ ராஜனை மிரட்டியதாக கூறப்படுகிறது.லஞ்சம் கொடுக்க விரும்பாத ‘சந்தை’ ராஜனை லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்து உள்ளார். உடனே லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாயை அவரிடம் கொடுத்து அனுப்பி உள்ளனர். பின்னர் அன்பு பிரகாஷ் கேட்டபடி வெள்ளமடத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற ‘சந்தை’ ராஜனை ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயை கொடுத்து உள்ளார்.

அப்போது லஞ்ச பணத்தை வாங்கிய அன்பு பிரகாஷை அங்கு மறைந்திருந்த இருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்கால், உதவி ஆய்வாளர் பொன்சன், சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன், அருண் அசரியா உள்ளிட்ட போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியிலும், போலீஸ் வட்டாரத்திலும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குற்றத்தை தடுக்க வேண்டிய காவல் அதிகாரியே குற்றச்செயலில் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.

சமூக நீதி விடுதிகள் மூடப்பட்டு வருகிறது’ – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

0

கோவை சுங்கம் பகுதியில் இந்திய கட்டடக்கலை வல்லுனர்கள் குழுமம் சார்பில் கட்டடக்கலை கண்காட்சி நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் கூறுகையில், ”ஸ்மார்ட் சிட்டி திட்டம் பிரதமர் மோடியின் சிந்தனையில் உருவான அற்புதமான திட்டம். இந்தியாவிலேயே அதிகமான ஸ்மார்ட் சிட்டிகள் பெற்ற மாநிலம் தமிழ்நாடு. அதிலும் கோவையில் 7 குளங்கள் சீரமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கையில் இருக்கக்கூடிய பல்வேறு விஷயங்களை எடுத்து புதிதாக கல்வி கொள்கை திட்டத்தில் செயல்படுத்துகிறோம் என்று திராவிட மாடல் அரசு கூறுகிறது. தமிழ்நாடு கல்வியில் சிறந்தது என்று மாநாடு நடத்துகிறார்கள். அதே சமயம் பல்வேறு பள்ளிக்கூடங்கள் மூடப்படுகிறது. சமூக நீதி பேசுகின்ற திராவிட மாடல் அரசாங்கத்தில் சமூக நீதி விடுதிகள் மூடப்பட்டு வருகிறது” என்றார். பல்கலைக்கழகங்கள் மசோதா தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “ஒரு மசோதாவை கொண்டு வருவதற்கு முன் கலந்துரையாடி கொண்டு வர வேண்டும். அவசரகதியில் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்துவதும், அதன் பிறகு கூட்டணி கட்சிகள் எல்லாம் கூறியதை அடுத்து அதனை வாபஸ் பெறுவதும் என தமிழக அரசு டிராமா போடுகிறது” என்றார்.கரூர் சம்பவம் தொடர்பாக பேசிய அவர், “கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய் குறைந்தபட்சம் மக்களை பார்க்கிறார் என்பதே நல்ல விஷயம் தான். சிபிஐ விசாரணை முடிந்து உண்மை வெளிவரும் பொழுது நீதி கிடைப்பதற்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” என்றார்.

PM SHRI திட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு கூடிய விரைவில் இணையும். கேரள மாநிலம் இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் வந்து விடக்கூடாது என்று ஏற்றுக் கொண்டார்கள். தமிழக அரசும் இதனை ஏற்றுக் கொள்கின்ற காலம் நிச்சயம் வரும். கல்வியில் அரசியலை கலக்க வேண்டாம். யதார்த்தத்தை புரிந்து கொண்டு அந்தத் திட்டத்தில் இணைய வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “தமிழக வெற்றிக் கழகத்தை பாஜக முடக்கி வைத்துள்ளது என்ற கருத்து அபாண்டமான குற்றச்சாட்டு. நாட்டில் அனைத்து கட்சிகளும் சுதந்திரமாக செயல்படலாம். யாரும் யாரையும் முடக்க முடியாது” என்றார்.

சூரசம்ஹாரத்துக்கு முழுவீச்சில் தயாராகும் திருச்செந்தூர்..! 4,000 போலீசார் பாதுகாப்பு

0

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை (வியாழக்கிழமை) சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும், 8ஆம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்காக இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலை சுற்றி குவிய தொடங்கியுள்ளனர்.

சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை முன்னிட்டுன் போக்குவரத்து நெருக்கடியை சமாளிப்பதற்கும் மக்களின் கூட்ட நெரிசலை கண்காணிப்பதற்கும் ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் தலைமையில் 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும் பல்வேறு போக்குவரத்து மாற்றங்களை காவல்துறையினர் கொண்டு வந்துள்ளனர். அதன் விவரம் வருமாறு; தூத்துக்குடி சாலை வழியாக திருச்செந்தூருக்கு வரும் வாகனங்கள் J.J.நகர், ஆதித்தனார் மணிமண்டபம் எதிர்புறம், IMA மஹால் அருகில் (பிரசாத் நகர்), ITI எதிர்புறம் (விடுதி அருகில்), ITI வளாகம், ஆதித்தனார் விடுதி எதிர்புறம் ஆகிய 6 வாகன நிறுத்துமிடங்களிலும், திருநெல்வேலி சாலை வழியாக திருச்செந்தூருக்கு வரும் வாகனங்கள் சுப்பையா லேண்ட் (சபி டிரேடர்ஸ் அருகில்), வியாபாரிகள் சங்கம் (சபி டிரேடர்ஸ் எதிர்புறம்), வேட்டையாடும் மடம் (TNSTC BUS) அன்புநகர் (குமாரபுரம்), குமரன் ஸ்கேன் சென்டர் எதிர்புறம், ஆதித்தனார் குடியிருப்பு (கோவிந்தமாள் கல்லூரி எதிர்புறம்), அருள்முருகன் நகர் (பாண்டி சங்கராச்சாரியார் பள்ளி அருகில்) ஆகிய 7 வாகன நிறுத்துமிடங்களிலும் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரமன்குறிச்சி சாலை வழியாக திருச்செந்தூருக்கு வரும் வாகனங்கள் பால்பாயாசம் லேண்ட் ( FCI குடோன் கிழக்கு பகுதி), சுந்தர் லேண்ட் (பால்பாயாசம் லேண்ட் எதிர்புறம்), செந்தில்குமரன் பள்ளி (TNSTC BUS) ஆகிய 3 வாகன நிறுத்துமிடங்களிலும் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

மேலும் தூத்துக்குடி சாலை வழியாக திருச்செந்தூருக்கும், திருநெல்வேலி சாலை வழியாக திருச்செந்தூருக்கும் வாகன அனுமதிச் சீட்டுடன் (Green Pass) வரும் வாகனங்கள் திருச்செந்தூர் மெயின் ஆர்ச் வரை வந்து TB சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள. 3 வாகன நிறுத்திமிடங்களிலும் பரமன்குறிச்சி சாலை வழியாக வாகன அனுமதிச் சீட்டுடன் (Green Pass) வரும் வாகனங்கள் திருச்செந்தூர் முருகா மடம் வழியாக அரசு மருத்துவமனை பின்புறம் மார்க்கமாக மெயின் ஆர்ச் வரை வந்து மேற்படி TB சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 3 வாகன நிறுத்திமிடங்களிலும் தங்களது வாகனங்களை நிறுத்த வேண்டும்தூத்துக்குடி, ஆறுமுகநேரி மார்க்கமாக திருச்செந்தூரை கடந்து குலசேகரன்பட்டினம், உவரி வழியாக கன்னியாகுமரி செல்லும் வாகனங்களும், அதே போல் திருச்செந்தூரை கடந்து உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக நாகர்கோவில் செல்லும் வாகனங்களும் திருச்செந்தூரை கடந்து செல்லாமல், ஆறுமுகநேரி DCW ஜங்ஷன், திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன், ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி உடன்குடி வழியாக செல்லவும். அல்லது சண்முகபுரம் ரயில்வே கேட், ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி, உடன்குடி வழியாக செல்லவும்.
குரும்பூர் மார்க்கத்திலிருந்து திருச்செந்தூரை கடந்து குலசேகரன்பட்டினம், உவரி வழியாக கன்னியாகுமரி செல்லும் வாகனங்களும், அதே போல் திருச்செந்தூரை கடந்து உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக நாகர்கோவில் செல்லும் வாகனங்களும் திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன், ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி, உடன்குடி வழியாக செல்லவும்.
கன்னியாகுமரி, உவரி, குலசேகரன்பட்டினம் வழியாக திருச்செந்தூரை கடந்து ஆறுமுகநேரி, தூத்துக்குடி அல்லது குரும்பூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் திருச்செந்தூரை கடந்து செல்லாமல் குலசேகரன்பட்டினம், உடன்குடி, பரமன்குறிச்சி, காயாமொழி, காந்திபுரம், ராணிமஹாராஜபுரம், திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன் வழியாக செல்லவும். அல்லது ஆலந்தலை N.முத்தையாபுரம், செந்தூர் மினரல்ஸ் வாய்க்கால் பாலம், நடுநாலுமூலைக்கிணறு விலக்கு வழியாக காந்திபுரம், ராணிமஹாராஜபுரம் வந்து திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன் வழியாக திருநெல்வேலி, தூத்துக்குடி செல்லவும்.

நாகர்கோவில், திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக திருச்செந்தூரை கடந்து ஆறுமுகநேரி, தூத்துக்குடி அல்லது குரும்பூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் திருச்செந்தூரை கடந்து செல்லாமல் பரமன்குறிச்சி, காயாமொழி, ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ ஜங்ஷன் வழியாக திருநெல்வேலி, தூத்துக்குடி செல்லவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் புயல்

0

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 990 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (அக்.26) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும்.

அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மறுநாள் (அக்.27) காலை மத்திய மேற்கு வங்கக்கடலில் புயலாக உருவெடுக்கும். அதன்பிறகு அடுத்த 48 மணி நேரங்களில் வடமேற்காக ஆந்திர பிரதேச கடற்கரையை நோக்கி நகரலாம்.

எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, நாகப்பட்டினம், கடலூர், சென்னை ஆகிய 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற நண்பர்கள் 4 பேர் உயிரிழப்பு…

0

சிறுவாணி சாலையில் அதி வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், நண்பர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணையில், கோவை செட்டிப்பாளையம் அடுத்த சிறுவாணி சாலையில் அதிவேகமாக வந்த கார் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவற்காக ஒதுங்கிய போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் இருந்த நண்பர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரூர் போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி கொண்டிருந்த இரண்டு பேரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கபட்ட நிலையில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். படுகாயங்களுடன் போராடி வரும் மற்றோருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பேரூர் போலீசார், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஹரீஷ், பிரகாஷ் மற்றும் திருச்சியை சேர்ந்த சபா ஆகிய மூன்று பேரும், பேரூர் அடுத்த தெலுங்குபாளையம் பகுதியிலுள்ள தனியார் வாட்டர்வாஷ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இவர்களுடன் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலைத்துறை 3 ஆம் ஆண்டு பயிலும் மாணவர்களான, தஞ்சையை சேர்ந்த பிரபாகரன் மற்றும் அரியலூரை சேர்ந்த அகத்தியன் ஆகியோரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்த நிலையில், நேற்று ஹரீஷ் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக 5 பேரும், வாட்டர் வாஷ் செய்வதற்காக வந்த காரை எடுத்துக் கொண்டு பேரூர் பகுதிக்கு சென்றனர்.

அங்கு பிறந்தாளை கொண்டாடி விட்டு மீண்டும் பணிபுரியும் இடத்திற்கு காரில் வந்தனர். அப்போது காரை பிரகாஷ் ஓட்டி வந்தார். இதில், கார் பேரூரை அடுத்த செட்டிபாளையம் பிரிவு அருகே வந்த போது, எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக இடது புறம் ஒதுங்கியது. இந்த சமயத்தில், ஓட்டுநரின் கட்டுப்பட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், காரில் பயணித்த ஹரீஷ், பிரகாஷ், அகத்தியன், சபா ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த பிரபாகரனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்ற நண்பர்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சாலையோரம் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடங்கியது சட்டப்பேரவை கூட்டத்தொடர்; கரூர் துயரத்திற்கு மெளன அஞ்சலி!

0

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு நடுவே தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து கரூர் கூட்ட நெரிலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, அவர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. தொடர்ந்து கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி, ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன், வால்பாறை எம்எல்ஏவாக இருந்த அமுல் கந்தசாமி உள்ளிட்டோரின் மறைவுக்கும் பேரவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பேரவை நிகழ்ச்சிகள் அனைத்தும் இன்றைய தினம் ஒத்திவைக்கப்பட்டது.

இரண்டாம் நாளான நாளை (அக்.15) 2025-26 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் பேரவைக்கு அளிக்கப்படும். மூன்றாம் நாள் (அக்.16) கூட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். தொடர்ந்து, 4ஆம் நாள் (அக்.17) கூட்டத்தொடரில் 2025-2026 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதிலுரை நடைபெறும். சட்டமன்ற கூட்டம் நடைபெறும் அக்.15, 16, 17 ஆகிய தேதிகளில், பேரவை துவங்கிய பின் வினாக்கள் – விடைகள் நேரம் இடம்பெறும். அதனை தொடர்ந்து 2025-26 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்க சட்ட முன்னறிவு பேரவையில் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். மேலும் சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக அதிமுக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுவதால், நாளைய பேரவை கூட்டத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், அதிமுகவில் செங்கோட்டையனின் கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளதால், பேரவையில் அவர் எப்படி செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

கோவையில் லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து செயலாளர் சிக்கினார்!

0

கோவையில் வீட்டுமனை அங்கீகாரம் பெற லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து செயலாளர் மற்றும் ஊழியர் கையும், களவுமாக கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள மூக்கனூரைச் சேர்ந்தவர் ராஜபிரபாகரன். இவருக்கு மசக்கவுண்டன் செட்டிபாளையம் பகுதியில் 15 சென்ட் வீட்டுமனை உள்ளது. இதற்கு வீட்டுமனை அங்கீகாரம் பெற ராஜபிரபாகரன் மசக்கவுண்டன் செட்டிபாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தின் செயலாளர் ரங்கசாமியிடம் விண்ணப்பம் அளித்தார். அப்போது அவர் அங்கீகாரம் வழங்க லஞ்சம் தர வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. இதை அடுத்து ராஜபிரபாகரன், ரங்கசாமிக்கு 15000 ரூபாய் கொடுத்து உள்ளார். இதை தொடர்ந்து ராஜபிரபாகரனை மீண்டும் அழைத்த ரங்கசாமி மேலும் 19000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிருப்பதி அடைந்த ராஜ பிரபாகரன் இதுதொடர்பாக கோவை லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையில் புகார் அளித்தார். கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர், ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுக்களை ராஜபிரபாகரனிடம் கொடுத்து அனுப்பினர். ரங்கசாமியிடம் கொடுக்க சென்ற போது, தனது உதவியாளர் பூபதி என்பவரிடம் பணத்தை கொடுக்கும் படி ரங்கசாமி கூறினார். அதன்படி பூபதியிடம் பணத்தை கொடுத்த போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், லஞ்சம் வாங்கிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை – நீதிபதி அதிரடி உத்தரவு

0

திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் ஆடு, கோழி பலியிட தடைவிதித்து நீதிபதி ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவை உறுதிப்படுத்தி, மூன்றாவது நீதிபதி ஆர். விஜயகுமார் தீர்ப்பளித்துள்ளார்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி விழா நடத்தப்படும் என தர்கா நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. இதையடுத்து, திருப்பரங்குன்றம் மலைக்கு ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி வருகை புரிந்திருந்தார். அப்போது, எம்.பி-யுடன் வந்தவர்கள் மலைப்பகுதியில் அசைவ உணவு சாப்பிடுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் பரவியதால், பெரும் சர்ச்சை வெடித்தது. இதனால், மலையை பாதுகாப்போம் என்று இந்து முன்னணியினர் அமைப்பினர் மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் சார்பில் பிப்ரவரி 4 ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் 144 தடை உத்தரவை பிறப்பித்தனர். ஆனாலும், தடையை மீறி இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால், 195 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இந்து மக்கள் கட்சி சார்பில் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. சோலை கண்ணன் மற்றும் பரமசிவன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், “மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமானது; சிலர் அங்கு ஆடு, கோழி பலியிட்டு மலைப்பகுதியை ‘சிக்கந்தர் மலை’ என அழைக்க முயற்சிக்கிறார்கள். இதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரினர்.

மற்றொரு மனுவில் ராமலிங்கம் என்பவர், “பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, கோயிலுக்குச் சொந்தமான பாதையை மறைத்து, நெல்லித்தோப்பு பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதிக்கக்கூடாது” என கூறினார். இதனுடன், சிக்கந்தர் தர்கா நிர்வாகம் சார்பாகவும் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், “தர்காவில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும், தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதி செய்ய அனுமதி அளிக்க வேண்டும்” என கோரப்பட்டது. மேலும், சுவஸ்தி ஸ்ரீலெட்சுமிசேனா பட்டாச்சார்ய மகா சுவாமி என்பவர், “திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவிக்க வேண்டும்” என்ற மனுவையும் தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்குகள் அனைத்தும் மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெ.நிஷா பானு மற்றும் எஸ்.ஸ்ரீமதி ஆகியோரின் அமர்வில் விசாரிக்கப்பட்டன. இருவரும் தனித்தனியாக மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். நீதிபதி நிஷா பானு, “திருப்பரங்குன்றம் மலை பகுதியில் அமைதி நிலவ வேண்டும்; மத நல்லிணக்கம் காப்பாற்றப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டு, இஸ்லாமியர்களுக்கு நெல்லித்தோப்பில் தொழுகை நடத்த அனுமதி வழங்கினார். மேலும், சிக்கந்தர் தர்கா புனரமைப்புப் பணிகளுக்கு தொல்லியல் துறை அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவித்தார். ஆனால், நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, “திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்க வேண்டும்; நெல்லித்தோப்பில் தொழுகை நடத்தக்கூடாது” என்ற கோரிக்கைகளை ஏற்று உத்தரவிட்டார். இவ்வாறு மாறுபட்ட தீர்ப்புகள் வந்ததால், வழக்கு மூன்றாவது நீதிபதி ஆர்.விஜயகுமார் அமர்வுக்கு மாற்றப்பட்டது.இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக தொடர்ந்த விசாரணைக்கு பின், இன்று (அக். 10) மூன்றாவது நீதிபதி ஆர்.விஜயகுமார் தீர்ப்பளித்தார். அதில் அவர், “திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை விதித்த நீதிபதி ஸ்ரீமதியின் உத்தரவு சரியானது” என்றும், “நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அனுமதி வழங்கிய நீதிபதி நிஷா பானுவின் உத்தரவையும் உறுதிப்படுத்துகிறேன்” என்றும் கூறினார். மேலும், மலைப்பகுதி தொடர்பான சொத்து உரிமை மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து தேவையெனில் சிவில் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் தெரிவித்தார்இந்த தீர்ப்பின் மூலம், திருப்பரங்குன்றம் மலை குறித்து பல ஆண்டுகளாக நீண்டு வரும் மத, சட்டப் பிரச்சினைகளுக்கு நீதிமன்றம் தெளிவான தீர்வை வழங்கியுள்ளது. இதனுடன், மலைப்பகுதியில் மத நல்லிணக்கம் நிலைநிறுத்தப்படும் என்றும், தர்கா மற்றும் கோயில் பக்தர்கள் அமைதியான முறையில் தங்கள் வழிபாட்டு பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூர் சாலையில் காரோடு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!

0

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் வசந்தாமில் அருகே நேற்று சுடலைமுத்து என்பவர் சரக்கு ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அப்போது ஆட்டோவை திருப்பும் போது, அந்த வழியாக வந்த கார் மீது லேசாக உரசியதாக கூறப்படுகிறது. மது போதையில் காரில் வந்த இளைஞர்கள் சுடலை முத்துவிடம் சண்டையிட்டதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், ஆட்டோ ஒட்டுநரை இரும்பு கம்பியால் தாக்கி உள்ளனர். தொடர்ந்து இளைஞர்கள் காரை எடுத்துக்கொண்டு வேகமாக அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற போது, காரை எடுக்க விடாமல் ஆட்டோ ஓட்டுநர் காரின் முன்பு நின்று தடுத்த நிலையில், அதை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் காரை இயக்கியதில் பக்கவாட்டில் தொங்கியபடி சிறிது தூரம் ஆட்டோ ஓட்டுநரை காரில் இழுத்து சென்றனர். சிறிது தூரம் தொங்கியபடி இருந்த ஆட்டோ ஓட்டுநர் சுடலை முத்து பின்னர் காரில் இருந்து கீழே விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆட்டோ ஓட்டுநருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே காரில் தொங்கிய ஆட்டோ ஓட்டுநரை சாலையில் இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தன்னை தாக்கியவர்கள் குறித்து ஆட்டோ ஓட்டுநர் கொடுத்த புகாரின் பேரில், காரில் வந்த இளைஞர்கள் குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிங்காநல்லூர் பகுதி சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு காரில் வந்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

அவினாசி சாலை மேம்பாலம் எடப்பாடி ஆட்சியின் சாதனை -எஸ்.பி.வேலுமணி

0

அவினாசி சாலையில் திறக்கப்பட்டுள்ள புதிய மேம்பாலத்திற்கு அதிமுக ஆட்சியில் முழு நிதியையும் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை அவினாசி சாலையில் ரூ.1,791 கோடி மதிப்பில் கோல்ட் வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை புதியதாக பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்திற்கு ஜிடி நாயுடு பெயரிட்ட தமிழக அரசு அதனை நேற்று திறந்து வைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தது. இந்நிலையில், இந்த மேம்பால பணிகள் அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்டது என்பதால் இன்று உப்பிலிபாளையம் பகுதியில் அதிமுகவினர் மேளதாளம் முழங்க, வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே. ஆர்.ஜெயராமன் ஜமாப் இசைக்கு ஏற்ப நடனமாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
அதன் பின்னர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் 10 கி.மீ ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் வாகனங்களில் ஊர்வலமாக சென்றனர்.உப்பிலிபாளையம் முதல் கோல்ட் வின்ஸ் வரை கட்சியினருடன் வாகனத்தில் பயணித்த எஸ்.பி.வேலு மணி, கோல்ட்வின்ஸ் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். பாலத்தை பார்வையிட்ட பின்பு கோல்ட் வின்ஸ் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ”50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி, அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் கொண்டு வரப்பட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்க அவினாசி சாலையில் மேம்பாலம் வேண்டுமென்று அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்த நிலையில், அவர் முழு நிதியையும் கோவை மக்களுக்காக ஒதுக்கி தந்தார்இந்த பாலத்தின் பணிகள் அதிமுக ஆட்சியில் 55 சதவீதம் நிறைவு செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பு மற்றும் ஆட்சி மாற்றம் போன்றவற்றால் ஒன்றரை ஆண்டுகள் பணிகள் நின்றது. தற்போது இந்த பாலம் திறக்கப்பட்டுள்ளது.இந்த பாலத்துக்கு ஜிடி நாயுடு பெயர் சூட்டப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சிதான். கோவைக்கு நான்கரை ஆண்டுகளாக இந்த ஆட்சியில் எதுவும் அறிவிக்கவில்லை. அதிமுக கொண்டு வந்த திட்டத்தை தான் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இந்த பாலத்தில் வேகத்தை கட்டுப்படுத்த கேமரா பொருத்த வேண்டும். முறையாக டைவர்சன் செய்து விபத்தில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றார்.