Monday, September 21, 2026
Home Blog Page 42

சீமான் மீதான புகாரை திரும்ப பெற்றார் நடிகை விஜயலட்சுமி…!

0

சீமான் பேசும் வார்த்தைகள் கூட தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது – நடிகை விஜயலட்சுமி.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்றதாக நடிகை விஜயலட்சுமி தெரிவித்தார்.சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் மீது அளித்த புகாரை நடிகை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நியாயம் கிடைக்கும் என வந்த தன்னை பயன்படுத்திக் கொண்டதால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாக அவர் கூறினார்.வீரலட்சுமி தன்னை தவறாக வழிநடத்துகிறார் என்பதை அறிந்து கொண்டேன் இதன் காரணமாகத்தான் நான் கண்டித்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டும் இருந்தேன்.யாரும் தன்னை கட்டாய படுத்தியோ, மிரட்டியோ இந்த வழக்கை வாபஸ் பெற வில்லை.

நானாக தான் வாபஸ் பெறுகிறேன்.சீமானிடம் இது குறித்து பேசினேன் இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை நான் தொடர்வதாக இல்லை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். இந்த வழக்கு தனக்கு திருப்திகரமாக இல்லை. புகார் அளித்த தன்னை மட்டுமே அசிங்கப்படுத்தி வந்தனர்.சீமான் மீது காவல்துறையிடம் அளித்த புகார் குறித்து விசாரணை தொய்வாகவே இருந்தது. சீமான் பேசும் வார்த்தைகள் கூட தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது .தமிழ்நாட்டில் சீமானுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அவரை யாரும் எதுவும் செய்ய முடியாது நான் தோல்வியை ஒத்துக் கொள்கிறேன்.”என்றார்

ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 14 வரை நீட்டிப்பு…!

0

10 ஆண்டுகளில் வீடு அல்லது வேறு ஊருக்கு குடிபெயர்ந்து இருந்தால் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதிய விலாசத்தை சேர்த்துக்கொள்ளலாம்.

செப்டம்பர் 2010 இல் இந்திய அரசு தனது குடிமக்களுக்கு ஒருங்கிணைந்த அடையாள அட்டையை வழங்கும் யோசனையில் ஆதார் அட்டை முறையை கொண்டுவந்தது. கொண்டு வந்து 13 ஆண்டுகள் நிறைவுறும் நிலையில் அதில் உள்ள தரவுகளை இலவசமாக புதுப்பித்துக்கொள்ள 2023 ஆண்டின் தொடக்கத்தில், குடிமக்களுக்கு UIDAI அனுமதி வழங்கியது.

ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்கள் அட்டையில் தேவையான தகவல்களை புதுப்பித்துக்கொள்ள இது ஒரு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. முதலில், இலவச புதுப்பிப்பு காலக்கெடு ஜூன் 14 என நிர்ணயிக்கப்பட்டது. பின்னர், அரசாங்கம் இந்த காலக்கெடுவை செப்டம்பர் 14 வரை நீட்டித்தது. இப்போது, ​​இரண்டாவது முறையாக, இலவச ஆன்லைன் ஆதார் அட்டை புதுப்பிப்பு காலக்கெடுவை அரசாங்கம் மேலும் நீட்டித்துள்ளது . குடிமக்கள் தங்கள் ஆதார் அட்டை விவரங்களை டிசம்பர் 14 வரை இலவசமாகப் புதுப்பிக்க வாய்ப்பளித்துள்ளது.

UIDAI ஆனது myAadhaar போர்ட்டலில் இலவச ஆவண புதுப்பிப்பு வசதியின் பலனைப் பெற குடியிருப்பாளர்களை வலியுறுத்துகிறது. இந்தச் சேவையைப் பயன்படுத்த, தனிநபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆதாரத்தை வழங்க வேண்டும். பொதுவாக, ஆதார் அட்டையில் ஒவ்வொரு விவரத்தையும் புதுப்பிப்பதற்கு ரூ. 50 செலவாகும்.ஆன்லைன் மாற்றங்கள் கட்டணமில்லா அப்டேட்களுக்கு மட்டுமே பொருந்தும்.மற்ற தரவுகளை ஆதார் மையங்களில் காசு கொடுத்து தான் செய்யவேண்டும்.

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை. சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்…

0

ஒரே நேரத்தில் கோயம்பேட்டில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக பேருந்துகள் இயக்கப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விடுமுறையோ அல்லது விழாக்காலமோ எதுவாக இருந்தாலும் சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்ககளுக்கு செல்வது வழக்கம், இதன் காரணமாக விடுமுறை, பண்டிகை என்றாலே கோயம்பேடு பேருந்து நிலையம் மக்கள் வெள்ளத்தால் ஸ்தம்பித்து போகும். ஊர்களுக்கு செல்பவர்கள் கூட்டம் கூட்டமாக கோயம்பேடைநோக்கி செல்வதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஒவ்வொரு முறையும் ஏற்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

அவ்வாறு வரும் சனி, ஞாயிறு மற்றும் விநாயகர் சதுர்த்தி என அடுத்தடுத்து விடுமுறை வருவதால், சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பயணிகளின் வசதிகளுக்காக, சென்னை கோயம்பேட்டில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிகளவு இயக்கப்பட்டன.

தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்…. ஒரே வாரத்தில் 113 பேருக்கு பாதிப்பு உறுதி…

0

விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரியில் குழந்தைகளுக்கு 35 படுக்கை வசதி கொண்ட தனி வார்டும், பெரியவர்களுக்கு 45 படுக்கை வசதிக்கொண்ட தனி வார்டும் அமைக்கப்பட்டுள்ளது…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு முழுவதும் அண்மையில் பெய்த மழையால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உயர்ந்து வருகிறது. தலைநகர் சென்னையில் உள்ள மதுரவாயலில் 4 வயது சிறுவன் டெங்குவால் உயிரிழந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.திருவாரூர் மாவட்டத்தில் 11 வயது சிறுமி உட்பட நான்கு பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி காணப்பட்டுள்ளது.

அவர்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் தனி வார்டு அமைக்கப்பட்டு , 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை..! மாதம் மாதம் எந்த தேதியில் வரும் தெரியுமா…?

0

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1.6 கோடி மகளிருக்கு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது…

குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அளிக்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் திமுக தேர்தல் அறிக்கையில் மிகமுக்கிய திட்டமாகும். இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 1.6 கோடிபேரின் விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டன. தகுதியான அனைவருக்கும் உரிமைத் தொகை செல்கிறதா என பணம் அனுப்பி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று, காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில், பயனாளிகளுக்கு உரிமைத் தொகைக்கான ஏடிஎம் அட்டைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார் . உரிமை தொகை பெற்ற பெண்கள் தேவையான பொருட்களை வாங்க உதவிகரமாக இருக்கும் என்று நெகிழ்ச்சி தெரிவித்தனர்.

சென்னை ஹோட்டலில் கள்ளத் துப்பாக்கி விற்பனை. வெளியான திடுக்கிடும் தகவல்…

0

சென்னையில் கள்ளத் துப்பாக்கி விற்பனை செய்து வந்தது ஹோட்டல் உரிமையாளர் வெளியான அதிர்ச்சி தகவல்…

சென்னை புழல், மற்றும் காவாங்கரை பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுவதாக கொளத்தூர் உதவி ஆணையர் தனிப்படை பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் சம்மந்தப்பட்ட பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது கள்ளத்தனமாக மது விற்பனை செய்து வந்த யோகேஷ் தலைமறைவானதால் தனிப்படை போலீசார் அருகில் உள்ள பொதுமக்களிடம் யோகேஷ் வந்தால் தகவல் தெரிவிக்குமாறு கூறிவிட்டு சென்றுள்ளனர். இன்று காலை யோகேஷ் வீட்டில் இருப்பதாக தகவல் கிடைத்ததன் பேரில் தனிப்படை போலீஸார் விரைந்து சென்று யோகேஷை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.மேலும், அவரது செல்போனை போலீஸார் ஆய்வு செய்த போது அதில் யோகேஷ் துப்பாக்கியுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதை தொடர்ந்து போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

புழல் அம்மா நினைவு நகர் முதல் தெருவில் வசித்து வரும் யோகேஷ் (35) புழல், காவாங்கரை, பகுதியில் சொந்தமாக தாதா ஓட்டல் என்ற பெயரில் உணவகம் நடத்தி வருவது தெரியவந்தது. அதுமட்டுமின்றி, சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் மது விற்று வந்த யோகேஷ், சட்டவிரோதமாக கள்ளத் துப்பாக்கி வாங்கி விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.கடந்த 9 மாதங்களுக்கு முன்பு யோகேஷ் உத்திர பிரதேசத்தில் இருந்து இரண்டு கள்ளத் துப்பாக்கியை வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் வாங்கி வந்த துப்பாக்கியை சென்னையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அபுதாகீர் என்பவருக்கும், ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் விற்பனை செய்தது விசாரணையில் அம்பலமானது.

2 குழந்தைகளை தவிக்கவிட்டு இளைஞருடன் ஓட்டம்பிடித்த பெண்.. கணவர் அதிர்ச்சி.

0

கணவன் கொடுத்த புகாரை படித்த காவல்துறையினர் புகார் கொடுத்த கணவனுடன் வந்த தாயின்றி தவிக்கும் இரு குழந்தைகளையும் பார்த்து மனம் உடைந்தனர்…

ஒடிசா இளைஞருடன் சென்ற மனைவியை கண்டுபிடித்து தரும்படி இரு குழந்தைகளுடன் கணவன் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது…

ஜார்கண்ட் மாநிலம் மகேஷ்பூர் கிராமத்தை சேர்ந்தவர் நஜிபுல் ஷேக் இவரது மனைவி சஹினா, இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. சென்னையில் தங்கி கட்டிட வேலை செய்வதற்காக கடந்த வாரம் சென்னை வந்துள்ளனர்…

அடுத்த 4 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை அப்டேட்.

0

சென்னையில் அடுத்த அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று (14.09.2023) காலை வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒரிசா – மேற்கு வங்காள பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து இன்று (15.09.2023) காலை கிழக்கு மத்திய பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 3- 4 தினங்களில் மேற்கு திசையில் நகரக்கூடும்.

பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு தி.மு.க சார்பாக மாலை அணிவித்து மரியாதை..

0

பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் காந்திபுரம் நகர பேருந்து நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணாவின் உருவ சிலைக்கு கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் தலைமையில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  நிகழ்ச்சியில் பொங்கலூர் பழனிச்சாமி,  மாநகர் மாவட்ட நிர்வாகிகள், தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் மாநகராட்சி மண்டல தலைவர்கள் நிலை குழு தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் கிளைச் செயலாளர் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டு அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மார்க் ஆண்டனி வெற்றியடைய ஏழுமலையானிடம் சரணடைந்தேன் – நடிகர் விஷால்…!

0

டைம் மெஷின் மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த திரைப்படத்தில், விஷால் – எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவரும் மூன்று விதமான காலகட்டங்களில் வருவார்கள் என கூறப்படுகிறது.

நாளை திரையரங்குகளில் வெளியாகும் மார்க் ஆண்டனி திரைப்படம் வெற்றியடைய வேண்டி திருப்பதி ஏழுமலையானிடம் சரணடைந்தேன் என நடிகர் விஷால் பேட்டியளித்துள்ளார்.

நடிகர் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுவும் டைம் மெஷின் மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த திரைப்படத்தில், விஷால் – எஸ்.ஜே.சூர்யா ஆகிய இருவரும் மூன்று விதமான காலகட்டங்களில் வருவார்கள் என கூறப்படுகிறது. அதற்கான தனித்தனி தோற்றங்களும் அவர்களுக்கு உள்ளன.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து நாளை திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் இன்று திருப்பதி கோவிலில் விஷால் ஏழுமலையானை வழிபட்டார். விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்ட விஷாலுக்கு கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள், வேத ஆசி ஆகியவை வழங்கப்பட்டன…