Monday, September 21, 2026
Home Blog Page 38

இணையத்தில் அதிக பார்வைகளை பெற்றது ‘லியோ’ 2-வது சிங்கிள்!

0

குலசாமிய வேண்டிக்க மாமே… மொரைக்காத நீ – இணையத்தில் அதிக பார்வைகளை பெற்றது ‘லியோ’ 2-வது சிங்கிள்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜயின் நடிப்பில் லலித் குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் லியோ. இதில் விஜயுடன் திரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், தமிழ் நடிகர் அர்ஜுன், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22 ஆம் தேதி ‘லியோ’ படத்தின் முதல் சிங்கிளான ‘நான் ரெடி’ பாடலை படக் குழு வெளியிட்டது. இந்தப் பாடலை அனிருத் இசையில் நடிகர் விஜய், அனிருத், அசல் கோலார் ஆகியோர் பாடியுள்ளனர். வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் இரண்டாவது பாடலை நேற்று படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படத்தின் இரண்டாவது பாடலான `BADASS’ பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் தற்போது 8 மில்லியன் பார்வைகளை கடந்து இணையத்தை கலக்கி வருகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்…

0

சுற்றுச்சூழல் வேளாண்மைத் துறையில் அளப்பரிய பங்காற்றியவர் எம்.எஸ்.சுவாமிநாதன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பசிப்பிணி ஒழிப்பு, உணவுப் பாதுகாப்பு ஆகிய குறிக்கோளுக்கு முக்கால் நூற்றாண்டு காலம் அரும்பணி ஆற்றியவர். கலைஞர் முதல்வராக இருந்தபோது மாநிலத் திட்டக் குழுவில் இடம்பெற்று ஆலோசனைகளை வழங்கினார். நீடித்த உணவுப்பாதுகாப்புக்கு ஆற்றிய பங்களிப்பால் பசுமைப் புரட்சியின் தந்தை என போற்றப்பட்டவர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல சுழச்சி உருவாகக்கூடும்…

0

மத்தியக்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல், மியான்மர் கடற்கரை பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல சுழச்சி உருவாகக்கூடும்;

அதற்கடுத்த 24 மணி நேரத்தில் மத்தியகிழக்கு வங்கக்கடலில், மியான்மர் கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வரும் 30ம் தேதி நடைபெறவிருந்த LEO இசை வெளியீட்டு விழா ரத்தானது தொடர்பாக சென்னை மாநகர போலீசாருக்கு தயாரிப்பு நிறுவனம் எழுதிய கடிதம் வெளியானது.

0

இசை வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கோரி கடந்த 20ம் தேதி கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது பாதுகாப்பு கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு விழா ரத்து செய்யப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது..!

உலகின் 8-வது கண்டம் கண்டுபிடிப்பு… 375 ஆண்டுகள் மறைந்திருந்ததாக விஞ்ஞானிகள் தகவல்.

0

பாறை மாதிரிகள் சிலவற்றை ஆய்வு செய்த அறிவியலாளர்கள், இந்த கண்டம் 375 ஆண்டுகளாக நீருக்குள் மறைந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

உலகின் 8 ஆவது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த கண்டம் 375 ஆண்டுகள் மறைந்திருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த நிகழ்வு உலக நாடுகள் பலவற்றில் முக்கிய செய்தியாக மாறியுள்து. கடல் தளத்திலிருந்து மீட்கப்பட்ட பாறை மாதிரிகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டத்தை கண்டுபிடித்துள்ளனர். ஆராய்ச்சியின் விவரங்கள் டெக்டோனிக்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த புதிய கண்டத்தை விஞ்ஞானிகள் ஜீலந்தியா (Zealandia) என்று அழைக்கிறார்கள். இது நியூசிலாந்துக்கு அருகே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கண்டத்தின் 94 சதவீத பகுதி நீருக்கு அடியில் மூழ்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக 49 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக இந்த கண்டம் அமைந்துள்ளது.

சென்னை தியாகராயநகரில் சாலையில் திடீர் பள்ளம்… பொதுமக்கள் அதிர்ச்சி.

0

பாண்டிபஜார் அருகே டாக்டர் நாயர் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது…

சென்னையில் நாள்தோறும் மழை பெய்துவரும் நிலையில், சாலைகளில் உள்ள மேடு, பள்ளங்களால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். மழைநீர் வடிகால் பணிகளுக்காக சென்னை மாநகரில் தோண்டப்பட்ட ஏராளமான சாலைகள் மீண்டும் புதிதாக போடப்படாததால் நகரின் பெரும்பாலான உட்புற சாலைகள் மோசமான நிலையில் உள்ளன.

இதனால், மழை பெய்யும் போது வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சென்று வரும் நிலையில், சென்னையின் மிக முக்கியமான இடமும், லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடமுமான தியாகராயநகரில் உள்ள சாலை திடீரென பள்ளம் ஏற்பட்டிருப்பட்டிருப்பது வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

தியாகராயநகரில் உள்ள முக்கிய சாலைகளான கோபதி நாராயணா சாலை மற்றும் சர் தியாகராய சாலைகளை இணைக்கும் வகையில் டாக்டர் நாயர் சாலை உள்ளது. இந்த சாலையுடன் கோபாலகிருஷ்ணா சாலை மற்றும் ராம தெரு சந்திக்கும் இடத்தின் அருகே இன்று(28.09.2023) காலை திடீரென பள்ளம் ஏற்பட்டது.

சந்திரமுகி 2 படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ..!

0

‘சந்திரமுகி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம்,இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது…

சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு தற்போது இயக்கியுள்ளார். அதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். அதேபோல் முதல் பாகத்தில் நடித்த நடிகர் வடிவேலு சந்திரமுகி 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் கங்கனா சந்திரமுகியா நடித்துள்ளார் இவர்களுடன் ராதிகா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார்.

‘சந்திரமுகி 2’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அந்த படம் குறித்த விமர்சனங்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

’லியோ’படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாகிறது..

0

‘லியோ’ படத்தின் 2வது பாடலான ‘BADASS’ நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு…!

லியோ படத்தின் பாடல் வெளியீட்டு விழா ரத்து – கொந்தளித்த சீமான்…

0

“தமிழக மக்கள் அமைதியாக இருப்பது கோழைத்தனம் என நினைத்து விடாதீர்கள். கர்நாடகாவில் தமிழக முதல்வருக்கு எதிராக நடைபெற்ற சம்பவங்கள் மானுட அவமானம்”-சீமான்

நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்காதது கண்டிக்கத்தக்கது என கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கும்பகோணம் வந்திருந்த சீமான், சிவந்தி ஆதித்தனாரின் 118 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் பேசுகையில், “காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனையில் கர்நாடகாவில் தமிழக முதல்வரை அவமரியாதை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக முதல்வர் தனிப்பட்ட முறையில் அவருக்காக தண்ணீர் கேட்கவில்லை, தமிழக மக்களுக்காக கேட்கிறார். காவிரி நதி நீர் பிரச்சினையில் அனைவரும் தமிழக முதல்வரின் பின் நிற்க வேண்டும்…