Friday, July 24, 2026

தமிழ்நாடு பாதிக்கப்பட்டால் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துவிடுவோம் – முதல்வர் ஸ்டாலின்

Must read

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

டிஜிட்டல் லஞ்சம்,கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ 

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!! தமிழ்நாடு முழுவதும்...

கோவையில் அடகு கார் விவகாரத்தில் ₹70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது.

திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கரையை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவருடைய கணவர் புதிய கார் வாங்கியுள்ளார். பண பிரச்சினைக்காக அந்த காரை ரவிக்குமார் என்பவரிடம் அடமானம் வைத்தாக தெரிகிறது. அந்த...

2 வருஷ படிப்பை இழுத்தடிக்கும் நிர்வாகம்; புத்தகம் இல்லை, வகுப்பும் இல்லை, ஆனால் அபராதம் மட்டும் ₹300 வசூலிப்பதா ? என மாணவர்கள் கடும் கொதிப்பு !!!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு முதுகலை படிப்புகளில் படித்து வருகின்றனர் . ஏற்கனவே இரண்டு வருடங்களில் முடிக்க வேண்டிய படிப்பை,...

நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடர் ஏப்ரல் 16ஆம் தேதி கூட்டப்படவுள்ள நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து, திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று (14-04-2026) தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழ்நாட்டின் வாசல்வரை வந்துவிட்ட பேராபத்தைப் பற்றிச் சொல்லவும், ஒன்றிய பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கவும் இந்த வீடியோவை வெளியிடுகிறேன்.

தேர்தல் பிரச்சாரத்துக்காக நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தாலும் இந்தக் கடமையை தவிர்க்க முடியாது. நாளை மறுநாள் ஏப்ரல் 16 அன்று, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூடுகிறது. கூடுகிறது என்று சொல்வதைவிட, தமிழ்நாடு, மேற்கு வங்கத் தேர்தலுக்கு இடையில் வலுக்கட்டாயமாகக் கூட்டப்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

‘Delimitation’ என்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக அரசியல் சட்டத் திருத்தத்தை இந்தத் தொடரில் ‘புல்-டோஸ்’ செய்யப் போகிறார்கள்.

ஆரம்பத்திலிருந்தே இதுபற்றி நாம் தொடர்ந்து எச்சரித்தோம். மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தினோம். தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதுமிருந்து, இதனால் பாதிப்படையவுள்ள மாநில முதலமைச்சர்களையும், முக்கியக் கட்சித் தலைவர்களையும் சென்னைக்கு அழைத்து, கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் நடத்தினோம்.

‘மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துங்கள்; அளவாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள், குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைபிடியுங்கள்’ என ஒன்றிய அரசு சொன்னதையெல்லாம் நாங்கள் கேட்டோம். சொன்னதை ஒழுங்காகச் செய்ததற்காகவே எங்களுக்குத் தண்டனை தருவீர்களா?

‘தென்மாநிலங்கள் பாதிப்படையாது’ என நாடாளுமன்றத்தில் வைத்துப் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவாதம் தரவேண்டுமென்று கேட்டதற்கு பதில் இல்லை. இதற்காக பல்வேறு கட்சி எம்.பிக்கள் பிரதமரை நேரில் சந்தித்து முறையிட நேரம் கேட்டோம். அதுவும் கிடைக்கவில்லை. இப்படி நாங்கள் சொன்ன எதையும் காதில் வாங்காமல், பிற கட்சிகள், மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தாமல், அவர்கள் இஷ்டத்துக்கு செய்யப் பார்க்கிறார்கள்.இப்படி அவசர அவசரமாக ‘Delimitation’ செய்ய நினைப்பது, பாஜக அரசின் அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயல். மாநில உரிமைகளை படுகொலை செய்யும் இந்த செயல் குறித்தும், சட்டத்திருத்தம் என்ன என்பது பற்றியும் இதுவரை எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. இப்படி மறைத்து செய்தாலே அதில் ஏதோ பெரிய ஆபத்து இருக்கிறது என்ற சந்தேகம் வலுவடைகிறது. குறிப்பாக, தென்மாநில மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள்.

நான் ஒன்றிய பாஜக அரசுக்கும், பிரதமர் மோடிக்கும், இந்த நேரத்தில் முக்கியமாக ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.

நடக்கவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், எங்கள் எம்.பி.க்கள் கலந்து கொள்வார்கள். தமிழ்நாட்டை பாதிப்பது போன்றோ, வடமாநிலங்களுக்கு அரசியல் வலிமையை மேலும் வாரி வழங்குவது போன்றோ, ஏதாவது நடந்தால், நாங்கள் சும்மா இருக்கமாட்டோம். தமிழ்நாடே ஸ்தம்பிக்கும். தமிழ்நாடு தனது எதிர்ப்பைக் கடுமையாகக் காட்டும். ஒவ்வொரு குடும்பமும் தெருவில் வந்து உட்காருவோம். தமிழ்நாடு முதலமைச்சராக இருக்கும் என்னுடைய தலைமையிலேயே மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.

தேர்தல் மீதுதான் கவனம் இருக்கும். நாம் டெல்லியில் அமைதியாக தமிழ்நாட்டின் தொகுதி மறுவரையறை செய்துவிடலாம் என்று மட்டும் நினைக்காதீர்கள். ஏனென்றால் இதை சொல்கிற நான் தமிழ்நாடு முதலமைச்சர் மட்டுமல்ல; திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் பேரியக்கத்தின் தலைவரும் கூட. நீங்கள் இதுவரை பார்க்காத தமிழ்நாட்டைப் பார்க்க வேண்டியிருக்கும். 50-கள், 60-களில் பார்த்த பழைய திமுகவை இந்தியா மீண்டும் பார்க்க வேண்டியிருக்கும்.இதை மிரட்டலாக நினைக்காதீர்கள். நாங்கள் உங்களை எச்சரிக்கிறேன். நீங்கள் இதை மிரட்டல் என்று நினைத்தாலும் எங்களுக்கு கவலையில்லை. தேர்தல், ஆட்சி அதிகாரம் எல்லாம் எங்களுக்கு இரண்டாம்பட்சம் தான். நாங்கள் சுயமரியாதைக்காரர்கள். எங்களுக்குக் கொள்கைளும், மாநில உரிமையும் தான் முக்கியம்.

தமிழ்நாட்டுக்குத் தவறிழைத்துவிட்டு, வழக்கம்போல் சும்மா கடந்துசெல்ல நினைத்தால், நடப்பதே வேறு. சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளில், அவர் மேல் ஆணையாகச் சொல்கிறேன். தமிழ்நாடு பாதிக்கப்பட்டால், இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துவிடுவோம். பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டிலிருந்து விடுக்கப்படும் இறுதி எச்சரிக்கை இது.

தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

டிஜிட்டல் லஞ்சம்,கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ 

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!! தமிழ்நாடு முழுவதும்...

கோவையில் அடகு கார் விவகாரத்தில் ₹70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது.

திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கரையை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவருடைய கணவர் புதிய கார் வாங்கியுள்ளார். பண பிரச்சினைக்காக அந்த காரை ரவிக்குமார் என்பவரிடம் அடமானம் வைத்தாக தெரிகிறது. அந்த...

2 வருஷ படிப்பை இழுத்தடிக்கும் நிர்வாகம்; புத்தகம் இல்லை, வகுப்பும் இல்லை, ஆனால் அபராதம் மட்டும் ₹300 வசூலிப்பதா ? என மாணவர்கள் கடும் கொதிப்பு !!!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு முதுகலை படிப்புகளில் படித்து வருகின்றனர் . ஏற்கனவே இரண்டு வருடங்களில் முடிக்க வேண்டிய படிப்பை,...

கரூரில் 3,084 ஏக்கர் இனாம் நிலங்கள் யாருடைய பெயரில் உள்ளன?

கரூர் மாவட்ட 3,084.95 ஏக்கர் இனாம் நிலங்கள் குறித்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிலம் யாருடைய பெயரில் உள்ளன என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. இனாம் நிலங்களுக்கு பதிவுத்துறை...