Saturday, May 30, 2026

விசில் ஊதிக்கொண்டு சைக்கிளில் ரவுண்ட் அடித்த விஜய்.. தடுப்புகளை உடைத்துக்கொண்டு வந்த தொண்டர்கள் ..!

Must read

துப்பட்டாவை பிடித்து இழுத்த குடிபோதை நபருக்கு அடி உதை பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல்துறையினரிடம் வாக்குவாதம்.

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட காந்திமா நகர் பகுதியில் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது இங்கு பொதுமக்கள் காலை மாலை வேலைகளில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்...

அறநிலையத்துறை அமைச்சரிடம் லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் …!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் விஐபி மற்றும் விரைவு தரிசனத்திற்கு பக்தர்களிடம் அங்குள்ள அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் முறைகேடாக பணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் வெகு நாட்களாக எழுந்த நிலையில் அர்ச்சகர்கள்...

மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது- முதல்வர் விஜய் வலியுறுத்தல்…

தமிழக முதல்வர் விஜய் கடந்த 10ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்ற நிலையில், இன்று முதல் முறையாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்....

எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்- எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டசபையில் தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. அதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக அரசுக்கு...

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி என 4 முனைப் போட்டி நிலவி வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், முதல் முறையாக தேர்தல் களம் காணும் தவெக தலைவர் விஜய்யும் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று பிரசாரம் செய்து வருகிறார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து விஜய் இன்று பிற்பகல் பிரசாரம் செய்தார். இதற்காக விஜய் இன்று காலை 10.20 மணிக்கு சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்டார். காலை 11 மணியளவில் அவர் சென்னை விமான நிலையத்தை சென்றடைந்தார். பின்னர் அவர் அங்கிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். பகல் 12.30 மணியளவில் விஜய் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தார்.அங்கு அவரை பார்ப்பதற்காக ஏராளமான தொண்டர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பார்த்து விஜய் கையசைத்தார். அதன்பிறகு அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வேனில் ஏறி விஜய் சாலை மார்க்கமாக கன்னியாகுமரி சென்றார். தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து விஜய் வேனில் சென்ற போது வழி நெடுக ஏராளமான ஆண்களும் பெண்களும் திரண்டு நின்று உற்சாக கோஷம் எழுப்பி அவரை பார்த்து கையசைத்தனர். பதிலுக்கு விஜய்யும் வேனுக்குள் இருந்தபடியே அவர்களை பார்த்து கையசைத்தார்.

சைக்கிளில் ரவுண்டு அடித்த விஜய் கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானாவில், தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மகாதானபுரம் ரவுண்டானா பகுதிக்கு வந்த விஜய், திடீரென சைக்கிளில் இறங்கி ரவுண்டானாவை சுற்றி சுற்றி வந்தார். விசில் அடித்துக்கொண்டே சைக்கிளில் சுற்றி விஜய் வாக்கு சேகரித்தார். அப்போது விஜய்யை பார்ப்பதற்காக தடுப்புகளை உடைத்துக்கொண்டு தவெக தொண்டர்கள் வந்ததால் பரபரப்பு உண்டானது.இதனால் விஜய்யை பார்க்க முண்டியடித்துக் கொண்டு அவரது ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் விஜய்யின் பவுன்சர்கள் கடும் பாடுபட்டனர். ரவுண்டானாவில் இருந்து கன்னியாகுமரி ஜீரோ பாயிண்ட் வரை விஜய் ரோடுஷோவாக புறப்பட்டுள்ளார். விஜய்யின் வருகையால் கன்னியாகுமரியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

வாக்குறுதி அளித்த விஜய்
தொடர்ந்து குமரியில் பேசிய விஜய், “இடைத்தரகர்கள் இல்லாமல் அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு கொண்டு செல்லப்படும் என்றும், மாநிலத்தின் வளர்ச்சிக்கான யோசனைகளை நம் ஆட்சி அமைந்தால் பொதுமக்களும் முன் வைக்க முடியும் என்றும் கூறினார். மேலும் 10 ஆயிரம் அதிகாரப்பூர்வ கையெழுத்துடன் மனு அளிக்கப்பட்டால் அரசு பதில் அளிப்பது கட்டாயம் ஆக்கப்படும் எனவும், 5 லட்சம் பேர் கொடுத்தால் சட்டசபையில் ஒரு நாள் நேரம் ஒதுக்கி அது பற்றி விவாதிக்கப்படும் என்றும் விஜய் கூறினார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

துப்பட்டாவை பிடித்து இழுத்த குடிபோதை நபருக்கு அடி உதை பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல்துறையினரிடம் வாக்குவாதம்.

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட காந்திமா நகர் பகுதியில் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது இங்கு பொதுமக்கள் காலை மாலை வேலைகளில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்...

அறநிலையத்துறை அமைச்சரிடம் லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் …!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் விஐபி மற்றும் விரைவு தரிசனத்திற்கு பக்தர்களிடம் அங்குள்ள அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் முறைகேடாக பணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் வெகு நாட்களாக எழுந்த நிலையில் அர்ச்சகர்கள்...

மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது- முதல்வர் விஜய் வலியுறுத்தல்…

தமிழக முதல்வர் விஜய் கடந்த 10ஆம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்ற நிலையில், இன்று முதல் முறையாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்....

எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்- எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டசபையில் தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. அதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக அரசுக்கு...

தென்காசி சோதனைச்சாவடியில் அமைச்சர் அதிகாலையில் அதிரடி ஆய்வு..!

தென்காசி மாவட்டம், புளியரை சோதனைச்சாவடி வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில், நெல்லை மாவட்டம் ராதாபுரம், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போன்ற பகுதிகளில் இருந்து கனிம வளங்கள் அண்டை மாநிலமான...