Wednesday, July 22, 2026

கேரளாவில்  ஓராண்டாகத் தனிமையில் வாடிய குடும்பம்  – உடற்கூறு ஆய்வு முடிந்து சூலூர் போலீஸார்  விசாரணை


கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காங்கேயம்பாளையம் அருகே, நீலாம்பூர் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் (SSI) மன அழுத்தம் மற்றும் உடல்நலப் பாதிப்பு காரணமாக தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல் துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கண்ணடி கிராம பஞ்சாயத்தைச் சேர்ந்தவர் மனோஜ் (54). இவர் கடந்த 1997-ஆம் ஆண்டு காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராகப் பணியில் சேர்ந்தார். பின்னர், 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நீலாம்பூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். குடும்பப் பிரச்சனை காரணமாக இவரது மனைவியும் இரண்டு மகன்களும் கேரளாவில் உள்ள தங்களது சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.

இதனால், கடந்த ஓராண்டாக மனோஜ் மட்டும் காங்கேயம்பாளையம் அருகே உள்ள ராயல் அவென்யூ பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்து உள்ளார். தனிமையின் காரணமாக அவர் நீண்ட நாட்களாக மன அழுத்தம் மற்றும் உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்ததாகத் தெரியவருகிறது. இந்நிலையில், ஜூலை 5-ஆம் தேதி அதிகாலை சுமார் 5.00 மணி அளவில், தனது மூத்த மகனுக்கு மனோஜ் வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், தனக்கு கடுமையான உடல் வலி, மன அழுத்தம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருப்பதாகவும், இதனால் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளப் போவதாகவும், குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எனவும் அவர் உருக்கமாகத் தெரிவித்து இருந்தார். இதை அடுத்து, வழக்கம் போல் காலை மனோஜ் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர், காலை 9.30 மணி அளவில் அவரது வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது அவர் படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் நைலான் கயிற்றால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டு இருப்பது தெரியவந்தது. உடனே அவர்கள் இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூலூர் காவல் நிலையப் போலீசார், நிகழ்விடத்தைப் பாதுகாத்து அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த அவரது மூத்த மகன், தனது தந்தையின் செல்போனைப் பரிசோதித்ததில் தற்கொலைக்கு முன்பு அவர் அனுப்பிய வாட்ஸ்அப் செய்தி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சட்டப்படியான விசாரணைகள் மற்றும் பிற நடைமுறைகள் முடிவடைந்த பிறகு, உடற்கூறு ஆய்வுக்காக அவரது உடல் கோவை இ.எஸ்.ஐ (ESI) மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு உடற்கூறு ஆய்வும் நிறைவடைந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து உள்ள போலீசார், தற்கொலைக்கான முழுமையான காரணங்களை அறிய தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Must read

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

டிஜிட்டல் லஞ்சம்,கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ 

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!! தமிழ்நாடு முழுவதும்...

கோவையில் அடகு கார் விவகாரத்தில் ₹70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது.

திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கரையை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவருடைய கணவர் புதிய கார் வாங்கியுள்ளார். பண பிரச்சினைக்காக அந்த காரை ரவிக்குமார் என்பவரிடம் அடமானம் வைத்தாக தெரிகிறது. அந்த...

2 வருஷ படிப்பை இழுத்தடிக்கும் நிர்வாகம்; புத்தகம் இல்லை, வகுப்பும் இல்லை, ஆனால் அபராதம் மட்டும் ₹300 வசூலிப்பதா ? என மாணவர்கள் கடும் கொதிப்பு !!!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு முதுகலை படிப்புகளில் படித்து வருகின்றனர் . ஏற்கனவே இரண்டு வருடங்களில் முடிக்க வேண்டிய படிப்பை,...
Previous article2 கோடி ரூபாய் கேட்டு தொழிலதிபர் கடத்தல்,ஆள் மாறிப்போனதால் எஸ்கேப்..!



கோவையில் 2 கோடி ரூபாய் பணம் கேட்டு காங்கிரஸ் கட்சியின் ஓ பி சி அணி மாவட்ட தலைவரும்  தொழிலதிபருமான காட்டூர் தனசேகரன் என்பவர் காரில் கடத்தப்பட்டு கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கி காட்டுப் பகுதியில் இறக்கி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…….

கோவை, சிங்காநல்லூர்  அடுத்த எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் தனசேகரன். காந்திபுரம் அடுத்த காட்டூர் பகுதியில் பழைய கார் விற்பனை மையம் ஒன்றை நடத்தி வரும் இவர் காங்கிரஸ் கட்சியின் ஓ.பி.சி பிரிவு மாவட்ட தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் எஸ.ஐ.எச்.எஸ் காலனி பகுதியில் புதிதாக வீடு ஒன்றை அவர் கட்டி வரும் நிலையில் இன்று காலை வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டு இருந்த தனது ஃபார்ச்சூனர் காரை கழுவிக் கொண்டு இருந்த போது அங்கு எர்டிகா காரில் வந்த டிப் டாப் உடை அணிந்த ஐந்து பேர் காரைக்கழுவி கொண்டு இருந்த தனசேகரனிடம் உனது பெயர் தனசேகரனா என கேட்டு உள்ளனர். அதற்கு தனசேகரன் ஆமாம் என்று கூறவே உடனடியாக தாங்கள்  வைத்து இருந்த கை விலங்கு ஒன்றை வைத்து தனசேகரனின் கையை பூட்ட முயற்சித்து உள்ளனர். அதற்கு தனசேகரன் நான் என்ன அக்யூஸ்டா என கேட்டு கையை உதறி அங்கு இருந்து நகர முற்பட்ட பொழுது ஐந்து பேரும் சேர்த்து தனசேகரனை மடக்கி பிடித்து தாங்கள் வந்த காரில் கீழே தள்ளி கடுமையாக தாக்கி உடனடியாக காரை அங்கு இருந்து கிளப்பி தனசேகரனை கடத்தி உள்ளனர். அப்போது தனசேகரன் கூக்குறலிடவே அவரது வாயில் துணியை வைத்து அடைத்து முகம் வயிறு இடுப்பு பகுதி என சரமாரியாக தாக்கியப்படியே கோவை பாலக்காடு புறவழிச் சாலையில் காரை இயக்கி உள்ளனர். இதற்கு இடையே காரில் வந்த ஒருவர் 2 கோடி ரூபாய் கொடுத்தால் உன்னை விட்டு விடுவோம் என கூறவே தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று தனசேகரன் கூறியுள்ளார். மீண்டும் தனசேகரனை தாக்கிய அவர்கள் அவரது முகத்தை தங்கள் செல்போனில் படம் பிடித்து யாரோ ஒருவருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. அதனைக் கண்ட எதிர்முனையில் இருந்த நபர் இவர் இல்லை ஆள் மாறிவிட்டது என்று கூறவே தனசேகரனை ஆட்கள் இல்லாத ஒரு காட்டுப் பகுதியில் கீழே தள்ளிவிட்டு காரில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பி உள்ளனர். இதைத் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளான தனசேகரன் அங்கு இருந்து நடந்து வந்து பாலக்காடு சாலை வழியே வந்த ஒருவரிடம் நடந்த சம்பவங்களை கூறி உதவி கேட்டு உள்ளார். அந்த நபர் கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் கொண்டு வந்து தனசேகரனை இறக்கி விட்ட நிலையில் சிங்காநல்லூர் காவல் நிலைய போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தனசேகரனின் வீடு மற்றும் திருச்சி சாலை பாலக்காடு சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தாக்குதலுக்கு உள்ளான தனசேகரன் முதுலுதவி சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் காந்திபுரம் அடுத்த காட்டூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பேசிய தனசேகரன் தன்னை கடத்தி அவர்கள் யார் என்ற விபரம் தற்போது வரை தெரியவில்லை என்றும் தொழில் போட்டி காரணமாக கடத்தினார்களா என்பது குறித்து கூட தனக்கு அறியவில்லை என்றும் காரில் வந்த நபர்கள் ரௌடிகள் போல காணப்பட்டதாகவும் காரின் பின் பகுதியில் நம்பர் பிளேட் கூட இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் தன்னை கடத்தியவர்கள் தன்னிடம் இருந்த சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான எஸ் 23 அல்ட்ரா செல்போன், ஃபார்ச்சூனர் கார் சாவி மற்றும் புதிய வீட்டின் சாவி ஆகியவற்றை பறித்து சென்றதாகவும் தனது செல்போனில் இருந்தே தனது வங்கி கணக்கில் இருந்து பணத்தை தங்கள் கணக்கிற்கு பரிமாற முயற்சித்ததாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Next articleஎழும்பூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு…
- Advertisement -

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

டிஜிட்டல் லஞ்சம்,கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ 

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!! தமிழ்நாடு முழுவதும்...

கோவையில் அடகு கார் விவகாரத்தில் ₹70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது.

திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கரையை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவருடைய கணவர் புதிய கார் வாங்கியுள்ளார். பண பிரச்சினைக்காக அந்த காரை ரவிக்குமார் என்பவரிடம் அடமானம் வைத்தாக தெரிகிறது. அந்த...

2 வருஷ படிப்பை இழுத்தடிக்கும் நிர்வாகம்; புத்தகம் இல்லை, வகுப்பும் இல்லை, ஆனால் அபராதம் மட்டும் ₹300 வசூலிப்பதா ? என மாணவர்கள் கடும் கொதிப்பு !!!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு முதுகலை படிப்புகளில் படித்து வருகின்றனர் . ஏற்கனவே இரண்டு வருடங்களில் முடிக்க வேண்டிய படிப்பை,...

கரூரில் 3,084 ஏக்கர் இனாம் நிலங்கள் யாருடைய பெயரில் உள்ளன?

கரூர் மாவட்ட 3,084.95 ஏக்கர் இனாம் நிலங்கள் குறித்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிலம் யாருடைய பெயரில் உள்ளன என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. இனாம் நிலங்களுக்கு பதிவுத்துறை...