கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50ஆயிரம் பயணாளர்கள் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்…

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், அநேக குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் ₹1,000 -ஐ செலுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், குடும்பத் தலைவிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்…
தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் 24.07.2023 முதல் 04.08.2023 வரை முதற் கட்டமாகவும் மற்றும் 05.08.2023 முதல் 16.08.2023 வரை இரண்டாம் கட்டமாகவும் நடத்திட அட்டவணை வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும், ஆகஸ்ட் மாதம் 18, 19,20 ஆகிய மூன்று நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50ஆயிரம் பயணாளர்கள் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். நாளை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.


