Tuesday, April 7, 2026

அதிமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Must read

தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி- வேட்பு மனு தாக்களின் போது எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை..

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இன்று தனது...

கோவை வடக்கு தொகுதியில் ராஜஸ்தான் முதல்வர், அண்ணாமலை முன்னிலையில்  வானதி சீனிவாசன் வேட்பு மனுத் தாக்கல் !!!

தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சியினர் - மேளதாளங்கள் முழங்க, ஆதரவாளர்கள் படைசூழ வேட்பு மனு தாக்கல் செய்தார் வானதி சீனிவாசன் !!! கோவை வடக்கு சட்டமன்றத்...

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக கோவை வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை...

வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி

அரசியல் சதுரங்க வேட்டை என்பது எல்லா கட்சிகளும் மேற்கொள்வது தான். இந்த முறை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மண்டலத்தை வைத்து வைத்த நகர்வு மிகப்பெரிய ராஜதந்திரமாகவே...

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

மொத்தம் 127 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் கன்னியாகுமரி தொகுதியில் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் பிரபு, திருப்பூர் வடக்கு தொகுதியில் எம்எஸ்எம் ஆனந்தன் உள்ளிட்டோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 23 பேர் அறிவிக்கப்பட்டிருந்த தற்போது இரண்டாம் கட்ட பட்டியலில் 123 பேர் இடம் பெற்றுள்ளனர்.
அதன்படி, கும்மிடிபூண்டி தொகுதியில் சுதாகர், பொன்னேரி (தனி) தொகுதியில் சிறுணியம் பலராமன், திருத்தணி தொகுதியில் கோ.அரி, திருவள்ளூர் தொகுதியில் ரமணா, மாதவரம் தொகுதியில் மாதவரம் மூர்த்தி, திருவொற்றியூர் தொகுதியில் குப்பன், ஸ்ரீபெரும்புத்தூர் (தனி) தொகுதியில் பழனி, தாம்பரம் தொகுதியில் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், செங்கல்பட்டு தொகுதியில் கஜேந்திரன், செய்யூர் (தனி) தொகுதியில் ராஜசேகர், மதுராந்தகம் (தனி) மரகதம் குமரவேல், காஞ்சிபுரம் தொகுதியில் சோமசுந்தரம், அரக்கோணம் (தனி) தொகுதியில் ரவி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனின் தொகுதியான காட்பாடியில் அதிமுக சார்பில் ராமு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கீழ்பென்னாத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன், செய்யாறு தொகுதியில் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்ரமணியன், அதிமுகவின் கோட்டையான சேலம் தெற்கு தொகுதியில் வினோத், ஓமலூர் தொகுதியில் எம்எல்ஏ மணி ஆகியோர் களம் காண்கின்றனர். இவர்களை போன்று, உளுந்தூர்பேட்டை தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ குமரகுரு, கெங்கவல்லி (தனி) தொகுதியில் எம்எல்ஏ நல்லதம்பி, ஆத்தூர் (தனி) தொகுதியில் எம்எல்ஏ ஜெய்சங்கரன், மேட்டூர் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ வெங்கடாஜலம், பரமத்திவேலூர் தொகுதியில் எம்எல்ஏ சேகர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன், உடுமலைபேட்டை தொகுதியில் முன்னாள் அமைச்சர் உடுமலைப்பேட்டை கே.ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், புவனகிரி தொகுதியில் எம்எல்ஏ அருண்மொழிதேவன் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சூலூர் தொகுதியில் எம்எல்ஏ கந்தசாமி, கவுண்டம்பாளையம் தொகுதியில் எம்எல்ஏ அருண்குமார், அம்பாசமுத்திரம் தொகுதியில் இசக்கி சுப்பையா, ஆலங்குளம் தொகுதியில் முன்னாள் எம்பி கே.ஆர்.பி.பிரபாகரன் ஆகியோர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக சார்பில் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 150 வேட்பாளர்களில் 46 பேர் தற்போது அதிமுக எம்எல்ஏக்களாக உள்ளனர். 17 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர். அதேபோல் 31 முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 17 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

- Advertisement -

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article

தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி- வேட்பு மனு தாக்களின் போது எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை..

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இன்று தனது...

கோவை வடக்கு தொகுதியில் ராஜஸ்தான் முதல்வர், அண்ணாமலை முன்னிலையில்  வானதி சீனிவாசன் வேட்பு மனுத் தாக்கல் !!!

தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சியினர் - மேளதாளங்கள் முழங்க, ஆதரவாளர்கள் படைசூழ வேட்பு மனு தாக்கல் செய்தார் வானதி சீனிவாசன் !!! கோவை வடக்கு சட்டமன்றத்...

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக கோவை வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை...

வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி

அரசியல் சதுரங்க வேட்டை என்பது எல்லா கட்சிகளும் மேற்கொள்வது தான். இந்த முறை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மண்டலத்தை வைத்து வைத்த நகர்வு மிகப்பெரிய ராஜதந்திரமாகவே...

தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழக காவல்துறை உயரதிகாரிகளை மாற்றி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அதிரடி...