Friday, August 14, 2026

கிணத்துக்கடவு தொகுதி விவகாரம் : கோவையில் பா.ஜ.க வினர் சாலை மறியல் – தீக்குளிக்க முயற்சி பரபரப்பு !!!

Must read

கொசு மருந்து அடித்த 1 மணி நேரத்தில் மூச்சு திணறி உயிரிழந்த முதியவர்கள்..!

அன்னூர் பகுதியில் குறைவான தண்ணீரில் அதிக கொசு மருந்தை கலந்து குடியிருப்பு பகுதிக்குள் பணியாளர்கள் அடித்ததாக கூறி அப்பகுதி மக்கள் வாக்குவாதம். கோவை மாவட்டம், அன்னூர்...

தொகுதி மறுவரையறையில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க பேரவையில் தீர்மானம் – எம்.பி.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு…

மக்களவைத் தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்த மசோதா விவகாரம் குறித்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (ஆக.08) மாலை 05.00 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான விஜய்...

பேருந்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை – கோவை போலீஸ் கைது!

​கோவை, பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றத்திற்காகப் போத்தனூர் காவல் ஆய்வாளரின் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த காவலர் மணிவேந்தன் கைது...

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்–2026ஐ முன்னிட்டு கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக கோவையில் பதற்றமான சூழல் நிலவியது. குறிப்பாக கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க விற்கு ஒதுக்கப்படாததை கண்டித்து, கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் தீவிர எதிர்ப்பில் இறங்கினர்.
இந்நிலையில், கோவை அருகே ஈச்சனாரி பகுதியில் பா.ஜ.க வினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முக்கிய சாலையில் அமர்ந்து போக்குவரத்தை மறித்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களை சமாதானப்படுத்த முயன்றனர்.

இந்த போராட்டத்தின் போது பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமாக, பா.ஜ.க வில் செயல்பட்டு வரும் விக்னேஷ் என்ற இளைஞர் திடீரென தீக்குளிக்க முயன்றார்.

அவர் கொண்டு வந்து இருந்த எரிபொருளை தனது உடலில் ஊற்றி தீவைக்க முயன்றதை அங்கிருந்த போலீசார் மற்றும் கட்சியினர் உடனடியாக தடுத்து நிறுத்தினர். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து போலீசார் அவரை பாதுகாப்பாக காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

பா.ஜ.க நிர்வாகிகள் கூறுகையில்,

“கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு வலுவான ஆதரவு உள்ள பகுதி. இருந்தும் அந்த தொகுதி ஒதுக்கப்படாதது கட்சித் தொண்டர்களின் மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது” என தெரிவித்தனர். மேலும் கடந்த முறை பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வசந்த ராஜன் இரண்டாம் இடம் பிடித்த நிலையில் கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றதால் அவருக்கு கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கப்படும் என கட்சியினர் எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தை அடுத்து ஈச்சனாரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கூட்டணி தொகுதி ஒதுக்கீடு விவகாரம் கோவையில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

கொசு மருந்து அடித்த 1 மணி நேரத்தில் மூச்சு திணறி உயிரிழந்த முதியவர்கள்..!

அன்னூர் பகுதியில் குறைவான தண்ணீரில் அதிக கொசு மருந்தை கலந்து குடியிருப்பு பகுதிக்குள் பணியாளர்கள் அடித்ததாக கூறி அப்பகுதி மக்கள் வாக்குவாதம். கோவை மாவட்டம், அன்னூர்...

தொகுதி மறுவரையறையில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க பேரவையில் தீர்மானம் – எம்.பி.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு…

மக்களவைத் தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்த மசோதா விவகாரம் குறித்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (ஆக.08) மாலை 05.00 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான விஜய்...

பேருந்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை – கோவை போலீஸ் கைது!

​கோவை, பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றத்திற்காகப் போத்தனூர் காவல் ஆய்வாளரின் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த காவலர் மணிவேந்தன் கைது...

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

டிஜிட்டல் லஞ்சம்,கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ 

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!! தமிழ்நாடு முழுவதும்...