Sunday, September 6, 2026

“திமுகவின் அடக்குமுறை” தேர்தல் பிரச்சார அனுமதி மறுப்பிற்கு விஜய் கண்டனம்…

Must read

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...

வருகையில்லா ஆவணப்பதிவு, பதிவுத்துறையில் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்…

தமிழ்நாட்டில் ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணையவழியில் ஆவணங்களைப் பதிவு செய்யும் முறையினை பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம்...

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து வானதி சீனிவாசன் விடுவிப்பு – புதிய நிர்வாகிகள் நியமனம்

பாரதிய ஜனதா கட்சியின் 16-வது தேசிய தலைவராக கடந்த ஜனவரி மாதத்தில் நிதின் நவீன் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றதிலிருந்தே கட்சியின் நிர்வாகிகளை மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில்,...

கொசு மருந்து அடித்த 1 மணி நேரத்தில் மூச்சு திணறி உயிரிழந்த முதியவர்கள்..!

அன்னூர் பகுதியில் குறைவான தண்ணீரில் அதிக கொசு மருந்தை கலந்து குடியிருப்பு பகுதிக்குள் பணியாளர்கள் அடித்ததாக கூறி அப்பகுதி மக்கள் வாக்குவாதம். கோவை மாவட்டம், அன்னூர்...

பெரம்பூரில் நாளை நடைபெறவிருந்த தவெக பிரச்சாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும்.

நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே (26/03/26) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது. ஆனால், நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர்ப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன??இந்த நிலையில் அங்கே காவல் துறை ஆய்வு செய்து 3000 பேர் கூடமுடியாது என்று கூறியுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது அந்த இடம் பிரசாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்படி அதிகாரிகள் சிலரின் துணையுடன் த.வெ.க.விற்கு எதிராகச் செயல்படும் தி.மு.க. காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா? தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், தி.மு.க. அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி, அனுமதியைத் தாமதிப்பதும் அல்லது அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது.மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு புதிய அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகளைத் திட்டமிட்டு நசுக்கும் இந்தச் செயல், ஆளுங்கட்சியின் ஏவலர்களாக அதிகாரிகள் சிலர் செயல்படுகிறார்களா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் “எங்களுக்கு எதிராக யார் உருவெடுத்தாலும் அவர்களை அதிகார பலத்தால் நசுக்குவோம்” என நினைப்பது அப்பட்டமான அடக்குமுறையே ஆகும். தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு தி.மு.க. எந்த அளவிற்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக விரோதத் தி.மு.க. ஆட்சியைத் தமிழக மக்கள், வீட்டிற்கு அனுப்பப் போவது உறுதி ‘ என கூறியுள்ளார்.தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, சென்னை, பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார் என கூறப்படும் நிலையில், நாளை அப்பகுதியில் பிரச்சாரத்தை துவக்க தவெக திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில் நாளை விஜய் பிரசாரத்திற்கு அனுமதி கொடுக்க மறுத்து, பிரசாரத்திற்கு மாற்று இடம் கேட்டு விண்ணப்பம் செய்யுங்கள் என காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், தவெக நிர்வாகிகள் தலைமைத் தேர்தல் அதிகாரியை சந்திக்க திட்டமிட்டிருப்பதாகவும் அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...

வருகையில்லா ஆவணப்பதிவு, பதிவுத்துறையில் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்…

தமிழ்நாட்டில் ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணையவழியில் ஆவணங்களைப் பதிவு செய்யும் முறையினை பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம்...

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து வானதி சீனிவாசன் விடுவிப்பு – புதிய நிர்வாகிகள் நியமனம்

பாரதிய ஜனதா கட்சியின் 16-வது தேசிய தலைவராக கடந்த ஜனவரி மாதத்தில் நிதின் நவீன் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றதிலிருந்தே கட்சியின் நிர்வாகிகளை மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில்,...

கொசு மருந்து அடித்த 1 மணி நேரத்தில் மூச்சு திணறி உயிரிழந்த முதியவர்கள்..!

அன்னூர் பகுதியில் குறைவான தண்ணீரில் அதிக கொசு மருந்தை கலந்து குடியிருப்பு பகுதிக்குள் பணியாளர்கள் அடித்ததாக கூறி அப்பகுதி மக்கள் வாக்குவாதம். கோவை மாவட்டம், அன்னூர்...

தொகுதி மறுவரையறையில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க பேரவையில் தீர்மானம் – எம்.பி.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு…

மக்களவைத் தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்த மசோதா விவகாரம் குறித்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (ஆக.08) மாலை 05.00 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான விஜய்...