Monday, July 13, 2026

இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு உரிமைத் தொகை – அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

Must read

“நிழல் (Nizhal)”QR குறியீடு அடிப்படையிலான நவீன பொதுப் பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், கியூஆர் கோடு மூலம் போதைப்பொருள் கடத்தல், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் புகாராகத் தெரிவிக்க ஏதுவாக “நிழல் (Nizhal)” என்ற அதிநவீனத்...

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணி: யார் – யாருக்கு

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற விஜய்யின் பரப்புரையின் போது திடீரென பயங்கர கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி 41...

மக்களே இடைத்தேர்தலில் தீய சக்தி திமுகவை நல்லா வெச்சு வெளுத்து விடுங்க- கரூரில் முதலமைச்சர் விஜய் பேச்சு

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்கு பிறகு முதன்முறையாக முதலமைச்சர் விஜய் இன்று கரூருக்கு வருகை தந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து சாலை...

எழும்பூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு…

எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்த முதலமைச்சர் விஜய்,...

தேர்தல் உஷ்ணத்தால் மகளிருக்கு கோடைக்கால சிறப்பு உரிமைத் தொகை வழங்கப்பட்டதா? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு, மகளிருக்கு இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் பதிலளித்தார்.

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இன்று நீட், சட்டம் – ஒழுங்கு பிரச்சனை, மகளிர் உரிமைத் தொகை என பல்வேறு விவகாரத்தை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கையில் எடுத்தார். திமுக அரசு மீதான அவரின் பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்களுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்தனர். அவையில் நடைபெற்ற காரசார விவாதம்:

எடப்பாடி பழனிசாமி: கடந்த 59 ஆண்டுகளில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா,அதன் பிறகு எனது தலைமை என அதிமுக தான் 39 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டுள்ளது. எனது தலைமையிலான அதிமுக ஆட்சியில் மாநிலத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டன. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை புதிய சாலைகளை அமைத்தோம்.

இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வருவாய் பற்றாக்குறை இருக்கக்கூடாது.ஆனால், இத்தனை நாள்கள் இல்லாத அளவுக்கு வருவாய் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் நிதி மேலாண்மை சரிசெய்ய குழு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த குழு கடன் வாங்க அறிவுரை அளித்ததா? 5 லட்சம் கோடி ரூபாய் கடன் அதிகம் பெற்று, கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது.

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு: கடன் வாங்குவதாக இருந்தாலும், நிதி மேலாண்மையாக இருந்தாலும் அதிமுக ஆட்சியில் 4.8 லட்சம் கோடி ரூபாய் உடன் கடன் வளர்ச்சி 128% இருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் கடன் வளர்ச்சி 96% தான் உள்ளது. வரம்புக்குள்ளாகதான் கடன் வாங்கப்படுகிறது.அமைச்சர் எ.வ.வேலு: அதிமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்கு கடந்த 5 ஆண்டுகளில் 1.88 லட்சம் கோடி ரூபாய் வட்டி கட்டியுள்ளோம். அப்போது ஒட்டுமொத்தமாக வட்டியுடன் சேர்த்து அதிமுக ஆட்சியின் கடன் 6.45 லட்சம் கோடி ரூபாயாகும். இதன்படி பார்த்தால் திமுக ஆட்சியில் 2.85 லட்சம் கோடி ரூபாய் தான் கடன் வாங்கியுள்ளோம். ஏற்கெனவே அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களும் உள்ளன. அவற்றுக்காகவும் அரசு செலவு செய்கிறது.

எடப்பாடி பழனிசாமி: இரவோடு இரவாக மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்பட உள்ளதாக கூறி, அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் போட்டுள்ளீர்கள். இது உங்களுக்கு (திமுக) தேர்தல் காய்ச்சால் ஏற்பட்டுள்ளது என்பதை காண்பிக்கிறது என பேசுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் தான் கோடைக்காலம் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் இந்த முறை தேர்தல் உஷ்ணம் அதிகம் உள்ளதால் 5000 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் பேச்சுகள் எழுந்துள்ளன.

அமைச்சர் தங்கம் தென்னரசு: சதி திட்டம் போடப்பட்டபோது அதனை முதல்வர் முறியடித்தார்.

அமைச்சர் கீதா ஜீவன்: இது புது திட்டம்.மகளிருக்கு இனி ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு உரிமைத் தொகை வழங்கப்படும்.

அமைச்சர் தங்கம் தென்னரசு: மக்களுக்கு நாங்கள் கொடுப்பது எல்லாம் சூழ்ச்சி என்றால் பீகார், மகாராஷ்டிராவில் பாஜக கொடுத்துள்ளதே அது சூழ்ச்சி இல்லையா?

இவ்வாறாக அவையில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கும் இடையே சுமார் மூன்று மணி நேரம் காரசார விவாதம் நடைபெற்றது.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article