Monday, September 7, 2026

தூய்மை பணியாளர் மரணம்: ஆதாரத்தை வெளியிட்ட சீமான்..!

Must read

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...

வருகையில்லா ஆவணப்பதிவு, பதிவுத்துறையில் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்…

தமிழ்நாட்டில் ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணையவழியில் ஆவணங்களைப் பதிவு செய்யும் முறையினை பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம்...

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து வானதி சீனிவாசன் விடுவிப்பு – புதிய நிர்வாகிகள் நியமனம்

பாரதிய ஜனதா கட்சியின் 16-வது தேசிய தலைவராக கடந்த ஜனவரி மாதத்தில் நிதின் நவீன் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றதிலிருந்தே கட்சியின் நிர்வாகிகளை மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில்,...

கொசு மருந்து அடித்த 1 மணி நேரத்தில் மூச்சு திணறி உயிரிழந்த முதியவர்கள்..!

அன்னூர் பகுதியில் குறைவான தண்ணீரில் அதிக கொசு மருந்தை கலந்து குடியிருப்பு பகுதிக்குள் பணியாளர்கள் அடித்ததாக கூறி அப்பகுதி மக்கள் வாக்குவாதம். கோவை மாவட்டம், அன்னூர்...

சென்னை கண்ணகி நகரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண் தூய்மைப் பணியாளரின் உடலுக்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை கண்ணகிநகர் பகுதியில் இன்று மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்த மரணத்திற்கான காரணம் அரசின் அலட்சியம் மற்றும் மின்சார வாரியத்தின் கவனக்குறைவுதான் என்று குற்றம்சாட்டி, அதற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், வரலட்சுமி உயிரிழந்த பகுதியில் மின்சார கசிவு குறித்து மணிகண்டன் என்பவர் மின்சார வாரிய அலுவலகத்தில் 2 முறை புகார் அளித்துள்ளார். ஆனால், அந்தப் புகார்கள் அலட்சியப்படுத்தப்பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இது அரசின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது. மேலும், தூய்மைப் பணிகள் போன்ற அரசின் அடிப்படைப் பொறுப்பு தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்படுவதே இதுபோன்ற விபத்துகளுக்கு காரணம் என்று சீமான் கூறினார். தனியார் நிறுவனங்கள் லாப நோக்கத்துடன் மட்டுமே செயல்படுவதாகவும், மக்களின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். உயிரிழந்த வரலட்சுமியின் குடும்பத்திற்கு அரசு அறிவித்த ரூ.20 லட்சம் இழப்பீடு போதுமானதல்ல என்று சீமான் தெரிவித்தார். வரலட்சுமி ஓய்வுபெறும் வயதில் ரூ.85 லட்சம் ஈட்டியிருப்பார் என்று கணக்கிட்டு, அந்த இழப்பீடு வெறும் கண்துடைப்பு என்று சாடினார். எதிர்காலத்தில் இது போன்ற துயரச் சம்பவங்கள் நடக்காமல் இருக்க, அரசு மின் விநியோகத்தில் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்றும், குறிப்பாக மழைக்காலம் நெருங்குவதால், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தினார்.

தொடர்ந்து, தூய்மைப் பணியாளர் வரலட்சுமியின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...

வருகையில்லா ஆவணப்பதிவு, பதிவுத்துறையில் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்…

தமிழ்நாட்டில் ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணையவழியில் ஆவணங்களைப் பதிவு செய்யும் முறையினை பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம்...

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து வானதி சீனிவாசன் விடுவிப்பு – புதிய நிர்வாகிகள் நியமனம்

பாரதிய ஜனதா கட்சியின் 16-வது தேசிய தலைவராக கடந்த ஜனவரி மாதத்தில் நிதின் நவீன் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றதிலிருந்தே கட்சியின் நிர்வாகிகளை மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில்,...

கொசு மருந்து அடித்த 1 மணி நேரத்தில் மூச்சு திணறி உயிரிழந்த முதியவர்கள்..!

அன்னூர் பகுதியில் குறைவான தண்ணீரில் அதிக கொசு மருந்தை கலந்து குடியிருப்பு பகுதிக்குள் பணியாளர்கள் அடித்ததாக கூறி அப்பகுதி மக்கள் வாக்குவாதம். கோவை மாவட்டம், அன்னூர்...

தொகுதி மறுவரையறையில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க பேரவையில் தீர்மானம் – எம்.பி.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு…

மக்களவைத் தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்த மசோதா விவகாரம் குறித்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (ஆக.08) மாலை 05.00 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான விஜய்...