Monday, July 13, 2026
Home Blog Page 45

ஜூலைக்குள் +2 தேர்வு முடிவுகள் – அமைச்சர் அன்பில் மகேஷ்

0

தமிழ்நாடு முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.

ஆய்வுக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சிக்கு வந்தபின் நடக்கும் முதல் தேர்வு, ஜூலை மாதத்திற்குள் முடிவுகளை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.

தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி தரவிருக்கும் முதல்வர்?

0

இந்தியா முழுவதும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது.

இந்நிலையில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்து உள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

ஆலோசனைக்கு பின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது?

கலைஞர் நினைவிடத்தில் அலங்காரம்

0

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை, 4 நாள் தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று (மே 4) மீண்டும் கூடுகிறது.

இன்றைய கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது.

இதையடுத்து கலைஞரின் நினைவிடத்தில் இந்து சமய அறநிலையத்துறையை ஒட்டி பூவால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இன்றை பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்.

0

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 110.83 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.101.04 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

முதல்வர் இரங்கல்

0

இன்று அதிகாலை தஞ்சாவூர் அருகே களிமேடு என்ற பகுதியில் நடைபெற்ற தேர்திருவிழாவில் எதிர்பாராமல் மின்சாரம் பாய்ந்து 11 உயிர்யிழந்து விட்டனர். இந்த துயர சம்பவத்தை கேள்வியற்று மிகந்த வேதனைஅளிக்கிறது என்றும் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்
மேலும் இந்த விபத்தில் சிக்கி காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் ஐந்து லட்சம் நிதியுதவி உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்

தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 10 பேர் பலி.

0

தஞ்சாவூர் அருகே களிமேடு என்ற பகுதியில் அப்பர் மடம் திருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது. அப்போது எதிர்பாராமல் தேர் சப்பரத்தின் மீது மின்சாரம் பாய்ந்து. மின்சாரம் தாக்கியதில் 10 சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மேலும் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்

கொரோனா தடுப்பு முதல்வர் ஆலோசனை.

0

சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் சுகாதார அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை தொடங்கியது
இந்த கூட்டத்தில் மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகை.

0

புதுச்சேரியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இன்று தொடங்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தார்.

பிரதமர் மோடி இன்று ஜம்மு காஷ்மீர் பயணம்.

0

தேசிய பஞ்சாயத்து ராஜ் தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்கு இன்று பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்ல இருக்கிறார். இன்று காலை 11:30 மணிக்கு நாட்டில் உள்ள அனைத்து கிராம சபைகளுடன் அவர் உரையாற்றுவார்.
அங்கு ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வகை வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைக்கவும் அடிக்கல் நாட்டவும் உள்ளார்.
தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் பிராந்தியங்களை நெருக்கமாகக் கொண்டுவர உதவுகின்ற பனிஹால் க்வாசிகண்ட் சாலையில் சுரங்கப்பாதையை பிரதமர் திறந்துவைப்பார்.
மேலும், தில்லி – அமிர்தசரஸ் – கோத்ரா விரைவு ப் பாதைக்கான மூன்று சாலைத் திட்டங்களுக்கும் ராட்லே & க்வார் புனல்மின் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.
நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகளை உருவாக்குதல் அல்லது புனரமைத்தலை நோக்கமாகக் கொண்ட அம்ரித் சரோவர் திட்டத்தைப் பிரதமர் தொடங்கி வைப்பார்…

ஓரிரு நாட்களில் மின் தடை இருக்காது மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி

0

தமிழ்நாட்டில் இன்னும் ஓரிரு நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்துள்ளார். 2 மாதங்களுக்கு நிலக்கரி இறக்குமதி செய்ய 2 நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அண்டை மாநிலங்களில் இருந்து கூடுதலாக 550 மெகாவாட் மின்சாரம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.