Monday, September 21, 2026
Home Blog Page 44

‘நான் பலி ஆடு ஆகிறேன்…’ – இசை நிகழ்ச்சி விமர்சனங்களால் ஏ.ஆர்.ரகுமான் வேதனை…

0

arr4chennai@btos.in என்ற மின் அஞ்சலில் குறைகளை தெரிவிக்குமாறும் அதற்கு அவரது அணியினர் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் எக்ஸ் தளத்தில் ஏ.ஆர்.ரகுமான் கூறியிருந்தார்…

‘சிலர் என்னை எல்லா நேரத்திலும் சிறந்தவர் (Greatest of All Time GOAT) என்று அழைக்கிறார்கள். ஆனால் இப்போது நான் பலி ஆடு (Goat)’ ஆகிறேன் என்று ஏ.ஆர்.ரகுமான் வேதனை தெரிவித்துள்ளார்.மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி சென்னை அருகே பனையூர் ஆதித்யாராம் பேலஸ் சிட்டியில் நேற்றிரவு நடந்தது.

இதனை கண்டு ரசிப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் டிக்கெட் பெற்று நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் பயணித்து சென்னைக்கு வந்தனர். நிகழ்ச்சி நடக்கும் இடம் அருகே ஓ.எம்.ஆர். சாலையில், பார்வையாளர்களின் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பார்வையாளர்கள் நிரம்பி விட்டதாகவும், இதனால் டிக்கெட் பெற்றிருந்தும் ஏராளமானோர் வெளியேற்றப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.பாதிக்கப்பட்டவர்கள் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் நேற்று மாலையில் இருந்து ரகுமானின் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி பரபரப்பாக பேசப்பட்டது.

மேலும் ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். பார்வையாளர்கள் அமர்வதற்கான இருக்கை முதல் பார்க்கிங் வரையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குளறுபடி செய்து விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன…

‘புஸ்பா 2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

0

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா-1 திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் 2ஆம் பாகம் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டது.

புஷ்பா-2 (புஷ்பா தி ரூல்) அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

‘மூன்றாம் கண்’ திரைப்படத்தின் First Look போஸ்டர் வெளியானது…!

0

அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில் விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் நடிப்பில், ஹைப்பர்லிங்க் க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘மூன்றாம் கண்’ திரைப்படத்தின் First Look போஸ்டர் வெளியானது…!

வசூல் சாதனை படைக்கும் ஜவான்

0

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘ஜவான்’ திரைப்படம் ₹520 கோடி வசூலை கடந்ததாக படக்குழு அறிவிப்பு.

இறுதியான பட்டியல்: 1.06 கோடி பேருக்கு ரூ.1000 உரிமைத்தொகை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…

0

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பயனடைவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்…

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் இன்று (11.9.2023) முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான 15.9.2023 அன்று தொடங்கப்படவுள்ளதையொட்டி அதுகுறித்து ஆய்வு மேற்கொண்டார்…

மலேசியா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடன் சந்திப்பு

0

மலேசியா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் உடன் சந்திப்பு

ஆசிய மற்றும் சர்வதேச கலையுலகில் புகழ் பெற்ற ரஜினிகாந்தை சந்தித்தேன் என பிரதமர் அன்வர் இப்ராஹிம் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்

முன்னாள் அமைச்சர் ஆர். எம் வீரப்பன் பிறந்தநாள் முதலமைச்சர் நேரில் சென்று வாழ்த்து

0

முன்னாள் அமைச்சர், எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனர் ஆர்.எம்.வீரப்பனின் 98வது பிறந்தநாள் வாழ்த்துகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்

மன்னிக்க கற்று தந்தவர் எனது தந்தை- ராகுல் காந்தி

0

எனக்கும், பிரியங்காவிற்கும் மன்னிக்க கற்றுக்கொடுத்தவர் என் தந்தை ராஜீவ்காந்தி.

ராஜீவ் காந்தி நினைவு நாளில் அவரது மகன் ராகுல்காந்தி உருக்கமான பதிவு.

பேரறிவாளன் விடுதலையை காங்கிரஸ் கட்சியினர் எதிர்த்து வரும் நிலையில் ராகுல் ட்வீட்.

உயர் கல்வியில் பொற்காலமாக திகழும் முதல்வர்.

0

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல்வர் பேசுகையில் அனைத்து மாணவர்களையும் முதல்வனாக்க உருவாக்கியத் திட்டம்தான் ‘நான் முதல்வன்’ திட்டம்-

எனது தலைமையிலான இந்த அரசு உயர்கல்வியின் பொற்காலமாக திகழும்;இது மாணவர்களுக்கான அரசு என்பதில் பெருமைகொள்கிறேன்.

இளைஞர்களுக்கான அனைத்து தகுதிகளையும் உருவாக்கும் கடமையை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது.

மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என சிறப்பு வாய்ந்தவர்களை இந்த பல்கலை. உருவாக்கி உள்ளது.

தமிழக மாணவர்கள் மேன்மை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை, என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறினார்

கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு

0

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கோதுமை விலை ஏறி வருகிறது.

இதை கட்டுப்படுத்த இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதை தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இருப்பினும் பிற நாடுகள் ஏற்கெனவே ஏற்றுமதி செய்யப்படும் கோதுமைக்கான தொகையை செலுத்தியதற்கான கடிதம் இருந்தால், அந்த நாடுகளுக்கு மத்திய அரசின் அனுமதியுடன் கோதுமையை ஏற்றுமதி செய்யலாம் என கூறியுள்ளது.