Monday, September 7, 2026

தொண்டாமுத்தூர் பகுதியில் 5 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்…

Must read

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...

வருகையில்லா ஆவணப்பதிவு, பதிவுத்துறையில் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்…

தமிழ்நாட்டில் ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணையவழியில் ஆவணங்களைப் பதிவு செய்யும் முறையினை பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம்...

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து வானதி சீனிவாசன் விடுவிப்பு – புதிய நிர்வாகிகள் நியமனம்

பாரதிய ஜனதா கட்சியின் 16-வது தேசிய தலைவராக கடந்த ஜனவரி மாதத்தில் நிதின் நவீன் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றதிலிருந்தே கட்சியின் நிர்வாகிகளை மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில்,...

கொசு மருந்து அடித்த 1 மணி நேரத்தில் மூச்சு திணறி உயிரிழந்த முதியவர்கள்..!

அன்னூர் பகுதியில் குறைவான தண்ணீரில் அதிக கொசு மருந்தை கலந்து குடியிருப்பு பகுதிக்குள் பணியாளர்கள் அடித்ததாக கூறி அப்பகுதி மக்கள் வாக்குவாதம். கோவை மாவட்டம், அன்னூர்...

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன், அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (29.09.2023) தொண்டாமுத்தூர் காவல் நிலைய பகுதியில் உயர் ரக போதை பொருள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன், அவர்களின் உத்தரவின்பேரில், தொண்டாமுத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு தொண்டாமுத்தூர் கிழ‌க்கு தெருவில் உள்ள தனியார் பாக்கு செட்டில் சோதனை செய்த போது சுமார் 18 முதல் 20 மில்லி கிராம் அளவுள்ள உயர் ரக போதை பொருள் அடங்கிய பிளாஸ்டிக் குப்பிகள் மொத்தம் 175 குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேற்கொண்டு விசாரணை செய்ததில் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த சாதிக் அலி மகன் ஜாகிர் உசேன் (36) என்பவர் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து மேற்படி போதை பொருளை கடத்தி வந்து மேற்படி பாக்கு செட்டில் வேலை செய்து வரும் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த நூர்கல் இஸ்லாம் மனைவி அஸ்மா (40) என்பவர் மூலம் விற்பனை செய்வது தெரிய வந்தது. பி‌ன்ன‌ர் காவ‌ல்துறை‌யின‌ர் மேற்படி ஜாகிர் உசேன் (36) மற்றும் அஸ்மா (40) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த 5 லட்சம் மதிப்புள்ள சுமார் 25 கிராம் எடையுள்ள உயர் ரக போதை பொருட்கள், பிளாஸ்டிக் குப்பிகள் மற்றும் 100 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2023 முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 474 நபர்கள் மீது 353 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 661.676 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...

வருகையில்லா ஆவணப்பதிவு, பதிவுத்துறையில் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்…

தமிழ்நாட்டில் ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணையவழியில் ஆவணங்களைப் பதிவு செய்யும் முறையினை பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம்...

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து வானதி சீனிவாசன் விடுவிப்பு – புதிய நிர்வாகிகள் நியமனம்

பாரதிய ஜனதா கட்சியின் 16-வது தேசிய தலைவராக கடந்த ஜனவரி மாதத்தில் நிதின் நவீன் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றதிலிருந்தே கட்சியின் நிர்வாகிகளை மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில்,...

கொசு மருந்து அடித்த 1 மணி நேரத்தில் மூச்சு திணறி உயிரிழந்த முதியவர்கள்..!

அன்னூர் பகுதியில் குறைவான தண்ணீரில் அதிக கொசு மருந்தை கலந்து குடியிருப்பு பகுதிக்குள் பணியாளர்கள் அடித்ததாக கூறி அப்பகுதி மக்கள் வாக்குவாதம். கோவை மாவட்டம், அன்னூர்...

தொகுதி மறுவரையறையில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க பேரவையில் தீர்மானம் – எம்.பி.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு…

மக்களவைத் தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்த மசோதா விவகாரம் குறித்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (ஆக.08) மாலை 05.00 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான விஜய்...