தமிழ்நாடு முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சிக்கு வந்தபின் நடக்கும் முதல் தேர்வு, ஜூலை மாதத்திற்குள் முடிவுகளை அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.


