Monday, September 7, 2026

இந்தியா-சீனா இனி நண்பர்கள்..!மத்திய அரசு விளக்கம்

Must read

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...

வருகையில்லா ஆவணப்பதிவு, பதிவுத்துறையில் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்…

தமிழ்நாட்டில் ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணையவழியில் ஆவணங்களைப் பதிவு செய்யும் முறையினை பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம்...

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து வானதி சீனிவாசன் விடுவிப்பு – புதிய நிர்வாகிகள் நியமனம்

பாரதிய ஜனதா கட்சியின் 16-வது தேசிய தலைவராக கடந்த ஜனவரி மாதத்தில் நிதின் நவீன் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றதிலிருந்தே கட்சியின் நிர்வாகிகளை மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில்,...

கொசு மருந்து அடித்த 1 மணி நேரத்தில் மூச்சு திணறி உயிரிழந்த முதியவர்கள்..!

அன்னூர் பகுதியில் குறைவான தண்ணீரில் அதிக கொசு மருந்தை கலந்து குடியிருப்பு பகுதிக்குள் பணியாளர்கள் அடித்ததாக கூறி அப்பகுதி மக்கள் வாக்குவாதம். கோவை மாவட்டம், அன்னூர்...

எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்க சீனா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்குடன் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக கலந்துரையாடியிருக்கிறார். இரு தலைவர்களும் பேசிக்கொண்டது தொடர்பாக வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி விவரித்திருக்கிறார்.

செய்தியாளர் சந்திப்பில் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது, “இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் பேசிக்கொண்டனர். நட்பு ரீதியான இந்திய-சீனா உறவு, இரு நாடுகளின் 208 கோடி மக்களுக்கும் நன்மை பயக்கும் என்பதில் இரு தலைவர்களும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவுடன் உறவை மேம்படுத்த நான்கு முன்மொழிவுகளை சீன அதிபர் முன்வைத்தார். பதிலுக்கு உறவுகளின் சீரான முன்னேற்றத்திற்கு எல்லையில் அமைதி எவ்வளவு முக்கியம் என்பதை மோடி வலியுறுத்தினார். ஆனால் இரு தலைவர்களும், வேறுபாடுகள் சச்சரவுகளாக மாற அனுமதிக்கப்படக்கூடாது என ஒப்புக்கொண்டனர். வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து பேசிய தலைவர்கள், உலகளாவிய வர்த்தகத்தை மேம்படுத்த இருநாட்டின் பொருளாதாரம் அவசியம் என்பதையும் சுட்டிக்காட்டினர். வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கப் பணியாற்றும் அதேவேளையில், அரசியல் கண்ணோட்டத்தில் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துவதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர். கைலாஷ் மானசரோவர் யாத்திரை மற்றும் சுற்றுலா விசாக்கள் மீண்டும் தொடங்கப்பட்டதன் அடிப்படையில், நேரடி விமானங்கள் சேவையை கொண்டுவருவது, விசா செயல்முறைகளை எளிதாக்குவது குறித்தும் பேசியிருக்கிறார்கள். இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் தன்னாட்சிப் பாதையைப் பின்பற்றுகின்றன என்று பிரதமர் கூறியிருந்தார். மேலும், இந்தியா மற்றும் சீனா உறவுகள் ஒரு மூன்றாவது நாட்டின் பார்வையில் பார்க்கப்படக்கூடாது எனவும் வலியுறுத்தியிருந்தார். பயங்கரவாதம் போன்ற சவால்கள் மற்றும் பலதரப்பு மன்றங்களில் நியாயமான வர்த்தகத்தின் தேவை உட்பட, இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய விஷயங்களில் பொதுவான தளத்தை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தையும் இரு தலைவர்களும் பேசியிருக்கிறார்கள். 2026 இல் இந்தியா நடத்தும் BRICS உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள சீன அதிபருக்கு மோடி அழைப்பு விடுத்தார். அதேபோல பதிலுக்கு இந்தியாவின் BRICS தலைமைக்கு தனது ஆதரவை தெரிவித்தார் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...

வருகையில்லா ஆவணப்பதிவு, பதிவுத்துறையில் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்…

தமிழ்நாட்டில் ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணையவழியில் ஆவணங்களைப் பதிவு செய்யும் முறையினை பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம்...

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து வானதி சீனிவாசன் விடுவிப்பு – புதிய நிர்வாகிகள் நியமனம்

பாரதிய ஜனதா கட்சியின் 16-வது தேசிய தலைவராக கடந்த ஜனவரி மாதத்தில் நிதின் நவீன் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றதிலிருந்தே கட்சியின் நிர்வாகிகளை மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில்,...

கொசு மருந்து அடித்த 1 மணி நேரத்தில் மூச்சு திணறி உயிரிழந்த முதியவர்கள்..!

அன்னூர் பகுதியில் குறைவான தண்ணீரில் அதிக கொசு மருந்தை கலந்து குடியிருப்பு பகுதிக்குள் பணியாளர்கள் அடித்ததாக கூறி அப்பகுதி மக்கள் வாக்குவாதம். கோவை மாவட்டம், அன்னூர்...

தொகுதி மறுவரையறையில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க பேரவையில் தீர்மானம் – எம்.பி.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு…

மக்களவைத் தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்த மசோதா விவகாரம் குறித்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (ஆக.08) மாலை 05.00 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான விஜய்...