பொது இடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் – மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று இந்தியா வருகை
அகமதாபாத் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்
முதன் முறையாக இந்தியா வரும் போரிஸ் ஜான்சன் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்
மக்கள் தொடர்பு, வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்
கோவை மாவட்ட ஆட்சித் தலைவராக டாக்டர் G.S.சமீரன் IAS அவர்கள் நியமனம்
கோவை மாவட்ட ஆட்சித் தலைவராக டாக்டர் G.S.சமீரன் IAS அவர்கள் நியமனம் திரு சமீரன் ஐஎஸ் அவர்கள் இதற்கு முன்பு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றி வந்தார்
2021 டிசம்பருக்குள் 200 கோடி டோஸ் தடுப்பூசி உற்பத்தி -ஜே.பி.நட்டா தகவல்
இந்தியாவில், வரும் டிசம்பர் மாதத்திற்குள் 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜக அலுவலகத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்துப் பேசிய அவர், தற்போது இந்தியாவில் மாதத்திற்கு ஒரு கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் அதனை 10 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
2 நிறுவனங்கள் மட்டுமே தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், நாட்டில் தற்போது 13 நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தி செய்து வருவதாக கூறினார்.
இந்த எண்ணிக்கை 19 ஆக அதிகரிக்கும் என்றும் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலினின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு
முதல்வர் ஸ்டாலினின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு
உதயச்சந்திரன் – உள்துறை, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, தொழில்துறை உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு
அனு ஜார்ஜ் – விளையாட்டுத்துறை, சுற்றுச்சூழல், சமூக நலம், சுற்றுலா உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு
உமாநாத் – போக்குவரத்து, நிதி, உணவு, சுகாதாரம்,உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு
சண்முகம் -வருவாய், சட்டம், முதல்வர் அலுவலக நிர்வாகம், கூட்டுறவு, வேளாண் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு
தடுப்பூசி இறக்குமதி செய்ய சர்வதேச டெண்டர் கோர தமிழக அரசு முடிவு
தடுப்பூசி இறக்குமதி செய்ய சர்வதேச டெண்டர் கோர தமிழக அரசு முடிவு
18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட அரசு நடவடிக்கை
கூடுதல் ஆக்சிஜனை பிற மாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் தமிழகம் கொண்டு வர நடவடிக்கை
ஆக்சிஜனை தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு சீராக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு
மத்திய அரசு ஒதுக்கியுள்ள தடுப்பூசி போதிய அளவில் இல்லாததால் தடுப்பூசி இறக்குமதிக்கு சர்வதேச டெண்டர் விட அரசு முடிவு
நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஒரு கோடி ரூபாய் நிதி
நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஒரு கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர்.
நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்தனர்.
அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவும் வகையில் அவரிடம் ஒரு கோடி ரூபாய் நிதியாக வழங்கினர்.
தமிழில் படித்தவர்களுக்கு தமிழகத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்பது தான் தனது விருப்பம் என தெரிவித்தார்.
அட்டகாசமான ஐந்து திட்டங்கள் – முதல்வரின் முதல் கையெழுத்து.
நாளை முதல் அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம்.
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும்
மக்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை உருவாக்கி, அதற்கு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமிக்க முதலமைச்சர்.
கொரோனா நிவாரணமாக அரிசி அட்டைதாரர்களுக்கு குடும்பத்துக்கு ரூ.4000, இம்மாதமே ரூ.2000 வழங்கப்படும்.
ஆவின் பால்விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு 16 ஆம் தேதியிலிருந்து அமல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்”. தமிழகத்தின் 23வது முதலமமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்
தமிழக புதிய முதல்வராக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க ஸ்டாலின் பதவி ஏற்றார்.
அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் உளமார உறுதி ஏற்கிறேன் என்று ஸ்டாலின் கூறினார். தொடர்ந்து அமைச்சர்கள் ஒவ்வொருவராக பதவிப் பிரமாணம் எடுத்து ஏற்றுக்கொண்டார்கள்.
தொழில் வளர்ச்சி
தொழில் வளர்ச்சி










