Monday, July 13, 2026

புகார்களை 30 நாளில் விசாரித்து 3 மாதத்தில் முடிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Must read

“நிழல் (Nizhal)”QR குறியீடு அடிப்படையிலான நவீன பொதுப் பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், கியூஆர் கோடு மூலம் போதைப்பொருள் கடத்தல், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் புகாராகத் தெரிவிக்க ஏதுவாக “நிழல் (Nizhal)” என்ற அதிநவீனத்...

கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணி: யார் – யாருக்கு

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற விஜய்யின் பரப்புரையின் போது திடீரென பயங்கர கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி 41...

மக்களே இடைத்தேர்தலில் தீய சக்தி திமுகவை நல்லா வெச்சு வெளுத்து விடுங்க- கரூரில் முதலமைச்சர் விஜய் பேச்சு

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்திற்கு பிறகு முதன்முறையாக முதலமைச்சர் விஜய் இன்று கரூருக்கு வருகை தந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து சாலை...

எழும்பூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு…

எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்த முதலமைச்சர் விஜய்,...

அரசு நிலம், நீர்நிலைகள், பூங்காக்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக புகார்கள் வந்தால் 30 நாட்களில் விசாரணையை துவங்கி 3 மாதங்களில் முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரக்கோணம் நகராட்சியில் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி நிலத்தை பழைய நிலைக்கு மீட்டெடுக்க உத்தரவிடக் கோரி துரை சீனிவாசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்பு தொடர்பாக புகார் அளித்து மூன்று மாதங்களாகியுள்ளது. இந்த புகார் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரக்கோணம் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தது.

மேலும், அரசு நிலங்கள், நீர்நிலைகள், பூங்காக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தால் அவற்றின் மீது 30 நாட்களுக்குள் விசாரணையை துவங்க வேண்டும். மூன்று மாதங்களில் விசாரணையை முடித்து ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை தலைவர்களுக்கு சுற்றறிக்கை பிறப்பிக்கும் வகையில் இந்த உத்தரவு நகலை தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article