Monday, September 7, 2026

2 நாள் சுற்றுப்பயணம் – மதுரை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!

Must read

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...

வருகையில்லா ஆவணப்பதிவு, பதிவுத்துறையில் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்…

தமிழ்நாட்டில் ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணையவழியில் ஆவணங்களைப் பதிவு செய்யும் முறையினை பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம்...

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து வானதி சீனிவாசன் விடுவிப்பு – புதிய நிர்வாகிகள் நியமனம்

பாரதிய ஜனதா கட்சியின் 16-வது தேசிய தலைவராக கடந்த ஜனவரி மாதத்தில் நிதின் நவீன் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றதிலிருந்தே கட்சியின் நிர்வாகிகளை மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில்,...

கொசு மருந்து அடித்த 1 மணி நேரத்தில் மூச்சு திணறி உயிரிழந்த முதியவர்கள்..!

அன்னூர் பகுதியில் குறைவான தண்ணீரில் அதிக கொசு மருந்தை கலந்து குடியிருப்பு பகுதிக்குள் பணியாளர்கள் அடித்ததாக கூறி அப்பகுதி மக்கள் வாக்குவாதம். கோவை மாவட்டம், அன்னூர்...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்று பயணமாக இன்றிரவு மதுரை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 118 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 63 ஆவது குருபூஜை விழா நடக்கிறது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து அடைந்தார்.
மதுரை விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு திமுக தொண்டர்கள் மற்றும் எஸ்ஆர்எம்யூ உறுப்பினர்கள் சால்வை வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், மூர்த்தி மற்றும் ஐ.பெரியசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர். அங்கிருந்து காரில் புறப்பட்டு கோவில்பட்டி சென்று அங்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி திருஉருவ சிலையை திறந்து வைத்த பின் அங்கிருந்து புறப்பட்டு நெல்லை மாவட்டம் அரியநாயகிபுரம் முக்கூடல் சென்று இரவு தங்குகிறார். நாளை காலை அங்கிருந்து புறப்பட்டு தென்காசி மாவட்டம் சீவநல்லூர் சென்று, அங்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை துவக்கி வைத்து விட்டு பின்பு அங்கிருந்து புறப்பட்டு அனந்தபுரம் சென்று அங்கு அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். இதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு அமர் சேவா சங்கம் சென்று அங்கு பார்வையிட்ட பிறகு அங்கிருந்து புறப்பட்டு, மதியம் தென்காசி விருந்தினர் மாளிகை சென்று தங்குகிறார். பின்னர் நாளை மாலை மதுரை வந்து அரசு விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார்.

நாளை மறுநாள் காலை அங்கிருந்து 8 மணிக்கு கோரிபாளையம் சென்று அங்கு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தெப்பக்குளம் சென்று அங்கு மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். இதன் பிறகு அங்கிருந்து கிளம்பி ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பசும்பொன் சென்று அங்கு தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...

வருகையில்லா ஆவணப்பதிவு, பதிவுத்துறையில் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்…

தமிழ்நாட்டில் ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணையவழியில் ஆவணங்களைப் பதிவு செய்யும் முறையினை பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம்...

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து வானதி சீனிவாசன் விடுவிப்பு – புதிய நிர்வாகிகள் நியமனம்

பாரதிய ஜனதா கட்சியின் 16-வது தேசிய தலைவராக கடந்த ஜனவரி மாதத்தில் நிதின் நவீன் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றதிலிருந்தே கட்சியின் நிர்வாகிகளை மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில்,...

கொசு மருந்து அடித்த 1 மணி நேரத்தில் மூச்சு திணறி உயிரிழந்த முதியவர்கள்..!

அன்னூர் பகுதியில் குறைவான தண்ணீரில் அதிக கொசு மருந்தை கலந்து குடியிருப்பு பகுதிக்குள் பணியாளர்கள் அடித்ததாக கூறி அப்பகுதி மக்கள் வாக்குவாதம். கோவை மாவட்டம், அன்னூர்...

தொகுதி மறுவரையறையில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க பேரவையில் தீர்மானம் – எம்.பி.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு…

மக்களவைத் தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்த மசோதா விவகாரம் குறித்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (ஆக.08) மாலை 05.00 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான விஜய்...