கோவையில் தூய்மை பணியில் ஈடுபட்ட பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ
மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மையான இந்தியா அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக அமையும் என்று அக்டோபர் மாதம் 2 ஆம் நாள் தூய்மை இந்தியா இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இது நாடு முழுவதும் தேசிய இயக்கமாக தூய்மை இந்தியா இயக்கம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தூய்மைக்காக திட மற்றும் திரவ கழிவுகளை அகற்ற தூய்மை பணிகளின் முக்கியத்துவம் உணர்த்தும் விதமாக தூய்மை பணியாளர்களுடன் இணைந்து அப்பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ,
பாரதப் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க நாடு முழுக்க தூய்மை பணிகள் கோடிக் கணக்கானோர் ஈடுபடுவதாகவும், ரேஸ்கோர்ஸ் பகுதியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் பா.ஜ.க வினர் உடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டதாகவும், மேலும் தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்களிடம் அவர்கள் குறைகளை கேட்டு அறிந்ததாகவும், தெரிவித்தவர். அதனை அரசாங்கத்திடம் கொண்டு சென்று தீர்வு காணும் என்று வாக்குறுதி அளித்து உள்ளதாகவும் கூறினார்.

கோயமுத்தூர் மாநகராட்சியில் தூய்மை பணிகள் குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் கோரிக்கைகளை முன் வைத்து உள்ளதாகவும், ஒரு சில இடங்களில் ஒரு வாரம் சென்ற பின்பு தான் தூய்மை பணியில் செய்வதாகவும் மேலும் தூய்மை பணியாளர்கள் குறைவாகத் தான் உள்ளதாகவும், அவர்களுக்கு பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம் இல்லாமல் ஆயிரக் கணக்கான தூய்மை பணியாளர்கள் நிரந்தர பணி இல்லாமல், தற்காலிகமாக கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருவதாகவும் மேலும் குறைவான ஊதியத்தில் பணி செய்து வருவதாகவும் இதனை தமிழக சட்டமன்றத்தில் பேச உள்ளதாகவும், மேலும் தமிழக முதல்வரை சந்தித்து முறையிட உள்ளதாகவும் கூறியவர், கோவையை பொறுத்தவரை தூய்மை பணியில் ஆயிரக் கணக்கான தன்னார்வலர்களை கொண்ட மாநகரம் இது. மற்ற மாவட்டங்களை விட தன்னார்வ தொண்டர்கள் இங்கு பணியாற்றுவதை பார்க்கலாம், அவர்கள் ஒவ்வொருவருக்கும் எங்களது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.


