Saturday, September 12, 2026

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

Must read

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர் மற்றும் பத்திர எழுத்தர் என இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

.

ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே உள்ள ராயர்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி தனது பத்திரத்தை கிரையம் செய்வதற்காக கவுந்தப்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தை அணுகியுள்ளார்.
அப்போது, பத்திரப்பதிவு பணியை மேற்கொள்வதற்காக ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்டதாக சார்பதிவாளர் சங்கர் (42) மீது, ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கையில் இறங்கினர், கவுந்தப்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயி லஞ்சம் வழங்குவதற்காக ரூ.7 லட்சம் பணத்துடன் கவுந்தப்பாடி சார்பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்றுள்ளார்,
அப்போது சார்பதிவாளர் சங்கர் நேரடியாக பணத்தைப் பெறாமல், வெற்றி (30) என்ற பத்திர எழுத்தர் மூலம் பணத்தைப் பெரும்பொழுது லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

அலுவலகத்தில் தொடர்ந்து விசாரணை

கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் சங்கர் மற்றும் பத்திர எழுத்தர் வெற்றி ஆகியோரிடம், கவுந்தப்பாடி சார்பதிவாளர் அலுவலகத்திலேயே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பத்திரப்பதிவு தொடர்பாக லஞ்சம் கேட்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில் இருவர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பணியில் இருக்கும் பல சார்பதிவாளர்கள் எழுத்தாளர்கள் மூலம் மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெறுவதாக பொதுமக்கள் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

- Advertisement -

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...