Saturday, September 12, 2026

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

Must read

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப் பிரித்து ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களிடையே இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில், குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் நடைபெற்றது. புதிய விதிகளின்படி குப்பைகள் ஈரக்கழிவு, உலர்க்கழிவு, சுகாதாரக் கழிவு மற்றும் சிறப்பு கவனத்துடன் கையாள வேண்டிய கழிவு என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட வேண்டும்.

ஈரக்கழிவுகளில் சமையலறைக் கழிவுகள், காய்கறி மற்றும் பழத்தோல்கள், உணவுக் கழிவுகள் உள்ளிட்ட மக்கும் கழிவுகள் அடங்கும். இவை உரமாக்குதல் அல்லது உயிர்வாயு தயாரிப்பு போன்ற முறைகளில் பயன்படுத்தப்படலாம்.

உலர்க்கழிவுகளில் காகிதம், பிளாஸ்டிக், உலோகம், கண்ணாடி உள்ளிட்ட மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் அடங்கும்.

சுகாதாரக் கழிவுகளாக பயன்படுத்தப்பட்ட நாப்கின்கள், டயப்பர்கள் உள்ளிட்ட கழிவுகள் தனியாக சேகரிக்கப்பட்டு பாதுகாப்பாக மூடப்பட்டு வழங்கப்பட வேண்டும்.

சிறப்பு கவனக் கழிவுகளில் காலாவதியான மருந்துகள், பேட்டரிகள், பல்புகள், பெயிண்ட் டப்பாக்கள் மற்றும் இதர வீட்டு அபாயகரமான பொருட்கள் அடங்கும். இவை அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் அல்லது குறிப்பிட்ட சேகரிப்பு மையங்கள் மூலம் பாதுகாப்பாக அகற்றப்பட வேண்டும்.

குப்பைகளைத் தரம் பிரிப்பது என்பது தூய்மை பணியாளர்களின் பொறுப்பு மட்டுமல்ல, குப்பை உருவாகும் இடத்திலேயே அதனை முறையாகப் பிரிப்பது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும் என்ற கருத்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும், வீடுகளில் பெற்றோரிடம் குப்பைகளை நான்கு வகைகளாகப் பிரித்து வழங்குமாறு வலியுறுத்துதல், பள்ளி வளாகத்தில் குப்பைகளைத் தரம் பிரித்தல், தேவையற்ற பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்கேற்பது போன்ற நடவடிக்கைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தூய்மையான சுற்றுச்சூழலுக்கு அடித்தளம்
குப்பைகளைத் தரம் பிரித்து சேகரிப்பதன் மூலம் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை மீட்டெடுக்கவும், மக்கும் கழிவுகளை உரமாக்கவும், குப்பைக் கிடங்குகளுக்குச் செல்லும் கழிவின் அளவைக் குறைக்கவும் முடியும். இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடு குறைவதுடன், பொதுச் சுகாதாரத்தையும் பாதுகாக்க முடியும்.

“குப்பையை உருவாக்கும் இடத்திலேயே தரம் பிரிப்போம், தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்குவோம்” என்ற நோக்கத்துடன் மாணவர்களிடையே இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

- Advertisement -

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...