Sunday, September 13, 2026

தவெகவுக்கு ஆதரவு அளித்த விசிக…

Must read

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்தவெக தலைவர் விஜய் ஆட்சியமைப்பாரா என தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த நிலையில், தலா 2 எம்.எல்.ஏக்களை கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதல் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு நிலவி வந்தது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், பெரும்பான்மை பலம் இல்லாததால் பிற கட்சிகளின் ஆதரவை தவெக நாடி வந்தது.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு பெற்ற போதிலும், இன்னும் 2 எம்.எல்.ஏ-களின் ஆதரவு தேவை என்ற நிலையில், நீண்ட இழுபறிக்கு பின்னர் ஆட்சியமைக்க தவெகவுக்கு விசிக ஆதரவளிப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான ஆதரவு கடிதத்தை விசிக தலைவர் திருமாவளவனிடம் இருந்து தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா நேரடியாக பெற்றுக் கொண்டார்.

அந்தக் கடித்ததில், “தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சியமைக்க விசிக நிபந்தனையற்ற ஆதரவை அளிக்கிறது. விசிகவின் தேர்தெடுக்கப்பட்ட 2 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் இதனை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டில் நிலையான மற்றும் ஜனநாயக அரசாங்கத்தை உறுதி செய்யும் நலன் கருதி, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசிகவின் ஆதரவின் மூலம் தவெகவின் பலம் 118 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை தவெக பெற்றுள்ளது. முன்னதாக, திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டி, தவெக நிர்பந்திக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், எந்த நிபந்தனையும் இன்றி தவெகவுக்கு விசிக ஆதரவு தெரிவித்துள்ளது.

இதனயடுத்து நேற்று ஆதரவில்லை என தெரிவித்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், இன்று ஆதரவளிப்பதாக கடிதத்தை தவெகவிடம் வழங்கியுள்ளது. இதன் மூலம் தவெகவுக்கு ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ-களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தவெக தலைவர் விஜய் விரைவில் முதலமைச்சராக பதிவேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறதுதமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவு மே 4-ம் தேதி வெளியானது. இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றன.

தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை பெறாததால், இதர கட்சிகளில் ஆதரவைப் பெற வேண்டிய சூழல் உருவானது. இதனையடுத்து, திமுகவின் கூட்டணிக் கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டது.முதல் கட்சியாக, திமுக கூட்டணியில் 20 ஆண்டுகள் அங்கம் வகித்த காங்கிரஸ், தவெகவுடன் கூட்டணி அமைத்தது. இதனால் தவெகவின் எம்எல்ஏக்கள் பலம் 113-ஆக உயர்ந்தது. இதில், தவெக தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட காரணத்தினால் ஒன்றில் ராஜிநாமா செய்ய வேண்டும். இதனால் ஆதரவு எம்.எல்.ஏ-களில் எண்ணிக்கை 112 என குறையும்.

இதனையடுத்து, தன்னை ஆட்சியமைக்க அழைக்குமாறு, தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து கோரிக்கை விடுத்தார். இருப்பினும், பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு

இன்னும் 6 இடங்கள் தேவை என்ற நிலையில், 2 கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிகவிடம் தவெக ஆதரவு கோரியது. தலா இரண்டு இடங்களில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சியமைக்க வெளியே இருந்து ஆதரவளிப்பதாக நேற்று (மே 8) அறிவித்தன. இதன் மூலம் தவெகவுக்கான ஆதரவு 116 என உயர்ந்தது.திருமா முடிவுக்காக காத்திருந்த தவெக

பெரும்பான்மைக்கு இன்னும் 2 இடங்கள் தேவை என்ற நிலையில், விசிகவின் முடிவுக்காக தவெக காத்துக் கொண்டிருந்தது. இதனிடையே, தவெகவுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் விசிக நிர்வாகிகள் தொடர்ந்து 2 நாட்களாக ஆலோசித்து வந்தனர்.

இதுதொடர்பாக விசிகவின் உயர்மட்டக் குழு கூட்டம் இணைய வழியில் நடத்தப்பட்டு, அதில் இதுகுறித்து முடிவெடுக்க திருமாவளவனுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.

அந்த வகையில், இன்று காலை 10 மணிக்கு தவெகவுக்கு ஆதரவா, இல்லையா என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. காலை முதல் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், மாலை 4 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பை நடத்துவதற்கு முன்பாகவே, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவை நேரில் அழைத்து விசிக தலைவர் திருமாவளவன் ஆதரவு கடிதத்தை வழங்கியுள்ளார். அதன் பின்னர் சில நிமிடங்களிலேயே இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், தங்களின் ஆதரவு கடித்ததை தவெக நிர்வாகிகளான செங்கோட்டையன் மற்றும் அருண்ராஜ் ஆகியவர்களிடம் வழங்கியது. இதன் மூலம் விஜய், தமிழக முதலமைச்சர் ஆவதற்கான முட்டுக்கட்டை நீங்கியுள்ளது.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...