Sunday, July 26, 2026

விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Must read

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

டிஜிட்டல் லஞ்சம்,கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ 

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!! தமிழ்நாடு முழுவதும்...

கோவையில் அடகு கார் விவகாரத்தில் ₹70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது.

திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கரையை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவருடைய கணவர் புதிய கார் வாங்கியுள்ளார். பண பிரச்சினைக்காக அந்த காரை ரவிக்குமார் என்பவரிடம் அடமானம் வைத்தாக தெரிகிறது. அந்த...

2 வருஷ படிப்பை இழுத்தடிக்கும் நிர்வாகம்; புத்தகம் இல்லை, வகுப்பும் இல்லை, ஆனால் அபராதம் மட்டும் ₹300 வசூலிப்பதா ? என மாணவர்கள் கடும் கொதிப்பு !!!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு முதுகலை படிப்புகளில் படித்து வருகின்றனர் . ஏற்கனவே இரண்டு வருடங்களில் முடிக்க வேண்டிய படிப்பை,...

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ளது. அதற்காக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. அதேபோல் தவெக இந்த தேர்தலில் முதல்முறையாக போட்டியிடவுள்ளது. இதனால் தவெக என்ன சின்னத்தில் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. அதற்கேற்ப தவெக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் பொதுச் சின்னம் வழங்கக்கோரி விண்ணப்பிக்கப்பட்டது.தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் இதற்காக நவம்பர் மாதமே டெல்லியில் முகாமிட்டு விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து தேர்தல் ஆணையம் தரப்பில் தேர்தல் போட்டியிடும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கான 190 சின்னங்கள் வெளியிடப்பட்டன. ஒவ்வொரு கட்சியும் 10 சின்னங்களை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.அதன்படி தவெக தரப்பில் முதல் சின்னமாக விசில் சின்னத்தை அளிக்கக் கோரி விண்ணப்பிக்கப்பட்டது. விசில் சின்னம் கிடைக்கவில்லை என்றால், ஆட்டோ, கிரிக்கெட் மட்டை உள்ளிட்ட சின்னங்கள் கேட்கப்பட்டன. இந்த நிலையில் தவெகவுக்கு பொதுச் சின்னமாக விசில் சின்னத்தை ஒதுக்கி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்படாத கட்சியான தவெக, தேர்தல் ஆணைய விதிகளின்படி கணக்குகளை தாக்கல் செய்ததால், அந்தக் கட்சிக்கு பொதுச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன் மூலமாக விஜய்யின் வி செண்ட்மெண்ட்டும் உள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் விஜய் பெயரில் உள்ள V என்ற வார்த்தையை கட்சியின் பெயரில் வெற்றி (V) என்ற கொண்டு வந்தார்.தற்போது அதே வி செண்ட்மெண்ட் தவெக சின்னத்திலும் இடம் பெற்றுள்ளது. இதனால் “V” செண்டிமெண்ட் விஜய்க்கு தேர்தலில் வெற்றியை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

டிஜிட்டல் லஞ்சம்,கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ 

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!! தமிழ்நாடு முழுவதும்...

கோவையில் அடகு கார் விவகாரத்தில் ₹70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது.

திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கரையை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவருடைய கணவர் புதிய கார் வாங்கியுள்ளார். பண பிரச்சினைக்காக அந்த காரை ரவிக்குமார் என்பவரிடம் அடமானம் வைத்தாக தெரிகிறது. அந்த...

2 வருஷ படிப்பை இழுத்தடிக்கும் நிர்வாகம்; புத்தகம் இல்லை, வகுப்பும் இல்லை, ஆனால் அபராதம் மட்டும் ₹300 வசூலிப்பதா ? என மாணவர்கள் கடும் கொதிப்பு !!!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு முதுகலை படிப்புகளில் படித்து வருகின்றனர் . ஏற்கனவே இரண்டு வருடங்களில் முடிக்க வேண்டிய படிப்பை,...

கரூரில் 3,084 ஏக்கர் இனாம் நிலங்கள் யாருடைய பெயரில் உள்ளன?

கரூர் மாவட்ட 3,084.95 ஏக்கர் இனாம் நிலங்கள் குறித்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிலம் யாருடைய பெயரில் உள்ளன என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. இனாம் நிலங்களுக்கு பதிவுத்துறை...