Sunday, September 13, 2026

செந்தில் பாலாஜி அமைச்சராவதை தடுக்கவில்லை

Must read

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

செந்தில் பாலாஜி அமைச்சராகக் கூடாது என நாங்கள் சொல்லவில்லை. வேண்டுமானால் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று அவர் மீண்டும் அமைச்சராகலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

ஜெயலலிதா முதலமைச்சராக பதவி வகித்த 2011 -2015 அதிமுக ஆட்சிக் காலத்தில் செந்தில் பாலாஜி தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பண மோசடி செய்ததாக, அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கின் விசாரணையின் போதே, அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி. 2021 ஆம் ஆண்டு ஆட்சியமைத்த திமுக, அவரை மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக நியமித்தது. இதனையடுத்து, பண மோசடி வழக்கின் தொடர்ச்சியாக 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, அவரை அன்றிரவே கைது செய்தது. கைதானதை அடுத்து, அவர் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார். சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தை நாடிய செந்தில் பாலாஜிக்கு அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமின் வழங்கப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், ஜாமினை ரத்து செய்யக் கோரி அமலாக்கத்துறை மேல் முறையீடு செய்தது. இந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது அமைச்சர் பதவியா? ஜாமினா? இரண்டில் ஒன்றை தேர்வு செய்யுங்கள் என செந்தில் பாலாஜியை நீதிபதிகள் கேட்டனர். இதனையடுத்து மீண்டும் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பில் உள்ள கடுமையான சில கருத்துகளை நீக்கக் கோரி, செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவானது இன்று (அக் 6) நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மல்யா பாக்சி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஓகா ஓய்வு பெற்ற பிறகு இந்த மனுவை ஏன் தாக்கல் செய்ய வேண்டும்? என செந்தில் பாலாஜி தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், இதனால் சட்டத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பிருப்பதாகவும் எடுத்துரைத்தார்.

இதனையடுத்து செந்தில் பாலாஜி சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், அமைச்சர் பதவியில் நீடிக்கக் கூடாது என்பது நீதிபதி வாய்மொழியாகக் கூறியது தான் என்றும், ஜாமின் உத்தரவில் அமைச்சராக தடை எதுவும் விதிக்கப்படவில்லை என்றும் கூறினார். அதற்கு நீதிபதிகள், “செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தால் அவருக்கு எதிராக வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை கலைக்க நேரிடும் என்பதால், அவர் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ததை கருத்தில் கொண்டு தான் ஜாமின் வழங்கப்பட்டது” என்று தெரிவித்தனர். மேலும் அவர் அமைச்சராவதை யாரும் தடுக்கவில்லை என்றும், ஆனால் அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு சாட்சியங்களை கலைத்தால், ஜாமின் ரத்து செய்யப்படும் என்று தான் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக விளக்கினர். மேலும் இந்த வழக்கை ஏன் டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றக்கூடாது என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி, இதற்கு இன்னும் 2 வாரங்களில் பதிலளிக்க கூறிய நீதிபதிகள், செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...