Sunday, September 13, 2026

ஆழியார் பகுதியில் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கைது…

Must read

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் ஆழியார் பகுதியில் வசிக்கும் அமிர்த கௌரி கடந்த (28.08.2023) அன்று அவரது வீட்டினை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார் அவர் திரும்பி வந்து பார்த்தபோது அவரது வீட்டின் கதவை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் 15 சவரன் தங்க நகை திருடிச் சென்றுள்ளனர். இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட நபர் ஆழியார் காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேற்படி வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில், தனிப்படை அமைக்கப்பட்ட மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் 26.10.2023 அன்று கோட்டூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் மகன் ஜெயராஜ் (33), கருப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நடராஜ் மகன் முருகவேல் (37) மற்றும் ராமச்சந்திரன் மகன் கவின் குமார் (21) ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி திருட்டு வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும், மேலும் விசாரணையில் பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. எனவே, மேற்படி நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து திருடிய 15 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...