மகளிர் உரிமை தொகைக்காக மேல்முறையீடு செய்த 9 லட்சம் பேரில் தகுதியானவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார்.
மேலும், உரிமைத் தொகை திட்டத்தில் குறைகள் இருப்பின் ஆதாரங்களுடன் கூறலாம்.
நிதி நிலைமை மோசமாக இருந்ததால் மகளிர் உரிமைத் தொகை தாமதமாக வழங்கப்பட்டது என்றார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானம் மீது முதலமைச்சர் ஸ்டாலின் இவ்வாறு பதில் அளித்தார்.


